ஒளி காட்டும் வழி!
************************
இருளும் ஒளியும்
இணைந்தது வாழ்க்கை!
ஒளிமயமான எதிர்காலம்
ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!
ஓலம் கேவல் பெருமூச்சென்றே
காலம் ஓடிக்கொண்டிருக்க
கண்முன் கருமை படர்கிறது,
எண்ணற்றக்கவலை பிறக்கிறது.
விறகாய் எரியும் பண்புகள்,
வெறியாய் மீறும் புனிதங்கள்.
சிறகைவிரிக்கும் கழுகுக்கூட்டம்,
உறவெனச்சொல்லிப்போடும் ஆட்டம்.
கண்கள் முன்னே கறுப்புச்சாயம்
காலம் இதனால் மாறிய மாயம்!
’பாரதநாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் ’என்றான் பாரதி!
நேரெதிர்மோதிடும் தீமை இருளை
நெஞ்சம் சேர்ந்து விரட்டிடுவோம்
நேர்மைப்பாதையில் நடந்திடுவோம்!
பாரதநாட்டினில் பிறந்த நமக்கு
பந்தம் சொந்தம் மறந்திடுமோ?
வருடம் ஒருநாள்வரும் தீபாவளி
வாழ்நாளுக்கான ஆயத்த ஒளி!
ஒன்றிய கைகள் ஏற்றிடும் ஒளியில்
ஓடிவிடாதோ இருள்தடுமாறி?
ஒற்றுமைதான் உயர்வென்றானால்
ஓங்கிய ஒளிதான் வழிகாட்டாதோ!
Tweet | ||||
ஒன்றுபடுவோம்
ReplyDeleteவென்றிடுவோம்
இருள்படர்ந்த எண்ணங்களை..
என உரைக்கும்
அழகான கவிதை .சகோதரி..
வாழ்த்துக்கள்....
நன்றி மிக மகேந்திரன்
Deleteஅருமை...
ReplyDeleteவெற்றிப்பெற வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு சௌந்தர்
Deleteநல்ல கருத்துக்கள்; கவிதை
ReplyDeleteஎன் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
நன்றி!
நன்றி நம்பள்கி பாராட்டுக்கும் தமிழ்மண வோட்டிற்கும்
Deleteஅருமையான கவிதை!!!. வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி அருமைத்தங்கை பாரு
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி திரு ரூபன். மகிழ்ச்சி் தாங்களே வந்து இங்கு மடலிட்டமைக்கு
Deleteஆழமான கருத்துடன் கூடிய
ReplyDeleteஅருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி வாழ்த்துக்கு திரு ரமணி
Deletetha.ma 4
ReplyDeleteத.ம 4 ஆ ? நன்றி நன்றி!
Deleteகருத்துள்ள வரிகள்... கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
தங்கள் வலைப்பூவில் பார்த்தே போட்டியில் கலந்துகொண்டேன் திரு டிடி நன்றி மிக தங்களுக்கு
Deleteஒளி காட்டும் வழியில் சென்று ஒற்றுமையை அடைந்துவிடுவோம். சிறப்பான கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பான ஆத்மார்த்தமான உங்கள் வாழ்த்து கிடைப்பதே பேறு கேபி சார் நன்றி மிக
Deleteஇருளும் ஒளியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்றாலும் முயன்றால் அந்த இருளையும் ஓட்டிவிடலாம் என்பதை மிக அழகாய்க் கற்றுத்தரும் கவிதை. பாராட்டுகள் ஷைலஜா. போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டினதற்கும் மிக்க நன்றி கீதம்ஞசரி
Deleteகடைசி வரிகளில் சொல்லப்படும் நம்பிக்கை கவிதையின் சுவையை அதிகரிக்கிறது.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரஞ்சனி மேடம்..தீபாவளிக்கு ஊர் சென்றுவிட்டதால் பதிலிட தாமதம்!
Delete