அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழிலவேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்
அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்
//பூதாதி: நிதி: அவய்ய:
பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை.
வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.// என்று விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தை அருமையாக எழுதிவரும் அன்பரின் மடலில் இதை வாசிக்கவும் ஆதிபிரானைப்பற்றி இன்று எழுத ஆரம்பிக்கவும் சரியாக இருக்கிறது!
ஆண்டவனைப்பாடுமுன் அவன் அடியார்களைப்பாடுகிறார் வணங்குகிறார் ஆழ்வார் பெருமான்.. அதைதானே அண்ணல் விரும்புவான்?அமலன் விமலன் நிமலன் நின்மலன் என்று அண்ணலை நான்குமுறை திருப்பாணாழ்வார் ஏன் அழைக்கிறார்?
்அமலன்..பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.
விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.
நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்”என்னையா என்னையா அரங்கன் அழைத்துவரச்சொன்னான்?” என்று நம்பமுடியாமல் கேட்டு தலையைத்தூக்கிய ஆழ்வார்பெருமானுக்கு மலையப்பன் கண்முன் வந்துவிட்டான்.உயரேஇருப்பவன் அவந்தானே ?
அவனைத்துதித்து முடிக்கவும்அரங்கனின் பாதம் விழிகளின் வசம் அங்கு வாசம்!ஆதிபிரானை வேங்கடவனை முன்வைத்து அரங்கனை பாதம் தொழுகிறார் திருப்பாணாழ்வார்.
அரங்கனின் சந்நிதிக்குள் நுழையுமுன்பாக வலப்புறம் வேங்கடவனின் சித்திரம் காட்சி அளிக்கும்(என் குருவின் அன்பு ஆணைப்படி இன்றுமுதல் இந்தத்தலைப்பில் ஆழ்வார்களை அன்போடு மேலும் மேலும் ஆராதிக்க அரங்கன் அருளவேண்டும்)
--
Tweet | ||||
விளக்கம் ரசிக்க வைத்தது... அரங்கன் அருளோடு தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteநிச்சயம் அரங்கன் அருள்வார் அக்கா! அழகுத் தமிழ் அமுதம் உங்களிடம் இருக்கையில் அழகாய்த் தொடரும் பிரபந்தம்! ரசிக்கும் எங்களுக்குத்தான் பாக்கியம்!
ReplyDeleteதமிழமுதம் ததும்பும் அருமையான பதிவு!!!. அரங்கமா நகருளான் பரிபூரண அனுக்கிரகம் நிச்சயம் தங்களுக்கு இருக்கிறது. தொடருங்கள்.. தொடருகிறோம்...
ReplyDeleteஅரங்கனின் சந்நிதிக்குள் நுழையுமுன்பாக வலப்புறம் வேங்கடவனின் சித்திரம் காட்சி அளிக்கும்
ReplyDelete]
அரங்கச்சித்திரம் அருமை..!
மிக்க நன்றி அனைவர்க்கும் இனி பிரபந்தப்பதிவுகள் தனி வலைப்பூவினில்(குலம்தரும்) வர இருக்கிறது!
ReplyDeleteமறுபடி மறுபடி படிக்க தூண்டுகிறது உன்கள் எழுத்து.
ReplyDeleteநாங்கள் பாக்கியம் செய்தவர்கள். ஆழ்வார்கள் பற்றிய உங்கள் புதிய வலைப்பூவை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
திவ்ய பிரபந்தமே தித்திக்கும்.அதில் உங்கள் கைவண்ணமும் சேர்ந்தால் கேட்பானேன்?
மிக்க நன்றி கேபி சார்..இந்த திவ்யபிரபந்தப்பதிவுகளை தனி வலைப்பூவில் இடுகிறேன்..http://kulamtharum.blogspot.in/ அவசியம் அங்கே வருகை தரவும்..டிடி அவர்கள் அதனை தமிழ்மணத்தில் இணைக்கவும் நன்றி
Deleteஎம்பெருமான் குறித்த பாடலும் அதற்கான விளக்கமும் அருமை....
ReplyDeleteநன்றி குமார் இனி இவை http://kulamtharum.blogspot.in/ இங்கே வரும்
Delete