எங்கெங்குகாணினும் சக்தியடா!
என்றவன் எங்கள்பாரதியடா!
அங்கங்கே அவன்கண்ட ஓவியமே
தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!
சக்திதனை துணையாக்கிக்கொள்வான்
பக்திப்பாமாலை பலபடைப்பான்
திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான்
தக்கத்திமியென்றே குதிப்பான்!
சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும்
திக்குமுக்காடித்தான்போகும்!
வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி
கானமயிலும் சக்தி மோனத்தவமும் சக்தி
யானை சக்தி சிறுபூனை சக்தி
பார்க்கும் பொருளெல்லாம் சக்தி
களிப்பில் கூத்தாடி நிற்கும்
கவிஞனுக்கே அவள்மீது பக்தி
Tweet | ||||
அழகான பாடல் அக்கா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிகவும் சக்தி மிக்க ஆக்கம். அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்கெங்குகாணினும் சக்தியடா!//
ReplyDeleteஎங்கெங்கு காணினும் சகதி ஏழுகடல் அவள் வண்ணம்.
சக்தி கவிதை அருமை.
சே குமார் வைகோ சார் கோமதி அரசு ..உங்களுக்கு என் கனிவான நன்றி
ReplyDeleteஎல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் சக்தி எல்லோருக்கும் சக்தி அருளட்டும். சக்தியை வெகு அழகாக ரதத்தில் ஏற்றி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
ReplyDelete