உமையவளோ உண்மைப்பரம்பொருளோ
எமைக்காக்கும் சமயபுரத்தவளோ
உக்கிரம் கொண்டவளோ உலகில் நிறைந்திருக்கும்
வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ
சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ சகலகலாவல்லியோ
எக்கரம் ஏந்தி நிற்பினும் அருள்பிச்சையை ஈந்திடும் எம் தாயோ?
மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ
பாவிளக்கேற்றிவைத்தால் பாழும் இருள் அகற்றி ஞானத்
தூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
Tweet | ||||
அருமை... அனைவரின் மன இருளை அகற்றட்டும்...
ReplyDeleteதுயரெனும் இருட்டைத்துரத்து்பவளின் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு
ReplyDeleteசகல துயரை போக்கும்,நன்மையை அளிக்கும் சமயபுரத்தவள் எல்லோருக்கும் அருள் பாலிக்கட்டும்.
ReplyDeleteமனதுக்கு இதமான துள்ளி விளையாடும் கவிதை
பாவிளக்கேற்றிவைத்தால் பாழும் இருள் அகற்றி ஞானத்
ReplyDeleteதூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ//
இருள் அகற்றி ஞானஓளி ஏற்றவேண்டும் அன்னை அனைவருக்கும்.
சமயபுரத்தவளின் மேல் பாடிய பாமாலை சமயபுரத்திற்கே அழைத்துச் சென்றது. போகவேண்டும் என்னும் வேண்டுதல் ஒன்றும் நினைவிற்கு வந்தது. சமயபுரத்தவளின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDelete