கற்ற கல்வி கூட வரும்
கலைவாணி அருளாலே
சிலைபோலஞானம் உறுதி பெறும்
அடியெடுத்துப்பாடுங்கால்
முடித்துவைக்க துணைபுரிவாள்
எதுகையொடு மோனையும்
அதுவதுவாய் பொருந்திவரும்
பாக்கள் எனும் பூக்கள் விரிய
ஆக்கசக்தி தந்து ஊக்குவிப்பாள்
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
பெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும்
Tweet | ||||
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
ReplyDeleteபெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும்//
உண்மை.
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
வரிகள் சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteகலைவாணி பற்றிய கவியின் ஆக்கம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
ReplyDeleteபெண்பூவின் அருளிருக்கு தங்களுக்கு
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் உங்களைத் தேடிவரும்
ஆக்கசக்தி தந்து ஊக்குவிக்கும் அன்னை கலைமகளைப்போற்றும் அருமையான வரிகளுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteகவிதை அருமை....
ReplyDelete// வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
ReplyDeleteபெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும் //
உங்களுக்கு புகழ் தேடி வரும். விழாக்கால வாழ்த்துக்கள்!
மனம் கனியப்பாராட்டிய திரு தமிழ் இளங்கோ கவிதை அருமை என்ற குமார் கலைமகளிப்போற்றீயதாக பாராட்டும் இராஜராஜேஸ்வரி அளவற்ற புகழ் தேடிவருமெனப்பாராட்டும் வியபதி, ரூபன் டிடி, புகழும் பாராட்டும் என வாழ்த்தும் கோமதி அரசு...அனைவர்க்கும் மிக்க நன்றி கலைவாணி அருள் கிடைக்கட்டும் நமக்கெல்லாம்
ReplyDeleteமிக அருமை ஷைலஜா! இனிய விழாக்கால வாழ்த்துகள்:)!
ReplyDeleteவாணியின் அருள் இருந்தால் எதுதான் முடியாது?
ReplyDeleteகவிதைவரிகள் அழகு கொஞ்சுகின்றன!