வாணி வரம் தருவாய் நீ
காணி நிலம் கேட்ட கவிஞனின்
நாவில் நர்த்தனம் செய்த தேவி நீ
கல்விக்கு அதிபதி கருணைக்கடலும் நீ
செல்வமாய் உன் அருளிருப்பின்
கொள்ளூமோ பழவினைதான்?
பாமரனாயிருந்தவனுக்குப்
பாட்டுக்கனிகுலுங்கும்
பா மரமாக்கிவைத்த பாரதி!
அறிவைப்பெருக்கும் அருவி நீ
செறிந்த ஞானம்தரும் செல்வி நீ
உரிய நேரத்திலே உயரக்கொண்டுசென்று
அரிய புகழ் அளிக்கும் சரஸ்வதி !
Tweet | ||||
அருமையான கவிதை...
ReplyDeleteவாணி வரம் தரட்டும் நமக்கெல்லாம்...
வாழ்த்துக்கள் அம்மா.
"பாமரனாயிருந்தவனுக்குப்
ReplyDeleteபாட்டுக்கனிகுலுங்கும்
பா மரமாக்கிவைத்த பாரதி"
""பாமரனாயிருந்தவனை பா மரமாக்கி"" என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். வாணி நமக்கெல்லாம் வரம் தர வேண்டுகிறேன்
அனைவருக்கும் அருள் புரியட்டும்... வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிவைப்பெருக்கும் அருவி நீ
செறிந்த ஞானம்தரும் செல்வி நீ
கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை. இனிய நவராத்திரி + சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎண்ணிய முடிதல் வேண்டும் !
ReplyDeleteஅதற்கு
வாணி வரம் தருவாய் நீ !! ;)
// காணி நிலம் கேட்ட கவிஞனின்
ReplyDeleteநாவில் நர்த்தனம் செய்த தேவி நீ //
நவராத்திரி – விழாக்கால வாழ்த்துக்கள்!
அருமையான வரிகள்!
ReplyDeleteசரஸ்வதி எல்லோருக்கும் நல்லவற்றையே தரட்டும்.....
ReplyDeleteகல்விக்கு அதிபதி எல்லோரையும் கற்றவர் ஆக்கட்டும்.
ReplyDeleteஉரிய நேரத்தின் உயரக் கொண்டு செல்லட்டும்.
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்
பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் அன்பான கனிவான நன்றி..கலைத்தாய் அருளோடு அனைவரும் இன்புற்று வாழ பிரார்த்தனைகள்
ReplyDeleteஉரிய நேரத்திலே உயரக்கொண்டுசென்று
ReplyDeleteஅரிய புகழ் அளிக்கும் சரஸ்வதி !//
சரஸ்வதி வாழ்வில் எல்லா நலமும் தரட்டும்.
வாழ்த்துக்கள்.