Social Icons

Pages

Thursday, December 26, 2013

சிற்றாதே பேசாதே!

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும்
முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.

அப்பா   !பூதத்தாழ்வார் பாடல் அல்லவா இது!  அழகான   பாசுரம்!
 
ஆமாம் கோதை...  ஆழ்வார்  திருவடியைப் பற்றிவணங்கி நீ இன்றைய  பாசுரத்தை சொல்லேன் கேட்கிறேன்”



 
 
 
 
 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!
 
 
”கோபாலனை நினைவுகூர்ந்தாய் கோதை!  அவன் மாடுமேய்க்கப்போனால்  திரும்பிவரௌம்வரை யசோதை   காத்திருப்பாளாம்!   ஆநிரை காத்தல்  பண்டைய  தமிழர்  தர்மம்..பாசுர விளக்கத்தை நீயே சொல்லேன் கோதை”
 
 
 
 
சொல்கிறேன் அப்பா    ...மனத்தில்   கட்டமிட்டு  இருக்கிறேன் அதை அப்படியே தருகிறேன்.
 
 
கன்று கறவை-கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள்-பல திரள்களை
கறந்து-கறப்பவர்களும்
செற்றார்-சத்துருக்களினுடைய
திறல் அழிய-வலி அழியும்படி
சென்று-(தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும்-போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத-ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான
கோவலர் தம்-கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)
பொன் கொடியே-பொன்கொடி போன்றவளே!
புற்று அரவு அல் குல் புனமயிலே-புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில்
(இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே!
செல்வம் பெண்டாட்டி-செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
 
 
 சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! =
சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல்!
பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி!   இதெல்லாம் சரியா அப்பா?”
 
 
 
 ஆஹா  அருமை  கோதை  இதில்  செற்றார் திறல் அழிய என்றாயே  அது நன்று
 இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

எற்றுக்கு உறங்கும் பொருள்-எங்களுடன்  புறப்படாதே உறங்குகைக்கு  ஒரு பிரயோஜனமும் உண்டோ? அடையாரோடு  கூடி இருக்காமல் கைவல்யம் போலே  இருக்கும் நிலைதான் என்ன? கைவல்யம்= தனியே அனுபவிக்கும் பகவத்ப்ரேமை தனக்கு மேற்பட்ட ஆனந்தம் இல்லை எனும்படியான நிலை.  “
 
 
 
மிகச்சரி அழகான பாசுரம் இது!
இந்தப்பாடலில் பசுக்கள் என்பது ஜீவாத்மாக்கள்.
அவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இருப்பினும் அப்பசுக்களை அடங்கக் கறக்கும் சாமர்த்தியம்  உள்ளவன் கண்ணனே என்பதால்  பரமாத்மா ஒருவனே ஆகிறான். அப்பரமாத்மா  ஜீவாத்மா எல்லாரையும் ஞானம் அடையச்செய்யக்கடவர்.  அந்த ஞானத்தை அடைய அவர்கள் தொண்டு செய்யவேண்டும். பசுக்கள் பாலை  உலகில் உள்ளார்க்கு அளித்துத்தொண்டு செய்வதுபோல என்று உட்பொருள் கூறப்படுகிறது. (பால்--ஞானம், பால் கறத்தல்-ஞானம் அடையச்செய்தல், பாலைப்பசு உதவுதல்-தொண்டுசெய்தல்)“

 
 ”உட்பொருளாய்  நான்  வைத்துப்பாடினதை அழகாக   எடுத்துரைத்த என் தந்தையே  உம்மை எம் அரங்கன்  என்றும் காக்க  வேண்டிக்கொள்கிறேன்!”

 **********************************************************************
 
 

6 comments:

  1. அருமையான விளக்கம்.பெரியாழ்வார் பாசுரத்தையும் ஆண்டாளின் பாசுரத்தையும் இணைத்து எழுதும் பாணி எளிதில் புரிய வைக்கிறது
    அந்த துயிலும் கோபியின் அழகை வர்ணிக்கும் பொழுது புற்றுக்குள் இருக்கும் நாகத்தையும் அதன் எதிரி அழகான மயிலையும் சேர்த்த ஆண்டாளின் வர்ணனை விநோதமாக இருந்தது.

    ReplyDelete
  2. அழகான விளக்கம்...

    ReplyDelete
  3. நல்ல விளக்கம்.....

    ReplyDelete
  4. வெண்பாவில் * குறி எதற்காக?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை சார் நல கேள்வி இது.அதாவது திவ்யபிரபந்த பாராயண முறை என்று இருக்கிறது இப்படி பாசுரங்களில் குறியீடு செய்திருக்குமிடங்களில் நிறுத்தி அடுத்த வரி சொல்லவேண்டும் என்பது நியதி. ... கோஷ்டியாக சொல்லுமிடத்தில் பாராயணக்குறியீட்டின்படி மாறி மாறி இரண்டு அணியினரும் சொல்லுவார்கள் இப்படி!

      Delete
  5. கேபிசார் சே குமார் வெங்கட்நாகராஜ்...அனைவரின் பின்னூட்டத்துக்கும் நன்றி மிக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.