Social Icons

Pages

Friday, December 27, 2013

மனத்துக்கினியானை.......

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார் நம்மாழ்வார்..  ராம நாமம்  மனதிற்கு இதம்  குலசேகரப்பெருமானுக்கு  ராமகாதை கேட்பது  மிகவும் விருப்பம் அப்படியே  அதில் ஆழ்ந்துவிடுவார் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்.

மனத்திற்கு இனியன்  ராமன்  ..

(.தன்னைக்காட்டிற்குபோகப்பணித்த  கைகேயிடமும் பணிவுடன’இராமன் “மன்னவன் பணியென்றாலும் நின்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ’ என்று  அன்றலர்ந்த தாமரைமுகத்துடன் கானகம் சென்றவன்  ராமன் மனத்துக்கு இனியன்.)


  ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரக்க  நடப்பவன் இராமன்.
அவனுக்கும் சினம் வந்தது  சீதையை ராவணன்  கவர்ந்து சென்றபோது.  போரில்  இன்றுபோய் நாளைவா எனப்பகைவனுக்கு   கருணை காட்டிய இனியன்.  அப்போதாவது சரணாகதி செய்வானோ ராவணன் எனக்காத்திருந்தான் ஆனால் அவனுக்கு அந்தக்கொடுப்பினை இல்லை..ஆகவே சினம் கொண்டான்..


தனமருவு வைதேகி பிரியலுற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத் தேத்தி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினமடங்க மாருதியைச் சுடுவித்தான்

 
என்கிறார் ஆழ்வார் பெருமான்..சினமடங்க.....  ஆம் ராமனுக்கும் கோபம் வந்தது.”

“என்ன  அப்பா இன்று ராமனிடத்தில் மிகவுமாழ்ந்துவிட்டீர்களோ?”
கோதை  சிரித்தபடி கேட்டாள்.
“ஆமாம் கோதை மனத்துக்கு இனியவர்களை  நினைத்தாலே  நா இனிக்கிறது..குலசேகர ஆழ்வாரைப்போல  நான் ராமனைப்பாடவில்லை எனினும்  அந்த இனியனை  அடிக்கடி நினைத்து மகிழ்வேன்.... அதனால்தான்  இன்று எழுந்ததுமுதல் அவன் நினைவாகவே இருக்கிறேன்..”

மனதுக்கு இனியன் ராமன் எனக்கும் தான் அப்பா....என் கண்ணனும் மனதுக்கு இனியன் . அதரம் மதுரம் நயநம் மதுரம்! நீங்களே கண்ணுக்கினியான் என கண்ணனைப்பாடி இருக்கிறீர்கள். திருமங்கை தன்னடியார்க்கு இனியன் என்கிறார்.   அவனை நினைத்தபடி  தோழிகளை அழைக்கப்போகிறேன்”

“நல்லது கோதை  ...பனி விலகுமுன் போய்வா”

இனி கோதை  தோழியை அழைத்த பாடலும் அதன் விளக்கமும்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடைப் பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்

--

 முன் பாட்டில் கன்று, கறவை என்பவை இணைந்து கற்றுக் கறவை ஆனது போல் இங்கு கன்று எருமை இரண்டும் கலந்து கற்றெருமையாயிற்று. மனிதர்களுக்குள்ள எரிச்சலையும் [வெப்பம்] , நீர் வேட்கையையும் [தாகம்] உணர்ந்து மழைக்குரிய [பர்ஜன்ய] தேவதை மழையைப் பொழிகிறது என்பதைத் தெரிவிக்க இரங்கி [இரக்கப்பட்டு] என்கிறாள். மனிதர்களை உலகின் சக்திகளாய் விளங்கும் தெய்வங்களுக்குக் குழந்தைகள் என்கிறாள். எருமை மேகமாகவும் பால் கறக்கப்படும் அதன் மடியை அம்மேகத்தில் நீர் தங்கும் பாகமாகவும் காம்புகளை அம்மேகத்தின் மழை பொழியும் கண்களாகவும் கூறுகிறாள்.

இங்கே நங்காய் என்றது இவள் உடன் பிறந்தவன் பெருமையை நற்செல்வன் என்று கூறியதால் அண்ணனும் தங்கையும் வழி வழியாக தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதைக் குறிக்கும் [செல்வன் -நடப்பவன்]

இப்பொழுது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டது. வீட்டின் கூரையில் படிந்திருந்த பனி கொஞ்சம் கொஞ்சமாக உருகி கீழே சொட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை ‘பனித்தலை வீழ’ என்று குறிப்பிடு்கிறாள்.
மனத்துக்கினியானை   தந்தைகூறியதுபோல நினைத்துக்கொள்கிறாள்.. இனியாவது எழுந்திரேன் இன்னும் என்ன பெரிய தூக்கம்  மற்ற வீட்டவர்கள்   அனைத்து வீடுகளினின்றும் எல்லாரும் வந்தாயிற்று தெரிந்துகொள் தோழி எழுந்துவா நீராடப்போகலாம் என்பதாக முடிக்கிறாள்.

ஸ்ரீராமஜெயம்!

10 comments:

  1. அழகான விளக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Anonymous11:52 AM

    வணக்கம்
    அனைத்தும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்... அருமை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக தெளிவாக அருமையாக விளக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  5. நன்றாக விளக்கி உள்ளீர்கள்.படிக்க சுவையாக உள்ளது.

    இப்படி ஒரு விளக்கத்தை பாலா என்பவர் தருகிறார்.
    சென்ற பாசுரத்தில் 'கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து' என்பதில் ஆயர்கள் தங்களுக்கு இடப்பட்ட காரியங்களை செவ்வனே செய்து முடித்தனர் ஆகையால் கர்ம யோகத்தின் சிறப்பை கூறுவதாக கொள்ளலாம்.
    ஆனால் இந்த பாசுரத்தில நற்செல்வன் (கண்ணனுக்கு நெருக்கமானவன்) திருச்சேவையில் ஈடுபட்டு இருந்ததால் பால் கறக்கப்படாமலே இருந்த நிலை.இது கர்ம யோகத்தை விட பகவத் சேவையின் உயர்வை காட்டுகிறதாம்.இதற்கு உதாரணமாக இலக்குமணன் தன மனைவியை பிரிந்து ராமனுக்கு சேவை செய்ய அவனுடன் காட்டிற்கு சென்றது போல என்கிறார்.

    இன்னும் ஒரு சுவையான விளக்கம். அழகான கண்ணன் கோபியர் எதிரில் இருப்பதால் கண்ணுக்கு இனியவனாம்.ஆனால் ராமனோ மனதுக்கு இனியவனாம்.ஏனென்றால் நேரில் கண்டவன் இல்லையாம்
    .

    ReplyDelete
    Replies
    1. கேபிசார் நீங்கள் அளித்த பாலாவின் விளக்கமும் நன்று எத்தனை புதிய விஷயங்களை அறிய முடிகிறது உங்களால்? நன்றி

      Delete
  6. Parjanyova Apamayatanam | Ayatanavaan Bhavati |
    Yah Parjanyasya Ayatanam Veda | Ayatanavan bhavati |

    பர்ஜன்ய என்ற சொற்றொடர் மந்திர புஷ்பத்திலும் வருகிறது.

    நீர்த்துளிகளால் நிறைந்த மேகங்கள். by extension that would also
    symbolise God Varuna.

    வருணன் எல்லோருக்கும் மித்திரன். எல்லோருக்கும் இதமானவன்.
    எங்கும் மழை பொழிவித்து எங்கும் பசுமையை உண்டு பன்னக்கூடியவன்.

    அழகான எடுத்துக்காட்டு.

    சுப்பு தாத்தா.
    முடிந்ததும் ஒரு புத்தகமாக வெளியிடவும்.
















    ReplyDelete
    Replies
    1. மிக அழகாக கூறி இருக்கிறீர்கள் சுப்புத்தாத்தா உங்கள் விளக்கம் எனக்கு புதிது மனதை நிறைத்தது அனுபவசாலிகள் நீங்கள் அதிகம் தெரிந்துவைத்திருப்பீர்கள். அவ்வப்போது என்பதிவில் இப்படி சொல்லவும் நன்றி மிக..புத்தகமாகபோட முயல்கிறேன் நன்றி இதற்கும்

      Delete
  7. டி சே குமார் ருபன் விகய்பதி ..உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு..... திருப்பாவையை தினமும் ரசித்தபடியே இருக்கிறேன்....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.