முதல்பாசுரம்.
பெரியாவாருக்கு மனமெல்லாம் பூரிப்பு..ஆமாம் தசரதனும் வசுதேவனும் பெற்ற பெருமையை தான் அடைந்திருக்க்கிறோமே என்று இல்லையாபின்னே ! பூமகளே தன் மகளாய் துளசிதளத்தில் கிடக்க அவளை அரவணைத்து வளர்த்து அண்ணலைப்பற்றி அழகழகாய் கதை சொல்லி...இன்று தன்மகள் எழுத்தாணியை எடுத்துக்கொண்டு பாசுரம் எழுதுகிறாளே..என்ன என்று பார்ப்போம் என அருகில் சென்றார் பெரியாழ்வார
மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்
>+++++++++++++++++++++++++++++++++++++++++
மார்கழியின் இரண்டாம் நாள்.பெரியாழ்வாருக்கு மகள் அடுத்த திருப்பாவை பாட்டாக என்ன எழுதப்போகிறாள் என்று ஆர்வம். அருகில்போய் என்னம்மா எழுதுகிறாய் என்று கேட்கவும் தயக்கம். ஏற்கனவே மகளுக்கு 108 திவ்யதேசபெருமான்களைப்பற்றி தான் கூறியதிலிருந்து மகளின் மனம் மாலிடமே மயங்கிவிட்டதை அவர் அறிந்துதான் இருந்தார். தான் அண்ணலைகுழைந்தையாய் பாவித்து
”முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
. ” என்று பாடிக்கொண்டிருக்க இவள் என்னடாவென்றால் அவனை நாயகனாய் அல்லவா வரிக்கிறாள்!
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
. ” என்று பாடிக்கொண்டிருக்க இவள் என்னடாவென்றால் அவனை நாயகனாய் அல்லவா வரிக்கிறாள்!
ம்ம் பார்க்கலாம் இன்னிக்கு என்னதான் எழுதி இருக்கிறாள் என்று.
பெரியாழ்வாரின் மனதைப்புரிந்துகொண்டமாதிரி கோதை ஓலைச்சுவடியை அவர் அருகே கொண்டுவந்தாள்
இன்றைய பாசுரத்தை பாடட்டுமா அப்பா என்று கேட்டாள்.
சொல் கோதை கண்ணனைப்பற்ரி என்ன சொன்னாலும் இனிக்குமே! அவனுக்கு
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ” என்று ஏழை நான்
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ” என்று ஏழை நான்
பாடினேன் இந்த மழைக்கு ஒழுகும் குடிசையில் இருந்துகொண்டு!
“அப்பா! நான் அவனை உறக்கத்திலிருந்து எழுப்ப பாடல் எழுதப்போகிறேன் உங்களை மாதிரி தாலாட்டெல்லாம் கிடையாது. எழுந்து ஓடிவந்து அருள் செய்யலேன்னா தெரியும் சேதி என்பதாக!
அம்மாடி அவன் இறைவன்!
இருக்கட்டுமே அதனால் என்ன? அன்பினால் சிறுபேர் இட்டூ அழைத்தால் சீறுவானோ? உனக்கே ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று போகப்போக எழுதி அவனை
என் வசப்படுத்தாமல் போகமாட்டேன்.சரி இன்றைய பாட்டு கேளுங்கள்.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்
அருமை கோதை எனக்குப்புரியவில்லை விளக்கம் சொல்லேன்.
ஆமாம் அப்பா சும்மா சொல்லாதீர்கள்..
என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே
என்று அருளிய உங்களுக்கா நான் எழுதுவது புரியவில்லை? இந்த பெற்றோர்களுக்குக்குழந்தைகள் முன்பு தான் குழந்தையாக நிற்பது மிகவும் பிடித்தமான ஒன்றுதானே போகட்டும் விளக்கம் கேளுங்கள்.
உலகமகா ஜனங்களே நாம் பாவை நோன்பு செய்யவேண்டிய விதிகள்(கிரிசைகள் கர்மயோகம்) என்னன்ன தெரியுமா கேளுங்க பாற்கடலில் பைய(நாங்க மதுரைக்காரங்க பையன்னுதான் சொல்வோம் அர்த்தம் தெரியாதவார்களுக்கு மதுரைத்தமிழ்ச்செல்வர்களும் செல்விகளும் விளக்கட்டுமே?:) தூங்கும் பரந்தாமனின் திருவடியைப்பாட, இதெல்லாம் செய்யமாட்டோம் நாங்க.அதாவது...
* நெய்யுண்ணோம் பாலுண்ணோம் = நெய்யும் பாலும் ஆயர்களின் அடிப்படை உணவு! அதையே உண்ண மாட்டோம், நோன்பு முடியும் வரை- ஏன்?
நெய் சூடு! பால் குளிர்ச்சி! ரெண்டும் கலந்து கலந்து அடிச்சா, நாம மிதப்புல தான் இருப்போம்! ஒன்னும் ஏறாது! அதான் முதலில் உடலைத் தயார் பண்ணனும்
.காலைநேரத்துல தண்ணீர் ஜில்லுனு இருக்கும் அதனாலே நாட்காலே நீராடி
* தீக் குறளை சென்று ஓதோம்குறளை = குறுகிய
* பாக்களில் குறுகிய வடிவம் உள்ள பா = குறள் பா!
* அவதாரங்களில் குறுகிய வடிவம் உள்ளவன் = குறள் அப்பன் (வாமனன்)!
* அதே போல் குணங்களில், குறுகிய குணம் = குறளை-கோள் சொல்லுதல்!
குறளி என்பது பாண்டி நாட்டு வட்டார வழக்கு!
மை இட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்! ஏன்?
கண்ணுக்கு மை அழகு! மனக்கண்ணை திறந்து வைத்து மாலவனைப்பார்க்கவேண்டாமோ?அதனால் மை வேண்டாம்.
நானே ஒரு அழகான பெண் தானே! ஆண்டாள் கொண்டை அதில் சுற்றும் பூ என்று எத்தனை அழகு! மலரெல்லாம் வேண்டாம். ஏன் அலங்காரம் வேண்டாம் என்கிறேன்? புறச்சிந்தனைக்கு மனம் போகவேண்டாம் என்றுதான்.
செய்யாதன செய்யோம் = எது செய்யத் தகாதது-ன்னு அடி மனசுக்கு தெரியும்! ஆனா மேல் மனசு செய்ய சொல்லும் ஆனாஅடி மனசில் அவன் இருக்கான் (அந்தர்யாமி, உள்ளத்துள்ளான்)!
! அது செய்யாதே-ன்னு சொல்வதைச் செய்யாம இருப்போம்
! அது செய்யாதே-ன்னு சொல்வதைச் செய்யாம இருப்போம்
* தீக் குறளை சென்று ஓதோம்குறளை = குறுகிய
* பாக்களில் குறுகிய வடிவம் உள்ள பா = குறள் பா!
* அவதாரங்களில் குறுகிய வடிவம் உள்ளவன் = குறள் அப்பன் (வாமனன்)!
* அதே போல் குணங்களில், குறுகிய குணம் = குறளை-கோள் சொல்லுதல்!
குறளி என்பது பாண்டி நாட்டு வட்டார வழக்கு!
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசல் தவறு.
* ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி = ஐயம்= நம்மை ஒத்தவர்களுக்குக் கொடுப்பது!
பிச்சை= நம்மை விட மேல் நிலையில் உள்ள (துறவிகள்)/ கீழ் நிலையில் உள்ள இரப்பவர்களுக்குக் கொடுப்பது! ஆக மொத்தம் கொடுக்கவேண்டும்.இது ஒரு தர்மம். நோன்பிற்கான அறம்"!
உய்யும் ஆறு என்று எண்ணி = இது நமக்கு உய்யும் வழி!
உகந்து = அதனால் விதியே-ன்னு (நோன்புக்காக மட்டும்) செய்யாது, உகந்து செய்வோம்!
ஏல்-ஓர் எம் பாவாய் = பாவைப்பெண்களே வாங்க எழுந்து!
உகந்து = அதனால் விதியே-ன்னு (நோன்புக்காக மட்டும்) செய்யாது, உகந்து செய்வோம்!
ஏல்-ஓர் எம் பாவாய் = பாவைப்பெண்களே வாங்க எழுந்து!
எப்படி இருக்கு அப்பா?
பெரியாழ்வார் பிரமிப்பில் என்ன சொல்லி இருப்பார்?
(நாளைமுதல்தினம் ஒரு பாசுரமாக வரும்)
Tweet | ||||
அமர்க்களப்படுத்தி விட்டீர்களே!!!.சூடி கொடுத்த கோதையின் திருப்பாவையை வருடா வருடம் கேட்பதுண்டு.இந்த மாதிரி தந்தையும் பெண்ணும் பேசிகொள்ளும் விதமாக நவீன உத்தியுடன் மிக அழகாக சொல்லுவது படிக்க ருசியாக உள்ளது.
ReplyDeleteகோதை ஆயர்பாடியை வில்லிபுத்துருக்கு கொண்டு வந்துவிட்டாள்.அவளும் அவள் தோழிகளும் ஆயர் சிறுமிகளாகிவீட்டனர்,யமுனையும் கோவில் குளமாகி விட்டது.எல்லோரும் நோன்பு நூற்க ஆரம்பித்து விட்டனர்.ஆண்டாளும் நோன்புக்காக பாடவும் தொடங்கி விட்டாள்
.
இனி மார்கழி முழுவதும் சிறு காலையிலேயே எழுந்து உங்கள் பகிர்வை படிக்க நாங்களும் தயார் படுத்தி கொண்டாச்சு.
வணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா... அற்புதமான பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா.
சிறப்புப் பதிவு மிகச் சிறப்பு
ReplyDeleteவித்தியாசமாக
விளக்கம் சொல்லிப்போகும் விதம்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அழகான தமிழில் அருமையான சிந்தனை.
ReplyDeleteஉண்ணோம் எழுதோம் போன்ற ஹர்த்தால் எண்ணங்களுக்குப் பின்னே நிறைய ஆழம் இருக்குமோ ? சென்னைப்பித்தன் சாருக்குத் தெரியும் ;). ஆண்டாள் கண்ணனுடன் கலக்க விரும்பியவள்.. சற்றுத் திமிர் பிடித்தவளும் கூட. தமிழறிந்த பெண்ணாயிற்றே, சும்மாவா? கலக்கப் பிறந்தவன் கண்ணன் என்பதை தான் எடுத்த முதல் மூச்சிலே உணர்ந்தவளின் எதிர்மறை எண்ணங்களின் பின்னே செறிந்த காமமும் அறிவார்ந்த உட்பொருளும் இருக்குமோ ?
வாருங்கள் திரு அப்பாதுரை..வருகைக்கு நன்றி... ஆண்டாளைப்பற்றி கரெக்டா சொன்னீங்க புரட்சிப்பெண் இவள். வாரணமாயிரம் பாட்டில் கூட கைத்தலம் நான் பற்ற கனா கண்டேன் என்பாள் இவள் போய்கையைப்பிடிப்பாளாம் நீயென்ன என் கரம்பிடிப்பதென்று?:) இதையே பாரதி காதலொருவனை கைபிடித்தே என்றார். ஆம் இவள் பாடல்களில் அறிவார்ந்த உட்பொருளும் காமமும் நி்றைய்வே இருக்கும்
Deleteடிடி ரமணி திரு கேபி சார் ரூபன் அனைவரின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி
ReplyDeleteமார்கழித் திங்களில் நல்ல தொடக்கம்! மார்கழி நன்னாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தமிழ் இளங்கோ வருகைக்கும் கருத்துக்கும்
Deleteமார்கழியில் நல்ல தொரு தொடக்கம். அப்பா-மகள் உரையாடல் பாணி மிக நன்று. இன்று தான் ஆறாம் பாடல் பற்றிய ஒரு சிறப்பு உபன்யாசம் தில்லியில் கேட்டேன்......
ReplyDelete