Social Icons

Pages

Wednesday, December 18, 2013

உத்தமன் பேர் பாடி!




  ஆண்டாளின் மூன்றாவது பாசுரத்தைக்கேட்க ஆவலாக  மகளிடம்  வந்தார் பெரியாழ்வார். பேச ஆரம்பித்தார்.

”கோதைகுழந்தாய்!  என்னவோ எனக்கு இன்று காலைமுதல்  பெருமானின்  திருவடியில் வழக்கத்தைவிடவும் அதிகம்  ஈடுபாடுவந்துவிட்டது அதிலும்  உலகளந்தானே அந்ததிருவடிமீதினில்... 
பொய்கை ஆழ்வார் பெருமான் அருளினாரே” பார் அளவும் ஓர் அடிவைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல  நிமிர்ந்ததே  “ என்று அப்படிப்பட்ட  திருவடியம்மா அது! அகலில் அகலும் அணுகில் அணுகும், புகலும் அரியன் அல்லவா  அந்தக்கண்ணன்? அவனைப்பற்றிய  இன்றைய  உன் பாசுரம் என்ன கோதை?”
 
“அப்பா! என் மனத்தை  உங்களைவிட யாரால் அறியமுடியும்? நானும் அந்ததிருவடியையே இன்று பாடலில் முதலடியாய்  கொண்டுவருகிறேன். சிறிதிலிருந்தே  பெரிது பிறக்கிறது அல்லவா?   வாமன அவதார மகிமை வானைவிட  உயர்ந்ததே அதனைக்கூற விரும்பினேன்.. சட்டென வேகமாய்  செய்யும் செயலை  ஓங்கி என்ற முதற்சொல்லில்  பிரயோகிக்கும்போது அதன் வலிமை பன்மடங்கு   உயர்கிறது ஆகவே ஓங்கி உலகளந்த என ஆரம்பிக்கிறேன் கேளுங்கள்.
 
ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,
பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
 
 
 த்ரிவிக்ரமனின் முதலடி  என்னைக் கவர்ந்தது. அடிதேடிப்பலர் செல்ல அடிக்கீழ் பலர் தவமிருந்து அமர்ந்திருக்க  அந்த அடி இருந்த இடத்திலேயே மலர்ந்து ஒரு அழுத்தமில்லாத சுக ஸ்பரிசம் !  நெருக்கத்தில் பூவுலகு முழுவதையும் ஒரு தாய் தூங்குகிற குழந்தையை முகர்வது போல தொட்டு அளந்து கொண்டது. நான் பூமாதேவியின் அம்சம் என்பதால்  தன்னிச்சையாய் உணர்ந்த அனுபவத்தை நினைத்துச் சிலிர்க்கிறேன்  அப்பா!
மேலும் எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,


 முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறேன் பிறகு  இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடறுத்து ஒங்கி உலகளந்த என்றும்
மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
  என்றும் முடிக்க இருக்கிறேன்

என்று ஆண்டாளும் மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கிறாள், வாமன மூர்த்திக்கு என  வருங்காலம் என்னைப்போற்றவேண்டும்.
மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது
நாம் மிகவும்  அடியவர்கள்  என்றால் அண்ணலின் திருவடியைத்தான் பிடிக்கவேண்டும்  அவனுக்கு அடியவர்கள் என்பதை  நாம் இப்படித்தான்  நிரூபிக்கவேண்டும். சரிதானே  தந்தையே?”

“ஆஹா  கோதை  பேச வார்த்தை வரவில்லை அம்மா!” பெரியாழ்வார்  மகிழ்ச்சியில் நெகிழ்ந்துவிட்டார்.

ஆண்டாளைப்பற்றி நாம் இனி பேசுவோம்!

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்ததில்
என்ற குறள் அறியாதவர் யார் ?பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.
 
ஆண்டாள்  அண்ணலை உத்தமன்  என்றாள்  . உத்தமன் என்பனுக்கான  உன்னத குணங்கள் எல்லாம் கொண்டவன் கண்ணனே என்பதால். அவன்பேர்  பாடவேண்டுமாம் நாம மகிமை!  கூவிஅழைத்தால் குளிர்ந்துபோவான் கோவிந்தன். யாருக்குமே  தன்பெயரை தன் அன்பர்கள் அழைக்கும்பொழுது  இன்பம் தானே! ஆகவே உத்தமன் பேர்பாடி..

 
நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி, நீராடினால் = எங்கள் நோன்புக்கு, திருநாமத்தைச் சாற்றிக்கொண்டே நீராடுகிறோம்!

தீங்கின்றி, நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து = எந்தக் குறைவும் இன்றி, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், நாடு முழுக்க மும்மாரி என்னும் மூன்று மழைகள் பெய்யும்!
ஒரேயடியாக் கொட்டினாலும் பாதகம்! கொட்டவே இல்லை என்றாலும் பாதகம்! அதான் மும்மாரி!

ஓங்கு பெறும் செந்நெல், ஊடு கயல் உகள = இப்படிப் பெய்ததால் விளைந்த நெல்லு! அந்த நெல் வயலின் ஊடே, தண்ணிர் பாய்ந்தபடி இருக்கு!
அதில் கயல் மீன்கள் குதித்து விளையாட..
பூங் குவளைப் போதில் = நெல்வயலே குளம் போல இருக்க, அதில் குவளைப் பூ பூத்துள்ளதாம்  (போது=பூ)
பொறி வண்டு கண் படுப்ப = அந்தக் குவளைப் போதில், சாதாரண வண்டு இல்ல பொறி வண்டு! அது வந்து கண் படுக்குது! ஆனா தூங்கலை!
கண்ணு மட்டுமே படுக்குது! கண் மட்டுமே படுத்தா என்ன அர்த்தம்?!

தேங்காதே, புக்கு இருந்து, சீர்த்த முலை பற்றி வாங்க =  தேக்கி வைக்காமல்  நமக்காக  அதன்  மடி பற்றியதும் 

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் = குடம் குடமா நிறைக்கும் வள்ளல்கள் என்கிறாள்.நமக்கு தீனி போடுவதைவிடவும்  பதிலுக்கு அவர்களுக்கு வாரிவாரி  வழங்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டதால் வள்ளல்.
ஆண்டாளின் ஜீவகாருண்ய சிந்தனையின் வெளிப்பாடு இது  மனிதனை  வள்ளல் என்போம்  இவள் விலங்கினை வள்ளல் என்கிறாள் ஆஹா
* மாடு = செல்வம்! கேடில் விழுச் செல்வம் கல்வி! ஒருவர்க்கு மாடு அல்ல மற்றையவை! -
நீங்காத செல்வம் நிறைந்து = என்னிக்குமே நீங்காத செல்வம், உங்க வாழ்வில் நிறைந்துஇருக்கட்டும்!
நீங்காத செல்வம் = நித்ய விபூதி!
கீதையில் விபூதி யோகம் உண்டு!
விபூதி என்பதற்குச் செல்வம்-எனப் பொருள்!
இந்தப்பாட்டில் கயல்மீன்கள் ஆத்மாக்களாகவும் குவளைமலர் இதயங்களையும்
பொறிவண்டு இறைவனையும் , பசுக்க‌ள் குருவையும், பால் ஞானத்தையும் குறிப்பதாக ஒரு ஆன்மீகப்பெரியவர் கூறக்கேட்டிருக்கிறேன்.


பக்குவமடைந்த ஆத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின்காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆன்ந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் ஆண்டவன் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம்

 



 
 
 

ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்! தெரிந்து தெளிதல்! ஓர்மையுண்டோ?-மலையாளச்சொல்
ஏல் = ஏற்றுக் கொள்ளல்! மனமறிய அவனை ஏற்றுக் கொள்ளல்!
எம் பாவாய் = என் பெண்ணே,தோழியே...அவனை ஏற்றுக் கொள், தெரிந்து தெளி!


 

16 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி சாந்தி..

      Delete
  2. அருமையான விளக்கத்துடன் பகிர்வு மிகவும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  4. சுவையான விளக்கம்.அருமையான எழுத்து.

    இங்க ஆண்டாள் மழையை வேண்டி லோக சுபிக்ஷத்துகாக உத்தமன் பேர் பாடி என்கிறாள்.யாரோட பேர் என்றால் மூவுலகையும் அளந்த ஓங்கிய த்ரிவிக்ரமன் பேர் என்கிறாள் .ஆனால் .பகவானுடைய புகழை பாட சொல்ல வில்லை..பேர் பாடி என்று நாமத்தையே பாட சொல்லுகிறாள். நாமத்துக்கு பகவானுடையதை விட சக்தி அதிகம் போல. அதனால் தான் ராம நாமம்,சகஸ்ர நாமம் என்று நாமத்துக்கு உயர்வு.

    நீங்காத செல்வம் என்றால் பாங்கில நிறைய பணம்,வீடு வாசல் நகை நட்டு என்று எல்லாம் இல்லை.எதற்கு அழிவு இல்லையோ அத்தகைய செல்வமாம்.மோக்ஷத்தில பகவானுக்கு எப்பொழுதும் கைங்கரியம் பண்ண கூடிய செல்வம்..அந்த நீங்காத செல்வத்தை அடைவோம் என்கிறாள்.

    ReplyDelete
    Replies
    1. அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கேபி சார் நன்றி மிக

      Delete
  5. அற்புதமாக எழுதுகிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    நிற்க. ஓர்தல் என்னும் சொல் வள்ளுவத்தில் பல் இடங்களிலும் உள்ளது.

    சென்ற விடத்தார் செலவிதாது தீது ஓரி
    நன்றி பால் உய்த்திடுவதறிவு.

    ஓரி என்பதற்கு இவ்விடத்தில் தீது என்ன என ஆராய்ந்து அறிவதே.

    சிலப்பதிகாரத்திலும் ஓரி என்னும் வார்த்தை இதே பொருளில் உள்ளது.

    அதெல்லாம் இருக்கட்டும்.

    உங்கள் வியாக்கியானம் எனக்கு மனசுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

    க்ஷேமமாய் இருக்கணும்.
    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுப்புத்தாத்தாவின் வார்த்தைகள் அருமை..ஆசிர்வாதம் என் பாக்கியம் நன்றி மிக

      Delete
  6. ஆண்டாளின் தமிழில் மயங்காதார் யார்? அருமையாக எழுதியுள்ளீர்கள். முப்பது நாளும் எழுதுங்கள். ஸ்ரீரங்கத்து தண்ணீர் அல்லவா! MLV யின் இனிய குரலில், திருப்பாவை கேட்பது சுகம். உங்கள் எழுத்தும் அந்த சுகம் தந்தது. அன்புடன் வெங்கட்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீரங்கத்துத்தண்ணீரில் எத்தனை மகான்கள் மூழ்கி எழுந்திருப்பார்கள்! அந்தப்பேறாக இருக்கலாம் திரு வெங்கட்ராகவன் ராமதுரை ... பெரியோர் ஆசியும் அரங்கன் க்ருபையும் இல்லாவிட்டால் எதைத்தான் செயலாக்க இயலும்? நன்றி தங்களின் மனப்பூர்வமான பாரட்டுக்கு

      Delete
  7. மார்கழி மாதத்திற்குண்டான பதிவு அருமை

    ReplyDelete
  8. ஓங்கி உலகளந்த உத்தமன் என்றவுடனேயே அந்த விசுவரூபம் காட்சியாய் எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆண்டாள் அதைதான் சொல்கிறாள் காலையில் நாம் கண்பது விஸ்வரூபம்.. அதனால் முதல் மூன்றாம்பாட்டில் சொல்கிறாள்..அதைப்பி்றகு சொன்னால் பொருத்தமாக இருக்காதே! நன்றி தமிழ் இளங்கோ

      Delete
  9. வாமனன் ஓங்குவதில் இருக்கும் முரண் பாடலில் முழுமையாக வெளிப்படவில்லை என்று நினைத்ததுண்டு. வள்ளல் பசுக்கள் அதற்கு ஈடு கட்டியதாக நினைக்கிறேன். அறியாத குறள் செருகல் அருமை.

    ReplyDelete
  10. அருமையான விளக்கம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.