என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!
தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!
”அப்பா உங்களுடைய இந்தப்பாடலில் குட்டன் என்பது தமிழ்ச்சொல்லா அப்பா?”
“ஆம் கோதை ..நமது தென் தமிழக மக்கள் சிறுபிள்ளை என்பதை குட்டன் என்று சொல்வோம் பிற்காலத்தில் இது தமிழ் வழக்கில் இருக்குமோ மாறி வேறு மொழிக்குத்தாவுமோ ஆயினும் நம் தென் தமிழ் என்றும் தேன் தமிழ்!”
”நான் திருமணமாகி பிறகு எந்த ஊர் செல்லப்போகிறேனோ ஆனாலும் எனக்கு உங்கள்மூலம் கற்ற தமிழின் சாயல் பிறந்துவளர்ந்த ஊரின் பேச்சு வழக்கம் மனதைவிட்டுப்போகாது அப்பா”
“நல்லதுகோதை இன்று யார்விட்டுப்பெண்ணை எழுப்பப்புறப்படுகிறாய்?’
“எல்லாம் ஒரு கிளிப்பேச்சைக்கேட்கத்தான்.. அவள் கிளிமொழியாள் மேலும் இளமையானவள்... ஆயிரம் கேள்விகேட்காமல் எழுந்துவரமாட்டாள் என்று தெரியும் ஆனாலும் அவள் மனம் கண்ணனையே நினைத்து நினைத்து அவன் பெயரையே திரும்பத்திரும்பக்கூவும் கிளியாகி இருக்கிறது போய் அவளை எழுப்பி நோன்பிற்குக்கூட்டிப்போகவேண்டும்”
“உன் திறமையைக்காட்டு கோதை அவள் எழுந்துவந்துவிடுவாள்”
சிரித்தபடி பெரியாழ்வார் மகளை அனுப்பிக்கொடுத்தார்.
நினைத்தது சரிதான் கிளி உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது..பக்தை நெஞ்சமோ அந்த தத்தையின் நெஞ்சம்?
எழுப்பிப்பார்ப்போம்... கோதை பாட ஆரம்பித்தாள் தோழிப்பெண்களும் கூடவே பின்குரல்கொடுத்தார்கள்.
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?!
சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை?!
எல்லாரும் போந்தாரா? போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!
கோதையும் அவள் தோழிகளும்...
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?' என்றனர். (ஏலே என்ற சொல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களையும் செல்லமாக அழைக்க பயன்படுவது. தென் மாவட்ட மக்கள் இச்சொல்லை பயன்படுத்துவர்)
உறங்கும் பெண்....
(உறங்கிக் கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து ஏற்கனவே தயாராகி விட்டவள் போல நடித்து), ""தோழியரே! இதோ புறப்பட்டுவிட்டேன். ஏன் தொணதொணக்கிறீர்கள்?''((கூச்சல்போடுகிறீகள்?) என்றாள். சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்
அதற்கு தோழிகள், ""உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா? உன் பேச்சுத் திறமையை நாங்கள் ஏற்கனவேஅறிவோம்'' என்றனர்.வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்! = ! (வல்லை)! வல்லிய மோனே-ன்னு மலையாளத்திலும் வல்லை உண்டு!
உன் பேச்செல்லாம் முன்னாடியே உன் வாய் அறியும்!
உன் பேச்செல்லாம் முன்னாடியே உன் வாய் அறியும்!
அதற்கு அந்தப் பெண், ""நீங்களும் சாதாரணமானவர்களா? சாமர்த்தியசாலிகள். ஒருவேளை நான்தான் "புரட்டி பேசுபவள்' என்றால் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்,'' என்று கோபித்தாள் செல்லமாக.
வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக
தோழிகள் அவளிடம், ""இங்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். நீ மட்டும் கிளம்புவதற்கு ஏன் தாமதம்? உன்னிடம் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?'' என்றனர்
ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை
.உடனே அந்தப்பெண், ""என்னைத் தவிர எல்லாரும் வந்துவிட்டதுபோல் பேசிக் கொள்கிறீர்களே! எல்லாத்தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்றாள்.எல்லாரும் போந்தாரா?
அதற்கு அவர்கள், ""எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிக்கொள். “ என்றனர் போந்தார்! போந்து எண்ணிக் கொள்
குவலயாபீடம் என்ற வலிமை மிக்க யானையைக் கொன்றவனும், எதிரிகளை அழிக்க வல்லவனும், மாயச் செயல்களை புரிபவனுமான கண்ணனை பாடுவதற்கு விரைவாக எழுந்து வா,'' என்றனர்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை என்றேனே புரிந்ததா கிளிப்பெண்ணே? விவரிக்கிறேன் கேள்...
கிருஷ்னனைப்போல வல்லான் ஒருவன் இருந்தான்.்பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன் அவன் கிருஷ்ணன் போல வேஷம் போட்டுக்கொண்டு சங்கு சக்கரங்களை மரக்கட்டையால் பண்ணிக்கொண்டு மர கருடனும் செய்துகொண்டு நாந்தான் கிருஷ்ணன் எனகூவிக்கொண்டு மக்களை ஏமாற்றி அவர்களின் செயல்களை செய்யவிடாமல் துன்புறுத்தினான். அவனை நாரதர் எப்படியோ கிருஷ்னன் முன்பு அவனைக்கொண்டு நிறுத்த அவன் கிருஷ்ணரையே எதிர்த்து ஆணவமாய் சண்டையிட்டான்.சக்ராயுதத்தால் அவனை அழித்தான்.மாற்றாரான அநேகப்பகைவர்களை ஒழித்துக்கட்டியவன் வல்லான்! மாயன் தான். நாரதரைக்கேள் சொல்வார்.. கிருஷ்ணனது திருமாளீகையில் அவனைக்கண்டார் அடுத்து கோபிகள் இருப்பிடம் சென்றார் அங்கும் அவன் இருந்தான். இன்னொரு திருமாளிகைக்குப்போனார் அங்கும் கண்ணன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன்! மாயன் அவன்!
“நன்றி கோதை....உங்களுடன் அந்த மாயனைப்பற்றி கூவாமல் நான் கிளிபோல் குரல்கொண்டு என்னபயன் நானும் வருகிறேன் உங்களுடன்:” என்று அந்த இளம் கிளி இணைந்துசெல்லத்தயாரானது!
(இப்பாடல் அம்மானைப்போல அமைந்துள்ளது. அம்மானை ஆட்டத்தில் ஒருத்தி பாடியபடி கேள்வி கேட்க இன்னொருத்தி பதில் சொல்வாள் அது கேள்விக்கான பதிலாகவும் இருக்கும் பதிலுக்கான கேள்வியாகவும்:)
--
--
Reply
|
Forward
|
Tweet | ||||
அருமை... ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வேறு ஒரு இடத்தில் படித்தேன்.இந்த பாசுரம் வைணவர் தம் லக்ஷணங்களை பட்டியலிட்டு கூறுகிறதாம்.அதில் சில.
ReplyDelete-கிளி போல சர்வ காலமும் பகவன் நாமாவையே திருப்பி திருப்பி கூறிகொண்டிருப்பது
-இனிமையாக பேசுவது--உதாரணம்-எலே, சில்லென்று,நங்கையீர்,
-தப்பை சுட்டி காட்டும்போதும் கூட நாசூக்க்காகக சொல்லுதல்-வல்லை உன் கட்டுரைகள்,
-மற்றவர் மேல் குறை கூறாது தன்னையே காரணமாக்கி கொள்ளுவது.-பரதன் ராமன் காட்டுக்கு சென்றது தன்னால் ஏற்பட்டது தான் என வருந்துவது,ராமன் கைகேயியோ அல்லது மந்தரையோ காரணம் அல்ல தானே விரும்பி தந்தை சொல்லுக்கு அடிபணிந்து செய்தது என்றதுவும் கோதை இங்கே நானே ஆயிடுக என்று சொன்னதும் எல்லாம் ஒரே மாதிரியே.
-வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க என்கிற வார்த்தைகள் நம்முள்ளே குவலய யானை,கம்ச சாநூரர்களை போல உள்ள காம க்ரோத,போன்ற கேட்ட குணங்களை அழித்து மனதை பகவானிடமே செலுத்துவது.,
சுவையாக இருந்தது.நன்றி
அம்மானை பாடல் மிகவும் ரசித்தேன். விளக்கமும் நன்று.
ReplyDeleteவல்லானை சிலேடை பாடலின் சிறப்பு.
ReplyDeleteசந்தடி சாக்க்கில் மொழி ஜோசியம்... சுவாரசியம்.