பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
பெரியாழ்வார் பாசுரம் சொல்லிக்கொண்டே துளசிதளத்தை பூக்கூடையில் இட்டபடி மகளைப்பார்த்துக்கேட்க ஆரம்பித்தார்
என்னம்மா கோதை இன்றைக்கும் உன் தோழிகளை அழைக்கும்போதே பாசுரத்தையும் சொல்லப்போகிறாய் என நினைக்கிறேன் அப்படித்தானே?
பெரியாழ்வார் சிரித்தபடி கேட்டார்.
ஆமாம் அப்பா ! மல்லாண்ட திண் தோளனை மனதார நினைத்தபடி இன்றையப்பொழுதை ஆரம்பித்துவிட் டீர்கள் நானும் எருமை, சிறுபுல் மேய புறப்பட்டுவிட்டதை தொண்டரடிப்பொடி சொன்னாரே,’மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்.என்று திருப்பள்ளி எழுச்சி பாசுரத்தில் அவர் மேதிகள் என்றதை நான் நேரடியாக எருமை என்றே சொல்லப்போகிறேன்..வந்து முழுபாசுரத்தையும் உங்களுக்கு அளிப்பேன்.
நல்லது அம்மா சென்று வா!
கோதை அந்ததோழியின் வீட்டுவாசலுக்குவந்துநின்றாள்” பாவாய் எழுந்திராய்!”என்று அழைத்தாள். இந்த ஊரில் உன்னைப்போல அழகி யாருமில்லை பிரும்மன் உன்னைப்பார்த்துப்பார்த்துப்படை த்தானோ! அத்தகைய அழகு கொண்ட நீ வெளியே வா உன்னைபபர்க்கவேண்டும் பாவாய் எழுந்திராய்!
அந்தப்பாவையும் கேட்டாள் “எதற்கு என்னை அழைக்கிறாயடி கோதை?”
மறந்துவிட்டாயா பாவாய்? நீராடப்போகவேண்டாமா?கீழ்வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக சென்று பனி நிறைந்த சிறிய அருகம்புல்லைத்தின்னப்போகின்றன் வந்துபாரேன்..”
அப்படியா?
ஆமாம் கிருஷ்ணனையே நினைத்துக்கொண்டிருக்கும் உனக்கு இவை கண்ணில்படுமா என்ன அவன் நினைவிலான குதூகலம் உன் கண்ணில் தெரிகிறதே உள்ளத்தின் அழகை முகம் காட்டத்தவறுமா? கண்ணன் நினைவில் மகிழ்ச்சி உள்ள பெண்ணே! அடி கோதுகலமுடைய பாவாய்!
வரவேண்டியவர்கள் எல்லாம் வந்துவிடடர்களா கோதை?’’
நீராடப்புறப்படும் மிகுதியான பெண்களையும் முன்னமயேபோகாமல்தடுத்து
உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்(உன்னைக்கூபிடுவதற்காக வந்து வாசலில் நிற்கிறோம்)
மா(குதிரை)வடிவில் வந்த அசுரனின்
வாயைப்பிளந்தவனை,
மல்லரை மாட்டிய(கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை அழித்தவனுமான அவனிடம் நாம் வேண்டுவதை(பறை) பெறுவோம்.
தேவர்களுக்கெல்லாம் தலைவனான திருமாலை..ஆழ்வார் பெருமானும் அருளினாரே ‘அயர்வறும் அமரர்கள் அதிபதியவன்’என்று அந்த
தேவாதிதேவ்னை சென்றுநாம் சேவிப்போம்
ஆம் கோதை சென்று நாம் சேவிப்போம் அப்போது அவன் என்ன சொல்வானடி கோதை?
ஆ! வா !என்று அன்பாய் அழைப்பான்.. ஆராய்ந்து நமக்கு அருள்வான்
*****
பூதத்தாழ்வார் பெருமானின் பாசுரம் இங்கே மனதில் கொள்ளத்தக்கதாக இருக்கிரது.
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன். ...
எல்லாரும் கிருஷ்ணானுபவம் எனும் பக்திக்குளத்தில் குள்ளக்குளிர நீராடப்புறப்பட்டார்கள்
கிழக்கு வெளூப்பது.... ஸத்வகுனம் தலையெடுப்பதற்கான அறிகுறி
எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாக்க்கூறுவது
பாசுரம் எட்டாம் நாள்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
--
Tweet | ||||
//கிழக்கு வெளூப்பது.... ஸத்வகுனம் தலையெடுப்பதற்கான அறிகுறி
ReplyDeleteஎருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாக்க்கூறுவது//
அருமை அருமை
மிக்க நன்றி திருமுருகானந்தம் சுப்ரமண்யன்
Deleteஅருமை. தொடரட்டும்....
ReplyDelete