அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை என்றும் ஆகாயம் என்றும் இரு பொருள் உண்டு.
ஆண்டால் இன்றையப்பாடலில் முதல்வரியில் ஆடையாக ஐந்தாம் அடியில் ஆகாசமாகக்கொண்டுவருகிறாள்.
'உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்!' என்றே இருப்பதால் 'எங்களுக்கு அம்பரமும்(ஆடையும்), தண்ணீரும் சோறுமாய் உள்ள கண்ணனை எங்களுக்குத் தந்தருள வேணும்' என்ற பிரார்த்தனையை உள்ளத்தில் கொண்டுதான் 'நந்தகோபாலா! எழுந்திராய்' என்றாள்.
அறம் செய்யும் நந்தகோபாலனாம் தர்மாத்மா! பாட்டின் முதலடி நந்தகோபரின் கொடைச்சிறப்பைக்கூறுவது.
நந்தகோபாலன் அந்த வீட்டின் முற்பகுதியில் படுத்திருந்தவர்
கண் விழித்து அழைக்கவந்த பெண்களை உள்ளே போக
அனுமதிக்கிறார்.
உள்ளேபோய் இரண்டாம் கட்டிலுள்ள யசோதைபிராட்டியை எழுப்பச்
செல்கிறார்கள் ஆண்டாளும் அவள் தோழிகளும்//
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்...
செடிக்கோ மரத்திற்கோ வேரில் ஒரு தீங்கு நேர்ந்தாலும் கொழுந்திலேதான் முதலில் வாட்டம் காணப் படும். அப்படியே பெண்களில் தாழ்ந்தபடியில் உள்ளவர்களுக்கு ஒரு கேடு வந்தாலும் யசோதை முகத்தில் வாட்டம் காணப்படுகிறதாம். இத்தகைய 'கொழுந்தே! .......‘அமரர்க்கமுது ஈந்த ஆயர் கொழுந்தை’ ஆயர்பாடிக்கணி விளக்கே’ என்றும் அடியார்களால் பாடப்பட்டவன்.
எம்பெருமாட்டி... மாமய்னுக்கே தாய் அல்லவா நீ? என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறைபரபிரும்மம் அம்மா என்றழைக்கிறதே உன்னை நீயல்லவோ பெருமாட்டி!
யசோதாய்! அறிவுறாய்!' என்கிறார்கள்.அறிவுறாய் என்பதற்குத் துயில் உணர்ந்து எழுந்திராய் என்பது பொருள். எனினும், 'இவள் அறிய அமையும்; பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள்' என்பது குறிப்பு.
நந்தகோபனும் யசோதையும் இவர்கள் உள்ளே புகுவதற்கு இசையவே, இவர்கள் மாளிகையின் மூன்றாம் பகுதியில் புகுந்து கண்ணனைத் துயில் உணர்த்துகிறார்கள். கண்ணனை ஏற்கனவே 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று குறிப்பிட்டவர்கள் இப்போது,
அம்பரம் ஊடுஅறுத்து
ஓங்கிஉலகு அளந்த
உம்பர்கோ மானே!
உறங்காது எழுந்திராய்
என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள். தேவாதிதேவனே --உமபர்கோமானே
அப்பால் கண்ணனின் அண்ணனாகிய பலதேவனைச் 'செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!' என்று கூப்பிட்டு எழுப்புகிறார்கள். கண்ணன் பின்னே பிறக்க முன்னே பிறந்த செல்வன் அல்லவா? லட்சுமணன் இராமனுக்குப் பின்னே பிறந்து கைங்கரியச் செல்வம் பெற்றுச் சீமானாகத் திகழ்ந்ததுபோல், பலதேவன் கண்ணனுக்கு முன்னே பிறந்து கைங்கரியச் செல்வம் பெற்ற சீமானாகப் பொலிந்தான்.
உன் தம்பியும் நீயும் உறங்காமல் எழுந்திருக்கவேண்டும்.
இப்பாசுரமும் ஆசாரியனை பற்றிக்கொண்டு திருமந்திரத்தின் பொருளை அறிந்துகொண்டு இறைவனுக்கு அந்தரங்கமானவர்களை முன்னிட்டு இறைவனை துயிலுணர்த்துதல் பாசுரத்தின் உட்கருத்து.
அம்பரம்..ஆத்மா பெற வேண்டிய
இறைவனுடைய முகமலர்ச்சி..
இதை வளர்க்கவல்ல மனநிலை தண்ணீர் சோறு கைங்கர்யம்(சேவகம்)
இம்மூன்றையும் அளிக்கும் ஆசார்யன் நந்தபோபன்(ஆசாரியன் -குரு
எம்பெருமாட்டி யசோதை.. திருமந்திரத்தின் பொருளை உணர்ந்து
கொள்வதற்கு அறிகுறி.
பலதேவனை் முன்னிட்டு கண்ணனை எழுப்புதல்.. அண்ணலின்
அந்தரங்கமானவரை முன்னிட்டு பகவானை உணர்த்துவது
பக்தர்கள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ உறங்கலாமா எழுந்திரு என்பது உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் என உரிமையும் அன்புமாய் ஆண்டாள் கூறுவதாக கொள்ளலாம்..
அமபரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல்அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்
--
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல்அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்
--
Reply
|
Forward
|
Tweet | ||||
விளக்கம் மிகவும் அருமை... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன் DD
அருமையான விளக்கம்...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அருமையான விளக்கம்...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்...
இந்த பாசுரத்திலே நந்தகோபன்,யசோதை,ஓங்கி உலகளந்த உத்தமனாகிய கண்ணன்,பலராமன்,என்று ஒருவரையும் விடாமல் உறக்கத்திலிருந்து எழ வேண்டி அவர்கள் பெருமைகளை எடுத்து சொல்லி தங்களை காத்தருள வேண்டுமென்று பாடுகிறார்கள் .நீங்கள் இந்த பாசுரத்தை உங்களுக்கே உரித்தான வழியில் அழகுடன் விவரித்தீர்கள்
ReplyDelete.நன்றி