கொலையும் கொள்ளையும்
நாட்டினிலே பெருகிப்போச்சு-இந்தக்
கோயில்கூட பலருக்கிங்கே
பாசறையாச்சு
தலைவன் திருடன் என்றிருந்த
பேதமும்போச்சு- அட
தலையை ஆட்டும் பொம்மைக்கிங்கே
ராஜ்ஜியம் ஆச்சு
தன்னலம்தான் நாளும் இங்கே
பொதுநலமாச்சு-உயர்
பொன்னைவிட பதருக்குத்தான்
பெருமையும் ஆச்சு
துன்பம் உனக்கு இன்பம் எனக்கு
என்பதுமாச்சு-நமது
தேசத்தந்தை நினைவு இன்றோ
வெறுங் கனவாச்சு
பறங்கியரை நாம் விரட்டிப்
பல காலமும்ஆச்சு- உடன்
பண்பாடதுவும் காற்றினிலே
பறந்தே போச்சு
இரவில்கிடைத்தசுதந்திரத்தை
இன்று புரிந்தவரில்லை-அன்று
வெள்ளையரை விரட்டியதும்
வெறும் கதையாச்சு!
நாறுமிந்த சமூகம் இன்று
நரகம் ஆச்சு- அதுவும்
நாலுகாசு உடையவனுக்கே
அடிமையென்றாச்சு.
ஆணவத்தின் பெயரும் அதி
காரம் என்றாச்சு -பலர்
அடித்துக்கொண்டு அழிவதிங்கே
வாழ்க்கையும் ஆச்சு!
விடியல் வெளிச்சம் என்பதெல்லாம்
வார்த்தையில்தானா-இளைஞர்
படை திரண்டு எழுந்துவிட்டால் துன்பம்
போயே போச்சு!
(ஈகரைத்தளம் நடத்திய சித்திரைப்புத்தாண்டுக்கவிதைப்போட்டி(2013)தனில் முதல்பரிசுபெற்ற எனது கவிதை)
http://www.eegarai.net/t98914-6
Tweet | ||||
வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனதில் உள்ள குமுறலும் நெஞ்சில் உள்ள வேதனையையும் நன்றாக வெளிப்படுத்துகிறது .நாடு செழிக்க..இந்த அவலம் மாற வேண்டும்.
ReplyDeleteமனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!
ReplyDelete