Social Icons

Pages

Friday, January 10, 2014

மாலே! மணிவண்ணா!

 மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
******************************************************





உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா!
ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்*
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!

பங்கயநீள் நயனத்து அஞ்சன மேனியனே*

செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச்

செலவுபொலி மகரக் காது திகழ்ந்திலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.













"அப்பா!  உங்கள் பாசுரங்களில்  பல என்னை மிகவும் யோசிக்கவைக்கும் அந்தவகையில் இந்தப்பாடலில்பிரளய  காலத்தில் சின்னஞ்சிறு  ஆலின் இலைமீது உன் சொரூபத்தை ஒடுக்கிக்கொண்டு படுத்து யோக நித்திரை செய்யும் கண்ணா  என்று நீங்கள்  அழைத்தவிதம் அருமை!  இலை என்றால் வடமொழியில் பத்ரம். நம் ஸ்ரீவில்லிபுத்தூர் இறைவன் வடபத்ர சாயி .. பிறந்த ஊர்ப்பெருமானை இன்று நான் போற்றியாகவேண்டும் அப்பா”




“பாலகன் என்று பரிபவஞ் செய்யேல் பண்டொருநாள்
ஆலின் இலைவளர்ந்த சிறுக்கன் அவன் இவன்’ என்று சொல்லி இருக்கிறேன் கோதை”




“அன்புடையவன்  என் கண்ணன்  ..நேற்று நடந்ததை சொன்னேன் அல்லவா  அப்பா?  ‘உன்னை அருத்தித்து வந்தோம்’ என்றதும் அவன் முகம் மகிழ்ந்துபோய்விட்டது! இன்று அவனிடம்  நோன்பிற்கான  பறையைக்கேட்டுவிடவேண்டும் வருகிறேன் அப்பா”




கோதை  தோழிகளுடன் கண்ணன் திருமாளிகைக்குவந்தாள்


“வாருங்கள் பெண்களே! ‘பறைதருதியாகில்’ என்றீர்களே  நேற்று, என்னை விரும்புவோர் வேறொன்றும் விரும்புவரோ?’ எனக்கேட்டான் சிரிப்பு மறையாமல்.




“ஆனாலும் கண்ணா  உன்னைக்கண்ணாரக்கண்டு உன் திருநாமங்களை வாயாரச்சொல்வதற்கு  ஏதுவாக இருக்கும் நோன்பை ஆயர்குல முதியவர்  பிரஸ்தாபிக்க நாங்கள் இதில் இறங்கினோம்.. உபகரணங்களையும் தந்தருளவேண்டும்! விவரம் கேளேன் பொறுமையாக”




கோதை ஆரம்பித்தாள், கூடவே பெண்களும் இணைந்துகொண்டனர்.




மாலே !




அடியாரிடம் மிகவும் அன்புடையவனே!




இதற்கு முன் நாராயணன் கேசவன் உத்தமன்  பரமன் தேவாதிதேவன்  என்றெல்லாம் அழைத்தவள்,, இந்தப்பாட்டில் மாலே என்கிறாள். அடியாரிடம்  மிகவும்  அன்பு கொண்டவன். மாலே! அடியாரிடம் மிகுந்த ஆசை கொண்டவன்!  ‘காதல் கடலின் மிகப்பெரிதால்’ என்கிறார் நம்மாழ்வார்.




‘மாலாய்ப்பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை..’






மணிவண்ணா..!




நீல ரத்தினம்  போன்ர நிறத்தை உடையவனே.. ‘தூமணிவண்ணனைப்பாடிப்பற’என்பார் ஆழ்வார் பெருமான்.




கண்ணன் புன்னகயுடன்,” என்னை என் தாய் யசோதா சொல்வாள்” என்றுமெனக்கு இனியானை என் மணி வண்ணனி’என்று..நீங்கள் சொல்வது வியப்பாக  உள்ளதே.. உங்களின் வடிவழகுக்குமுன் என் அழகு நிற்கமுடியுமோ? வந்த காரியத்தை சொல்லுங்கள்” என்றான்.




மார்கழி நீராடுவான்..




”முதல்பாடலிலேயே மார்கழித்திங்கள் நீராடப்போதுவீர் என்றாள் கோதை.அதன் படி மார்கழியில் நீராடுவதற்கு...“




“என்ன தேவை? வேதங்களில் இதற்கு ஏதும்  விளக்கம் விவரம் இருக்கிறதா பெண்களே?”






மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்







“ அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது எமது மேலையார் அதாவது  பெரியோர்களால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவது அதை நாங்கள் பின்பற்றுகிறோம்..நோன்புக்கு செய்யவேண்டிய கிரியைகள் வேண்டும்.. அவைகள் என்ன வென்று கேட்டாயானால்.....”






“ மது ராமது லாபா(இனியவள் இன் சொற்களைப் பேசுமவள்) என்று புகழ்பெற்ற உங்களுடைய  இனிய மொழிகளை நான் கேட்கத்தயார்  சொல்லுங்கள்..”




ஞாலத்தை எல்லாம்
நடுங்க முரல்வன 

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள்








இங்கே ஞாலம் என்றது இறை அன்பர்களின் விரோதிகள் கொண்ட இடம் என்பதாகும்  அவர்கள் பயப்படும்படியான  பூமியில் ஒலியைக்கொடுக்கூடிய வெண் நிற சங்கம் உன்னிடம் இருப்பதேபோன்ற சங்கங்களையும்..


போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்



.  மிகவும் இடம் உடையனவாய்....  சாலப்பெரு...மிகவும் பெரியதான  பறை.. (இசைக்கருவி)
திருப்பல்லாண்டு பாடுபவர்கள்,  மங்களமான விளக்கும், (தீபங்கள்) கொடியையும்(த்வஜங்கள்)  விதானம்   ,பனி எங்கள் மேல் விழாமல் தடுக்க  மேற்கட்டியையும்,  அளித்தருள வேண்டும்.
இவ்வளவும் நீயே மனமுவந்து அருளாவிடில் எங்களால் என்ன செய்யமுடியும்? ஆகவே நீயேஅருளவேண்டும்!


அருளா தொழியுமே ஆலிலைமேலன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
என்னும் உன் அருள் பிரபலம் அல்லவோ!



”பெண்களே  இவையெல்லாம் கொடுத்தாகவேண்டுமா ?என்னால் ஆகுமா என்ன?”



“உனக்கு அரியதும் உண்டோ? ஆதாரமற்ற ஆலந்தளிரிலே சிறு குழந்தையாய் பள்ளிகொண்டு, உலகம் அனைத்தையும் உண்டவன் அன்றோ நீ! உன்னால் ஆகாததா என்ன!“


“தந்தேன்  அனைத்தையும்!”


 {இறைவன் அன்பே உருவானவன் என்பது மாலே மணி வண்ணா என்னும் வரி காட்டுகிறது.
சங்கின் தொனி ஓங்காரமாகிய பிரணவம்.. உட் பொருள் (சேஷத்வ)ஞானம்.. பலலாண்டிசைப்பார்  என்பது நல்லார் இணக்கம்.. கொடி..கைங்கர்யக் கொடி!)







3 comments:

  1. விளக்கம் மிகவும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பிரளய காலத்தில் சின்னஞ்சிறு ஆலின் இலைமீது உன் சொரூபத்தை ஒடுக்கிக்கொண்டு படுத்து யோக நித்திரை செய்யும் கண்ணா என்று நீங்கள் அழைத்தவிதம் அருமை! இலை என்றால் வடமொழியில் பத்ரம். நம் ஸ்ரீவில்லிபுத்தூர் இறைவன் வடபத்ர சாயி .. பிறந்த ஊர்ப்பெருமானை இன்று நான் போற்றியாகவேண்டும் அப்பா”

    அழகான பாசுரம்..! அருமையான விளக்கம்..!

    ReplyDelete
  3. மாலே மணிவண்ணனிடம் கேட்டு பெறுகிற நோன்பு பொருட்கள் உண்மையில் ஆண்டாள் தனக்கும் தன்னோடு கூடீருக்கும் தோழிகளுக்கு முக்திக்கான வழிகளைக் காட்டித் தரும்படி கேட்பதே ஆகும்.கண்ணனும் மிக பிரியத்துடன் கேட்டவை எல்லாம் கொடுத்து அருள்கிறான்.
    இப்படி ஆண்டாளை போல நாமும் கண்ணனிடமே மனதை வைத்து அவன் அருளையே நாடிடுவோம் .நன்றி ஷைலஜா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.