கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உந்தன்னை பாடி பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்னாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனய பல் கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
***************************************************************
சங்கு பறை விளக்கு
கொடி விதானம் ஆகியவற்றுடன் பல்லாண்டிசைப்பாரையும் அருளவேண்டும் என்று முதல் நாள் வேண்டிக்கொண்டு சென்ற சிறுமியர் இன்று தன் மாளிகை வாசலில் வந்து நிற்கவும்,’ ’ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப்போலேபோற்றியாம் வந்தோம்’ என்று அன்று

சொல்லி என்னை உங்களுக்குப்பணியவைத்துவிட்டீர்கள்! நாந்தான் அனைத்தயும் தருகிறேன்
என்றேனே..இன்னமும் எதுவும் இருக்கிறதா நான் செய்யவேண்டியதென்று?’ என அன்பும் பரிவுமாய்க்கேட்டான்.
“ஆம் கண்ணா..நோன்பு நோற்றபின் உன்னிடம் நாங்கள் பெற வேண்டிய சன்மானங்கள் உண்டு“என்றார்
கள் அவனைப்போலவே அன்பும் பரிவுமாக,கூடவே வழக்கம்போல உரிமையையும் எடுத்துக்கொண்டவர்களாய்!
கள் அவனைப்போலவே அன்பும் பரிவுமாக,கூடவே வழக்கம்போல உரிமையையும் எடுத்துக்கொண்டவர்களாய்!
கோதையுடன் சேர்ந்து கரம்குவித்தப்பாடத்தொடங்கினர்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
கூடுவோர் யார்?
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்கள்"
கூடத்தக்கவர்களோடு கூடவும் பெற்றால் குளிர்ச்சியைப்பற்றி கூறவும் வேண்டுமோ?
கூடார் யார்?
பகைவர்கள் அதிலும் உன் அடியாரை வதைக்கும் பகைவர்கள். உன் அருமை தெரியாமல் உன்னையே எதிர்க்கும் விரோதிகள்.
அவர்களை வெல்லும் கோவிந்தன் நீ!
கூடாதவரையே வெல்லும் கூடினாரிடம் தோற்றிருக்கும் பண்பானவன்!
திவத்திலும் பசுநிறை மேய்ப்புவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே!”
தன்னோடு ஒத்தவர்களுக்கு உதவும் இடமான பரமபதத்தைக்காட்டிலும் பசுக்கூட்டத்தை மேய்க்கும் போது உகப்பு விஞ்சி இருக்குமாம்! அப்படிப்பட்ட சீர்(கல்யாணகுணம் கொண்ட) கோவிந்தா!
உன்றன்னைப்பாடி...
வாயினால் பாடி, கேசவனைப்பாட, முகில் வண்ணன் பேர் பாட மைத்துனன் பேர்பாட என்றோம் இப்போதும் உந்தன்னைப்பாடி என்கிறோம்.. உன்னைப்பாடி என சொல்லவில்லை.. உன்னைப்பாடுவதையே பயனாகப்புகழ்ந்து பாடிவந்துள்ளோம்.நாமசங்கீர்த்தனம் எளிமையானது.அதற்கு மனமும் வாயும் இருந்தால் போதும்..கோவிந்தா என்றால் நீ ஓடிவருவாய் தெரியும் எங்களுக்கு அதனால்தான் முதல் வரியை அப்படி அமைத்தோம்.. அபயம் அளிப்பாய் அதுவும் அறிவோம்
ஓஹோ எல்லாம் அறிந்தே என்னை அறியாக்கண்ணனாய் திகைக்கவைக்கத்திட்டமோ?----கண்ணனும் விடாமல் கேட்டுவைத்தான்.
இல்லை கண்ணா.. உன்னைப்பாடி பறை கொண்டு
யாம் பெறும் சன்மானம் என்னெவென்று கேள்.அதெல்லாம் நீமனதுவைத்தாலேயன்றி நாங்கள் பெறுவது எப்படியாம்?
சரி சொல்லுங்கள்...
முந்தைய பாசுரத்தில் சொன்னபடி பறையைப்பெற்றுக்கொண்டபின்பு நாங்கள் விரும்பும் சன்மானம் வெகுமதி என்னவெனில்..
நாடு புகழும் பரிசினால்.... ஒருவர் கொடுக்கிறார் என்றால் அதைப்பெறத்தகுதி வேண்டும். அப்படி அதை நாட்டார் கொண்டாடும்படியாக...
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே என்று..
நன்றாக,,, அழகாக நன்கு பொருத்தமாக அதை நீயும் நப்பினையும் சேர்ந்து எங்களுக்கு அளிக்கும்படியாக-அப்போதுதான் அது நன்றாக இருக்கும்.
“என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் கொடுப்பதா?”
“ஆமாம் கண்ணா// நீயும் பிராட்டியும் சேர்ந்து இந்திரனால் கொடுக்கப்பட்ட ஹாரத்தை(மாலையை) திருவடிக்குப்பூட்டினாற்போல நப்பின்னையும் நீயும் சேர்ந்து எங்களுக்கு அணிவிக்க நாங்கள் அணிவோம். அதுவே நன்கு அமையும்.

சூடகமே தோள் வளையே
தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்..
‘பலப்பலவே ஆபரணம்’என்றார் ஆழ்வாரும். அபரிமித திவ்யபூஷண
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றோம்.ஆனால் இன்று உன்னோடு கூடி இருப்பதால் யாம் அணிவோம்..
அவையாவன கைக்கு ஆபரணமான சூடகம், காதுக்கு ஆபரணமான தோடு, செவிப்பூ கர்ண புஷ்பம், பாடகம்..காலின் ஆபரனமான பாதக்கடகம், என்று பல ஆபரணங்களை நீங்கள் அணிவிக்க நாங்கள் அணிவோம்
ஆடை உடுப்போம்... அதாவது உன்னால் அணிவிக்கப்பட்ட புத்தாடைகளை அணிவோம்.. வெகு தொலைவிலிருந்து ‘கோவிந்தா’ என்று த்ரௌபதி கூவியதும் ஆடையை சுரந்தாயே அதுப்போல ஆடையளிப்பாய்!
அதன் பின்னே பால் சோறு
முழங்கைவழியாக நெய் வழிந்து செல்ல அப்படிப்பட்ட பாற்சோற்றினை(அக்காரவடிசில்) நீயும் நாங்களுமாகக்கூடி இருந்து குளிர்ந்து..
“அதற்கென்ன நானும் நப்பின்னையும் இப்போதே உங்களுடன் பாற் சோறு உண்ண வருகிறோம்..”
கண்ணன் வந்தான். உண்ண அமர்ந்தான் அருகில் நப்பின்னை அழகுப்புன்னகையுடன்!
“ஆஹா நீயும் நப்பின்னையும் உண்ண உடன் நாங்களும் உண்ண இதென்ன காட்சி! பின்னைக்காலத்தில்
இப்படி நடக்கும் சமபந்தி போஜனம் என்பதை கோதை-பெரியாழ்வார் காலத்திலேயே இருந்தது என உலகம் பேசுமோ!”
*******************************************************
இப்பாசுரத்தின் வேதாந்தவிளக்கம் என் பெரியோர் உரைப்பது.
சூடகம்.. காப்பு(நம்மை ரட்சித்திடும் கடவுளைக்குறிக்கிறது)
தோள்வளை..முன்கைச்சரி..திருவிலச்சினை(பாஹுவலயம்)
தோடு..திருமந்திரம்
செவிப்பூ..கர்ணப்பூ (த்வயம்)
பாடகம்..காலுக்கணிவது.. (சரம்ஸ்லோகம்)
ஆக திருமந்திரம் த்வயம் சரம்ஸ்லோகம் ஆகிய மூன்றும் மோக்ஷம் அடைய விரும்பும் அடியார்க்குத்தேவையானவை.
திருமந்திரமாவது/ நாராயணாய நம;
த்வயம்.. ஸ்ரீமதே நாராயணாய நம;
சரமஸ்லோகம்.. ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ. அஹம் த்வா சர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச;
கூடாரை வெல்லும் எனும் சொல் கூடாரவல்லி ஆகி அந்த நாளில் பால்சோறு செய்வதை ்வழக்கமாகக் கொண்டுள்ளனர்!

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
ஆயர்பாடியில் பாலுக்கும்நெய்யுக்கும் என்ன குறைச்சல் அதுவும் உன் அருள் இருக்கையில் அவை மிதமிஞ்சிப்பெருகுகின்றனவே! பசுக்க்ளோ வள்ளல்கள்!
நெய்யிடையிலே சோறுண்டோ எனத்தடவிப்பார்ப்பதுப்போல அப்படி நெய் பெருகும் பால் சோறு

ஷைலஜா
Tweet | ||||
ஆயர் சிறுமிகளோடு ஆண்டாள் கடுமையான விரதங்களை அனுஷ்டித்து நோன்பை திருப்திகரமாக பூர்த்தி செய்து கண்ணனிடம் தக்க சம்மானம் பெற்று பாற் சோறாகிய சர்க்கரை பொங்கலுடன் கோவிந்தனுடனும் நப்பின்னையுடனும் தாங்கள் விரும்பியபடி சேர்ந்து மனம் குளிர்தலாகிறார்கள் .இனிப்புடன் இனிமையாக விளக்கி உள்ளீர்கள். .
ReplyDeleteகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா... அருமை... அழகான விளக்கம்...
ReplyDeleteஅருமை அம்மா...
மிகவும் ரசிக்க வைக்கும் விளக்கம்... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...