Social Icons

Pages

Thursday, October 10, 2013

கனா கண்டாளின் கழல் போற்றி!



நிலமங்கைக்கு
 நீண்டநாள் ஆசை
பொறுமையின் சிகரத்திற்கு
 பூமியில் செய்யவேண்டுமாம்
பூவண்ணனுக்குப்பூசை
அண்ணலின்  ஒரு தாரம்
நிலமகள் அவதாரம்
ஜனகனுக்கு சீதை
அண்ணல்புகழ்பாடும்
 ஆழ்வாருக்கு கோதை
நிலமகள் என்னும் தையல்
துளசிதளத்துப்புதையல்
சூடிக்கொடுத்தாள் பூமாலை
பாடிக்கொடுத்தாள் பாமாலை
 
 
கோதையெனப்பெயர்பெற்றாள்
திருப்பாவையெனும்
வேத சாரமதைத்தந்தாள்
மானிடர்க்கென வாழ்கிலேன்
என விரதம் பூண்டாள்
மாலவனையே கரம் பற்றக்
கனா கண்டாள் ஆண்டாள்
அரங்கனை மட்டுமா
அன்பர்மனத்தையும்  ஆண்டாள்!

7 comments:

  1. அனைவரின் மனதையும் ஆண்டாள்...! அருமை...

    ReplyDelete
  2. ஆண்டாளின் அருள் ஆயுள் முழுதும் .கிடைக்கட்டும்

    Typed with Panini Keypad

    ReplyDelete
  3. "அரங்கனை மட்டுமா
    அன்பர்மனத்தையும் ஆண்டாள்!"
    முத்தான வரிகள். ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அரங்கனை மட்டுமா
    அன்பர்மனத்தையும் ஆண்டாள்!//

    உண்மை.
    அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. 'முளைக்கும் போதே மணக்கும் துளசி போலப் பிறக்கும் போதே மாலவனிடம்' மனதை கொடுத்த கோதை நாச்சியாரின் அருள் ஷைலஜாவிற்கும் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    தினம் ஒரு தித்திக்கும் கவிதை. .இந்த நவராத்ரியையும் தொடர்ந்து எழுதவேண்டும் என ஷைலஜா அவர்களை கேட்டுகொள்கிறேன்

    ReplyDelete
  6. உங்களது கவிதை வரிகளில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை கண்முன் தோன்றினாள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. ரஞ்சனி மேடம் கேபி சார் கோமதி அரசு டிடி கவியாழி கண்ணதாசன் வியபதி அனைவர்க்கும் மிக்க நன்றி.. கேபி சாரின் வாழ்த்து மனதுக்கு ரம்மியம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.