Social Icons

Pages

Sunday, October 13, 2013

ஆதலினால் வேண்டுகின்றேனே!

கமலமே  உந்தன் வெண்ணிறமே
அமரவே  என்  உள்ளமே
உயருமே  உவகை கொள்ளுமே!

வீணையே உன் வடிவு விந்தையே
ஆணையாய்  உன் ஒலியிலே
இருப்பவள் தன்னையே
அருள்தரச்சொல்லுவையே!

கவிதை  வடிக்கும் பாவலரே
தவிக்குமெனக்கு அவள்தங்கும்
உள்ளமதை தாருமே!

நான்மறையே நல் வேதமே
உன் உள்செல்ல வழிதாயே(ன்)
ஒளிர்நின்றிருக்கும் ஒரு மகளை
தெளிவுற யான்நோக்கவே!

கருணை வாசகமே
அ்ருந்தவம் செயும் முனிவாழுமிடம்
எனைக்கடத்தே(ன்) கலைமகள்
தனைக்காண தயை செய்யே(ன்)!

 தீம்குரல் இசைக்கும் மாதே
இம்மாதுக்கும்  உன் பாட்டை அருளே(ன்)
மழலை மக்களே உங்கள் பேச்சினில்
வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!

கீதம் பாடும் குயிலின் குரலே
கிளியின் நாவே! தேடிதன்
இருப்பிடம்  எனவந்த இனியவளைக்
கருத்துடனே தான்காட்டுங்களேன்

குலவு சித்திரமே கோபுரமே கோயிலே
புலவன் பாரதி சொன்னானே
ஈதனைத்திலும் எழிலிடை உற்றாளேயென்று
ஆதலினால் வேண்டுகிறேனே!

 

9 comments:

  1. மழலை மக்களே உங்கள் பேச்சினில்
    வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!//
    வேண்டுதல் அருமை.
    மழலையில் கண்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
    அருமையான கவிதை கலைமகளுக்கு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை...

    இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வெண்தாமரை மேலமர்
    சாரதா தேவியின் அருளாசி
    நிறைந்திருக்கட்டும்
    இனிய சரஸ்வதி பூஜைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமையான கவிதை...
    இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. Anonymous5:07 AM

    வணக்கம்
    கீதம் பாடும் குயிலின் குரலே
    கிளியின் நாவே! தேடிதன்
    இருப்பிடம் எனவந்த இனியவளைக்
    கருத்துடனே தான்காட்டுங்களேன்

    கவிதையின் வரிகள் இனிமை இனிய சரஸ்வதி பூஜைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. விஜயதசமி நன்னாளில் உங்களுக்கு எனது இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  7. மழலை மக்களே உங்கள் பேச்சினில்
    வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!
    கலைமகள் தனைக்காண தயை செய்யே(ன்)!
    அவளது அருளாசி அனைவருக்கும் கிட்ட வேண்டுகிறேன்

    ReplyDelete
  8. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அன்புடையீர்,

    வணக்கம்.

    என் தொடரின் அடுத்தபகுதி [பகுதி-65] இன்று, இப்போது நான்கு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்டுள்ளன.

    இணைப்புகளும் தலைப்புகளும் :-

    http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html
    65/1/4 தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன்

    http://gopu1949.blogspot.in/2013/10/65-2-4.html
    65/2/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகள்.

    http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html
    65/3/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலி ஆண்கள்.

    http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html
    65/4/4 கரும்புகளை ருசித்த எறும்புகள்


    இதில், அடியேன் தொடர்ந்து எழுதிவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய ஆன்மிகத் தொடருக்கு, இதுவரை ஒரேயொரு முறையேனும் வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள அனைத்துத் தோழர்கள் + தோழிகள் பெயர்களும் தனித்தனியே குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இது 2013ம் ஆண்டில் அடியேன் அளித்திடும் வெற்றிகரமான 100வது பதிவாகையால், சில சுவாரஸ்யமான செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன்.

    இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    நேர அவகாசம் இருப்பின், தாங்கள் அன்புடன் வருகை தந்து, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்தளித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

    அன்புடன்
    கோபு
    [VGK]

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.