Social Icons

Pages

Monday, October 14, 2013

சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!

 
 
 
 
சக்திவருகிறாள் சக்திவருகிறாள்
முக்தியதை நமக்களித்திடவே பரா
சக்தி  வருகிறாள் சக்தி வருகிறாள்
 
கூறுவோம் அவள்பேரை  காலைமாலை இடை
யூறெல்லாம் தேடிப்போகுமிடம் பாலை
 
யாதுமாகித்தான்  நிற்பவள் அறிவாள்  நம்துன்பம்
ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்
 
 ஆலம்குடித்தவன் ஆயுள் வளர்த்தவள் மகாசக்தி அவள்
சீலம் மிக தந்து சிந்தையைவளர்க்கும்  ஆதிபராசக்தி!
 
எங்கும் எதிலும்  வெற்றியே பெற்றிட  வேண்டிவணங்கிடுவோம்
மங்களம்பாடியே  அன்னை திருப்பாதம் பணிந்திடுவோம்!

9 comments:

  1. அருமை...

    எங்கும் எதிலும் வெற்றிக்கு சக்தியே துணை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Anonymous1:45 PM

    வணக்கம்

    எல்லாம் சக்தி மயம் எல்லாம சர்வ மயம் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எங்கும் எதிலும் வெற்றியே பெற்றிட வேண்டிவணங்கிடுவோம்
    மங்களம்பாடியே அன்னை திருப்பாதம் பணிந்திடுவோம்!

    சக்தியை வணங்குவோம்...

    ReplyDelete
  4. யாதுமாகித்தான் நிற்பவள் அறிவாள் நம்துன்பம்
    ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்//

    தாய் அவளுக்கு எல்லாம் தெரியும்.
    சேயின் துனபம் அழித்து இன்பம் தருவாள்.
    அருமையான கவிதைகளை நவராத்திரி நாளில் தந்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. மாயை எனும் பண்புகள் கொண்ட
    அரக்கனை அழித்து
    அருள்பாலிக்க வரும் அம்பிகையே
    தாள் பணிகிறேன்...
    ==
    இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  6. ''யாதுமாகித்தான் நிற்பவள் அறிவாள் நம்துன்பம்
    ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்''

    அனைவருக்கும் அருள் புரிய சக்தியை வேண்டுவோம்

    ReplyDelete
  7. அன்­னை­யைப் ­ப­ணிந்தி­டு­வோம்! ­சக்தி­யைப் ­பெற்றி­டு­வோம்! அ­ரு­மை­யா­ன ­க­வி­தை ­அக்கா!

    ReplyDelete
  8. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி மிக
    ரூபன் உங்க வலைப்பூவில் என்னால் கருத்து இட முடியவில்லையே ஏன்?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.