Social Icons

Pages

Tuesday, October 08, 2013

படிதாண்டா பத்தினி!

to தமிழ், vallamai, மின்தமிழ், தமிழ்
 
 
சீரார் மதில்கள் சூழ் திருவரங்க மாநகரில்
காரார்ந்த மேனியனின் கன்னல் கண்மணியை
வேரதைவாழ்த்தும் விருட்சமாய் வாழ்த்துவேன்
சீரதாய் தமிழை என் சிந்தையிலே வைத்தவளை வாழ்த்துவேன்!
 
. .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது
பாரெல்லாம் புகழ்கின்ற  ராமகாதைதன்னை
அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது
அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து
கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்
சிரக்கம்பம்செய்து  சிரித்து ஆமோதித்தார்
படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!
 

11 comments:

  1. அனைத்தும் சக்தி மயம்...

    ReplyDelete
  2. "அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது
    அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து
    கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு "
    அவளுடைய ஆசிதங்களுக்கு கிடைத்திடவே வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்
    சிரக்கம்பம்செய்து சிரித்து ஆமோதித்தார்
    படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!

    tha.ma 1

    ReplyDelete
  4. //படிதாண்டாபத்தினி ! அவள் பாதம் பற்று நீ!//

    அழகான பதிவு. நன்றி.

    ReplyDelete
  5. தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது

    கம்பரின் அழகான காவியத்தை நினைவுபடுத்திய
    அருமையான வரிகள்..!

    ReplyDelete
  6. Anonymous5:12 PM

    வணக்கம்
    கம்பனின் வரிகள் பதிவுக்கு ஒரு மகுடம் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. இரணிய வதைப்படலத்தை சேர்க்கலாமா கூடாதா என்கிற சர்ச்சை எழுந்தபொழுது, கம்பரின் வரிகளை கேட்டப்பிறகு தீர்மானம் செய்யலாம் என்று முடிவாகிறதாம்.கம்பன் அந்த படலத்தை விவரிக்கும் வரிகளை பாடிய பொழுது எதிர் சந்நிதியில் உள்ள மோட்டழகிய சிங்கர் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்து அருளியதாக வரலாறு..அந்த காட்சியை நம் மனக்கண் எதிரே அழகாக கொண்டு வந்து வைத்து இருக்கிறார் ஷைலஜா அவர்கள்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி பின்னூட்டமிட்டுப்பாராட்டிய திரு பார்த்தசாரதி இராஜேஸ்வரி ரூபன் வைகோ ரமணி வியாபதி டிடி அனைவர்க்கும்!

    ReplyDelete
  9. படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!//

    நாளும் பற்றுவோம்.

    ReplyDelete
  10. படி தாண்டா பத்தினியின் அருள் இந்த நவராத்திரி நன்னாளில் எல்லோருக்கும் கிடைக்கட்டும். நீங்கள் போட்டிருக்கும் படத்தில் நம்பெருமாளுடன் இருப்பது சேரகுலவல்லியா?

    ReplyDelete
  11. Loved reading this tthank you

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.