அதற்க்கென்றே எழுத இருக்கும் தனிபதிவில் அவைகளை விளக்கறேன் .
இப்போ முதல்ல கனடா நண்பர் அனுப்பிய புகழ்பெற்ற வண்ணத்துப்பூச்சி வளாகத்திலிருந்து(WINGS OF PARADISE) எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள்பார்வைக்கு..
என்ன பார்த்தீங்களா அழகா இருக்கு இல்லையா?
கண்கொட்டாமல் நாம் பலமணிநேரம் பார்த்துமயங்குவது பட்டாம்பூச்சியின் பட்டு உடலைத்தானே?
சரி இங்க இருக்ற பட்டாம்பூச்சி.....
இது எனக்கு இப்போ கிடச்சிருக்கும் பட்டம்!! பட்டாம்பூச்சிப்பதிவர்விருது!
o Butterfly! o Butterfly! ஏன் விரித்தாய் சிறகை...
இனிமையான இந்தப்பாடலும் ஒரு பழையபாட்டு பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது அது யார் கொடுத்த சொக்கா வும் தான் இப்போ நினைவுக்கு வருகிறது!
அன்புச்சகோதரர் ஜீவா வெங்கட்ராமன் எனக்கு இப்போது பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருக்கிறார்!முதலில் நன்றி அவருக்கு. விருது கொடுக்கவும் மனம் வேண்டுமே!
பட்டாம்பூச்சிக்கு வண்ணத்துப்பூச்சின்னும் சொல்வாங்க இல்லையா?
பட்டாம்பூச்சின்னாலே பல நினைவுகள் நம்முள் சிறகடிக்கிறது!
பூச்சிகளில் அழகானது இது! இறைவனின் படைப்பில் பட்டாம்பூச்சிக்குமட்டுமே தனிகவனம் எனத்தோன்றுகிறது! மெல்லியஅதன் சிறகுகளில் வண்ணங்களை சேர்த்து அனுப்பிய இறைவனின் கைவண்ணம் கண்டுகளிக்கவேண்டிய ஒன்று.
சி்ன்ன வயசில் தோட்டத்துச்செடிகளில் இலைகளில் மலர்களில் வந்து அமரும்பட்டாம்பூச்சியை ஓசைப்படாமல் நெருங்கி அதன் சிறகுகளை விரல்களில் சிறைபிடிக்காத சிறுவர்சிறுமியர்கள் யார்!
கைக்குஅகப்படாமல் காற்றில்பறக்கும் பட்டாம்பூச்சி மலரில் அம்ர்ந்தால் ஓர் அழகு! காற்றில் பறந்தால் ஓர் அழகு! மென்மையான பூக்களுக்காகவே இந்த ஜந்துவையும் மென்மையாகப்படைத்தானோ இறைவன்? பின்னே பூக்களின் மீது தைரியமாய் அமரும் பெருமை வண்னத்துப்பூச்சிக்குமட்டுமேதான் உண்டு! இதன் அமர்வில் பூக்களுக்கும் காயமில்லை!
வண்ணத்துப்பூச்சியின் வரவுக்குக்காத்திருக்கும் மலர்களே அதிகம், சிலமலர்களுக்குத்தெரியவே தெரியாது, கறுப்புக்காலர்வைத்தபழுப்புசட்டைபோட்டுக்கொண்டு நேற்றுவந்த தன்னிடம் அளவளாவி தேன்குடித்துச்சென்ற வண்ணத்துப்பூச்சி இன்றைக்கு வேறு ஒருமலரை நாடிப்போய்விட்டது என்று தெரியாமல் காத்திருக்கும், பாவம்!
குழந்தைகளின் கண் இமைகள் பலநேரங்களில் பட்டாம்பூச்சியாய் காட்சி அளிக்கும் பார்த்திருக்கிறீகளா?காதலைச் சொல்லவரும்போது இதயம் பட்டாம்பூச்சியாய் அடித்துக்கொள்ளும் இல்லையா?!
்வீணைமேதை சிட்டிபாபுவின் கதனகுதூகலராகத்தில் ஒருபாடலுண்டு அதுக்கு பட்டர்ஃப்ளை டான்ஸ் என்று சாட்டீன் துணில சிறகுகள் கட்டிக்கொண்டு எட்டு சிறுமியராய் சேர்ந்து எட்டுவண்னத்துப்பூச்சிகளாய் பள்ளி நாட்களில் நடனம் ஆடியது நினவு வருகிறது!
கோலம் போடுவதில் இந்த பட்டாம்பூச்சிகோலம் மிக எளிதா போட்டுடலாம்! நாலுபுள்ளி நாலுவரிசைல அழகான பட்டாம்பூச்சி கோலம் ரெடி!
சரி..இப்போ......
இந்தப்பட்டாம்பூச்சிப் பதிவர் விருதினை நான் மூணுபேருக்குத்தரணுமாம்!
நிறையபேரு ஏற்கனவே வாங்கிட்டதா தெரிகிறது!ஆனாலும் நான் இவங்கமூணுபேருக்குக்கொடுக்கத்தான் போறேன் ஏற்கனவே கிடைச்சிருந்தாலும் கிடைக்கலேன்னாலும் நான் கொடுக்கறத இவங்க ஏத்துப்பாங்கன்னு தைரியத்துல!
என்னை பெற்ற தாயார்( http://srivaradharajan.blogspot.com/) என்ற வலைத்தளம் வைத்திருக்கும் என் அன்புத்தம்பியும், சற்றே குறும்பான இளைஞனும்,வரத்ராஜபக்தனுமான யமுனேஸ்வரத்துறைவனான ராகவ் அவர்களுக்கு இந்தப்பட்டாம் பூச்சிப்பட்டத்தையும்
அடுத்து
திரு அண்ணாகண்ணன் (http://annakannan.blogspot.com/) எனும் எண்ண இயலாத பெருமைகொண்ட தமிழ்ப்பாவலர் புலவர்
சிஃபிதள ஆசிரியர் இளமையிலேயே முதிர்ந்த ஞானம் கொண்ட நல்நண்பர் அவர்களுக்கும் பட்டம் தரப்போறேன்!
கடைசியா என் அன்புத்தோழி சுவாதி- மைத்துளியாய்(http://my-thulikal.blogspot.com/) தன் வலைதளத்தில் தமிழ்க்கடலை வைத்திருக்கிறார்கள். பிரச்சினைகளையும் புன்முறுவலால் வெல்லும் திறன்கொண்டவர்! நான் செய்து இன்னும் சாப்பிட்டுப்பார்க்காத இணையப்புகழ்மைபா எனும் மைசூர்பாக்கின் மீதுமட்டும்
தீராக்காதல்(பகை?:) கொண்டவர் ....அவருக்கும் பட்டாம்பூச்சிவிருதை அளிக்கிறேன்!
இவங்க மூவரும் என்ன செய்யணும்னா....
இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள் இருக்காம்!: (
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
ரொம்ப நன்றி பட்டம்கொடுத்த ஜீவா வெங்கட்ராமனுக்கு!
வாழ்த்துகள் இதை என்னிடமிருந்து பெறப்போகும் மற்றமூவருக்கும்!
விடைபெற்று பறக்கும்
’பட்டர்ஃப்ளை’ஜா!
Tweet | ||||
இதுக்கு பின்னூட்டம் இட முதல்ல என்னை அழைப்பிங்கன்னு நினைச்சேன். சரின்னு நானே வந்துட்டேன்..
ReplyDeleteபேர் பொருத்தம் இருக்கே..
வாழ்த்துக்கள்...
நன்றி...
ஹா ஹா ஓ பட்டர்பிளை
ReplyDeleteபட்டர்பிளை நீ விரித்தாய் சிறகை
பூப்பூவா பறந்துசெல்லும்
ReplyDeleteபட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
என்று குழந்தைக்குரலில் மின்மினி பாடிய மெட்டு நியாபகம் வந்தது...
வண்ணத்துபூச்சியார் said...
ReplyDeleteஇதுக்கு பின்னூட்டம் இட முதல்ல என்னை அழைப்பிங்கன்னு நினைச்சேன். சரின்னு நானே வந்துட்டேன்..
பேர் பொருத்தம் இருக்கே..
வாழ்த்துக்கள்...
நன்றி...
>>>>>>>>>>
வருக வருக வண்னத்துப்பூச்சியாரே! ஏனோ மறந்தேனே உம்மை வரவேற்க முதலிலேயே! மன்னிக்க மன்னிக்க!!!
மலரில் உண்ட தேன்போலவே இனிமையா முதல்ல வந்ததற்கும் வாழ்த்தினதுக்கும் தாங்கஸ்!
ரிதன்யா said...
ReplyDeleteஹா ஹா ஓ பட்டர்பிளை
பட்டர்பிளை நீ விரித்தாய் சிறகை
12:39 PM
>>>>>>ஓ இப்படிப்பாடணுமா? சரி சரி இனிமே இப்டியே பாடறேன் ! நன்றி ரிதன்யா வரவுக்கும் பாடினதுக்கும்!
செந்தழல் ரவி said...
ReplyDeleteபூப்பூவா பறந்துசெல்லும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
என்று குழந்தைக்குரலில் மின்மினி பாடிய மெட்டு நியாபகம் வந்தது...
12:51 PM
>>>>>>>>>>>>ரவி சென்னாகிதீரா?
அந்தப்பாட்டு நினவு வந்ததுமாவது இந்த சகோதரி நினைவு வந்து இங்க வந்தீங்களே ரொம்ப நன்றி நலம்தானே ரவி?
அன்புத் தோழி ஷைலஜா!
ReplyDeleteவிருது கொடுத்த உங்கள் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். என்னை தேர்வு செய்ததால கல்லடி ஒன்றும் கிடைக்கலை தானே? :):).. அது சரி...மைபா இருக்கும் போது என்ன பயம்..?? :):P
அன்புடன்
சுவாதி
செந்தழல் ரவி said...
ReplyDeleteபூப்பூவா பறந்துசெல்லும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
என்று குழந்தைக்குரலில் மின்மினி பாடிய மெட்டு நியாபகம் வந்தது...
இந்தப் பாட்டை மின்மினியும் பாடியிருக்காங்களா? எனக்கு ராஜேஸ்வரி திக்குத் தெரியாத காட்டில் பாடின மெட்டுத் தான் காதுக்குள் ஒலிக்கிறது.
//நீ பளபளன்னு போட்டிருப்பது அது யார் கொடுத்த சொக்காவும் தான் இப்போ நினைவுக்கு வருகிறது!//
ReplyDeleteஉண்மை அதைப் பாடிய படிதான் பதிவைத் திறந்தேன்:)! அதைப் பற்றிய விளக்கங்களும் அருமை. வாங்கிய விருதுக்கும் , விருதைப் பெறுபவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ஸ்வாதி said...
ReplyDeleteஅன்புத் தோழி ஷைலஜா!
விருது கொடுத்த உங்கள் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். என்னை தேர்வு செய்ததால கல்லடி ஒன்றும் கிடைக்கலை தானே? :):).. அது சரி...மைபா இருக்கும் போது என்ன பயம்..?? :):P
அன்புடன்
சுவாதி
4:37 PM
>>>ஆஹா கல்லடியா ? உங்க எழுத்துக்குக்கண்ணடிபடாம இருக்க நான் வேண்டிக்கறேனாக்கும்!!! மைபா இருக்க பயமேன் !!!!
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//நீ பளபளன்னு போட்டிருப்பது அது யார் கொடுத்த சொக்காவும் தான் இப்போ நினைவுக்கு வருகிறது!//
உண்மை அதைப் பாடிய படிதான் பதிவைத் திறந்தேன்:)! அதைப் பற்றிய விளக்கங்களும் அருமை. வாங்கிய விருதுக்கும் , விருதைப் பெறுபவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
5:41 PM
>>>>
நன்றி ராமலஷ்மி! பாடினீங்களா அட நான் கேக்கவே இல்லையே!!
ஆகா, பட்டாம்பூச்சியைப் பற்றி பத்தி பத்தியா எழுதிப் படங்களும் அழகு பண்ணியதற்கு தனியா இன்னொரு பட்டாம்பூச்சி விருது தரலாம்!
ReplyDeleteமூணு அருமையான நபர்களுக்கு விருதளித்தமைக்கும் நன்றிகள்!
//விடைபெற்று பறக்கும்
ReplyDelete//’பட்டர்ஃப்ளை’ஜா!
This is shylaja touch...superkaa...
வாழ்த்துக்கள்...
ReplyDeleteபட்டு அக்கா, கலக்குறீங்க போங்க..
ReplyDeleteஇந்த அன்புத் தம்பிக்கும் கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றிக்கா..
இப்போ தாங்க உங்க ரங்கநாதர் சேவிச்சுட்டு வர்றேன். நாச்சியார்களுடன் தேரில் ஆடி அசைந்து வந்த அழகே அழகு..
அப்புடியே இங்க வந்தா, பட்டாம்பூச்சி விருது.. தன்யனானேன்..
பட்டாம்பூச்சிகளும் ரொம்ப அழகாகவே இருக்குக்கா :)
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா ;))
ReplyDeleteஅக்காவிடம் இருந்து பட்டாம்பூச்சியை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteஆகா, பட்டாம்பூச்சியைப் பற்றி பத்தி பத்தியா எழுதிப் படங்களும் அழகு பண்ணியதற்கு தனியா இன்னொரு பட்டாம்பூச்சி விருது தரலாம்!
மூணு அருமையான நபர்களுக்கு விருதளித்தமைக்கும் நன்றிகள்!
7:05 PM
>>
ஜீவா தந்த பட்டாம்பூச்சியாச்சே அதான் அழகா இருக்கு! வருகைக்கு நன்றி ப்ரதர்!
Nanda Nachimuthu said...
ReplyDelete//விடைபெற்று பறக்கும்
//’பட்டர்ஃப்ளை’ஜா!
This is shylaja touch...superkaa...
8:34 PM
>>>>>>>>>>>>>>>>>
ஹ்ஹ்ஹாஹா!! கவனிச்சிடீங்களா நந்தா இதை நல்லா? அதான் நந்தா! நன்றி மிக!
கடையம் ஆனந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
8:37 PM
>>.நன்றி ஆன்ந்த்
Raghav said...
ReplyDeleteபட்டு அக்கா, கலக்குறீங்க போங்க..
இந்த அன்புத் தம்பிக்கும் கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றிக்கா..
இப்போ தாங்க உங்க ரங்கநாதர் சேவிச்சுட்டு வர்றேன். நாச்சியார்களுடன் தேரில் ஆடி அசைந்து வந்த அழகே அழகு..
அப்புடியே இங்க வந்தா, பட்டாம்பூச்சி விருது.. தன்யனானேன்..
1:14 PM
<<<<<
வாங்க பெங்களூர் நாயகனே ராகவனே!
பட்டாம்பூச்சி விருது வாங்கறதுக்கு முன்னாடியே பரந்தாமன் என்னரங்கனை சேவிக்கப்பறந்து போயிட்டீங்களா? தேரை இழுத்தீங்களா? நிலைக்குக்கொண்டுவிட்டீங்களா? குட்பாய் ராகவ்!
Raghav said...
ReplyDeleteபட்டாம்பூச்சிகளும் ரொம்ப அழகாகவே இருக்குக்கா :)
1:17 PM
கோபிநாத் said...
வாழ்த்துக்கள் அக்கா ;))
அக்காவிடம் இருந்து பட்டாம்பூச்சியை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
6:38 PM
>>>நன்றி கோபி நன்றி ராகவ்!!!
நல்லாயிருக்குக்கா பதிவு...படங்களுடன்...வாழ்த்துக்கள் :)
ReplyDelete