காதல்!
இந்த மூன்றெழுத்து சொல்லுக்குத்தான் எத்தனை வலிமை !
காதல் என்பது என்ன?
பருவத்தில் வருவதா இல்லைஇல்லை.. காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லை என்பதுபோல வயதும் இல்லைதான் போலும். எந்த வயதிலும் வருகின்ற ஒரு உன்னதமான உணர்வு காதல் எனலாமா?
சென்ற வருடம் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் THE NATURE OF THINGS என்னும் நிகழ்ச்சியை காட்டும்போது காதல் ஒரு மனோவியாதி என்பதை விஞ்ஞான ரீதியாக விளக்கினார்கள்.
ஒருவர் காதல் எனும் வலையில் விழுந்துவிட்டால் அவர் உலகத்தைப் பார்க்கும் கோணமே மாறிவிடுவதாக அந்த ஆராய்ச்சி கூறியது.
காதல் மலர்ந்தால் அதன் தாக்கம் ஆட்கொண்டவர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறதென்பதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்.
காதலுக்காக தியாகங்கள் நடந்தகதை பல உண்டு.
காதலை இழக்க மனமின்றி தற்கொலைக்கு முயன்றவர்களின் சரித்திரம் அதிகம்.
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி என்று பாரதியின் கண்ணம்மா என் காதலி பாடலில் வருவதுபோல,
காணுமிடமெங்கும் காதலனின் அல்லது காதலியின் தோற்றமே காதல் வசப்படவருக்கு ஏற்படுகிறது.
கண்டதும் காதல் ,காணாமலேயே இணையம்மூலம் காதல், நட்பாய் ஆரம்பித்து நேசத்தின் நெருக்கம் அதிகமாகி விட்ட நிலையில் மாறிய காதல், பரவசமன ஒரு தருணத்தில் நெஞ்சில் சட்டென மலர்ந்த காதல் ,அறிவின் மயக்கத்தில் புற அழகினைமறந்து அக அழகில் நாட்டம் கொள்ளூம் அதிசியக் காதல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்ச்சியில் மனதைப் பறிகொடுக்க அதில் மலர்ந்த
காதல், சிறுவயதுமுதலே உடன் பழகிய உறவுக்காதல்.......இப்படி காதலில் பலரகம் உண்டு.
காதல்வந்ததும் காளையர்க்கும் கன்னியர்க்கும் பிரிவில் கணம் யுகமாவதும், பார்த்ததும் பரவசமாவதும் இயல்பு.
நவீன யுகத்தில் காதல் தூது விட எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன.
காதலினால் மானிடர்க்கு இன்பமுண்டாம் என்கிறார்கள் கவிஞர்களும். ஆதலினால் காதல் செய்வீர்!
காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி .எப்போது எந்தமலரின்மீது வந்து அமரும் என்று யாருக்குத்தெரியும்?
ஆனாலும் காதலுக்கும், காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
Tweet | ||||
உண்மைதான் ஷைல்ஸ்:)
ReplyDelete//காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி .எப்போது எந்தமலரின்மீது வந்து அமரும் என்று யாருக்குத்தெரியும்?
ReplyDeleteஆனாலும் காதலுக்கும், காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
//
சத்தியமான வார்த்தை :))
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஉண்மைதான் ஷைல்ஸ்:)
8:16 AM
>>>வாங்க வல்ல்லிமா ஹாப்பி வாலண்டைன் டே! கருத்துக்கு நன்றி.
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDelete//காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி .எப்போது எந்தமலரின்மீது வந்து அமரும் என்று யாருக்குத்தெரியும்?
ஆனாலும் காதலுக்கும், காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
//
சத்தியமான வார்த்தை :))
8:31 PM>>>>
வாங்க அப்துல்லா! ஹாப்பிவாலண்டைன் டே !
சத்தியமான வார்த்தை என்ற உங்க அக்ருத்துக்கு நன்றி!
வாங்க அப்துல்லா! ஹாப்பிவாலண்டைன் டே !
ReplyDeleteசத்தியமான வார்த்தை என்ற உங்க அக்ருத்துக்கு நன்றி!
8:51 PM
>>>>>ஸாரி அப்துல்லா....அவசரத்துல கருத்தை எனும் வார்த்தையை அக்ருத்துன்னு டைப் செய்துட்டேன் மன்னிக்கவும்!
ம்ம்...காதலைப் பற்றிய அருமையான ஆய்வு. காதல் எப்போது எப்படி எங்கே..யாருக்கு வரும் என்று யாருக்குமே தெரியாது! காதல் என்றாலே இம்சைதான்! இன்பான இம்சை...நன்றி சைலு...
ReplyDeleteஅக்னி said...
ReplyDeleteம்ம்...காதலைப் பற்றிய அருமையான ஆய்வு. காதல் எப்போது எப்படி எங்கே..யாருக்கு வரும் என்று யாருக்குமே தெரியாது! காதல் என்றாலே இம்சைதான்! இன்பான இம்சை...நன்றி சைலு...
6:46 AM
>>>...வாங்க அக்னி..நன்றிமிக வருகைக்கும் மேலான கருத்துக்கும்
ரொம்ப சரிதானுங்க அக்கா!.
ReplyDeleteவாக்குமூலம் 1357
காலமெல்லாம் காதல் வாழ்க!
ReplyDeleteஉங்கள் எழுத்தும் தான் :P
அன்புடன்,
ஷக்தி