Social Icons

Pages

Friday, February 13, 2009

பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!
என்ன தம்பிராகவ்! ரொம்ப டல்லா இருக்கீங்களா ஆபீஸ்ல ஆணி அதிகமோ! சூடா காஃபி ஒண்ணு வெள்ளி டம்ளர்ல நுரைததும்ப ஸ்ட்ராங்கா \மய்யா\ ஹோட்டல் போய் அடிக்கவேணாம் !இப்பவே கேளுங்க பைரவி ராகம்! உடனடி சுறுசுறுப்புக்கு பைரவி ராகம் பெஸ்ட்!

என்னாச்சு மித்ரா உனக்கு ரத்தம்கொதிக்குதா அதுவும் இந்த டீன் ஏஜ்லயே தப்பாச்சே !அடடா ரத்தக்கொதிப்பை அடக்க அசாவேரி ராகம் உதவும்மா!


யாருக்காவது வீரதீரரசம் வேணுமா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஹிந்தோளராகத்தை! இது மூளையின் ஞாபகசக்தியையும் கத்திமுனைமாதிரி கூராக்கிடுமாம்!

அஞ்சுகம்பாட்டிக்கு வாதநோயாமே பாவம் தீரதர்பாரி ராகம் கேக்க சொல்லணும் அவங்கள

கேஆர் எஸ் ! தலைவலியா உங்களுக்கு(எல்லாம் என் பதிவுகள் ஏதாவது படிச்சதால்தான் இருக்கும்! ஒரே ஸாரிடோன் தலைவலி நீக்கிடுமேன்னு டிவி விளம்பரம்பார்த்தாலும் போகலையா அப்ப என்ன பண்ணுங்க சாரங்கா ராகம்ல ஏதாவது பாட்லைக்கேளுங்க...

பொதுவா காலைல பூபாளம் பகலில் மத்யமாவதி மாலையில் வசந்தான்னு நம் முன்னோர்கள் இன்னன்ன நேரத்துக்கு இன்னன்ன மனநிலைக்கு இன்னன்ன ராகம்னு
பெரியபட்டியலே வச்சிருக்காங்க

பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களில்கூட அழகான ராகங்கள் பொதிஞ்சி இருப்பதால் நமக்கு வேண்டிய மனநிலைகளைத்தருது இல்லையா!

இசைப்பயணம் வழியா தியான நிலைக்குபோயி நம் நோய்களைப்போக்கிக்கலாமாம்!

இந்த உலகவாழ்க்கைல இன்பமும் துன்பமும் மாறிமாறிவந்துட்டே தான் இருக்கு இதுக்கு இசை ஒரு மருந்துன்னு விஞ்ஞான உலகமும் அடிச்சி சொல்லுது !விஞ்ஞானிகள் இப்போது பெயர் சூட்டி உள்ள(Binaural beats) இசைக்குள் ஏராளமாய் இருக்காம்!

எப்படீன்னா நம்ம மூளை இருக்கில்லையா அதனோட அலைகளின் அதிர்வெண்கள் நம்ம மனசு நிலைக்கு ஏத்த மாதிரி மாறிட்டே இருக்குமாம்.ஆராய்ச்சிகள்மூலமா சிலவிதமான ராக தாளங்களைக்கேக்கறப்போ மூளை மிகவும் ஓய்வான நிலையை அடையுது என்கிறதை விஞ்ஞானிகள் இப்போ,உறுதியா சொல்றாங்க...பத்து ஹெர்ட்ஸ்(hertz) அதிர்வெண் இருந்தாபோதும் மூளை அமைதியா இருக்கும் இசைதரும் இந்த அதிர்வெண் ஒருமாமருந்துன்னா இந்த வேகயுகத்துல அதுமிகையே இல்லைங்க

இந்த இசையையே தொடர்ந்துகேட்டா அதுஅடுத்த உயர்ந்த நிகையான ஆல்ஃபா நிலைக்கு உயர்த்திடுதாம்

1897- 1967 காலகட்டத்துல வாழ்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் ஓம்கார்நாத் தாகூர் ஒருமுறை சர்வாதிகாரி முசோலினி கேட்டுட்டபடி அவருடைய தூக்கம்வராதவியாதி இன்சோம்னியாக்கு , பூரியா(இது ஹிந்துஸ்தானி பெயர்.இதுக்கு கர்னாடிக்ல என்னன்னு யாராவது சொன்னா உதவியா இருக்கும்)
ராகத்தை அவர் இசைக்க அரைமணில ஆழ்ந்த உறக்கத்துக்குப்போன முசோலினி இவர்கிட்ட(தூங்கி எழுந்துதான்!) இசைநுணுக்கங்களை கேட்டு அறிஞ்சாராம்!

ராமசரிதமானசை இருபத்தி ஐந்து வருடங்கள்தினமும் ஓதிய இசைவாணரான இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்ததோடு இவர்மறைவுக்குபிறகு தபால்தலையும் வெளியிட்டது நம்ம இந்திய அரசு.

சிகாகோல ஒருடாக்டர் , பேரு, டி ப்ரைன்சங்(பேரே வயலின்ல டங் குனு இழுக்குறமாதிரி இருக்கில்ல)
தன் பிரமாதமான த்வனிகளை வச்சி பலநோயாளிகளை குணப்படுத்தி இருக்காராம்!

ஈதல்(மற்றவர்களுக்குக்கொடுப்பது) இசைபடவாழ்தல்(புகழோடுவாழ்தல்) என்பார்கள்.

இசையோடு வாழ்தலும் நம் மனசையும் உடலையும் ஃப்ரெஷா வைக்கிறது என்கிறது உண்மைதான்.

பதிவப்படிச்சி,பிறகு எனக்கு இசைவாதானே பின்னூட்டத்துல சொல்லப்போறீங்க! (இதெல்லாம் ஓவரா ...ஒகே ஸ்டாப் பண்ணிட்றேன்!!

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா!

இந்தப்பாட்டு நினவுக்குவருதா

ஆனா யாழ் என்கிறகருவிதான் இப்பவும் இருக்கா,தெரியவில்லை, குறளில் தான் எப்பவும் இருக்கு!(குழலினிது யாழினிது....)

29 comments:

 1. அக்கா, உண்மையிலேயே நீங்க தீர்க்கதரிசி தான்க்கா.. ரெண்டு நாள காய்ச்சல்.. இன்னைக்கு தான் சரியாகி அலுவலகம் வந்துருக்கேன்.. ரொம்ப அலுப்பா இருக்கேன்னு நினைச்சா நீங்க அதுக்கு மருந்து அனுப்பி வைச்சுருக்கீங்க.. நன்றி.

  ReplyDelete
 2. //இப்பவே கேளுங்க பைரவி ராகம்! உடனடி சுறுசுறுப்புக்கு பைரவி ராகம் பெஸ்ட்!//

  ராகத்தோட பேர சொன்னா மட்டும் போதுமா, அந்தப் பாட்டுக்குரிய லிங்க் கொடுக்குறதில்லையா

  ReplyDelete
 3. ஏதோ இசையின்பம் பகுதிக்கு வந்துட்டேன்னு நினைச்சேன். :-)

  //ராகத்தோட பேர சொன்னா மட்டும் போதுமா, அந்தப் பாட்டுக்குரிய லிங்க் கொடுக்குறதில்லையா//

  ரிப்பீட்டேஏஏஏஏஏஏ

  ReplyDelete
 4. /பதிவப்படிச்சி,பிறகு எனக்கு இசைவாதானே பின்னூட்டத்துல சொல்லப்போறீங்க!/

  /துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா/

  எப்படிங்க

  ReplyDelete
 5. //ஏதோ இசையின்பம் பகுதிக்கு வந்துட்டேன்னு நினைச்சேன். :-)//

  பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக, எங்கள் மெளலி அண்ணனுக்கு...ரிப்பீட்டே!!!!
  :))

  ReplyDelete
 6. //ரொம்ப அலுப்பா இருக்கேன்னு நினைச்சா நீங்க அதுக்கு மருந்து அனுப்பி வைச்சுருக்கீங்க.. நன்றி//

  டாக்டர் ஃபீஸ்....டூ ஹன்ட்ரட் ருபீஸ் ப்ளீஸ்!

  ReplyDelete
 7. //ராகத்தோட பேர சொன்னா மட்டும் போதுமா, அந்தப் பாட்டுக்குரிய லிங்க் கொடுக்குறதில்லையா//

  பைரவி-ன்னு சொன்னாப் போதுமா? பைரவி போட்டோ எல்லாம் போடுறதில்லையா - அப்படிங்கறதைத் தான் இப்பிடி டீசென்ட்டா கேக்குறாரு நம்ம ராகவ்! :))

  ReplyDelete
 8. நீங்க சென்னைல கச்சேரிக்குப் போயிட்டு வந்திருக்கீங்க-ன்னு மட்டும் நல்லாத் தெரியுது!

  எங்கக்காவும் கச்சேரிக்குப் போனார்-ங்கிற கதையா.....
  :)))

  ReplyDelete
 9. //கேஆர் எஸ் ! தலைவலியா உங்களுக்கு (எல்லாம் என் பதிவுகள் ஏதாவது படிச்சதால்தான் இருக்கும்!//

  ஒங்க பதிவைப் படிச்சா தலவலி வராதுக்கா! இவ்ளோ பெரிய கவிதாயினி எங்க அக்கா-ன்னு தலைக்கனம் வேணும்னா வரலாம்!:)

  //சாரங்கா ராகம்ல ஏதாவது பாட்லைக்கேளுங்க...//

  அதுலயும் அடியேனுக்கு "ரங்கா" தானா! ஓ ரங்கா! சா ரங்கா! உன் கருணையே கருணை! :)))

  ReplyDelete
 10. Raghav said...
  அக்கா, உண்மையிலேயே நீங்க தீர்க்கதரிசி தான்க்கா.. ரெண்டு நாள காய்ச்சல்.. இன்னைக்கு தான் சரியாகி அலுவலகம் வந்துருக்கேன்.. ரொம்ப அலுப்பா இருக்கேன்னு நினைச்சா நீங்க அதுக்கு மருந்து அனுப்பி வைச்சுருக்கீங்க.. நன்றி.

  2:35 PM

  >>>>>>>>.பார்த்தீங்களா ராகவ் நோ ஃபீஸ்! பாட்டுலேயே உங்கள குணப்படுத்த வழிசொல்லி இருக்கேன்:)

  ReplyDelete
 11. Raghav said...
  //இப்பவே கேளுங்க பைரவி ராகம்! உடனடி சுறுசுறுப்புக்கு பைரவி ராகம் பெஸ்ட்!//

  ராகத்தோட பேர சொன்னா மட்டும் போதுமா, அந்தப் பாட்டுக்குரிய லிங்க் கொடுக்குறதில்லையா

  2:42 PM
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>.

  கொடுத்துடறேன்....அபூர்வராகங்கள் பைரவி சின்னவயசுஸ்ரீவித்யா கேஆரெஸ்ஸுக்கு நினைவுக்கு வருதாம்!!!

  ReplyDelete
 12. மதுரையம்பதி said...
  ஏதோ இசையின்பம் பகுதிக்கு வந்துட்டேன்னு நினைச்சேன். :-)

  //ராகத்தோட பேர சொன்னா மட்டும் போதுமா, அந்தப் பாட்டுக்குரிய லிங்க் கொடுக்குறதில்லையா//

  ரிப்பீட்டேஏஏஏஏஏஏ

  5:12 PM
  >>>>>>>>>>>>>>>>வாங்க மௌலி இசை என்ற இந்த இன்பவெள்ள(வலை)த்துக்கு ஓடோடி வந்திருக்கும் உங்களை ஏமாற்றுவேனா இன்றைக்கு வாலண்டைன் தினப்பதிவுகளை முடிச்சிட்டு லிங்கிட்றேன் டீக்ஹை தானே!

  ReplyDelete
 13. திகழ்மிளிர் said...
  /பதிவப்படிச்சி,பிறகு எனக்கு இசைவாதானே பின்னூட்டத்துல சொல்லப்போறீங்க!/

  /துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா/

  எப்படிங்க
  >>>>>>>>>>>>>>>>>>>>>>


  அப்படித்தான் திகழ்மிளிர்! எப்படின்னே தெரில ஆனா:)

  ReplyDelete
 14. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //ஏதோ இசையின்பம் பகுதிக்கு வந்துட்டேன்னு நினைச்சேன். :-)//

  பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக, எங்கள் மெளலி அண்ணனுக்கு...ரிப்பீட்டே!!!!
  :))

  12:04 AM
  >>>>>.இவ்ளோ நாளா ரிப்பீட்டதே இல்லையே டூ பேட் யா!!!

  ReplyDelete
 15. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //ரொம்ப அலுப்பா இருக்கேன்னு நினைச்சா நீங்க அதுக்கு மருந்து அனுப்பி வைச்சுருக்கீங்க.. நன்றி//

  டாக்டர் ஃபீஸ்....டூ ஹன்ட்ரட் ருபீஸ் ப்ளீஸ்!

  >>>நல்ல கதையா இருக்கே பேஷண்ட் டாக்டர்கிட்ட ஃபீஸ் வாங்கறதா இது உங்க ஊர்ல நடக்குமா மரியாதையா 200டாலர் அனுப்புங்க ஆமா:)

  ReplyDelete
 16. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //ராகத்தோட பேர சொன்னா மட்டும் போதுமா, அந்தப் பாட்டுக்குரிய லிங்க் கொடுக்குறதில்லையா//

  பைரவி-ன்னு சொன்னாப் போதுமா? பைரவி போட்டோ எல்லாம் போடுறதில்லையா - அப்படிங்கறதைத் தான் இப்பிடி டீசென்ட்டா கேக்குறாரு நம்ம ராகவ்! :))

  12:06 AM
  >>>>>>>>>>>>>>.குழந்தை ராகவ்வை இப்படிக்குட்டிச்சுவர் ஆக்கறதா ரவி அதுக்குதான் நான் இங்க இருக்கேனே!!!

  ReplyDelete
 17. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  நீங்க சென்னைல கச்சேரிக்குப் போயிட்டு வந்திருக்கீங்க-ன்னு மட்டும் நல்லாத் தெரியுது!

  எங்கக்காவும் கச்சேரிக்குப் போனார்-ங்கிற கதையா.....
  :)))
  <<>>>>>

  ஹிஹி சிலடைம்ல ரவி தெளிவா பேசறார்ப்பா என் செல்லத்தம்பியாச்சே அதான்:)

  ReplyDelete
 18. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //கேஆர் எஸ் ! தலைவலியா உங்களுக்கு (எல்லாம் என் பதிவுகள் ஏதாவது படிச்சதால்தான் இருக்கும்!//

  ஒங்க பதிவைப் படிச்சா தலவலி வராதுக்கா! இவ்ளோ பெரிய கவிதாயினி எங்க அக்கா-ன்னு தலைக்கனம் வேணும்னா வரலாம்!:)>>>>>>

  ஐயோ போதுமே !வெளில சொல்லாதீங்க யாராவது அடிக்கப்போறாங்க:0

  //சாரங்கா ராகம்ல ஏதாவது பாட்லைக்கேளுங்க...//

  அதுலயும் அடியேனுக்கு "ரங்கா" தானா! ஓ ரங்கா! சா ரங்கா! உன் கருணையே கருணை! :)))

  >>>>>>>>>>>>>>

  ரங்கனைத்துதிப்போர்க்கிடரேது அந்த ரங்க பக்தியுடன்........:)
  வாழ்க ரவி!

  ReplyDelete
 19. //பூரியா(இது ஹிந்துஸ்தானி பெயர்.இதுக்கு கர்னாடிக்ல என்னன்னு யாராவது சொன்னா உதவியா இருக்கும்)
  //

  அட இன்னாமே இத்து கூட தெர்யாதா ஒனக்கு?? நம்ப ஹம்சநந்தி கீதுல...அத்ததான் அங்க பூரியாங்குறாங்கோ. இந்த ராகத்த நம்ப ராஜா "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ", புத்தம்புது பூ பூத்ததோ(தளபஹி)" ,
  ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ" இந்தமேரி பாட்லெல்லாம் யூஸ் பண்ணிக்கீறாரு.

  இனிமே ராகத்துல டவுட் எதுவும் இருந்தா இந்த அண்ணாத்தைக்கு ஒரு மெயில்வுடு.

  ReplyDelete
 20. புதுகை.அப்துல்லா said...
  )
  //

  அட இன்னாமே இத்து கூட தெர்யாதா ஒனக்கு?? நம்ப ஹம்சநந்தி கீதுல...அத்ததான் அங்க பூரியாங்குறாங்கோ. இந்த ராகத்த நம்ப ராஜா "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ", புத்தம்புது பூ பூத்ததோ(தளபஹி)" ,
  ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ" இந்தமேரி பாட்லெல்லாம் யூஸ் பண்ணிக்கீறாரு. \\\


  அட அட வாங்க அப்துல்லா! முதல்வரவுக்கு முதல்ல நன்றி !!
  ராகஞானதீபமா இருக்கீங்களே அள்ளிவிடறீங்க சும்மா! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!

  \\இனிமே ராகத்துல டவுட் எதுவும் இருந்தா இந்த அண்ணாத்தைக்கு ஒரு மெயில்வுடு.\\


  இன்னா நீ சொல்லிக்கினு தொட்டு ஒன்னைவுட்டா ஆருக்கு சொல்லப்போறேன் !!!(இதுக்குமேல மெட்ராஸ் பாஷை அவ்ரலீங்க):)அப்துல்லா..அப்டியே இந்த ராகவ்க்கு மௌல்லிக்கு கேஆரெஸ்ஸுக்கு பைரவி சினிமா பாட்டு ஒண்ணு எடுத்துவிடுங்க எனக்கு யாரோ இவர்யாரோ கர்னாடிக்தான் சடடுன்னு நினைவுக்குவருது!

  7:54 AM

  ReplyDelete
 21. //முதல்வரவுக்கு முதல்ல நன்றி !!

  //

  முதல் வருகையா??? நான் நிறைய முறை வந்து இருக்கேன். ஆனா பின்னூட்டம் போட்டதில்லை :))


  பைரவில பாட்டுக்கா பஞ்சம்..இதோ கேட்டுக்கங்க கே.ஆர்.எஸ் அண்ணே,மெளலி அண்ணே,ராகவ் அண்னே

  இப்ப ராசா நான் கடவுள்ல ரீமிக்ஸ் பண்ணி இருக்காருல்ல "மாதா உன் கோவிலில்" அது பைரவி

  ஒரே படத்துல இரண்டு பாட்டுல வரும்
  "நிலவே முகம் காட்டு", "ஒரு நாளும் உனை மறவாத" - எஜமான்ல

  கேப்டன் பாடுவாருல "முத்துமணி மாலை "

  சத்யால தாடிய சொருஞ்சுக்கிட்டே கமல் பாடுற "வலையோசை கலகலகலவென"

  பயணங்கள் முடிவதில்லைல மோகன் இருமிக்கிட்டே பாடுர "மணியோசை கேட்டு எழுந்து"

  லிஸ்ட் ரொம்ப பெருசாகும்.

  எத்தனை பைரவி இருந்தாலும் எம்.எஸ் அம்மா குரல்ல கேக்குற
  "யாரோ இவர் யாரோ"வுக்கு ஈடு இணையில்லை.

  ReplyDelete
 22. எம்.எம்.அப்துல்லா said...
  //முதல்வரவுக்கு முதல்ல நன்றி !!

  //

  முதல் வருகையா??? நான் நிறைய முறை வந்து இருக்கேன். ஆனா பின்னூட்டம் போட்டதில்லை :))>>>>

  அப்போ முதல்வரவுதான் அப்துல்ஸ்!
  \\பைரவில பாட்டுக்கா பஞ்சம்..இதோ கேட்டுக்கங்க கே.ஆர்.எஸ் அண்ணே,மெளலி அண்ணே,ராகவ் அண்னே\\

  ஹலோ அண்ணேஸ் கேளுங்கப்ப்பா!

  \\இப்ப ராசா நான் கடவுள்ல ரீமிக்ஸ் பண்ணி இருக்காருல்ல "மாதா உன் கோவிலில்" அது பைரவி

  ஒரே படத்துல இரண்டு பாட்டுல வரும்
  "நிலவே முகம் காட்டு", "ஒரு நாளும் உனை மறவாதஒரே படத்துல இரண்டு பாட்டுல வரும்
  "நிலவே முகம் காட்டு", "ஒரு நாளும் உனை மறவாத" - எஜமான்ல

  கேப்டன் பாடுவாருல "முத்துமணி மாலை "

  சத்யால தாடிய சொருஞ்சுக்கிட்டே கமல் பாடுற "வலையோசை கலகலகலவென"

  பயணங்கள் முடிவதில்லைல மோகன் இருமிக்கிட்டே பாடுர "மணியோசை கேட்டு எழுந்து"

  லிஸ்ட் ரொம்ப பெருசாகும்.
  >>>>>>அட அட கலக்கல்ஸ் அப்துல்ஸ்!

  \\எத்தனை பைரவி இருந்தாலும் எம்.எஸ் அம்மா குரல்ல கேக்குற
  "யாரோ இவர் யாரோ"வுக்கு ஈடு இணையில்லை.\\

  அதிலும் எமெஸ் அம்மா சந்திரபிம்பமுக மலராலே என்னும்போது ரொம்ப அருமையா இருக்கும் இல்லையா!

  நன்றி ப்ரதர்!

  ReplyDelete
 23. Anonymous8:25 AM

  என்ன இது? அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் பெரிய ரிலேஷன்ஷிப் இருக்கே!!!
  அப்துல்லாவின் சங்கீத அறிவைச் சொல்றேன்.

  மதுவந்தி

  ReplyDelete
 24. Anonymous said...
  என்ன இது? அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் பெரிய ரிலேஷன்ஷிப் இருக்கே!!!
  அப்துல்லாவின் சங்கீத அறிவைச் சொல்றேன்.

  மதுவந்தி

  8:25 AM
  >>>>>>>
  ஷேக் சின்னமௌலானா சாஹிப் ஸ்ரீரங்கத்துல இருந்தார் பிரமாதமா கர்னாடகசங்கீதத்துல நாதஸ்வரம் வாசிப்பார் அவர் பேரன்கள் இப்போ வெளுத்துக்கட்டிட்டு இருக்காங்க
  சங்கீத அறிவு விரும்பி அதனை கற்பவர்களிடமெல்லாம் இருக்கிறது மதுவந்தி நன்றி வருகைக்கு

  ReplyDelete
 25. //என்ன இது? அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் பெரிய ரிலேஷன்ஷிப் இருக்கே!!!
  அப்துல்லாவின் சங்கீத அறிவைச் சொல்றேன்.

  மதுவந்தி
  //


  பிறை பார்த்து நோன்பு நோற்கும், பிறை பார்த்து இரமலான் கொண்டாடும் அப்துல்காதர்தான் அமாவாசையை மற்ற அனைவரையும் விட ஆவலோடு எதிர்பார்ப்பான் :))

  joke apart , மதுவந்தி எந்த ஒரு விஷயமும் இனத்தையோ,மதத்தையோ பொறுத்தது அல்ல,சூழ்நிலையைப் பொறுத்தது. நானும் கூட முறைப்படி எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. என் வீட்டிற்கு அருகில் இருந்த நண்பனும் நானும் தினமும் சேர்ந்தே பள்ளிக்குச் சென்று வருவோம். அவன் மாலை பள்ளியில் பாட்டு கிளாசில் சேர்ந்து இருந்தான். அவன் முடித்து வரும் வரை நான் வெளியில் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பேன். அப்போது அரைகுறையாக காதில் விழுந்ததுதான் என் சங்கீத அறிவு.


  //ஷேக் சின்னமௌலானா சாஹிப் ஸ்ரீரங்கத்துல இருந்தார் பிரமாதமா கர்னாடகசங்கீதத்துல நாதஸ்வரம் வாசிப்பார்//

  நான் சிறுவனாக இருந்த போது நடந்த உண்மைச் சம்பவம்.எங்கள் ஊரான புதுக்கோட்டையில் ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் கோயிலும், அதிர்ஷ்டானமும் உள்ளது. அதன் பீடாதிபதியான சுவாமிகள்(அவர் பெயர் எனக்குத் தெரியவில்லை.பீடாதிபதியாகும் முன்பு சில காலம் நீதிபதியாக பணிபுரிந்ததால் அவரை ஜட்ஜ் சாமி என்பார்கள்) பீடாதிபதி பொறுப்புக்கு வந்ததில் இருந்து கோயில் உள்ளே அமைந்த தன் அறையை விட்டு எதற்காவும் வெளியில் வந்தது கிடையாது. கோயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஷேக் சாஹிப் வந்து வெளியில் தெருவில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் நாதஸ்வரம் வாசிக்கத் துவங்குறார். கூட்டம் கட்டுண்டு கிடக்கிறது. அப்போது அறை உள்ளே அந்த இசையைக் கேட்ட சாமிகள் தன்னை மறந்தவராக கோவிலில் இருந்து வெளியில் தெருவுக்கு வந்து பந்தலில் ஷேக் சாஹிப் அருகில் அமர்ந்து விட்டார்.நிகழ்ச்சியின் முடிவில் சாமி சொன்ன வார்த்தை “எங்கள் சரஸ்வதி எவர் நாவிலும் இருப்பாள் என்பதற்கு சேக் சின்ன மெளலானா பாயே உதாரணம்”.

  ReplyDelete
 26. இசையே இறைவடிவம் எனும்போது
  இசையால் வசமாகா இதயமெது???

  நல்ல பதிவு.

  ReplyDelete
 27. anbu shylaja,your blog verynice.keep it up. pandidn,neyveli. neyvelipandian@gmail.com

  ReplyDelete
 28. மங்களூர் சிவா said...
  இசையே இறைவடிவம் எனும்போது
  இசையால் வசமாகா இதயமெது???

  நல்ல பதிவு.

  10:35 AM
  >>>நன்றி சிவா

  ReplyDelete
 29. neyvelipandian said...
  anbu shylaja,your blog verynice.keep it up. pandidn,neyveli. neyvelipandian@gmail.com

  5:27 PM

  >>>நன்றி மிக நெய்வேலி பாண்டியன்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.