Social Icons

Pages

Monday, February 23, 2009

அன்பே சிவம்!







அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே


என்பார் திருமூலர்.

அவற்றை நான் அனுபவிக்கும் முன்பாக எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற இறைவனின் கருணையைக்காண்போம்

ஆதிகாலத்தில் ஜனகாதி முனிவர்கள் சிவபிரானை சந்தித்து ஒரு முக்கிய சந்தேகத்துக்கு விடை கேட்டனர்.

அதாவது ஆன்மாக்கள் இறைவனின் திருவடியை அடைய சரியான வழி எது என்பதில் எங்களுக்குள் சர்ச்சை இருக்கிறது தாங்கள்தான் அதனை விளக்க வேண்டும்
என்றனர்

அப்போது சிவபிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோக நிலையில் மௌனமாக வலக்கை விரல்களால் அடையாளம் காட்டினார்.

இந்த சிவ ஸ்வரூபத்தில்தான் அவர் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

அவர் காட்டிய அடையாளம் என்னதெரியுமா
அதுவே சின்முத்திரை!

சிவாலயங்களில் சின்முத்திரையுடன் கூடிய தட்சிணாமுர்த்தியை நாம் காணலாம். அவர் காட்டும் சின்முத்திரை என்பது
கட்டைவிரலில் ஆள்காட்டிவிரல் வளைத்து ஒரு வளையம் போல இணைந்திருக்கும் மற்ற மூன்றுவிரல்கள் மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும்.

எல்லாம் நம்கைக்குள்ளே என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான்!


கட்டைவிரல் என்பது கடவுள் அது எந்தக்கடவுளாக இருந்தாலும் சரி
ஆள்காட்டிவிரல் என்பது ஆன்மா
அதாவது ஆன்மாவைத் தாங்கி இருக்கிற மனிதன் ஏதாவது ஒருபிறவியில் இறைவனது திருவடியை அடைய வேண்டும். அதனால்தான் ஆன்மாவுக்கு அடையாளமான ஆட்காட்டிவிரல்
வளைந்து கட்டைவிரலோடு இணைந்திருக்கிற சின்முத்திரைக்காட்சி.

ஆனால் நமது விரல் அமைப்பில் கட்டைவிரல் தனித்து நிற்கிறது ஆள்காட்டிவிரல் மற்ற மூன்றுவிரலக்ளோடு இணைந்திருக்கிறது. அதாவது இறைவனோடு(கட்டைவிரல்) இணையாமல் இருக்கிறது.

மனிதனுக்கு உலக வாழ்க்கை என்ற ஆசையைக்காட்டி கடவுளைப்பற்றி சிந்திக்க விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதுமூன்றுவிரல்கள்தான்.

அதாவது ஆணவம் தலைக்கனம் ஈகோ என்பவைகள்( எல்லாம் ஒரே அம்சம்தான்!)

ஓர் அறிஞர் சொன்னார்..

திறந்தே கிடக்கும் கோயிலுக்குள் ஆட்களே இருப்பதில்லை, மூடியே இருக்கும் சிறைச்சாலைக்குள் எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள்.


தீப்பெட்டியும் தீக்குச்சியும் ஒருநாள்பேசிக்கொண்டதாம்..

நாம் இருவரும் உரசிக்கொள்கிறோம் ஆனால் நான்மட்டுமே தீப்பிடிக்கக்காரணம் என்ன என்றுகேட்டதாம் தீக்குச்சி

அதற்கு தீப்பெட்டி சொல்லியதாம்..

உன் தலைக்கனம்தான் காரணம் உன்னை இத்தனை நாள் பத்திரமாய் வைத்திருந்த என்னை நீ வெளியே வந்ததும் உரசுகிறாயே பாதுகாததவர்களைப் பதம் பார்த்தால் அழிவுதான் வரும்!


ஆகவே நம்மிடம் அகங்காரம் ஒழிய வேண்டும்
கிறிஸ்துவ மதத்தில் சிலுவைஅதைத்தான் சொல்கிறதாம் ஆங்கில \ஐ\ Iஅதாவது நான் இந்த அகந்தைபோகவேண்டுமானால் க்ராஸ்(+) செய்யவேண்டும் ஆணவம் அழிதலே சிலுவையின் அடையாளம்

இஸ்லாம்மததிலும் நான் செய்கிறேன் என்று ஆணவத்தோடு பேசக்கூடாது இன்ஷா அல்லா என்றுதான் சொல்லவேண்டும்!

நாம் அனைவரும் அன்பினால் ஒருமைப்படுவோம்!

7 comments:

  1. நல்ல பதிவு ;)

    ReplyDelete
  2. அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //நாம் அனைவரும் அன்பினால் ஒருமைப்படுவோம்!//

    இது மேட்டரு...சூப்பர்

    :)))

    ReplyDelete
  4. ோபிநாத் திகழ்மிளிர்
    அப்துல்லா

    உங்க மூவருக்கும் நன்றி!

    ReplyDelete
  5. நல்ல பதிவுக்கா...கலக்குங்க.. :)

    ReplyDelete
  6. Text torturing என்ற ஒரு சொல் வழக்கத்தில் இருக்கிறது. அதை இங்கு கடைசி இரண்டு பேராக்களில் நன்றாக செய்திருக்கிறார் எழுதியவர். அன்பை யும் சிவனையும் போாதிப்பதோடு நிறுத்தியிருக்கலாம், சிலுவை யில் பல வகைகள் இருக்கிறது. ஏதோ இவர் பார்த்து உலகம கிறித்தவ சமூக முழுமைக்குமாக ஒரே ஒரு சிலுவையை கொடுத்தது போலவும், சிலுவை ஆங்கில ''I'' யே வெட்டப்பட்டது போலவும் தகாத கர்பணை பண்ணி இவருக்கு உண்மையிலேயே நன்றாக புரிந்ததை சொன்னவற்றின் எனக்கு ஐயத்தை எழுப்பி விட்டார். மாற்று மதத்தை மெனக்கட்டு விளக்க வேண்டியதன் அவசியம் என்னவோ தெரியவில்லை. அவர்கள் ஏதோ நம்மிடம் வந்து பாடம் கேட்டது போலவும் நாம்தான்(இந்துக்கள்) எல்லாரையும் தூக்கிக் காப்பது போலவும்...

    ReplyDelete
  7. Text torturing என்ற ஒரு சொல் வழக்கத்தில் இருக்கிறது. அதை இங்கு கடைசி இரண்டு பேராக்களில் நன்றாக செய்திருக்கிறார் எழுதியவர். அன்பை யும் சிவனையும் போாதிப்பதோடு நிறுத்தியிருக்கலாம், சிலுவை யில் பல வகைகள் இருக்கிறது. ஏதோ இவர் பார்த்து உலகம கிறித்தவ சமூக முழுமைக்குமாக ஒரே ஒரு சிலுவையை கொடுத்தது போலவும், சிலுவை ஆங்கில ''I'' யே வெட்டப்பட்டது போலவும் தகாத கர்பணை பண்ணி இவருக்கு உண்மையிலேயே நன்றாக புரிந்ததை சொன்னவற்றின் எனக்கு ஐயத்தை எழுப்பி விட்டார். மாற்று மதத்தை மெனக்கட்டு விளக்க வேண்டியதன் அவசியம் என்னவோ தெரியவில்லை. அவர்கள் ஏதோ நம்மிடம் வந்து பாடம் கேட்டது போலவும் நாம்தான்(இந்துக்கள்) எல்லாரையும் தூக்கிக் காப்பது போலவும்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.