Social Icons

Pages

Tuesday, February 24, 2009

Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)

.

மில்ஸ் அண்ட் பூன் படிக்காமல் டீன் ஏஜைத்தாண்டினவங்க யாராவது இருக்கமுடியுமா!
அதனால புக்பத்தி இப்போ ஒண்ணும் சொல்லப்போறதில்ல!

விஷயம் என்னன்னா 1908ம் ஆண்டு தொடங்கின மில்ஸ் அண்ட் பூன் பதிப்பகம் இப்போ இந்தியால சென்னைல தனது கிளையைத்தொடங்கி இருக்காம்!

இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதுகிற திறமைசாலியான எழுத்தாளர்களுக்கு வலை வீசிட்டு இருக்காம்!

முதல்ல இவங்க நாவல்களை பதிப்பிக்க முடிவு செய்தப்போ எழுத்தாளர்கள்கிட்ட செக்சியா நாவல்களை அனுப்பும்படி கேட்டுட்டதும் ஆயிரக்கணக்கான நாவல்கள் வந்து குவிஞ்சுதாம்!

ஆனா விஷய கனத்துடன்(அதெல்லாம் எனன்னு கேக்கக்கூடாது:)) ஆறுநாவல்களே தேறிச்சாம்!

இதுல என்ன ப்யூட்டீன்னா 75% பெண்கள் அந்தமாதிரி விஷயங்களை எழுதி இருந்தாங்களாம் அந்த நாளிலேயே!!!

சோபியா கோலி என்கிற இங்கிலாந்து அம்மணி இருளிலிருந்து அம்புகள்(Arrows From the Dark) அப்படீன்னு எழுதின நாவல் முதல் தகுதி பெற்றது.

ஆபாசமே இல்ல நாவல்ல ஆனா காமரசம் மட்டுமேநிறைய! அப்டீன்னு வாசகர்கள் அந்தக் கதையைபடிச்சி வரவேற்று சொன்னாங்களாம்!

இன்னிக்கு இளைய தலைமுறையினர் எல்லார் கையிலும் செல்போன் மாதிரி அப்போ இங்கிலாந்துல அவங்க கைல மில்ஸ் அண்ட் பூன் புத்தகம் இருக்குமாம்

இவங்கதான் படிக்றாங்கன்னுபார்த்தா நடுத்தர வயதானவங்க எல்லாருமே விரும்பிப்படிக்கிறதை பதிப்பாளர் கண்டுட்டார்.

அதனால் தேவை அதிகமாகிப்போக, அதை பூர்த்திசெய்யறது சிரமமாகிவிட ....ஆனால் வருமானம்மட்டும் உயர்ந்திட்டே போனதால சிரமம் ஒண்ணும் பெருசா தெரியலையாம்!

இந்தமாதிரி எழுதப்பலரைக்கேட்டுக்கொள்ள, சுவாரஸ்யமா பலரும் எழுதித்தந்தனராம்!

லிலியன் வாரன் என்னும் எழுத்தாளர் 3 வெவ்வேறு பெயர்ல எழுதித்தள்ளி இருந்திருக்காரு!
நம்மூர்ல எழுத்தாளர்கள் சிலர் பத்து புனைபெயர்ல கூட எழுதறாங்க அதனால நமக்கு இது
அதிசியம் இல்லதான்!

உலகத்தின் முக்கியமான நாடுகளில் எல்லாம் பதிப்பகத்தைதொடங்கின மில்ண் அண்ட் பூன் இந்தியாக்கு வந்து சிலவருஷங்கள் ஆகுது.

ஆனாலும் தமிழ்நாட்டுதலைநகருக்கு சமீபமாத்தான் நுழைஞ்சிருக்கு

தமிழ் மண்ணில் நடமாடும் கதாபாத்திரங்களைவைத்து ஆபாசம் இல்லாமல் ஆனால் சுவாரஸ்யமாக கிளுகிளுப்பாக வாசகர்களைகிறங்கடிக்கிறமாதிரி -தமிழ்ல இல்ல , கவனிங்க ஆங்கிலத்துல - எழுதும் ஆற்றலுடையவர்கள் தமிழ்நாட்லகிடைப்பாங்கன்னு கடைவிரிச்சிக்காத்திருக்கு.

மில்ஸ் அண்ட் பூன் பதிபப்கத்தாரைகவர்கிறமாதிரி யாரும் எழுதித் தந்தீஙகன்னா மிகபெரியவாசகர்வட்டம் மட்டுமல்ல உங்களுக்கு,மிக அதிக இலக்கங்களுடன் எழுதப்பட்ட செல்லுபடியாகக்கூடிய காசோலையும் காத்திருக்கு!

யாருங்க ரெடி? !

15 comments:

  1. நீங்களே ஆரம்பிக்கலாமே ஷைல்ஸ்:)

    ReplyDelete
  2. //ஆனாலும் தமிழ்நாட்டுதலைநகருக்கு சமீபமாத்தான் நுழைஞ்சிருக்கு//

    நீங்க சொல்லியிருப்பது ஆச்சரியமா இருக்கிறதே ஷைலஜா. 25 வருடங்களுக்கு முன்னரே எங்க நெல்லைச் சீமையிலே பள்ளி கல்லூரி மாணவியர் (கை)பைகளிலே இது பிரபலாமாச்சே:)?

    ReplyDelete
  3. //
    நம்மூர்ல எழுத்தாளர்கள் சிலர் பத்து புனைபெயர்ல கூட எழுதறாங்க//

    அப்படியா?, எனக்குதெரிந்து ஸ்ரீ வேணுகோபாலன் மட்டுந்தான், அவர் கூட 2-3 பெயர்ல எழுதறவர்...10 புனைப் பெயரா?, யாருன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...:)

    ReplyDelete
  4. ராமலக்ஷ்மி said...
    //ஆனாலும் தமிழ்நாட்டுதலைநகருக்கு சமீபமாத்தான் நுழைஞ்சிருக்கு//

    நீங்க சொல்லியிருப்பது ஆச்சரியமா இருக்கிறதே ஷைலஜா. 25 வருடங்களுக்கு முன்னரே எங்க நெல்லைச் சீமையிலே பள்ளி கல்லூரி மாணவியர் (கை)பைகளிலே இது பிரபலாமாச்சே:)?

    7:33 PM
    <<<>>>>

    ் வாங்க ராமலஷ்மி
    நான் சொன்னது புக்கை இல்ல
    பதிப்பகத்தை
    நீங்க சொல்றமாதிரிமில்ஸ் அண்ட் பூன் எப்போவோ வந்தாச்சே நமம் ஊருக்கு!

    ReplyDelete
  5. வல்லிசிம்ஹன் said...
    நீங்களே ஆரம்பிக்கலாமே ஷைல்ஸ்:)

    6:18 PM
    <<<<<,,,வல்லிமா
    கொஞ்சம் கிளுகிளுப்பா எழுதணுமாமே ! இதெல்லாம் இங்கிலாந்து பெண் எழுத்தாளர்களுக்குத்தான் வரும்னு நினக்கிறேன்!!!

    ReplyDelete
  6. மதுரையம்பதி said...
    //
    நம்மூர்ல எழுத்தாளர்கள் சிலர் பத்து புனைபெயர்ல கூட எழுதறாங்க//

    அப்படியா?, எனக்குதெரிந்து ஸ்ரீ வேணுகோபாலன் மட்டுந்தான், அவர் கூட 2-3 பெயர்ல எழுதறவர்...10 புனைப் பெயரா?, யாருன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...:)

    8:20 PM
    >>>>>>>வாங்க மௌலி

    அறிஞர் அண்ணா கல்கி ராகிரங்கராஜன்

    இவர்களுக்கெல்லாம் 5க்குமேல புனைபெயர்கள் உண்டு

    ReplyDelete
  7. நான் எழுதுவேன் இதுவரைக்கும் அவங்களுக்கு இருக்க நல்ல பேர் கெட வேண்டாமே பாவம் பொழைச்சி போட்டும்

    :))))))

    நல்ல தகவல்.

    ReplyDelete
  8. Anonymous1:42 PM

    As a teenager ,I must have read about 300 M&B novels.
    I remember ,getting those books as second hand for 25 pence and 50 pence from street venders at Colombo.
    I think as young teenagers, we were full of romantic ideas in our head and M&B books were more romantic than steamy in those days.
    I hear the books are becoming more sexy nowadays compared to earlier days.
    I don't read them anymore,
    I am a bit more matured and serious now,I know life is more tougher and in real life it is difficult to find a romantic hero as our M&B hero.

    ReplyDelete
  9. //யாருங்க ரெடி? ! //

    எனக்கெல்லாம் தமிழ்ல எழுதுரதே தகராறு...இங்கிலிபீசா??

    :)))

    ReplyDelete
  10. //அறிஞர் அண்ணா கல்கி ராகிரங்கராஜன்

    இவர்களுக்கெல்லாம் 5க்குமேல புனைபெயர்கள் உண்டு
    //

    கலைஞருக்கும் உண்டு.

    ReplyDelete
  11. மங்களூர் சிவா said...
    நான் எழுதுவேன் இதுவரைக்கும் அவங்களுக்கு இருக்க நல்ல பேர் கெட வேண்டாமே பாவம் பொழைச்சி போட்டும்

    :))))))

    >>>>>>நம்ம பாலிசியும் இதே சிவா!!!:):)

    ReplyDelete
  12. vanathy said...
    As a teenager ,I must have read about 300 M&B novels.
    I remember ,getting those books as second hand for 25 pence and 50 pence from street venders at Colombo.
    I think as young teenagers, we were full of romantic ideas in our head and M&B books were more romantic than steamy in those days.
    I hear the books are becoming more sexy nowadays compared to earlier days.
    I don't read them anymore,
    I am a bit more matured and serious now,I know life is more tougher and in real life it is difficult to find a romantic hero as our M&B hero.

    1:42 PM
    >>>>>>>>>>>>>>>>

    ஆமா வானதி அந்தந்த பருவத்துல நம் விருப்பங்களும் மாறுபடும் கதைகளில் வருவதெல்லாம் நிஜத்தில் சாத்தியமும் இல்லை.கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. எம்.எம்.அப்துல்லா said...
    //யாருங்க ரெடி? ! //

    எனக்கெல்லாம் தமிழ்ல எழுதுரதே தகராறு...இங்கிலிபீசா??

    :)))
    >>>இப்படித்தான் ஒண்ணுமில்லே ச்சும்மா ன்னு சொல்லிட்டு அவங்கவங்க தங்க ப்ளாக்ல கலக்கறாங்க அப்துல்ஸ் தங்களின் பராக்கிரமம் யாமறிவோம்!

    ReplyDelete
  14. எம்.எம்.அப்துல்லா said...
    //அறிஞர் அண்ணா கல்கி ராகிரங்கராஜன்

    இவர்களுக்கெல்லாம் 5க்குமேல புனைபெயர்கள் உண்டு
    //

    கலைஞருக்கும் உண்டு.

    9:48 PM
    >>யு ஆர் கரெக்ட்!
    இன்னும் சிலரும் இருக்காங்க இப்போ மறந்து போச்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.