அரங்கனுக்குத்தங்கை
அழகுநிறை மங்கை
ஆண்டுக்கு ஓரு முறை
அண்ணன் சீர் பெறும் உமை
பயிருக்கு மாரி
பக்தருக்கு மகமாயி
கலங்கும் நெஞ்சிற்குக்காளி
கள்ளம்புரிவோரவள்முன் காலி
சமயபுரத்து ராணி
சட்டென் எம்மைக்காக்க வா நீ!
(நவராத்திரி முடியும் வரை தினமும் தேவியர் மீதான கவிதைகளை எழுத அன்னை அருளவேண்டும்)
அம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள் வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா?
அம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள் வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா?
Tweet | ||||
நன்றாக உள்ளது.நவராத்திரி முடியும் வரை தேவியர் கவிதைகளை தினம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி திரு பார்த்தசாரதி இன்றைக்கு ஒரு கவிதை இட என் அன்னை பணித்துவிட்டாள்!
Delete
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா, உங்களுக்குப் பரிசாக சமயபுரம் அன்னையின் படம் ஒன்று மெயிலில் அனுப்பியுள்ளேன். இத்துடன் இணைக்கத் தெரியவில்லை.
பரிசுக்கு நன்றி மிக..என் அன்னை இவள், என்னிடம் உங்களால் வந்ததும் பாக்கியம் தான்..இதை நீங்கள் வரைந்ததாக வீடு வந்தபோது சொன்னீர்கள் ! அன்னை அருளன்றி இது சாத்தியமில்லை ஜிஎம் பி ஸார்! நன்றி மறுபடி
Deleteஅம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள் வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா?
ReplyDeleteஅருமையாய் படம் வரைந்த ஐயாவுக்கும்
அற்புதமாய் கவிபுனைந்த தங்களுக்கும் இனிய பாராட்டுக்கள்..
மிக்க நன்றி இராஜேஸ்வரி...அன்னைப்படம் வரைந்த ஐயாவுக்கு மறுபடி நன்றி
Delete