அங்கையற்கண்ணியை தரிசிக்க
--
மங்கையிவள் சென்றேன்
பூமாலை வாங்கிக்கொள்ள
அவகாசமில்லாமல் மனத்தில்
பாமாலை துதித்தபடி
வெறுங்கையாய் சென்றதற்கு
வேதனையில் தவிக்கையிலே
ரோஜாப்பூமாலையொன்று
எதிர்பாராமல் கரத்தில் விழ
ஏறீட்டேன் வியப்போடு
அர்ச்சகர் புன்சிரிப்பில்
அன்னை முகம் தெரிந்தது
அவள் அணிந்த பூமாலை
என் கையில் கிடக்கையிலே
கண்ணிலோ நீர் மாலை!
நீர்த்திவலையினூடே
எங்கே எ்ன் அன்னையென்று
எட்டுத்திக்கும் கண்கள் பார்க்க
சிலையாக நின்றிருந்த
சிங்காரியினைக்கண்டவிழி
கிறக்கத்தால் தான் மூட
‘காணவில்லை காணவில்லை’
என்று யாரோ
என் பெயர் சொல்லி
இருமுறை அழைக்க
சுதாரித்து சில நொடியில்
கண்திறந்துபார்த்து நான்
‘தேடுவது யார் நான்
இருக்கின்றேன் இங்கே தான்’’
எனக்கூறி நிமிர
குரல் கொடுத்த நபரில்லை
கூட வந்தவரும் சொன்னார்
’கூப்பிட்டபடி வந்தாள்
கும்பிடும் உன்னைக்கண்டாள்
இங்கேதான் இருக்கின்றாள்
என்ற என் சொலலையும் கேட்காமல்
எட்டி நடை நடந்துவிட்டாள்.!”
வந்தவள் தான் யாரென்று
குழப்பமுடன் நிற்கையிலே
‘்
வெளியே சென்றேதான்
அறிந்திடுவீர் அவளை’
என்றார்கள் அங்கிருந்தவர்கள்.
உள் நின்று நான் அழுதேன்
உன்னதத்தை தரிசிக்கத்தவறிய
உன்மத்தப்பெண்ணாக.
(சிலவருடங்கள் முன்பு மதுரையில் எனக்குக்கிடைத்த உண்மை அனுபவம்)திரு ஜிஎம்பி அவர்கள் வரைந்த அன்னைப்படம் இணைத்துள்ளேன்)
--
Tweet | ||||
/அவள் அணிந்த பூமாலை
ReplyDeleteஎன் கையில்/
அம்பிகையின் ஆசி!
அழைத்த குரல்.. சிலிர்ப்பான அனுபவம் ஷைலஜா.
வாங்க ராமலஷ்மி ஆமாம் அன்று எனக்கும் சிலிர்ப்பானது.. நன்றி வருகைக்கு
Deleteஉண்மை அனுபவம் - சிலிர்க்க வைத்தது...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteஉன்மத்தம் தந்த உங்களின் அனுபவம் கவிதையாய் படிக்கையில் என்னையும் உணர வைத்ததுக்கா. அருமை.
ReplyDeleteஆம் கணேஷ் அன்று இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுடன் தான் சென்றேன் அவர் கண்ணுக்கு அன்னை தென்பட்டிருக்கிறாள்! என்ன கொடுப்பினை அல்லவா1
Deleteநீர்த்திவலையினூடே
ReplyDeleteஎங்கே எ்ன் அன்னையென்று
எட்டுத்திக்கும் கண்கள் பார்க்க
சிலையாக நின்றிருந்த
சிங்காரியினைக்கண்டவிழி
கிறக்கத்தால் தான் மூட..
நிகழ்வுகளை படம் பிடித்து காட்டிய வரிகள்.
நன்றி சசிகலா
Deleteசிலிர்க்க வைக்கும் அனுபவம்!
ReplyDeleteஆமாம் ஜனா ரொம்ப நாளைக்கு மனசில் அது மகிழ்ச்சி அலையை பரப்பிக்கொண்டே இருந்தது
Delete
ReplyDeleteசில அனுபவங்கள் சிலிர்க்க வைக்கும். சுவாமி சின்மயாநந்தா ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது. மணிக்கணக்கில் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்கக் கிடைக்கும் ஓரிரு வினாடி நேரத்தில் கண்களை மூடி அவனை அகத்துள்ளே தரிசிப்போம் என்பார்.
்் சுவாமி சின்மயானந்தா கூறியது அருமை நன்ரி ஜி எம் பி சார்
Deleteஆஹா. அருமை.
ReplyDeleteநெகிழ வைக்கும் அனுபவம்.
கவிதையும் அற்புதம்.
நன்றி. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு ரத்னவேல்
Deleteவெளியே சென்றேதான்
ReplyDeleteஅறிந்திடுவீர் அவளை’
என்றார்கள் அங்கிருந்தவர்கள்.
உள் நின்று நான் அழுதேன்
நெகிழ வைத்தது !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன்
Deleteஅனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்?
ReplyDeleteஜிஎம்பியின் கைவண்ணம் அருமை - இன்னும் சில படைப்புகளையும் நேரில் கண்டு வியந்திருக்கிறேன்.
ஆமாம் அப்பாதுரை சார் ஜி எம்பி சாரின் கைவண்ணம் அசத்தல் நேரில் பார்த்திருக்கிறேன் நானும்..
Delete