காலை வழக்கம்போல அருகில் உள்ள பார்க்கிற்கு வாக்கிங் போகக்கிளம்பும்போது செல் கூவியது.
என்னோடு தினமும் காலையில் நடக்கும் இன்னொரு வாக்காளர் வந்தனாராவ் போனில்,” வாக் போகமுடியுமா இன்னிக்கு?ஒண்ணும் கலாட்டா இருக்காதே ஷைலஜா?’ என்று கவலையுடன் கேட்டாள். கர்னாடகமண்ணின் மகள் எனது இருபதுவருடத்தோழி.
“இந்தக்காலை நேரம் ஆறுமணிக்கு என்ன கலாட்டா இருக்கப்போகுது வந்தனா? நாம் நடக்கலாம் வா”
என்றேன். உள்ளுற உதறல் திலகம் என்றாலும் வெளியே வீரமங்கைபோல காட்டிக்கொள்வது வழக்கம்.
கார்டன் சிடியான பெங்களூரில் பார்க்குகளுக்குப் பஞ்சமில்லை எங்கள் காலனியிலும் நாங்கள் வாக் செல்ல அழகான் பார்க் இருக்கிறது பெரிய பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகள் பார்க்குகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள் ஆகவே செடி கொடிகள் எல்லாம் காம்ப்ளான் குடித்தமாதிரி கன்னாபின்னாவென வளர்ந்திருக்கும்
காலைநேர சில்லென்றகாற்றில் வாக்கிங் போவதைப்போவதைப்போல சுகம் எதுவுமில்லை. பொதுவாய் வாக்பொகும்போது நான் மௌனம் காப்பது வழக்கம் அதனால் காது திறக்கிறது அரசியல் பேசும்ஆண்களின் பேச்சுக்களையும் அடுப்படிமற்றும் குடும்பவிஷயம் பேசும் பெண்களின் பேச்சுக்களையும் ரசிக்கமுடிகிறது வாக்கிங்கில் இது எல்லாஇடத்திலும் பொது என்றாலும் பெங்களூரில் இதையே வெவ்வேறுமொழிகளில் கேட்டு ரசிக்கலாம்.
அப்படித்தான் இன்று காலை நாங்கள் வாக் போகிறபோது காவேரி பிரச்சினையை கன்னடக்காரர்கள் சிலர் அலசிக்கொண்டு போனார்கள்.கொஞ்சம் காட்டமாக கொஞ்சம் வருத்தமாக பேசிக்கொண்டுபோன காலனி மக்களில் கன்னட எழுத்தாளர் திம்மண்னா என்பவர் நடந்துகொண்டிருந்த என்னைப்பார்த்து”நமஸ்காரா” என்றார்.
“நமஸ்காரா” என்றேன் புன்னகையுடன். எனது தமிழ்க்கதை ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்தவர் திம்மண்ணா அவர்கள். நட்சத்திர எழுத்தாளர் இல்லை என்னபோலத்தான் அவரும். எழுத்தை தவமாய் நினைத்து பலவருஷமாய் கன்னடத்தில் புதினங்கள் எழுதுபவர்.
நடக்கும் போது மனம் யோசித்தபடி கால்களோடு பயணித்தது.
காவேரி பிரச்சினை என்னவென்று புரிந்திருக்கிறது. கடைகள் எல்லாம் இன்று மூடிவிட்டார்கள் நடைபாதைக்கடைக்காரர்களிலிருந்து நகைக்கடைக்கடை மால் என்று அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டார்கள்..பஸ்கள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தப்பட்டுவிட்டன. பள்ளி கல்லூரி அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை. அங்கங்கே கல்வீச்சு நடக்கிறது. சாலை மறியல் நடக்கிறது. கர்னாடகக்கொடியை எந்தியபடி மக்கள் உத்வேகமான வசனங்களுடன் சாலையில் நடக்கிறார்கள். நடைபாதைக்கடைக்க்காரர்களை நியாயமாய் அதட்டுகிறார்கள்.
தமிழ்ப்படங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.தொலைகாட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சானல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன தமிழ்சானல்கள் அனைத்திற்கும் தடை. நியூஸ்9 சானல் லைவாக நகர நிலைமையைக்காட்டுகிறது/ டயர்களை எரிக்கிறார்கள் கோஷங்கள் கூச்சல்கள்!
இங்கே நீர் கொடுப்பதற்கு இல்லை என்கிறார்கள் கொடுக்காவிட்டால் பயிர்கள் வாழ வழி இல்லை என்கிறார்கள் அங்கே.
காவிரி பிறந்தவீட்டிலேயே இருக்கப்போகிறாளா புகுந்தவீட்டிற்கு வரப்போகிறாளா?
.
அனைவரின் துயரத்தையும் மழை பெய்து காக்கவேண்டும். மாமழையில் மக்கள் யாவரின் துயரும் மறைந்துபோகுமே.
பிரார்த்தனைதவிர வேறொன்றும் தெரியாத நிலையில் வீட்டில் பாத்திரங்களை விளக்கிவைத்த வேலைக்காரி ரங்கம்மாவிற்கு காலை டிபனை கொடுத்தேன்.
அடுத்து காபியைக்கலக்கும்போது ரங்கம்மா கூவினாள்.”அம்மா நீர் கொட்ரீ”
(நீர் கொட்ரீ=தண்ணீர் கொடுங்க)
‘ஓ தண்ணீர் எடுத்து வைக்க மறந்துட்டேன்னா ரங்கம்மா இதோ தரேன்”
என்று கன்னடத்தில் சொல்லியபடி குழாயைத்திறந்தேன்.
கையில் தெறித்த காவிரி கூட கொஞ்சம் கலங்கித்தான் தெரிந்தது.
.
Tweet | ||||
என்னதிது.. ரங்கம்மா கொஞ்சம்கூட மரியாதை இல்லாம கொட்றீ என்றா கேட்பாள்? உதைக்க வேண்டாம் நீங்கள்? காவிரி நிலை மனதை வருத்தினாலும் நீங்கள் பகிர்ந்த விதம் அழகுக்கா.
ReplyDeleteகணேஷ்...ஹிந்தில ஜி போல கன்னடத்துல மரியாதைக்குரிய சொல் ரீ! கொட்ரீ என்றால் கொடுங்க என்று அர்த்தம். கருத்துக்கு நன்றி கணேஷ்
Deleteநீர் கொட்ரீ என்ற தலைப்பை மாற்றிவிட்டேன் பலருக்கு அது புரியாது என்பதால்!
ReplyDeleteஉண்மை நிலை...
ReplyDeleteநீர் கொட்றீ.......... சூப்பர். எல்லோருக்கும் புரிஞ்சுதான் இருக்கும் ஷைலூ.
ReplyDeleteஇந்தத் தலைப்பே ப்ரமாதமா இருந்துக்குமேப்பா.
என் புக்கக மக்கள்ஸ் எல்லோரும் கன்னடா மாத்தாடறதைக் கவனிச்சீங்களா:-)))))
சிலப்ப இந்தத் தண்ணீர் தகராறு பார்த்தால்..... எனக்குத்தோணும்..... தண்ணியே தரவேண்டாம். மழை வந்து அணை நிரம்பி வழிய இருந்தாலும் சொட்டுத்தண்ணீர் எங்க எல்லைக்கு வரப்டாது. எல்லாத்தையும் நீங்களே வச்சுக்குங்க. இங்கே மட்டும் தண்ணீர் வந்தா...உங்களை சும்மா விடமாட்டேன்னு கத்தலாம் போல.
வாங்க துள்சி..பயண அலுப்பெல்லாம் தீர்ந்ததா? உங்களவரின் மணிவிழாவில் நாங்க எல்லாரும் சந்திச்சதை மறக்க இயலாது. நீர் கொட்ரீ பலருக்குப்புரியாதோன்னு மாத்திட்டேன் உங்க புக்கக மக்கள்ச் லேசா கன்னடம் பேசினதை அன்னிக்கு கவனிச்சேனே இன்பத்தேன் வந்து பாயலேன்னாலும் புகுந்த இட நேசமாச்சே ரசிச்சேன் ... நீங்க சொல்ராப்ல மழைதான் கொட்டணும் மாமழை எல்லார் கஷ்டத்தையும் அதான் தீர்க்கும்.
Deleteசெய்வதறியாமல் கலங்கிதான் நிற்கிறாள் காவேரி. அவள் தவிப்பை அழகாகச் சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி மாமழை பெய்து மக்கள் துயர் மறையப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஆமாம் ராமல்ஷ்மி காவேரி பந்த் அன்று பந்தாடப்படுகிறாள் பாருங்களேன் ..வேதனையாக இருக்கிறது... நம்மை மாதிரி சராசரிப்பெண்கள் என்ன செய்வது பிரார்த்தனை செய்வதைத்தவிர?
Delete
ReplyDeleteஇத்தனை வருடங்கள் மழை பொய்க்காததால் பிரச்சனை தெரியவில்லை. நீருக்கான போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக மாற எங்காவது ஒரு தவறான அசைவு போதும். 1991-ல் என்று நினைக்கிறேன்என் பெயர்ப் பலகையை எடுத்துவிட்டேன். தமிழக ரெஜிஸ்ட்ரேஷனில் இருந்த மோட்டார் பைக்கை வீட்டுக்குள் வைக்க வேண்டி இருந்தது. அந்த அனுபவங்கள் கசப் பானவை. இதில் நியாய அநியாடம் எது என்று தெரியவில்லை. நீர் இங்கிருந்து செல்வதால் இவர்கள் கை ஓங்கியே இருக்கும். நீர் கொட்டில்லா அந்த்ரே , ஏனு மாடோதக்கு ஆகுத்தே. ? நீங்கள் சொல்வதுபோல் மழை பொய்க்காமல் இருக்க வேண்டும்.
வணக்கம் ஜி எம் பி சார் ....1991ல் தங்களுக்கு நடந்த அனுபவங்கள் வருத்தமானவை இங்கு எங்கள் காலனியிலும் ஒரு தமிழர்வீட்டில் காம்பவுண்ட் கிரானைட்டில் இருந்த தமிழ்ப்பெயரை அவசர அவசரமாய் சுண்ணாம்பினால் தீட்டி மறைத்தார்கள்..தீவிரவாதிகளுக்குத்தான் இந்நாட்களில் கொண்டாட்டம் ...மழை வெள்ளமாய்க்கொட்டவேண்டும் அப்போதுதான் இந்தப்பிரச்சினை தீரும் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteமழைக்காலம் தொடங்கி, நன்கு மழை பெய்யத் தொடங்கியதும், அவரவர் வேலையை அவர்கள் பார்க்கப் போய்விடுவார்கள்.
ReplyDeleteஉழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி - சிலப்பதிகாரம்.
வாருங்கள் தமிழ் இளங்கோ.. இங்கே இப்போதுமழை தொடங்கிவிட்டது. அவரவர் நீங்க சொன்னமாதிரி வேலைபார்க்கப்போய்க்கொண்டுள்ளனர்:)என் ஆசை காவிரி நிரம்பி அவளே கைவீசி புகுந்தவீட்டில்போய் எல்லாரையும் வாழவைக்கவேண்டும் என்பதே...
Deleteசிலப்பதிகாரப்படலுக்கு நன்றி
அவள்(காவிரி) ஒரு தொடர்கதை ...
ReplyDeleteஎல் கே..தொடர்கதை சிறுகதையாக வேண்டுமே..
Deleteஅனைவரின் துயரத்தையும் மழை பெய்து காக்கவேண்டும். மாமழையில் மக்கள் யாவரின் துயரும் மறைந்துபோகுமே.
ReplyDeleteமழையே மழையே வா வா என்று சிறு பிள்ளை கையேந்துவது போல் உள்ளது. அழகிய நடையில் சொன்னீங்க.
வாங்க சசிகலா....மழை பெய்தாலே தவிர விமோசனம் இல்லை...கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteமழை பெய்தால் துயரம் இல்லை.ஆனால் பிரச்னையே மழை இல்லாத அல்லது குறைவாக இருக்கும் பொழுது எப்படி பங்கீடு செய்வது என்பது பற்றி தான்.அதை இரு தரப்பும் ஒப்புகொள்ளும்படியான தீர்வு வரும் வரை இப்படிதான் கூச்சலும் குழப்பமும் இருக்கும்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் பார்த்த சாரதி.. தீர்வு நல்லதாக வரவேண்டும்
Deleteஎல்லைத்தகராறு ஏனோ மொழிப்பூசல்
தொல்லை நதிநீர்த்தொடர் சண்டை-பல்வகையாய்ப்
பொல்லாத சாதிமதப்போராட்டம் பாரதத்தீர்
நல்லுறவைப்போற்றிடுவோம் நாம்.
அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே
ReplyDeleteஇதோ வருகிறேன் சகோதரரே
Deleteநடக்கும் போது மனம் யோசித்தபடி கால்களோடு பயணித்தது.//
ReplyDeleteவாழ் உலகினில் பெய்திட மழைக்குப் பிரார்த்திப்போம்..
vaarungal ulagam ungalukaaga kaathirukirathu
ReplyDelete-c. sivagama sundari arunkumar, kalambur, thiruvanamalai district.