Social Icons

Pages

Wednesday, October 17, 2012

அழகு என்பாள், கவிதை தந்தாள்!

 

சொல்லும் பொருளும் கொடுத்த சுந்தரியே உன்
வெல்லும் திருக்கடைக்கண் வீச்சுக்கிலக்காயின்
கல்லும் கதிர்மணியாம் காஞ்சிரமும் சந்தனமாம்
அல்லும் பகலும் தொழுவேன் அன்னை அபிராமித்தாயே!
பாடாமல் உன் சீர் பகராமல் உன்னடிகள்
நாடாமல், கூடாமல்,நலிந்து கிடந்தேனை
காடாகப்புதராக கல்மனம் கொண்டேனை
தேடாமல் ஆட்கொண்ட தெய்வத் திரு நிறையே!
வாக்கில் இதம் இல்லை வாழவழியும் தெரியவில்லை
காக்க நீ இருக்க கவலையில்லை கடையூர்க்கரசி!
நோக்கில் இனி உன் போலொரு தெய்வமும்தான் உண்டோ
போக்கினியேது தாயே, பொன்மகள்துதிக்கும் மாயே!
நாவில் நயந்துப்போற்றி நற்கவிகள் சாற்றாமல்
பாவியாய் அலைந்தேனை பரிவோடே காத்திட்டு
ஆவியே அழகே என்பாள் ஆறத் தழுவிக்கொள்வாள்
சாவிலும் மறக்கவொண்ணா தமிழ்க்கவிதைதந்தாளே!
 
(Navarathri 3rd day)

19 comments:

  1. சொல்லழகும் பொருளழகும் பளபளக்கும் பிரமாதமான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு அப்பாதுரை..அதென்ன பளபளக்கும்?:)

      Delete
  2. அபிராமி அன்னைக்கு “சாவிலும் மறக்கவொண்ணா தமிழ்க்கவிதை” சாற்றி போற்றிப் பாடி மகிழ்ந்த நெஞ்சம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ அன்னையைப்பற்றிப்பாட நினைத்தாலே மலர்ந்து மகிழ்கிறது மனசு.

      Delete
  3. கவிதை சிறப்பாக உள்ளது

    ReplyDelete

  4. அபிராமி அன்னைக்கு அணிவித்த கவிமாலை-தமிழ்
    அன்னையின் வயல்தன்னில் மணக்கின்ற பூஞ்சோலை!

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. புலவர் வாயால் பூஞ்சோலை என கவிதையாய் வாழ்த்து பெறப்பேறு செய்துள்ளேன் நன்றி ஐயா!

      Delete
  5. சிறப்புக் கவிதை...

    அருமை.. நன்றி... tm1

    ReplyDelete
  6. /நாவில் நயந்துப்போற்றி நற்கவிகள் சாற்றாமல்
    பாவியாய் அலைந்தேனை / இருந்தாலென்ன.? அதுதான் சேர்த்துவைத்து கவிதை மாலையாய் பின்னுகிறீர்களே.

    ReplyDelete
    Replies
    1. என்னது பின்றேனா ?:0 தலைதான் பின்னிக்கறேன்:) கவிதை ஏதோ தெரிந்ததைக்கிறுக்கறேன் ஜி எம் பி சார் அதைப்புகழ்ந்து ஊக்குவிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி

      Delete
  7. வியக்க வைக்கிறது வார்த்தையழகும். படத்தின் அழகும். அருமை.

    ReplyDelete
  8. காக்க நீ இருக்க கவலையில்லை கடையூர்க்கரசி!

    வாழ்க கவிதையரசி !

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிறுகதை மன்னரே! கவிதையரசின்னு பட்டம் கொடுத்துட்டீங்களா ஆஹா இரட்டிப்பானேனே:):) நன்றி ரி!

      Delete
  9. அருமை.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரத்னவேல்

      Delete
  10. சாவிலும் மறக்கவொண்ணா தமிழ்க்கவிதைதந்தாளே!

    வார்தையாடல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. சசிகலாவின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  11. நன்றி திருபார்த்தசாரதி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.