Social Icons

Pages

Monday, December 30, 2013

தூயோமாய் வந்தோம்....






நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
     கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
     ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
     தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
     நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்
     இதுவரைக்கும் தோழிகளை எல்லாம் எழுப்பியாயிற்று இனி  நந்தகோபன் அரண்மனைக்குச்செல்லவேண்டியதுதான் என  நினைத்தபடி கோதை நடக்கிறாள்

  கோதை  நேராக  அந்த   வாயிற்காப்பானைப்பார்த்து சொல்கிறாள்.


நாயகனாய் நின்ற = எங்க ஆயர்களுக்கு எல்லாம் தலைவனாய் நின்ற

நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! = நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! - வெளிக் காவலர்கள்!


கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! = கொடிகள் கட்டப்பட்டுள்ள வாயி்லைக் காப்பவர்களே! -

மணிக் கதவம் தாள் திறவாய் =  அழகியகதவைத் தாழ் திறந்து விடுங்கள்!
ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு
அறை பறை = (நோன்புப் பொருளான) அடிக்கும் பறையைத் தருகிறேன்- என்று

மாயன் =மாயங்கள் செய்யும்கண்ணன்
மணிவண்ணன் = கருநீல மணி வண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான் = நேற்றே வாக்கு கொடுத்தான்
தூயோமாய் வந்தோம் = நாங்களும் தூய்மையாய் வந்துள்ளோம்  உடல் மனம்  என்று இரண்டிலும் தூய்மையாக....
துயில் எழப் பாடுவான் = அனைவரும் விழித்து எழ,  திருப்பள்ளி எழுச்சி பாடுகிறோம்!

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! = அம்மானே! வாயிற்காப்பானே.. இது தான் எங்க நோன்பின் ஆரம்பம்! "வீட்டுக்கு" (கோயிலுக்கு) வந்திருக்கோம்! எங்கள் முதல் முதல் நோன்பு நிலை! அதை மாற்றவேண்டாம்

நீ நேய நிலைக் கதவம் நீக்கு! = வாயிற்படியுடன்  இணைந்துள்ள திருக் கதவம் திறப்பித்து, எங்களை உள்ளே அனுமதியுங்கள்!


நேய  நிலைக்கதவம்..  நேசமாய்  நிலையும் கதவும் நெருங்கிப்பொருத்தி இருப்பதாகவும் கொள்ளலாம்..
 நேய நிலைக்கதவம்... இதுவே பாசுரத்தின் உயிர் நிலையாகும்.. நீக்கினால் கண்ணன்  தரிசனம் கிட்டும் என்பதாகும்  தரிசனம்  கிடைத்தால் நாங்கள் உய்வோம் என்பதாகும்..


பாசுரத்தின் உள்ளுறை பொருள்...ஆசாரிய (குரு) சம்பந்தம்  உள்ளவர்களை முன்னிட்டு  தொழவேண்டும் என்பது பாசுர உட்கருத்து. 
     

5 comments:

  1. தங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. வரிக்கு வரி பொருள் விளக்கி, முழுப்பாடலையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்வண்ணம் செய்திருப்பது தமிழுக்குச் செய்யும் நல்ல தொண்டாகும். புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா சென்னை.

    ReplyDelete
  2. ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன உட்கருத்து சரியே.ஆசார்யனின் அனுக்ர்ஹத்தோடு சென்றால் பகவானை எளிதில் அடையமுடியும்.

    ReplyDelete
  4. இன்றைக்கே பரம பத வாசல் தரிசனம்......

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. பெரியாழ்வார் மிஸ்ஸிங்.
    விளக்கம் நன்று.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.