Social Icons

Pages

Sunday, February 22, 2009

ஈசனே சிவனே போற்றி!










நீரினை சிரசில் கொண்டு

நெருப்பினை கையில் கொண்டு

பாரினில் பக்தர்தம்மை

பாசமுடனே காக்கும்


ஈசனே சிவனே போற்றி!

இறைவா உன் திருத்தாள்போற்றி!


வாசமாய் வாழ்க்கை மாறிட

வணங்குவோம் சிவனின் பாதம்




சிவம் என்று சொல்லும்போதே

சிந்தையது தெளிவு பெறும்

அவன் கருணைகங்கை

ஆறாகப் பாய்ந்துவரும்

நினைவெலாம் சிவமயம்

நித்தியமென்றாகிவிட்டால்

கனவிலும் எமபயமில்லை

கருத்தினில் இதனைக்கொள்வோம்!


அன்பிற்குமறுபெயராய்

அகிலத்தை ஆளுபவன்

என்புக்கு உள்கடந்துமனத்தில்

ஏகாந்தமாய் இருக்கின்றவன்

உருவமாய் உள்ளவனே

உள்ளத்தில் உறைவதை

உணர்ந்தபின் தாழ்வில்லை

உமாமகேசுவரனின்

கருணைக்கு ஏது எல்லை!

24 comments:

  1. நமச்சிவாயா!

    ReplyDelete
  2. ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாளை ஒட்டி அவர் மீதான பாடல்களை உங்கள் வலைப்பூவில் இணைக்க ஆசைப்பட்டிருந்தீர்களே, அவ்வளவு தானா? கொஞ்சம் முயற்சியும் வேண்டாமா?

    இங்கே போய்ப் பாருங்கள், நிறையப் பாடல்கள், தமிழிலேயே கிடைக்கும்

    http://www.esnips.com/web/SriAurobindoMothersongs/

    அன்புடன்,
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  3. அருமையா இருந்தது, ஷைலஜாக்கா!

    ReplyDelete
  4. ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம்
    சிவமே அன்பாகும்!
    நாத்திகம் பேசும் நல்லவருக்கோ
    அன்பே சிவமாகும்!

    :))

    ReplyDelete
  5. மிக அருமை ஷைல்ஸக்கா..

    சிவோஹம்....

    ReplyDelete
  6. கோபிநாத் said...
    நமச்சிவாயா!

    7:48 PM
    >>>>>>>>>>>>>

    சிவன் அருள் தங்களுக்கும் கோபி!

    ReplyDelete
  7. கிருஷ்ணமூர்த்தி said...
    ஸ்ரீ அரவிந்த அன்னையின் பிறந்த நாளை ஒட்டி அவர் மீதான பாடல்களை உங்கள் வலைப்பூவில் இணைக்க ஆசைப்பட்டிருந்தீர்களே, அவ்வளவு தானா? கொஞ்சம் முயற்சியும் வேண்டாமா?

    இங்கே போய்ப் பாருங்கள், நிறையப் பாடல்கள், தமிழிலேயே
    >>>>>>>>>>>>>

    வாங்க திரு கிருஷ்ணமூர்த்தி ஸார்.
    அரவிந்த அன்னைபற்றி குழுமத்தில் எழுதினேன் அதை தங்கள் வலைக்கு சிறிது நேரத்தில் அனுப்புகிறேன்
    பாடலக்ள் எழுதி வைத்திருக்கிறேன் முயலும்போதே வார்த்தைகள் அருமையாகவந்துவிழுகின்றன ஆனால் அவற்றை பாடியும் பதிக்க விரும்பியதால் தாமதமாகிறதெ தவிர வேறுகாரணமில்லை.

    தாங்கள் அளித்த சுட்டிக்கு நன்றி

    ReplyDelete
  8. ஜீவா (Jeeva Venkataraman) said...
    அருமையா இருந்தது, ஷைலஜாக்கா!

    9:12 PM
    <<>>>.நன்றி ஜீவா

    ReplyDelete
  9. புதுகை.அப்துல்லா said...
    ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம்
    சிவமே அன்பாகும்!
    நாத்திகம் பேசும் நல்லவருக்கோ
    அன்பே சிவமாகும்!

    :))

    11:29 PM
    <<<>...இங்கே எனக்கு அன்பே அப்துல்லாவாகத் தெரிகிறார் நன்றி சகோதரனே!

    ReplyDelete
    Replies
    1. Engum shivam
      Ethilum shivam
      Namah shivaya potri🔥

      Delete
  10. மதுரையம்பதி said...
    மிக அருமை ஷைல்ஸக்கா..

    சிவோஹம்....

    1:35 AM
    ><>>>.நன்றி மௌலி

    சிவபூஜை ஆரம்பித்துவிட்டீர்களா
    சிவமயம் இன்று எங்கும் என்பதில் ஆனந்தம் மனதிற்கும்

    ReplyDelete
  11. //என்புக்கு உள்கடந்துமனத்தில்

    ஏகாந்தமாய் இருக்கின்றவன்//

    இந்த வரிகள் அருமை .எலும்பை கடந்து உறையும் ஈசனை சிவராத்திரித் திருநாள் அன்று தரிசித்த உணர்வு உங்கள் பாடல் வரிகளில். அழகான பாடல்.

    ReplyDelete
  12. மிஸஸ்.டவுட் said...
    //என்புக்கு உள்கடந்துமனத்தில்

    ஏகாந்தமாய் இருக்கின்றவன்//

    இந்த வரிகள் அருமை .எலும்பை கடந்து உறையும் ஈசனை சிவராத்திரித் திருநாள் அன்று தரிசித்த உணர்வு உங்கள் பாடல் வரிகளில். அழகான பாடல்.

    9:36 AM

    <<<<<<<<<<<<<<<<<<<<<<< மிக்க நன்றிமிஸஸ் டவுட்
    ரசிச்சி பாராட்டினதுக்கும் இங்கு வருகை தந்தமைக்கும் நன்றி மறுபடி

    ReplyDelete
  13. அருமையாக இருக்கிறது



    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. திகழ்மிளிர் said...
    அருமையாக இருக்கிறது



    வாழ்த்துகள்

    1:26 PM
    >>>>


    ் நன்றி திகழ்மிளிர், நலம்தானே!

    ReplyDelete
  15. தென்னாடுடைய சிவனே போற்றி

    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

    ReplyDelete
  16. //நினைவெலாம் சிவமயம்

    நித்தியமென்றாகிவிட்டால்

    கனவிலும் எமபயமில்லை

    கருத்தினில் இதனைக்கொள்வோம்!//

    எத்தனை அருமையான வரிகள்.

    மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் ஷைலஜா.

    ReplyDelete
  17. புதுகைத் தென்றல் said...
    தென்னாடுடைய சிவனே போற்றி

    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

    2:10 PM
    >>>>>>>>>>>>>>>>>>>..

    ் வாங்க புதுகைத்தென்றல்
    இறைவனைப்போற்றி பின்னூட்டமிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  18. Kailashi said...
    //நினைவெலாம் சிவமயம்

    நித்தியமென்றாகிவிட்டால்

    கனவிலும் எமபயமில்லை

    கருத்தினில் இதனைக்கொள்வோம்!//

    எத்தனை அருமையான வரிகள்.

    மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் ஷைலஜா.

    5:29 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>

    வாங்க கைலாஸி அவர்களே!
    பாடலை ரசிச்சி வரிகளை இங்கு மறுபடி சொல்லிப்பாராட்டறீங்க ரொம்ப நன்றி. அதைவிட சிவரத்ரி நல்வாழ்த்துகளை உங்களிடம் பெற்றதில்மிக்க்க மகிழ்ச்சி அதற்கு ஸ்பெஷலா ஒரு நன்றி!

    ReplyDelete
  19. ம‌ஹா சிவ‌ராத்திரி தின‌த்த‌ன்று நீங்க‌ள் இய‌ற்றிய‌
    ஈசனே சிவனே போற்றி எனும் தங்கள் பாடலை நான்
    முகாரி ராகத்தில் பாட முயற்சி செய்திருக்கிறேன்.
    நன்றாக வருகிறது.

    அடுத்த சில மணித்துளிகளில் உங்களது பாடலை
    எனது வலைப்பதிவு
    http://menakasury.blogspot.com

    கேட்கலாம்.
    தங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.


    சுப்பு ர‌த்தின‌ம்.
    ஸ்டாம்ஃபோர்டு, க‌னெக்டிகெட், யூ.எஸ்.ஏ.

    ReplyDelete
  20. sury said...
    ம‌ஹா சிவ‌ராத்திரி தின‌த்த‌ன்று நீங்க‌ள் இய‌ற்றிய‌
    ஈசனே சிவனே போற்றி எனும் தங்கள் பாடலை நான்
    முகாரி ராகத்தில் பாட முயற்சி செய்திருக்கிறேன்.
    நன்றாக வருகிறது.

    அடுத்த சில மணித்துளிகளில் உங்களது பாடலை
    எனது வலைப்பதிவு
    http://menakasury.blogspot.com

    கேட்கலாம்.
    தங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.


    சுப்பு ர‌த்தின‌ம்.
    ஸ்டாம்ஃபோர்டு, க‌னெக்டிகெட், யூ.எஸ்.ஏ.

    8:30 PM
    >>>>>>>>>>>>>>>>.

    சுப்புரத்தினம் அவர்களே வாங்க !வருகைக்கு நன்றி
    பாடலை பாடுங்கள் அனுமதியெல்லாம் கேட்கவே வேண்டாம் உங்கள் வலைப்பதிவு சென்று கேட்டு நான் அங்கு பின்னூட்டமிடுகிறேன்

    ReplyDelete
  21. சிவனே எந்தன் ஜீவனே...என்று
    எந்தையின் தயையை போற்றும்
    சிந்தை நிறை கவிதையை
    வாசித்து இன்புற்றேன் சகோதரி.

    அருமை. அழகு அற்புதம்.
    பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  22. சிவனே எந்தன் ஜீவனே...என்று
    எந்தையின் தயையை போற்றும்
    சிந்தை நிறை கவிதையை
    வாசித்து இன்புற்றேன் சகோதரி.

    அருமை. அழகு அற்புதம்.
    பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.