Social Icons

Pages

Monday, February 23, 2009

ஈசன் திருநாமம்!





பல்லவி

இமயம் செல்ல வேண்டும்-அதற்கு
சமயம் வந்திடுமா


அனுபல்லவி

உமையவள் நாதனை உண்மைப் பரம்பொருளை
இமைப்பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே-(இமயம்)

சரணம்

ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய்தொடர்கிறதே
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித்துடித்திடுமே -எனவே(இமயம்)




http://www.gabcast.com/casts/6004/episodes/1235281571.mp3

(இந்தச்சுட்டியில் நான் எழுதிய இந்தப்பாடல்,என் குரலிலேயே(பாம்பேஜெய்ஸ்ரீ அல்லது மகாநதி ஷோபனா பாடினால் கண்டிப்பா இது நன்றாகவே இருந்திருக்கும்) வருகிறது!! பெஹாக் ராகத்தில்தான் ஆரம்பித்தேன் சரணத்தில் சற்றே அது ஜகா வாங்கிவிட்டது (ஜஹாக்:))மன்னிக்கவும்!)

31 comments:

  1. Anonymous9:09 AM

    சூப்பரா இருக்கே படம்.. எந்த ஊர் லிங்கம் ?

    இனிமேல் தான் ப்ளாக் ஓபன் செய்யனும் எனக்கு.

    காமேஷ்.

    ReplyDelete
  2. பெஹாக்கில் பாடிப் பரமனைத் துதிக்க அக்காவே! இனி நீர் பெங்களூர் பெஹாக் என்று அழைக்கப்படுவீராக! :))

    //ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
    நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித்துடித்திடுமே//

    இசைந்தே சொல்லிடவே = இசைந்து சொல்லும் போது தான்-க்கா இசையாக உருவாகுது! அதில் நம்மையும் இசைய வைக்கிறது!

    இறை நாமத்தை வெறுமனே சொல்லாது, இசைந்து சொல்லணும்! ரொம்ப பிடிச்சிருக்கு வரிகள்!

    ReplyDelete
  3. Anonymous said...
    சூப்பரா இருக்கே படம்.. எந்த ஊர் லிங்கம் ?

    இனிமேல் தான் ப்ளாக் ஓபன் செய்யனும் எனக்கு.

    காமேஷ்.

    9:09 AM
    >>>>>>>>>>>>>>>>

    டம் ஒரு நண்பர்பதிவிலிருந்து கிடைத்தது காமேஷ்
    வருகைக்கு நன்றி சீனால ப்ளாக் இப்போ பார்க்கமுடியுதா

    ReplyDelete
  4. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    பெஹாக்கில் பாடிப் பரமனைத் துதிக்க அக்காவே! இனி நீர் பெங்களூர் பெஹாக் என்று அழைக்கப்படுவீராக! :))>>>

    நன்றி நியூயார்க் நாயகரே!

    \\இசைந்தே சொல்லிடவே = இசைந்து சொல்லும் போது தான்-க்கா இசையாக உருவாகுது! அதில் நம்மையும் இசைய வைக்கிறது!

    இறை நாமத்தை வெறுமனே சொல்லாது, இசைந்து சொல்லணும்! ரொம்ப பிடிச்சிருக்கு வரிகள்!\\

    9:52 AM
    >>>>>>>>>>>>>>>>>>>>\

    நன்றி ரவி
    பிசியாய் இருக்கும் நேரத்திலும் இங்க வந்து கருத்து சொல்வதற்கு!

    ReplyDelete
  5. சிவராத்ரி பொழுது நல்லபடியாகபோய்விடும். அருமையாணபாடல்,செவிக்கினிய பாட்டு.ஜோர்தான் போங்கள்.

    ReplyDelete
  6. தி. ரா. ச.(T.R.C.) said...
    சிவராத்ரி பொழுது நல்லபடியாகபோய்விடும். அருமையாணபாடல்,செவிக்கினிய பாட்டு.ஜோர்தான் போங்கள்.

    11:48 AM

    >>>>>>>>>>>>>>>>>> வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரா ச ஸார்!

    ReplyDelete
  7. ஏன் ஸ்ருதி சில இடங்களில் அமுங்குகின்றது.நெட்டில் பலரும் கேட்பார்களே என்ற பதட்டம் பாடும்போது இருந்ததா???

    //பாம்பேஜெய்ஸ்ரீ அல்லது மகாநதி ஷோபனா பாடினால் கண்டிப்பா இது நன்றாகவே இருந்திருக்கும்)//


    நீங்க பாடினதும் நல்லாதான் இருக்கு :)). பாடிக் காட்டுறேங்குற பேர்ல லேசா இழுத்து பேசிக்காட்டுற ஆளெல்லாம் இருக்கு. நீங்க தங்கம் :))

    ReplyDelete
  8. /சரணத்தில் சற்றே அது ஜகா வாங்கிவிட்டது (ஜஹாக் மன்னிக்கவும்சரணத்தில் சற்றே அது ஜகா வாங்கிவிட்டது //

    பெஹாக் ஜஹா வாங்கிட்டா ஜஹாக்கா???

    :))))))))))))))

    ReplyDelete
  9. சிஸ்டர் பெஹாக்ல என்ன சினிமா பாட்டு இருக்குன்னு நானும் ரொம்ப நேரமா மண்டைய பிச்சுக்கிட்டேன். ஆடி வெள்ளித் தேடி உன்னைன்னு மூன்றுமுடிச்சுல ஒரு பாட்டுவரும்.அதைத்தவிர வேற ஒன்னும் சிக்க மாட்டேங்குது. உங்களுக்கு ஏதாவது தெரியுதா???
    நல்ல ராகம். ஏன் நம்ப மியூசிக் டைரக்டர்ஸ் பெருசா கண்டுகிடலன்னு தெரியல :((

    ReplyDelete
  10. எம்.எம்.அப்துல்லா said...
    ஏன் ஸ்ருதி சில இடங்களில் அமுங்குகின்றது.நெட்டில் பலரும் கேட்பார்களே என்ற பதட்டம் பாடும்போது இருந்ததா???<<>>>


    அப்துல்லாஜீ ஆயியே ஆயியே! ஸ்ருதி அமுங்கக்காரணம் லேசா பதட்டம் என்பதை எப்படித்தான் கண்டுபிடிச்சீங்களோ:0 ஆனாலும் இந்நன்னாளில் இறைவனுக்கு இதனை அளிக்க நினைத்து இங்கு நிட்டுவிட்டேன்!

    \\
    நீங்க பாடினதும் நல்லாதான் இருக்கு :)). பாடிக் காட்டுறேங்குற பேர்ல லேசா இழுத்து பேசிக்காட்டுற ஆளெல்லாம் இருக்கு. நீங்க தங்கம் :))..\\


    ஆஹா இப்படிச்சொல்ல என் ப்ரதர் அப்துல்ஸ்க்கு வைர நெஞ்சம்தான் நன்றிஜீ

    2:01 PM

    ReplyDelete
  11. எம்.எம்.அப்துல்லா said...
    சிஸ்டர் பெஹாக்ல என்ன சினிமா பாட்டு இருக்குன்னு நானும் ரொம்ப நேரமா மண்டைய பிச்சுக்கிட்டேன். ஆடி வெள்ளித் தேடி உன்னைன்னு மூன்றுமுடிச்சுல ஒரு பாட்டுவரும்.அதைத்தவிர வேற ஒன்னும் சிக்க மாட்டேங்குது. உங்களுக்கு ஏதாவது தெரியுதா???
    நல்ல ராகம். ஏன் நம்ப மியூசிக் டைரக்டர்ஸ் பெருசா கண்டுகிடலன்னு தெரியல :((

    2:39 PM
    >>>>>>>>>>>>>>>>


    அப்துல்லா
    இக்கட ச்சூடண்டி!

    திருப்பாவைல ஒருத்திமகனாய்ப்பிறந்து

    அப்ரோம் இரக்கம் வராமல்போனதென்ன காரணம் என்ற கோபாலக்ருஷ்ணபாரதி பாட்டு

    பெ தூரனின் முருகனின் மறுபெயர் அழகு


    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

    இதெல்லாம் பெஹாக் என்பார்கள் எனக்குத்தெரிந்தவரை

    இன்னமும் இருக்கு.. யோசிச்சி சொல்றேன்
    நன்றி அப்துல் ஆடிவெள்ளியை நினைவுபடுத்தினதுக்கு.... சில வரிகளில் அந்தாதிப்பாடலும் கூட இது

    ReplyDelete
  12. எம்.எம்.அப்துல்லா said...
    சிஸ்டர் பெஹாக்ல என்ன சினிமா பாட்டு இருக்குன்னு நானும் ரொம்ப நேரமா மண்டைய பிச்சுக்கிட்டேன். ஆடி வெள்ளித் தேடி உன்னைன்னு மூன்றுமுடிச்சுல ஒரு பாட்டுவரும்.அதைத்தவிர வேற ஒன்னும் சிக்க மாட்டேங்குது. உங்களுக்கு ஏதாவது தெரியுதா???
    நல்ல ராகம். ஏன் நம்ப மியூசிக் டைரக்டர்ஸ் பெருசா கண்டுகிடலன்னு தெரியல :((

    2:39 PM
    >>>>>>>>>>>>>>>>


    அப்துல்லா
    இக்கட ச்சூடண்டி!

    திருப்பாவைல ஒருத்திமகனாய்ப்பிறந்து

    அப்ரோம் இரக்கம் வராமல்போனதென்ன காரணம் என்ற கோபாலக்ருஷ்ணபாரதி பாட்டு

    பெ தூரனின் முருகனின் மறுபெயர் அழகு


    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

    இதெல்லாம் பெஹாக் என்பார்கள் எனக்குத்தெரிந்தவரை

    இன்னமும் இருக்கு.. யோசிச்சி சொல்றேன்
    நன்றி அப்துல் ஆடிவெள்ளியை நினைவுபடுத்தினதுக்கு.... சில வரிகளில் அந்தாதிப்பாடலும் கூட இது

    ReplyDelete
  13. அப்துல்லாவின் பின்னூட்டத்துக்கு நான் ஒருமுறைதான் பதில் அளித்தேன் ஒண்ணு ரெண்டு ஆன காரணம் என்னன்னு தெரில்ல! யாரும் நானே ஏதோ பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்திட்டேனு நினச்சிடாதீங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  14. //திருப்பாவைல ஒருத்திமகனாய்ப்பிறந்து

    அப்ரோம் இரக்கம் வராமல்போனதென்ன காரணம் என்ற கோபாலக்ருஷ்ணபாரதி பாட்டு

    பெரியசாமி தூரனின் முருகனின் மறுபெயர் அழகு

    //

    இதெல்லாம் எனக்கும் தெரியும். நான் உங்க கிட்ட கேட்டது சினிமா பாடல் மட்டுமே :))

    மற்ற இராகங்களை விட பெஹாக் மிகமிகமிக குறைவாகவே சினிமாவுல பயன் படுத்தப்பட்டு இருக்குன்னு நினைக்கிறேன்.
    :)

    ReplyDelete
  15. Anonymous5:07 PM

    ஷைலஜா ...

    அப்துல்லாவின் பின்னூட்டத்துக்கு நான் ஒருமுறைதான் பதில் அளித்தேன் ஒண்ணு ரெண்டு ஆன காரணம் என்னன்னு தெரில்லஸ யாரும் நானே ஏதோ பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்திட்டேனு நினச்சிடாதீங்க ப்ளீஸ்?
    //
    நாங்க அப்படியெல்லாம் நினைக்க மாட்டோம். ஹி...ஹி...ஹி.

    ReplyDelete
  16. எம்.எம்.அப்துல்லா said...
    //

    இதெல்லாம் எனக்கும் தெரியும். நான் உங்க கிட்ட கேட்டது சினிமா பாடல் மட்டுமே :))

    மற்ற இராகங்களை விட பெஹாக் மிகமிகமிக குறைவாகவே சினிமாவுல பயன் படுத்தப்பட்டு இருக்குன்னு நினைக்கிறேன்.\\
    :)

    4:51 PM
    >>>>>>>>>>>>>>>


    ஆமாம்... சினிமால குறச்சல்தான் அப்துல்லா.

    மற்றபாட்டெல்லாம் உங்களுக்கும் தெரியுமா ! அடடா..நான் பாட்டுக்கு லிஸ்ட் போட்டுட்டேனே அரைகுறையா தெரிஞ்சிட்டு !

    ReplyDelete
  17. கடையம் ஆனந்த் said...
    ஷைலஜா ...

    அப்துல்லாவின் பின்னூட்டத்துக்கு நான் ஒருமுறைதான் பதில் அளித்தேன் ஒண்ணு ரெண்டு ஆன காரணம் என்னன்னு தெரில்லஸ யாரும் நானே ஏதோ பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்திட்டேனு நினச்சிடாதீங்க ப்ளீஸ்?
    //
    நாங்க அப்படியெல்லாம் நினைக்க மாட்டோம். ஹி...ஹி...ஹி.

    5:07 PM
    <<<<<<<<<<<<<<<<<<

    ஆனந்து ச்சமத்தாச்சே!!!

    ReplyDelete
  18. //சூப்பரா இருக்கே படம்.. எந்த ஊர் லிங்கம் ?//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ஐயன் தரிசனம் அருமை.

    ReplyDelete
  19. Kailashi said...
    //சூப்பரா இருக்கே படம்.. எந்த ஊர் லிங்கம் ?//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ஐயன் தரிசனம் அருமை.

    5:29 PM

    <<<><>>>.>வாங்கோ கைலாசி ஸார்
    லிங்கம்படம் நண்பர் கொடுத்தது அவர்கிட்ட விவரம் கேட்டு சொல்றேன்
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  20. படம் - தஞ்சைப் பெரிய கோயில்.

    ReplyDelete
  21. ஜீவா (Jeeva Venkataraman) said...
    படம் - தஞ்சைப் பெரிய கோயில்.

    7:04 PM
    >>>>>>>>>>>>>>


    ஜீவா நன்றி!
    தம்பி உடையாள் படம் அளிக்க அஞ்சாள்!!

    ReplyDelete
  22. ஈசன் திரு நாமம் இசைந்தே சொல்லிடவே
    என்னும் உங்கள் பாடல் பெஹாக்க்கில் நன்றாகவே இருக்கிறது.
    பாடப்பாடத்தான் ராகம். ஈசன் திரு நாமத்தை ச் சொல்வதற்கு
    குரலைவிட மன ஈடுபாடு தான் முக்கியமல்லவோ ? என்னைப்
    பாருங்கள்.
    நானும் 50 வருடங்களாகப் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
    இன்னும் என் தங்கை ( அவள் ஒரு தூரதர்ஸன் ஆர்டிஸ்ட் )
    முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார் என்று சொல்லிக்கொண்டு
    இருக்கிறாள். இதுவரை வலைப்பதிவுகளில் வந்த, வருகின்ற
    ஒரு 150 பாடல்களைப் பாடி விட்டேன். வயதான் காலத்தில்
    இதுவும் ஒரு நிம்மதியைத் தருகிறது.

    நிற்க. உங்களது இந்த பாடல் பெஹாக்கைவிட தேஷ் ராகத்தில்
    துல்லியமாக வருகிறது.
    பாடலைச் சீக்கிரமே யூ ட்யூபில் போட்டு, எனது வலைப்பதிவிலும்
    போடுகிறேன்.
    உங்கள் அனுமதிக்கு எனது நன்றி.


    சுப்பு ரத்தினம்
    ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  23. sury said...
    ஈசன் திரு நாமம் இசைந்தே சொல்லிடவே
    என்னும் உங்கள் பாடல் பெஹாக்க்கில் நன்றாகவே இருக்கிறது.
    பாடப்பாடத்தான் ராகம். ஈசன் திரு நாமத்தை ச் சொல்வதற்கு
    குரலைவிட மன ஈடுபாடு தான் முக்கியமல்லவோ ?>>>>



    ஆமாம் சுப்புரத்தினம் ஸார் அதனால்தான் நான் தயங்காமல் பாடிவிடுவேன் வார்த்தைகள் எழுத்தில் மௌனமாக இருக்கும் பாடும்போதும் பேசும்போதும்தான் அவைகளுக்கு ஒலியால் உயிர் வருகிறதென எண்ணுவேன்!

    \\ என்னைப்
    பாருங்கள்.
    நானும் 50 வருடங்களாகப் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
    இன்னும் என் தங்கை ( அவள் ஒரு தூரதர்ஸன் ஆர்டிஸ்ட் )
    முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார் என்று சொல்லிக்கொண்டு
    இருக்கிறாள். இதுவரை வலைப்பதிவுகளில் வந்த, வருகின்ற
    ஒரு 150 பாடல்களைப் பாடி விட்டேன். வயதான் காலத்தில்
    இதுவும் ஒரு நிம்மதியைத் தருகிறது.\\


    >>> தங்களின் ஆர்வம் போற்றவேண்டிய ஒன்று!

    \\. உங்களது இந்த பாடல் பெஹாக்கைவிட தேஷ் ராகத்தில்
    துல்லியமாக வருகிறது.
    பாடலைச் சீக்கிரமே யூ ட்யூபில் போட்டு, எனது வலைப்பதிவிலும்
    போடுகிறேன்..\\

    >>>>>>>>>>>

    கண்டிப்பாக அளிக்கவும் அங்கு
    கேட்கக்காத்திருக்கிறேன் மிக்க நன்றி

    ReplyDelete
  24. //கண்டிப்பாக அளிக்கவும் அங்கு
    கேட்கக்காத்திருக்கிறேன் மிக்க நன்றி//

    அங்கு இட்டவுடன் எனக்குத் தகவல் சொல்லவும் :)

    ReplyDelete
  25. எம்.எம்.அப்துல்லா said...
    //கண்டிப்பாக அளிக்கவும் அங்கு
    கேட்கக்காத்திருக்கிறேன் மிக்க நன்றி//

    அங்கு இட்டவுடன் எனக்குத் தகவல் சொல்லவும் :)

    8:03 AM
    <<<>>>
    அப்துல்லா

    அவரு அங்கே அவர் ப்ளாக்லபாடி இருக்கார் கேளுங்க எனக்கு கணிணி கொஞ்சம் சரியா கேக்கமுடியாம படுத்துது! நீங்க கேட்டு சொல்லுங்களேன்.

    ReplyDelete
  26. அப்துல்லா


    என்பாடலை அங்கே பாடறேன்னு என் வலைல சொன்னவர் தன் ப்ளாக்லபாடி இருக்கார் கேளுங்க எனக்கு கணிணி கொஞ்சம் சரியா கேக்கமுடியாம படுத்துது! நீங்க கேட்டு சொல்லுங்களேன்

    ReplyDelete
  27. ஏன் இப்படி ரெண்டுதடவை ரெண்டுதடவை என் பின்னூட்டம் மட்டும் வருதோ:):)

    ReplyDelete
  28. அந்த நண்பர் ”நீரினை சிரசில் வைத்து” என்ற நீங்கள் எழுதிய பாடலைப் பாடி இருக்கின்றார். சிறிது ஸ்ருதி தட்டுகின்றது.மற்றபடி நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  29. //ஏன் இப்படி ரெண்டுதடவை ரெண்டுதடவை என் பின்னூட்டம் மட்டும் வருதோ:):)

    //

    அர்த்தநாரியோ???

    ReplyDelete
  30. எம்.எம்.அப்துல்லா said...
    அந்த நண்பர் ”நீரினை சிரசில் வைத்து” என்ற நீங்கள் எழுதிய பாடலைப் பாடி இருக்கின்றார். சிறிது ஸ்ருதி தட்டுகின்றது.மற்றபடி நன்றாகவே உள்ளது.

    8:27 PM
    >>>>ஆமா இப்போதான் நானும் கேட்டேன் நன்றாகவே உள்ளது அங்கேபோய் பின்னூட்டமிடணும்
    உங்களுக்கு நன்றி அப்துல்ஸ்

    ReplyDelete
  31. எம்.எம்.அப்துல்லா said...
    //ஏன் இப்படி ரெண்டுதடவை ரெண்டுதடவை என் பின்னூட்டம் மட்டும் வருதோ:):)

    //

    அர்த்தநாரியோ???

    9:02 PM
    <<<<<<

    கொஞ்சம் அறுவைநாரி* ந்னு தான் என்னை மத்தவங்க சொல்வாங்க!

    *=பெண்!!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.