Social Icons

Pages

Wednesday, February 25, 2009

கருவில் உருவாய் வருவாயடி!







கனவில் மட்டும் வருகின்றாய்,
கைகொட்டித்தான் சிரிக்கின்றாய்!
நனவில் நானும் நானும்தான்,
நாளைவரும் எனும் நம்பிக்கைதான்,
கனவில் வந்த கண்மணியே,
நனவில் வரவும் தயங்குவதேன்?

நீ ...
தொலைந்து போயிருந்தால்
தேடி இருப்பேன்,
இறந்து போயிருந்தால்
வாடிப்போயிருப்பேன்,
இன்னமும் பிறக்காத
என் மகளே!

உன்னை உறங்கவைக்கத்தான்
தாலாட்டெல்லாம் பயின்றுவிட்டேன்
உன் முகம் பார்த்துப் பசியாற
பட்டினியாக இருக்கின்றேன்
எந்தன்கவலை புரியாமல்
எதற்கு இந்தகண்ணாமூச்சி!

கள்ளிப் பாலுக்கஞ்சித் தான்
காத தூரம் போனாயோ?
காலம் மாறிவிட்டதடி.
கண் கலங்க வேண்டாமடி,
கருவில் உருவாய் வருவாயடி
காத்திருக்கிறது
இந்தத் தாய் மடி!!

21 comments:

  1. // குழந்தை இல்லாதவர்களை மனதில் வைத்து எழுதினீர்களா?? இல்லை...இது உங்கள் சொந்த உணர்வா??

    ReplyDelete
  2. சூப்பர் அக்கா ;)

    நன்றாக வந்திருக்கு தாய் மடி கவிதை ;)

    ReplyDelete
  3. தாயாக ஏங்கும் பெண்ணின் ஏக்கத்தை அழகான கவிதையாக்கியிருக்கிறீங்க. நல்லாருக்கு.

    ReplyDelete
  4. எம்.எம்.அப்துல்லா said...
    // குழந்தை இல்லாதவர்களை மனதில் வைத்து எழுதினீர்களா?? இல்லை...இது உங்கள் சொந்த உணர்வா??

    9:41 PM

    >>>>>>>>>>>>>>..வாங்க அப்துல்லா
    எனக்கு 2 அழகுப்பொண்ணுங்க இருக்காங்க ! அதனால இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே நான் யாரை மனசில வச்சி கற்பனையா கவிதை வடித்தேன்ன்னு!

    ReplyDelete
  5. கோபிநாத் said...
    சூப்பர் அக்கா ;)

    நன்றாக வந்திருக்கு தாய் மடி கவிதை ;)

    10:23 PM
    >>>நன்றி கோபி என் பதிவுகள் எல்லாத்துக்கும் வந்து பின்னூட்டமிடும் உங்க அன்புக்கும் நன்றி

    ReplyDelete
  6. கவிநயா said...
    தாயாக ஏங்கும் பெண்ணின் ஏக்கத்தை அழகான கவிதையாக்கியிருக்கிறீங்க. நல்லாருக்கு.

    3:27 AM
    >>>>>
    ரொம்ப நன்றி கவிந்யா
    உங்க புவனேஸ்வரி பாடலுக்கு இசை சேர்த்துப்பாட விருப்பம் நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது!

    ReplyDelete
  7. //எனக்கு 2 அழகுப்பொண்ணுங்க இருக்காங்க //

    இது எனக்கு தெரியும்
    இருந்தும் ஒரு சந்தேகம் அது தான் இது
    குழந்தை இல்லாதவர்களை மனதில் வைத்து எழுதினீர்களா?? இல்லை...இது உங்கள் சொந்த உணர்வா

    படித்து உடனே பின்னோட்டம் இடவில்லை .

    ஒரு பெண்மையின் எண்ணத்தை
    அருமையாக தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  8. திகழ்மிளிர் said...
    //எனக்கு 2 அழகுப்பொண்ணுங்க இருக்காங்க //

    \\இது எனக்கு தெரியும்\\

    :::::>>><<<<<<<<<<,
    ஆமாங்க! 2பொண்ணுக்கு அம்மா நான்! நல்லா சீராட்டி தாலாட்டி குழந்தையா இருக்கறப்போ பாட்டெல்லாம் பாடுவேன் குழந்தைகளே போதும்ம்மா நிறுத்துன்னு சொல்றவரைக்கும்!!

    \\
    இருந்தும் ஒரு சந்தேகம் அது தான் இது
    குழந்தை இல்லாதவர்களை மனதில் வைத்து எழுதினீர்களா?? இல்லை...இது உங்கள் சொந்த உணர்வா
    >>>

    ் ....அப்துல்லா கேள்வியே உங்களுதுமா!!

    இது என் தோழி ஒருத்தியின் மனவேதனை கல்யாணம் ஆகி 17வருஷமாகியும் இன்னும் அவங்களுக்கு குழந்தையே இல்ல பாவம்...


    ]\\\
    படித்து உடனே பின்னோட்டம் இடவில்லை .

    ஒரு பெண்மையின் எண்ணத்தை
    அருமையாக தந்துள்ளீர்கள்\\\


    நன்றி திகழ்மிளிர்

    8:08 AM

    ReplyDelete
  9. ஏக்கம்+பாசம்
    நல்லாயிருக்கு!!

    ReplyDelete
  10. வாழவந்தான் said...
    ஏக்கம்+பாசம்
    நல்லாயிருக்கு!!

    4:15 PM
    >>>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழவந்தான்.

    ReplyDelete
  11. வாழவந்தான் said...
    ஏக்கம்+பாசம்
    நல்லாயிருக்கு!!

    4:15 PM
    >>>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழவந்தான்.

    ReplyDelete
  12. //உங்க புவனேஸ்வரி பாடலுக்கு இசை சேர்த்துப்பாட விருப்பம் நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது!//

    எண்ணமே மகிழ்ச்சி தருகிறது. நேரம் கிடைக்கையில் செய்ங்க அக்கா.

    ReplyDelete
  13. தாய்மைக்கு ஏங்கும் அதுவும் பென் குழந்தை தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் அம்மாவின் ஏக்கம் நன்றாகத் தெரிகிறது. சும்மா சொல்லக் கூடாது ஷைலஜா {மைபா வைத் தவிர ;)} நீங்கள் எதைப் படைத்தாலும் அதில் ஒரு அழகிய சுவை இருக்கிறது.

    அன்புடன்
    சுவாதி

    ReplyDelete
  14. நல்ல கவிதை!

    ஒரு தாயின் ஏக்கத்தை
    அழகா பதிவு செஞ்சிருக்கீங்க!

    ReplyDelete
  15. //வாங்க அப்துல்லா
    எனக்கு 2 அழகுப்பொண்ணுங்க இருக்காங்க //

    ஹையா...சேம் பிளட். எனக்கும் இரண்டு அழகு பெண்கள்.
    (உனக்கு எப்படி அழகா??ன்னு நீங்க கேக்குறது புரியுது! அவங்க ரெண்டுபேரும் அவங்க அம்மா மாதிரி)

    :))

    ReplyDelete
  16. நல்ல பாட்ட்டுங்க..... தாய் மடிதான் சொர்க்கமே!!!

    ReplyDelete
  17. கவிநயா said...
    //உங்க புவனேஸ்வரி பாடலுக்கு இசை சேர்த்துப்பாட விருப்பம் நேரம்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது!//

    எண்ணமே மகிழ்ச்சி தருகிறது. நேரம் கிடைக்கையில் செய்ங்க அக்கா.

    7:41 P>>>>>வாங்க கவிநயா
    கண்டிப்பா செய்வேன்மா
    நன்றி

    ReplyDelete
  18. ஸ்வாதி said...
    தாய்மைக்கு ஏங்கும் அதுவும் பென் குழந்தை தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் அம்மாவின் ஏக்கம் நன்றாகத் தெரிகிறது. சும்மா சொல்லக் கூடாது ஷைலஜா {மைபா வைத் தவிர ;)} நீங்கள் எதைப் படைத்தாலும் அதில் ஒரு அழகிய சுவை இருக்கிறது.

    அன்புடன்
    சுவாதி

    9:16 PM
    >>>>வாங்க சுவாதீ மை(சூர்)பாக்கை இன்னும் சாப்பிடல நீங்க சாப்ட்டா அப்புறமா சொல்வீங்க இச்சுவைதவிர யான்போய் வேறெந்த சுவையையும் தேடமாட்டேன் என்று!!:):):)

    ReplyDelete
  19. Namakkal Shibi said...
    நல்ல கவிதை!

    ஒரு தாயின் ஏக்கத்தை
    அழகா பதிவு செஞ்சிருக்கீங்க!

    9:33 PM
    >>. வாராதுவந்த மாமணியே வலைச்சரம் முடித்த வலைமணியே நாமக்கல் சிபியே !! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி அன்புத்தம்பியே!!

    ReplyDelete
  20. எம்.எம்.அப்துல்லா said...
    //வாங்க அப்துல்லா
    எனக்கு 2 அழகுப்பொண்ணுங்க இருக்காங்க //

    ஹையா...சேம் பிளட். எனக்கும் இரண்டு அழகு பெண்கள்.
    (உனக்கு எப்படி அழகா??ன்னு நீங்க கேக்குறது புரியுது! அவங்க ரெண்டுபேரும் அவங்க அம்மா மாதிரி)

    :))!!

    9:44 PM
    >>அப்படியா இல்ல இந்த ஷைலுஅத்தையைக்கொண்டிருக்கோ:)(ஓவரா இருககா:))))

    ReplyDelete
  21. ஆதவா said...
    நல்ல பாட்ட்டுங்க..... தாய் மடிதான் சொர்க்கமே!!!

    10:18 PM
    >>>ஒரு தாயானதும் எங்களுக்கெல்லாம் குழந்தையின் முகமே சொர்க்கம்! நன்றி ஆதவா வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.