Social Icons

Pages

Wednesday, October 24, 2012

அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!


 
 
 
 
 
 
 
 
 
வானச்சீலை!
 
நட்சத்திர மாலை!
 
சூரிய மோதிரம்!
 
பிறைச்சந்திரப்பொட்டு!
 
மின்னல் தண்டை!
 
அன்னை பராசக்திக்கு
 
அவனியே மண மேடை!
 
ஆழ்கடல் அலைகள்
 
இசை ஒலி எழுப்பும்,
 
மலைமேளந்தன்னை
 
காற்று வருடிப்போகும்!
 
காட்டுத்தீ சற்றே,
 
வேள்விக்குத்துணையாகும்!
 
நங்கையவள் கரந்தன்னை
 
நற்சகோதரன் நாரணன்
 
அண்ணல் சிவபெருமான்
 
பொன்கரந்தனில்இணைக்க
 
பூமாரிதனை தேவர்கள் தான் தூவ
 
கல்யாணம்தான் எங்கள்சக்திக்கு
 
காண்போர்க்கு மகிழ்ச்சிப்பெருக்கு!


(தினம் ஒரு தேவி துதியாக மகாளய அமாவாசை தினம்  ஆரம்பித்ததை அம்பிகை அருளால்  இன்று  முடிக்க இயன்றது. ..)

--


10 comments:

  1. பிரபஞ்சத் தத்துவத்தை முத்து முத்தாய்
    கோர்த்து பாமாலைப் பாடிய கவிதாயினி
    வாழ்த்துகிறேன் நின் கவிதைக்கு
    வணகுகிறேன் நினது பக்திக்கு....

    அழகிய கவிதை ஒரு அழகியைப் பற்றிய அமுதை
    அடியவன் பருகிய பொழுதில் ஆனந்தம் பெருகியதே!!!!

    யாவுமாகி அதனியக்க முமாகி
    எங்கும் நிறைந்தவளே அம்மா!
    எத்தனை கரங்கள் உனக்கு
    இத்தனை பேரையும் அணைக்க!

    நீலநயனங்கள் ஆழக் கடல்களோ
    நீலாம்பரி மார்பகங்கள் மேருவோ
    பாதச் சுவடுகள் அது
    மாதவ முனிகள் மாளிகையோ

    கொஞ்சும் சலங்கைகள் அதை
    மிஞ்சும் நினது சிரிப்போ!
    அழகின் அழகே நல்
    அமுதக் குடமே அருமருந்தே!

    உயிரின் உயிரே ஏழேழு
    உலகத்தின் உண்மைப் பொருளே
    கருணைக் கடலே கவின்மிகு
    கற்பக நறு மலரே!

    உந்தன் பிள்ளை நானுனை
    உரிமையோடு கேட்கிறேன் மறுக்காதே
    ஒரே.... ஒரு.... கணம்
    ஒரே.... ஒரு.... முறை
    உந்தன் மடியிலெனை இருத்துவாயே!

    மலரின் மெல்லிய இதழ்களால்
    அமிழ்தினும் இனிய தொரு
    அழகு முத்த மொன்றை
    அம்மா எனக்கு தருவாயோ!

    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப் பட்ட என்னை
    கறை ஏற்றுவாய் தாயே!

    அனைவருக்கும் வாழ அருளாவாய் அன்னையே எனவேண்டி
    அன்பான வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. மன்னிக்கணும் எழுத்துப் பிழை..

    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப்பட்ட என்னை கறைபோக்கி
    கரை ஏற்றுவாய் தாயே!

    ReplyDelete
  3. அருமை... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ஜி ஆலாசியம் அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. படமும் கவிதையும் நன்றாக உள்ளன. படம் எந்த ஊர் கோயில் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. கவிதையிலேயே கருத்து மழை பொழிந்த ஆலாசியம் அவர்களுக்கு நன்றி மிக

    ReplyDelete
  6. தனபாலன் மற்றும் தமிழ் இளங்கோ ஆகியோரின் பின்னூட்டங்கலுக்கு நன்றி... @தமிழ் இளங்கோ...
    சகோதரரே இந்தப்படம் அன்னை மீனாட்சி கல்யாணம் படம்....உதவி கூகுள்.

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு..

    ஒரு கோபுரத்தில் இருந்த மீனாட்சி திருமணக் காட்சியை நானும் ஒரு முறை படம் எடுத்தேன்.

    ReplyDelete
  8. தினம் ஒன்று என விடாமல் எழுதிய முனைப்புக்குப் பாராட்டுக்கள். விழாக்கால வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அருமையான கவிதை மற்றும் (எங்க) மீனாக்ஷி கல்யாணப் படம் பிரமாதம். சூப்பர்க்கா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.