ஆச்சர்யமா இருக்குங்க!
தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.
இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)
மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?
அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!
வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.
சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.
நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.
உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!
இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு
நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?
மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.
இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!
அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!
நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.
நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க
கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.
ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.
மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....
இன்னும் இருக்கலாம்....
இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு!
சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.
காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.
'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.
பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!
பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!
Tweet | ||||
நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா!
ReplyDeleteஅன்பின் செல்ல அக்காவுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா
ReplyDeleteஅழகான , அன்பான , நல்ல நட்பான நட்சத்திரத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய புத்திசாலித் தனத்திற்கு வாழ்த்துகள்! ஏன் இவ்வளவு தாமதமாய் தேர்வு செய்தார்கள் என்பது தான் புரியவில்லை. :)
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி!!!
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா......
ReplyDeleteவாழ்த்துகள் என் அன்பு
ReplyDeleteசகோதரிக்கு..
அமிழ்தாய் பதிவுகளில் ஆகாயம் ஏறிய
தமிழ்மண தாரகைக்கு வாழ்த்து.
அன்புடன் ஷாஜஹான் - ரியாத்,சௌதி அரேபியா.
ஆஹா வாழ்த்துகள் அக்கா.
ReplyDeleteஜொலிங்க.ஜொலிங்க.. ஜொலிச்சுட்டேயிருங்க..:))
ஆயிரம் சூரியன் இருந்தாலும் உங்க ஜொலிப்பே ஜொலிப்புக்கா.. தினம் வர நான் தயார்.. உங்க நட்சத்திரம் என்னக்கா :)
ReplyDeleteஅன்புத்தம்பிஆயில்யன் செல்லத்தம்பி ரிஷான் அன்புத்தம்பி சிவ்ஸ் இனியதோழி சுவாதி கார்த்திக் திகழ்மிளிர் ரஞ்சன்
ReplyDeleteஅன்புதம்பி ஷாஜு அன்புத்தங்கை சாந்தி உள்ளூர்தம்பிராகவ்
எல்லார்க்கும் நன்றி நன்றி...
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் தரமான எழுத்துக்கள் மேலும் பிரகாசமாக பரிணமிக்கட்டும்!
அன்பின் ஷைலஜா அக்கா,
ReplyDeleteதமிழ்மணத்தின் இந்தவார நட்சத்திரமாக ஜொலிப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நட்சத்திரத்தைக் குறித்தே சுவாராசியமான கட்டுரையும் படித்து ரசித்தேன். நன்றி
வாழ்த்துக்கள்.
அன்புடன்
-சூர்யா
இறக்குவானை நிர்ஷன் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்.
உங்கள் தரமான எழுத்துக்கள் மேலும் பிரகாசமாக பரிணமிக்கட்டும்!
>>நன்றி நிர்ஷன்
Raghav said...
ReplyDeleteஆயிரம் சூரியன் இருந்தாலும் உங்க ஜொலிப்பே ஜொலிப்புக்கா.. தினம் வர நான் தயார்.. உங்க நட்சத்திரம் என்னக்கா :)
>>>>>ராகவ்...அதென்னப்பா போன் செய்தா குறை ஒன்றுமில்லை மட்டும்பாட்டு மட்டும் தான் கேட்கவைப்பீங்களா?:) ஹலோக்கா சொல்லமாட்டீங்களா?:)
சரி விடுங்க தம்பிய ஸ்டாரான நாள்ள கோச்சிக்கக்கூடாது ராகவ் என்ஸ்டார் என்னவா? அது வந்து பரதனின் திருநட்சத்திரம்!!!
ஜிஜி said...
ReplyDeleteஅன்பின் ஷைலஜா அக்கா,
தமிழ்மணத்தின் இந்தவார நட்சத்திரமாக ஜொலிப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நட்சத்திரத்தைக் குறித்தே சுவாராசியமான கட்டுரையும் படித்து ரசித்தேன். நன்றி
வாழ்த்துக்கள்.
அன்புடன்
-சூர்யா
>>>>>>> மிக்க நன்றி சூர்யா வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Good and Future
ReplyDeleteஓ ! இந்த வாரம் எக்ஸ்ட்ரா ட்யூடியா! மூளையை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கசக்கணும். க்ரியேடிவிடி கூடும்.பாராட்டுகள்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.
வாழ்த்துகள் shylaja
ReplyDeleteகபீரன்பன் said...
ReplyDeleteஓ ! இந்த வாரம் எக்ஸ்ட்ரா ட்யூடியா! மூளையை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கசக்கணும். க்ரியேடிவிடி கூடும்.பாராட்டுகள்.
நட்சத்திர வாழ்த்துகள்.
>>>>நன்றி கபீரன்பன்
ஓரளவு சிறப்பா கொடுக்க நினைக்கிறேன் எப்படி வரப்போகுதோ?:)
krishnasamyg said...
ReplyDeleteGood and Future
3:47 PM
நன்றிகிருஷ்ணசாமிஜி
எங்கே என் வாழ்த்தைக் காணோம்:(?
ReplyDeleteசரி மறுபடி வாழ்த்திக்கறேன்.
ஜொலி ஜொலிக்க வாழ்த்துக்கள்:)!
நட்சத்திர வாழ்த்துகள் அக்கா.
ReplyDelete4:59 PM
ReplyDeleteராமலக்ஷ்மி said...
எங்கே என் வாழ்த்தைக் காணோம்?
சரி மறுபடி வாழ்த்திக்கறேன்.
ஜொலி ஜொலிக்க வாழ்த்துக்கள்!
5:16 PM >>>
இன்னொரு நட்சத்திர பதிவு இதேதான் விஷயம் ஏன்ன்னு தெரில்ல,இரட்டைமகிழ்ச்சிபோலும்:) டபிள்டைம் போஸ்ட் ஆகி அங்கே உங்க பின்னூட்டம் அப்போவே போட்ட்டுட்டேனே?மறுபடி வாழ்த்தினதுக்கு தாங்க்ஸ் ராமல்ஷ்மி
நிலாரசிகன் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் அக்கா.
5:22 PMஃ
நன்றி நிலா
முன்னே போட்ட பின்னூட்டத்தை காணோம். ஆகவே இன்னொருமுறை நட்சத்திர வாழ்த்தைச் சொல்லிக்கறேன். :)
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமதுரையம்பதி said...
ReplyDeleteமுன்னே போட்ட பின்னூட்டத்தை காணோம். ஆகவே இன்னொருமுறை நட்சத்திர வாழ்த்தைச் சொல்லிக்கறேன்.
6:41 PM <<<<<
2பதிவு இதே ஆகிப்போச்சு மௌலி அதனால உங்க முதல்வாழ்த்து அதுல இருக்கு:) நன்றி திரும்பைங்கயும் சொன்னதுக்கு!
இராம்/Raam said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்!!
7:01 PM
>>>நன்றி இராம்(இப்போ பாலகன் சொல்லமாட்டேன் வளர்ந்துட்டீங்களே)
ஷாஜி said...
ReplyDeleteவாழ்த்துகள் என் அன்பு
சகோதரிக்கு..
அமிழ்தாய் பதிவுகளில் ஆகாயம் ஏறிய
தமிழ்மண தாரகைக்கு வாழ்த்து.
>>>>வாழ்த்துப்பா இப்போதான் ஊன்றிகவனிச்சேன் அசத்தல் ஷாஜு நன்றிபல
நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி.....
ReplyDeleteஅன்புடன்
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் ஷைலஜா.
ReplyDeleteபிரகாசிக்கும் வாரத்தை பூரணமாக் அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.
அக்கா...சரியான டைமுக்கு வந்துட்டேன் போல!! ;))
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா ;))
நட்சத்திர குறிப்புகளும் கலக்கல் ;)
வாழ்த்துகள்
ReplyDeleteR A J A said...
ReplyDeleteவாழ்த்துக்கள்
10:50
கோவி.கண்ணன் said...
மின்ன வாழ்த்துகள்
10:55
ராமலக்ஷ்மி said...
ஜொலி ஜொலிக்க வாழ்த்துக்கள் ஷைலஜா!
10:57
ஆயில்யன் said...
நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா
11:00
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
வாங்க அக்கா வாழ்த்துக்கள்!!!
11:05
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நட்சத்திர வாரத்தில் உங்கள் பதிவு முத்துக்கள் ஜொலிக்க வாழ்த்துக்கள்!!!
11:07
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
ஒரு குடும்ப பெண்னால் இத்தனயும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து வருகிறீர்.... பெருமைப்படவேண்டிய விஷயம்!!!!
11:08
SurveySan said...
கலக்குங்க!
11:17
தங்கராசா ஜீவராஜ் said...
வணக்கம்,
நட்சத்திர வாழ்த்துக்கள்...
12:06 PM
Udhayakumar said...
சபாஷ்!!!
1:10 PM
பார்சா குமாரன் said...
வாழ்த்துக்கள்
1:12 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நட்சத்திர வாழ்த்துக்கள்-க்கா!
1:14 PM
பார்சா குமாரன் said...
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்
1:14 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இது நட்சத்திர வாரமா? இல்லை மைசூர்பா வாரமா? அதச் சொல்லுங்க மொதல்ல!
1:15 PM
நாமக்கல் சிபி said...
நட்சத்திர அறிமுகம் சூப்பர்!
1:17 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்)//
இது நட்சத்திர உள்குத்தா?
நட்சத்திரம் அதுவுமா இப்பிடிப் போட்டு அடிக்கறீங்களே! இதைக் கேட்பார் இல்லையா?
1:18 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய//
நீங்க கேப்டன் கட்சியில சேந்தாச்சாக்கா? சொல்லவேயில்ல?
1:20 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து//
சூப்பர் அம்மா! வாழ்க! வாழ்க!
-இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
1:22 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்//
ஆண்மூலம் ஆஞ்சநேயர் அரசே ஆளலை! சேவகம் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு!
அதே போல பெண்மூலம் நிர்மூலம் இல்லை!
இப்படி ரைமிங்கா பேசிப் பீதியைக் கெளப்பறதே புலவர்களுக்கு பொழைப்பாப் போச்சு!
1:25 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து//
கண்டிப்பா பார்ப்போம்!
//படிச்சி//
இது கொஞ்சம் கஷ்டம்!
//கருத்து//
இது ரொம்ப ஈசி!
//சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!
//
சொல்லிட்றோம்! சொல்லிடறோம்!
1:27 PM
ஷைலஜா said...
எப்படி 2நட்சத்திரப்பதிவு வந்ததுன்னே தெரில்ல!! இதானோ இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது?
வாழ்த்தும் நெஞ்சங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி.
கண்ணபிரான் ரவி இது மைபா வாரமும்கூட!!ரொம்ப நன்றி ரவி அதிகப்பின்னூட்டமிட்டதுக்கு!!!!
1:38 PM
Anonymous said...
அன்புள்ள ஷைலஜா,
நினைவிருக்கிறதா?
உங்களைக் காண கால்கடுக்க இந்தபக்கமெல்லாம் வந்து ஓடி வந்தேன்.
உங்களின் நட்சத்திர அந்தஸ்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
warm hugs,
ஷக்தி
1:46 PM
ஷைலஜா said...
Anonymous said...
அன்புள்ள ஷைலஜா,
நினைவிருக்கிறதா?
உங்களைக் காண கால்கடுக்க இந்தபக்கமெல்லாம் வந்து ஓடி வந்தேன்.
உங்களின் நட்சத்திர அந்தஸ்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
warm hugs,
ஷக்தி
>>>ஷக்திப்ரபாவா என்ன? மிக்கமகிழ்ச்சி நினைவில்லாமல் என்ன மறந்தா தானே நினைக்க?
நன்றி வருகைக்கு
2:36 PM
சின்ன அம்மிணி said...
வலைச்சரத்துல வித்தியாசமான பதிவுகளை காமிச்சு அசத்தினீங்க. நட்சத்திர வாரத்தலயும் அசத்துங்க. வாழ்த்துக்கள்ள்
3:15 PM
மதுரையம்பதி said...
வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கா... கலக்குங்க..
3:47 PM
ஷைலஜா said...
36 PM
சின்ன அம்மிணி said...
வலைச்சரத்துல வித்தியாசமான பதிவுகளை காமிச்சு அசத்தினீங்க. நட்சத்திர வாரத்தலயும் அசத்துங்க. வாழ்த்துக்கள்ள்
>>>>>வாங்க சின்னம்மிணி
முடிகிறவரைக்கும் அசத்தற பதிவுகளை
அளிக்கறேன்மிக்க நன்றி
5:03 PM
ஷைலஜா said...
மதுரையம்பதி said...
வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கா... கலக்குங்க..
3:47 PM
>>>>நன்றி மதிரையம்பதி,,,காஃபிதான் ஒழுங்கா கலப்பேன்...பாக்க்லாம் இங்கயும்
*********************************************************
5:04 PM
கானா பிரபா said...
நட்சத்திர வாழ்த்துக்கள் ;-)
5:15 PM
ஷைலஜா said...
கானா பிரபா said...
நட்சத்திர வாழ்த்துக்கள் ;-)
>>>>நன்றி கானாப்ரபா!
********************************
5:43 PM
குமரன் (Kumaran) said...
ஆகா. வாழ்த்துகள் அக்கா. நாலு நாளைக்கு முன்னாடி நீங்க நட்சத்திரம் ஆகுறீங்கன்னு கேள்விபட்டதுல இருந்து காத்திருக்கிறேன். அடிச்சு ஆடுங்க.
யாரை அடிக்கிறதா? அது தான் பாசமிகு தம்பி கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே! ரொம்ப நல்லவர் அவர்! :-)
6:02 PM
ஷைலஜா said...
குமரன் (Kumaran) said...
ஆகா. வாழ்த்துகள் அக்கா. நாலு நாளைக்கு முன்னாடி நீங்க நட்சத்திரம் ஆகுறீங்கன்னு கேள்விபட்டதுல இருந்து காத்திருக்கிறேன். அடிச்சு ஆடுங்க. >>>
வாங்க குமரன்!!!! வாழ்த்துக்கு நன்றி
அடிச்சி ஆடறதா அதெல்லாம் குமரன் மதுரையம்பதி ஜிரா கே ஆர் எஸ் மாதிரி சிலருக்கே கைவந்த கலை
யாரை அடிக்கிறதா? அது தான் பாசமிகு தம்பி கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே! ரொம்ப நல்லவர் அவர்! :-)>>>>
ஏற்கனவே அவருக்கு கண்ணடின்னு கேள்விப்பட்டேன்!!!!
********************************************
6:02 PM
6:34 PM
இலவசக்கொத்தனார் said...
வாழ்த்துகள் ஷைலஜாக்கா!!
7:06 PM
ஷைலஜா said...
இலவசக்கொத்தனார் said...
வாழ்த்துகள் ஷைலஜாக்கா!!
7:06 PM >>>>நன்றி இலவசம்!
************************************
7:48 PM
SP.VR. SUBBIAH said...
அடடே, சகோதரி, இந்தவார நட்சத்திரம் நீங்களா?
மகிழ்ச்சி நிறைந்த வாரம்!
ஜாமாயுங்கள்!
கைதட்டி ஆரவாரம் செய்ய நாங்கள் இருக்கிறோம்!
உங்களுக்குக் கைவந்த (நகைச்சுவை) இசைப்பதிவு ஒன்றைப் பதிவிடுங்கள்!>>>> கண்டிப்பா அது உண்டுங்க ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
******************************
10:11 PM
SP.VR. SUBBIAH said...
/////Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்//
ஆண்மூலம் ஆஞ்சநேயர் அரசே ஆளலை! சேவகம் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு!
அதே போல பெண்மூலம் நிர்மூலம் இல்லை!
இப்படி ரைமிங்கா பேசிப் பீதியைக் கெளப்பறதே புலவர்களுக்கு பொழைப்பாப் போச்சு! ////
ஆண்மூலம், பெண்மூலம் என்பது ஆடவரையும், பெண்களையும் குறிப்பதல்ல!
தவறான புரிதல்!
பகலில் (சூரியன் ஆதிக்கத்தில் இருக்கும் நேரத்தில்) மூல நட்சத்திரத்தில் பிறக்கும் அனைவரும் ஆண் மூலம்
இரவில் (சந்திரன் ஆதிக்கத்தில் இருக்கும் நேரத்தில்) மூல நட்சத்திரத்தில் பிறக்கும் அனைவரும் பெண் மூலம்
எனப்படுவார்கள்.>>>>> அப்படியா விளக்கத்துக்கு நன்றி சுப்பையா ஸார்
****************
11:07 PM
தமிழன்...(கறுப்பி...) said...
வாழ்த்துக்கள் அக்கா...
>>>நன்றிதமிழன்
**************************
2:24
துளசி கோபால் said...
அட! நம்ம ஷைலூ.....
நீங்களா தாரகை???ஆஹா.....
அடிச்சு ஆடப்போறிங்கன்னு மின்மினி வந்து சொல்லிட்டுப்போச்சே:-))))>>>>
நீங்கள்ளாம் எளிமையா அருமையா எழுதுவீங்க துளசிமேடம் நான் உங்க ரசிகை உங்க வாழ்த்துக்கு நன்றி
இனிய வாழ்த்து(க்)கள்.
**************************************
கடவுளின் பரிசு said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி.....
அன்புடன்
8:12 PM
நன்றி கடவுளின்பரிசு
வந்தியத்தேவன் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்.
10:54 PM
>>>நன்றிவந்தியத்தேவன்
T.V.Radhakrishnan said...
ReplyDeleteவாழ்த்துகள் shylaja
4:35 PM
நன்றி ராதாக்ருஷ்ணன்
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் ஷைலஜா.
பிரகாசிக்கும் வாரத்தை பூரணமாக் அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.
12:04 AM
>>வாங்கோ வல்லிமா நன்றி தெரிஞ்சவரைக்கும் பதிவுகளை அளிக்றதா இருக்கேன்
கோபிநாத் said...
ReplyDeleteஅக்கா...சரியான டைமுக்கு வந்துட்டேன் போல!! ;))
நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா ;))
நட்சத்திர குறிப்புகளும் கலக்கல் ;)
2:19 AM
??>>>>>கோபியக் காணமேன்னுதான் பாத்திட்டே இருந்தேன் வாங்க மேலும் அப்டிச்சி கருத்து சொலுங்க
பாலராஜன்கீதா said...
ReplyDeleteவாழ்த்துகள்
2:29 AM
>>>நன்றிபாலராஜன்கீதா நலமா?
வலைபதிவுகளின் சூப்பர் ஸ்டாராக வாழ்த்துக்கள்
ReplyDeleteசூர்யா
ஷைலாக்கா சூப்பர்.. உங்க நட்சத்திரப் பதிவை படிக்க எப்படியெல்லாம் கஷ்டப் படவேண்டியிருக்கு.
ReplyDeleteஇத்தனை நாள் வால் நட்சத்திரமா சுத்திட்டிருந்தீங்க..
இப்போ நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்.
எத்தனையோ முறை தமிழ்மண முகப்பில் உங்கள் பெயர் நட்சத்திரமாக வருவதும் பின் போவதுமாக இருந்தது.
ReplyDeleteஎப்படியோ இந்த தடவை அந்த ஏமாற்றம் கிடைக்கவில்லை. (அதனால் தானோ நானும் தாமதமாக பார்க்கிறேன் என நினைக்கிறேன்)
இனிய இனிய வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துகள்.. ஷைலஜா.. கலக்குங்க !!
ReplyDeleteKamesh said...
ReplyDeleteஷைலாக்கா சூப்பர்.. உங்க நட்சத்திரப் பதிவை படிக்க எப்படியெல்லாம் கஷ்டப் படவேண்டியிருக்கு.>>>
காமேஷ் என்னாச்சு சீனால அனுமதி கிடைக்கலையா?
இத்தனை நாள் வால் நட்சத்திரமா சுத்திட்டிருந்தீங்க.. >>>
பெரிய வால் தாங்களெ என் அன்புத்தம்பியே!!
இப்போ நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்.>>>
நன்றி எல்லாம் ஒருவாரத்துக்கு அப்றோம் உதிர்ந்திடும்!!
3:19 PM
மஞ்சூர் ராசா said...
ReplyDeleteஎத்தனையோ முறை தமிழ்மண முகப்பில் உங்கள் பெயர் நட்சத்திரமாக வருவதும் பின் போவதுமாக இருந்தது.
எப்படியோ இந்த தடவை அந்த ஏமாற்றம் கிடைக்கவில்லை. (அதனால் தானோ நானும் தாமதமாக பார்க்கிறேன் என நினைக்கிறேன்)
இனிய இனிய வாழ்த்துக்கள்.
3:54 PM>>> ரொம்ப நன்றி சிநேகிதரே
பதிவினை குழுவிலும் அளித்து என்னை உயர்த்திக்கொண்டிருக்கும் உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் மிக்க நன்றி
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.. ஷைலஜா.. கலக்குங்க !!
4:40 PM >>>>>
நன்றிமுத்துலட்சுமி
மிகவும் அழகான பதிவுதான் அக்கா.
ReplyDelete//
நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.
//
//
மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.
//
இந்த இரண்டு வரிகளுக்கும் முரண் தென்படுகிறது.
51
ReplyDeleteஇது தான் தம்பி மொய்ப் பின்னூட்டம்! :)
இதே போஸ்ட்டை எத்தனை முறை போட்டாலும், அங்கேயும் அதே பின்னூட்டத்தை வந்து போடுவேன்! சொல்லிட்டேன்! :)
ReplyDelete//ஒளியவன் சொன்னது...
ReplyDelete...இந்த இரண்டு வரிகளுக்கும் முரண் தென்படுகிறது. //
முரண்பாடு என்று கருத வேண்டிய அவசியம் இல்லை.
மனிதனின் ஆயுளை விட நட்சத்திரங்களின் ஆயுள் மிக நெடிதாதலின் நம் ஆயுட்காலத்தை வைத்துப் பார்க்கையில் அவை நிரந்தரம் தான். ஆனால் அவற்றிற்கும் ஒரு முடிவு காலம் உண்டு.
ஒளியவன் said...
ReplyDeleteமிகவும் அழகான பதிவுதான் அக்கா.
//
நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.
//
//
மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.
//
இந்த இரண்டு வரிகளுக்கும் முரண் தென்படுகிறது.
>>>>
ஆமாம் நானும் முதலில் அப்படி நினைத்தேன் கபீரன்பன் சொல்வதுபோல நம்காலத்தைவிட அவைகள் வாழும்காலம் அதிகம் அதற்குப்பிந்தான் வீழ்ச்சி ஆயினும் வானில் நட்சத்திரங்கள் என்றும் நிரந்தரம் சூர்யன் ஒருநட்சத்திரம் எனும் பொருளிலும் சொன்னேன் நன்றி கருத்துக்கு
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete51
இது தான் தம்பி மொய்ப் பின்னூட்டம்! :)
5:23 PM
>>>>மெய்யும்கூட தம்பி!
கபீரன்பன் said...
ReplyDelete//ஒளியவன் சொன்னது...
...இந்த இரண்டு வரிகளுக்கும் முரண் தென்படுகிறது. //
முரண்பாடு என்று கருத வேண்டிய அவசியம் இல்லை.
மனிதனின் ஆயுளை விட நட்சத்திரங்களின் ஆயுள் மிக நெடிதாதலின் நம் ஆயுட்காலத்தை வைத்துப் பார்க்கையில் அவை நிரந்தரம் தான். ஆனால் அவற்றிற்கும் ஒரு முடிவு காலம் உண்டு.
>>>>உண்மை கபீரன்பன் விளக்கத்துக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் அக்கா :)
ReplyDeleteஒன்னுமே புர்லேப்பா, நட்சத்திரம்ங்கிறாங்க, வானம்ங்கிறாங்க,இருந்தாலும் வாழ்த்த்க்கள்!!
ReplyDeleteஅன்பு ஷைலஜா குரு பெயர்ச்சி
ReplyDeleteமுன்னாலேயே நட்சத்திரமாக
மாறி என்னை மகிழ்த்து விட்டீர்கள் .... அத்துடன் நட்சத்திரக்கட்டுரையின் அழகோ அழகு ,,,மின்னுகிறது ...இரண்டு வில்லைகள் மை பா என் பங்கில் உங்கள் வாயில் போட்டுக்கொண்டால் நான் தின்னது போல் தான் வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்
Divine power always bless u shyalajacca to lead a very comfortable lifewith Good Health, Longer Life, Sufficient Wealth, Well Recognition and Wisdom.
ReplyDeleteTheergayusmaanbhava:
With Luv
A Co-Passenger
Raveendran Krishnasamy
Gokulan said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா :)
7:08 PM
>>நன்றி கோகுலன்
annaiyinarul said...
ReplyDeleteஅன்பு ஷைலஜா குரு பெயர்ச்சி
முன்னாலேயே நட்சத்திரமாக
மாறி என்னை மகிழ்த்து விட்டீர்கள் .... அத்துடன் நட்சத்திரக்கட்டுரையின் அழகோ அழகு ,,,மின்னுகிறது ...இரண்டு வில்லைகள் மை பா என் பங்கில் உங்கள் வாயில் போட்டுக்கொண்டால் நான் தின்னது போல் தான் வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்
9:42 PM
>>>அனையின் அருள் கிடைத்தது மகிழ்ச்சி விசாலம்மேடம்நன்றி வருகைக்குகருத்துக்கு
rishi said...
ReplyDeleteDivine power always bless u shyalajacca to lead a very comfortable lifewith Good Health, Longer Life, Sufficient Wealth, Well Recognition and Wisdom.
Theergayusmaanbhava:
With Luv
A Co-Passenger
Raveendran
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி ரிஷிரவி
வாழ்த்துக்கு நன்றி
வாழ்த்துக்கள் நட்சட்த்திரமே! மேன்மேலும் ஜொலித்து ஒளி வீச வாழ்த்துக்கள்!
ReplyDeleteமைதிலி
mynah said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நட்சட்த்திரமே! மேன்மேலும் ஜொலித்து ஒளி வீச வாழ்த்துக்கள்!
மைதிலி
>>>>>>>>>>>>>
வாங்க மைதிலி
குழுமம்ல சந்திச்சது நாம்
வாழ்த்துக்கு நன்றி
ரொம்ப லேட்டா வந்துட்டேன்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா!
மங்களூர் சிவா said...
ReplyDeleteரொம்ப லேட்டா வந்துட்டேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா!
12:28 AM
>>>>>.பரவால்ல சிவா நலமா?
நன்றி வரவுக்கு
நானும் வந்து வாழ்த்திக்கறேன் ஷைலஜா அக்கா:-)) போட்டு பின்னி பெடல் எடுங்க:-))) அடிக்கிற அடியிலே தாரை தப்பட்டை எல்லாம் கிழிஞ்சு தொங்கனும்ல்ல:-)))
ReplyDeleteஇப்படிக்கு
அபிஅப்பா
நல்லதொரு சாதனையாளர் நட்சத்திரமாவது குறித்து மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள்
நட்சத்திரமாய் வாழ்த்துக்கள் அக்கா!
ReplyDeleteநினா.கண்ணன்
Anonymous said...
ReplyDeleteநானும் வந்து வாழ்த்திக்கறேன் ஷைலஜா அக்கா:-)) போட்டு பின்னி பெடல் எடுங்க:-))) அடிக்கிற அடியிலே தாரை தப்பட்டை எல்லாம் கிழிஞ்சு தொங்கனும்ல்ல:-)))
இப்படிக்கு
அபிஅப்பா
3:23 PM
>>>>>வாங்க அபி அப்பா!! உற்சாகமான வாழ்த்துக்கு நன்றி ரொம்பவே ஆரவாரம் பண்ணிட்டுதான் இருக்கேன் நட்சத்ரவாரத்துல
தருமி said...
ReplyDeleteநல்லதொரு சாதனையாளர் நட்சத்திரமாவது குறித்து மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
>>>>>நன்றிதருமி
சாதனை அதிகம் செய்யவில்லை தருமி ...தங்களின் அன்புக்கு நன்றி
குட்டிப்பண்ணை said...
ReplyDeleteநட்சத்திரமாய் வாழ்த்துக்கள் அக்கா!
நினா.கண்ணன்
4:05 PM
''''நினாகண்ணன் வாங்க நன்றி வாழ்த்துக்கு