ஞாயிறே, நின்முகத்தைபார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது.
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் யுரேனஸ் நெப்டியூன் முதலிய பல நூறு வீடுகள்-இவை எல்லாம் நின் கதிர்கள்பட்ட மாத்திரத்திலேயே ஒளியுற நகை செய்கின்றன.
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர்.
இவற்றைக்காலம் என்னும் கள்வன் மருவினான்.
இவை ஒளிகுன்றிப்போயின, ஒளி இழந்தனவல்ல.குறைந்த ஒளியுடையவை.
ஒளியற்ற பொருள் சகத்தினிலே இல்லை.
இருள் என்பது குறைந்த ஒளி.
ஞாயிறு மிகச்சிறந்த தேவன்.
அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும்.
அவனையே மலர் விரும்புகின்றது
இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி இருக்கின்றன.
அவனை நீரும் காற்றும் நிலமும் உகந்து களியுரும்
அவனை வான் கவ்விக்கொள்ளும்.
அவனுக்கு மற்றெல்லாத்தேவரும் பணி செய்வர்.
அவன் புகழைப்பாடுவோம்!
அவன் புகழ் இனிது!
Tweet | ||||
அந்த ஞாயிறைத்தான் நாலுமாசமாத் தேடிக்கிட்டு இருக்கேன்.
ReplyDeleteஉடனே இங்கே அனுப்பினால் மகிழ்வேன்.
படம் அருமை.
ஞாயிறின் ஒளிமழையிலும் அதைப் பற்றிய பாரதியின் பாடலிலும் நனைந்தோம் மகிழ்ந்தோம். நன்றி.
ReplyDeleteஞாயிறைப் போற்றி நான் பாடிய பாடலும், நான் எடுத்த படங்களும்:
http://tamilamudam.blogspot.com/2008/08/pit.html
ஞாயிறின் சிறப்பு பற்றி ஒரு ஞாயிறின் பதிவு..(சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே :))
ReplyDeleteசில வருடங்களுக்கு முன்னால், கேட்ட பாடல் நினைவுக்கு வருது.. சுதா ரகுனாதன் “ஞாயிறே.. இருள் உனக்கு பகையோன்னு வரும் சரியா ஞாபகமில்லை.
துளசி கோபால் said...
ReplyDeleteஅந்த ஞாயிறைத்தான் நாலுமாசமாத் தேடிக்கிட்டு இருக்கேன்.
உடனே இங்கே அனுப்பினால் மகிழ்வேன்.
படம் அருமை.
9:52 AM
>>>>>>>வாங்கோ துள்சிமேடம்..ஞாயிறுதானே இருங்க சென்னைல யார்ட்டயாவது சொல்லி அனுப்பறேன் அவரு எங்க ஊருக்கும் இப்பல்லாம் அதிகம் வர்தில்லையே! படம் நல்லாருக்கா அதை தேர்ந்தெடுத்துதந்தவர் ஆயில்யன்!
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஞாயிறின் ஒளிமழையிலும் அதைப் பற்றிய பாரதியின் பாடலிலும் நனைந்தோம் மகிழ்ந்தோம். நன்றி.
ஞாயிறைப் போற்றி நான் பாடிய பாடலும், நான் எடுத்த படங்களும்:
http://tamilamudam.blogspot.com/2008/08/pit.html
3:15 PM
>>>>உங்க பாட்டும் படங்களும் பார்த்தேன் கலக்கல்!
Raghav said...
ReplyDeleteஞாயிறின் சிறப்பு பற்றி ஒரு ஞாயிறின் பதிவு..(சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே :)) >>>
சில வருடங்களுக்கு முன்னால், கேட்ட பாடல் நினைவுக்கு வருது.. சுதா ரகுனாதன் “ஞாயிறே.. இருள் உனக்கு பகையோன்னு வரும் சரியா ஞாபகமில்லை.
5:47 PM>>>>>எனக்கும் நினைவில்லையே ராகவ்.நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஊருக்கு வந்தாச்சா?
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!
ReplyDeleteபிகு:
ஞாயிறுக்கு ரவி-ன்னு பேர் இருக்கு! அதை மறக்கக் கூடாது! எங்கே இப்போ அந்த போற்றுதும் பாட்டை மாத்திப் பாடுங்க! :))
அருமை ;)
ReplyDeletekannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!
பிகு:
ஞாயிறுக்கு ரவி-ன்னு பேர் இருக்கு! அதை மறக்கக் கூடாது! எங்கே இப்போ அந்த போற்றுதும் பாட்டை மாத்திப் பாடுங்க! :))
1:28 AM
<<<<<<<<<<<<<<<<<<<
ராகவ்கிட்ட சொல்றேன்!!