Social Icons

Pages

Thursday, November 06, 2008

வெள்ளைப்புறா ஒன்று வியாழனில் சொல்லும் சேதி இது!

ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோபுரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

கோபுரங்களில் தங்கி இருந்த வெள்ளைப்புறாக்கள் எல்லாம் அருகிலிருந்த ஒருமரத்தில் .
போய்தங்கிக்கொண்டன.

கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லாம் மீண்டும் கோபுரத்திற்கு வந்துவிட்டன.

அன்று ஒரு நாள் பிரதான சாலையில் கலவரம் ஏற்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

இதைப்பார்த்தகுஞ்சுப்புறா,"கீழே என்ன நடக்கிறது?' என்று தன் தாயிடம்கேட்டது.


அதற்கு தாய்ப்புறா," மதக்கலவரம் நடக்கிறது" என்றது.

"கலவரம்னா என்ன?"

"அதாவது இப்போ நாம் தங்கி இருக்கோமே இது இந்துக்களின்கோயில். சிலநாள்முன்புதங்கி இருந்தது இஸ்லாமியர்க்ளின் தொழுகைமசூதி .அதற்குமுன் நாம் இருந்தது கிறிஸ்துவர்களின் வழிபாட்டுதலமான சர்ச்.அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுக்குள்ளே கருத்துவேற்றுமை வந்து அடித்துககொள்கிறார்கள் அதுதான் கலவரமாகி-சண்டையாகி- இருக்கிறது"

"அப்படியா நாம் ஏன் மூன்று இடங்களில் தங்கினாலும் அடித்துக்கொள்வதில்லை?
சண்டைபோட்டுக்கொள்வதில்லை?"


"அதனால்தான் நாம் உயரத்தில் இருக்கிறோம் மனிதர்கள்கீழே இருக்கிறார்கள் " என்றது தாய்ப்புறா.

24 comments:

  1. ஜூப்பர்!

    ReplyDelete
  2. தவறு!
    கிடைத்த இடத்தில் தங்கி தன் சுகம் தேடிய இவைகள் எமக்கு உதாரணம் ஆக முடியாது!

    இந்த மடம் இல்லையின்னா சந்தைமடம் என்னும் மக்கள் இருக்கும்வரை இதுதான் நிகழும்!

    ReplyDelete
  3. நன்றாக இருந்தது.

    ReplyDelete
  4. நல்ல கதையா இருக்கே.. :)

    ReplyDelete
  5. அடிக்கடி விஜய் டிவி பார்ப்பீங்களோ!
    தமிழ்ப்பேசு எங்கள்மூச்சு நிகழ்ச்ச்சியில் இதைக் கேட்டேன்!:))

    ReplyDelete
  6. அருமையான கதை. என் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப் போறேன். இந்தக் கதையை. அவர்கள் சாயங்காலம் தான் வருவாங்க.

    அதுவரையில் பொறுமை இல்லை.

    நன்றிங்க

    ReplyDelete
  7. ////"அதனால்தான் நாம் உயரத்தில் இருக்கிறோம் மனிதர்கள்கீழே இருக்கிறார்கள் " என்றது தாய்ப்புறா.////

    அந்தப் பறவைகளைப் பார்த்துவிட்டுத்தான் கவியரசர் இந்தப் பாடலை எழுதினார்

    "அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்!
    இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்!"

    ReplyDelete
  8. துளசி கோபால் said...
    good
    >>>>thankyou!

    ReplyDelete
  9. கவிநயா said...
    ஜூப்பர்!

    9:10 AM
    >><<<<
    நன்றிகவின்

    ReplyDelete
  10. VSK said...
    தவறு!
    கிடைத்த இடத்தில் தங்கி தன் சுகம் தேடிய இவைகள் எமக்கு உதாரணம் ஆக முடியாது!

    இந்த மடம் இல்லையின்னா சந்தைமடம் என்னும் மக்கள் இருக்கும்வரை இதுதான் நிகழும்!

    9:28 AM
    >>>>>முதல்ல புறா பேசுமா?

    ச்சும்மா ஒருகதையா சொல்றது எதுக்கு அவைகளைப்பார்த்து ஒற்றுமையை நாமும் வளர்த்துக்கணும் என்பதற்கு..உண்மைல போனவாரம் காஞ்சீபுரம்போனப்போ 108திவ்யதேசத்தில் ஒருகோயில் ஒன்றும் அதன் அருகில் மசூதியும் நெருக்கமாய் இருந்தது நடுவில் ஒரேஒரு காம்பவுண்ட் தான் அங்கெருந்து புறாக்கள்பறந்து இங்க கோயிலுக்கும் வந்து தானியங்களைகொத்தித்தின்று போயின கண்ணாலபார்த்தேன் உடனே எப்போவோ படிச்ச இந்தக்கதைநினைவுக்கு வந்தது இங்க பதிவிட்டேன் விஜய் டிவி ல பாக்லயே!

    ReplyDelete
  11. தமிழ்நெஞ்சம் said...
    அருமையான கதை. என் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப் போறேன். இந்தக் கதையை. அவர்கள் சாயங்காலம் தான் வருவாங்க.

    அதுவரையில் பொறுமை இல்லை.

    நன்றிங்க

    10:58 AM
    >>>நன்றி தமிழ்நெஞ்சம் நானும் எங்கோபடிச்சதைதான் பகிர்ந்துட்டேன்

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு கதை...:)

    ReplyDelete
  13. // VSK said...
    தவறு!
    கிடைத்த இடத்தில் தங்கி தன் சுகம் தேடிய இவைகள் எமக்கு உதாரணம் ஆக முடியாது!//

    இது அதை விட மிகப் பெரிய தவறு!
    இந்த மடம் இல்லையின்னா சந்தைமடம் என்னும் மக்கள் இருக்கத் தான் செய்வார்கள். அதனால் தான் அவர்கள் மக்கள்!
    அவர்களுக்குத் திருப்புகழ் தெரியாது! திருப்புகழ் தெரிந்தவர்கள் தான் புகழ் ஓதி அவர்களை ஆட்கொள்ள வேண்டும். அநுபூதியால் அணைத்திட வேண்டும்!

    ReplyDelete
  14. மிகவும் நல்ல கதை-க்கா!
    புறாக்கள் தெய்வங்களைக் காப்பதில்லை!
    அதான் தெய்வம் புறாக்களைக் காக்கிறது!

    தெய்வம் தன்னைக் காக்கும் என்பது போய்,
    தான் தான், தன் தெய்வத்தையே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலவரங்கள் தோன்றுகின்றன!

    இந்தக் கல-வரம், சிந்தையில் கலவா வரமாக இறைவன் அருளட்டும்!

    ReplyDelete
  15. //காஞ்சீபுரம்போனப்போ 108திவ்யதேசத்தில் ஒருகோயில் ஒன்றும் அதன் அருகில் மசூதியும் நெருக்கமாய் இருந்தது நடுவில் ஒரேஒரு காம்பவுண்ட் தான்//

    எந்தக் கோயில்-க்கா?

    //அங்கெருந்து புறாக்கள்பறந்து இங்க கோயிலுக்கும் வந்து தானியங்களைகொத்தித்தின்று போயின கண்ணாலபார்த்தேன்//

    சூப்பர்.
    புறாக்கள் மசூதியில் இருந்து எடுத்த வந்த தானியமும் இங்கு நிவேதனத்தில் சேரட்டூம்!

    ReplyDelete
  16. அருமையான கதைக்கா ;)

    ReplyDelete
  17. நல்ல கதை...
    புறாக்கள் தெய்வங்களைக் காப்பது இல்லைங்கறது ரொம்ப நல்ல விளக்கம்.. கே ஆர் எஸ். :)

    ReplyDelete
  18. அருமை அருமை.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  19. 8:57 PM
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    மிகவும் நல்ல கதை-க்கா!
    புறாக்கள் தெய்வங்களைக் காப்பதில்லை!
    அதான் தெய்வம் புறாக்களைக் காக்கிறது!

    தெய்வம் தன்னைக் காக்கும் என்பது போய்,
    தான் தான், தன் தெய்வத்தையே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலவரங்கள் தோன்றுகின்றன!

    இந்தக் கல-வரம், சிந்தையில் கலவா வரமாக இறைவன் அருளட்டும்!

    9:00 PM >>>>சரியா சொன்னீங்க ரவி

    கலவரம் கலவாவரம்!! வார்த்தைகள் அழகு!

    ReplyDelete
  20. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //காஞ்சீபுரம்போனப்போ 108திவ்யதேசத்தில் ஒருகோயில் ஒன்றும் அதன் அருகில் மசூதியும் நெருக்கமாய் இருந்தது நடுவில் ஒரேஒரு காம்பவுண்ட் தான்//

    எந்தக் கோயில்-க்கா?

    //9:02 PM?><>>>>>காஞ்சில ஒரேநாள்ள 12 திவ்யதேசதரிசனக்கோயில் போகவேண்டிவந்தது.... இந்தக்கோயில் பாண்டவ்தூதப்பெருமாள் கோயில் என நினைக்கிறேன் காஞ்சிமக்கள் இதை உறுதி செய்து சொல்லவும் நன்றி

    கோயிலும் மசூதியும் அருகருகே இருப்பது உறுதி!

    >>>>

    ReplyDelete
  21. கோபிநாத் said...
    அருமையான கதைக்கா ;)

    7:03 AM
    >>>>>>நன்றி கோபி

    ReplyDelete
  22. முத்துலெட்சுமி-கயல்விழி said...
    நல்ல கதை...
    புறாக்கள் தெய்வங்களைக் காப்பது இல்லைங்கறது ரொம்ப நல்ல விளக்கம்.. கே ஆர் எஸ். :)

    10:47 AM
    >>>>>கே ஆர் எஸ் இப்படி அழகாய் சொல்வது எப்போதும் வழக்கம்

    ReplyDelete
  23. ராமலக்ஷ்மி said...
    அருமை அருமை.

    பாராட்டுக்கள்!

    11:47 AM



    >>>>>>மிக்க நன்றி ராமலஷ்மி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.