//முன்குறிப்பு..உப்புமா பதிவென்று இதை ஒதுக்கிடாதீங்க!!!//
நம்ம தங்கத்தமிழ் நாட்டுல பல சிற்றுண்டிகள் இருந்தாலும் உப்புமா என்ற சங்ககால(எந்த சங்கம்னு கேட்டால் எங்க மாதர்சங்கம்னு சொல்லி சமாளிச்சிடுவேன்:))) சிற்றுண்டியின் மறுபெயர் ஆபத்பாந்தவன். இன்னொரு செல்லப்பெயர் நிலையவித்வான்(வானொலில வேறபாடகர்நிகழ்ச்சி ஏதுமில்லைன்னஅவசரத்துக்கு டக்குனு நிலையத்துக்காரங்க பாடினது வாசிச்சதை வச்சி சரிக்கட்டுவாங்க.அதனால யாராவது திடிர்னு வீட்டுக்குவந்தாசட்டுனு செய்யக்கூடிய டிபன் என்பதால் இந்தப்பேரு:)
பெங்களூர்ல இதற்கு காராபாத் என்றுபெயர். ஹோட்டலில் அழகாய் கப்பில் கொட்டி அதையே தட்டில் சின்னக்குன்றுமாதிரி கவிழ்த்து உச்சியில் தக்காளியைவட்டமாய் கட் செய்து கண்ணைக்கவரும் விதமாய் கொடுப்பாங்க..வடக்கில் கிச்சடின்னு பேரோ?
அவசரத்துக்கு சட்டுனு செய்யலாம்னு இதைப்புகழ்ந்துகிட்டே கொஞ்சம் அலட்சியமா செய்தோம்னு வைங்க அவ்வளவுதான் நம்மை ஏமாத்திடும.
உப்புமாக்கு எதுக்கு இந்தப்பேர்வந்திருக்கும்னு யோசிச்சிபாத்தா எவ்வளவோ கவனமாபார்த்துப்பார்த்துபோட்டாலும் இதுல உப்பு இருக்கே அது ஒண்ணு கம்மியாகும் ,இல்ல அதிகமாகும். அதனால் இந்த சிற்றுண்டிக்கு உப்பு போடறப்போ,
" உப்பு.... மா கவனமாபாத்துப்போடுமா"ன்னு யாரோ எச்சரிச்சிருப்பாங்க... காலப்போக்கில் அதுவே உப்புமா ஆகி இருக்கலாம். சிலர் உப்மா என்கிறார்கள்
உப்புமாக்குவிடும் தண்ணீர் அதிகமானால் அது உப்புபோட்ட, ரவாபாயசமாய் ஆகிடும்,ஸ்பூன்போட்டு கொடுத்துடவேண்டியதுதான்....அப்படியே சாப்பிடுங்கன்னும் சொல்லலாம்!
நீர்கம்மியாச்சுன்னு வைங்க உப்புமா, கல்லு உருண்டைதான்.
!
இந்தமாதிரி கல்லான உப்புமாவை ஆடுமாடுகள்,தோட்டத்தில் மேய்ந்தால்' சூ போபோன்'னு விரட்ட உபயோகிக்கலாம்!
தபாலை ஒட்டவீட்ல பசைஇல்லென்னா காதலாகிக் கசிந்துகுழைந்த உப்புமா உதவலாம்!
ஒருமுறை கல்யாணமான புதிதில்நான் செய்த ரவா உப்புமா எப்படி வந்தது தெரியுமா?:)
உப்புமாவாகவுமில்லாமல்,பாயசமாகவும் இல்லாமல் இருந்தது.
சாப்பிட விருந்தினர் ஒருவர் அதை சாப்பிட்டு,பின் வாயைத்திறக்கமுடியமால்,மூடவும்முடியாமல் கம்முனு இருந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது, அன்றைய உப்புமா கம்(gum) அதாவது பசைபோலாகி அவரை வாயடைக்க வைத்துவிட்டதென!!.அப்புறம் அவர் வீடுபக்கம்வருவதேஇல்லை.
உப்புமாக்கள்பலரகம்.!
அவுல், அரிசி .ஜவ்வரிசி .ரவை .சேமியா, ப்ரெட் என்று விதவிதமா இருக்கு!
அரிசிஉப்புமாவும் சுட்டகத்திரிக்காய்ய்புளிகொத்சும்.,
ரவா உப்புமாவும் தேங்காசட்னியும்,
சேமியாஉப்புமாவும் தக்காளிசட்னியும்...
நல்லகாம்பினேஷன்ஸ்.
மற்ற உப்புமாக்கள் இதற்குப்பின்னே க்யூவில் நிற்கின்றன.
உப்புமா கொழுக்கட்டை தெரியுமா?மிஞ்சின உப்புமாலயும் நைசா தேங்கா திருவிப்போட்டு
கொழூக்கட்டை வடிவத்துல பிடிச்சி ஆவிலவச்சி எடுக்கலாம்.புளி உப்புமா என அரிசிமாவில் வண்டி எண்ணைவிட்டு செய்யலாம்.
உப்புமா டிப்ஸ் ...
ரவாஉப்புமா செய்யறப்போ நெய்விட்டு வறுக்கணும், ஓவரா சிவப்பா வறுத்தா அப்றோம் அது தான் வறுபட்டதைக்காட்டிக்கொடுத்து நம்காலைவாரிடும். நல்ல பொன்மகள்நிறத்துல வறுக்கணும் அப்போதான் பொலபொலன்னு உதிர்ந்து வரும்.
பாதிஅளவுக்கு நீருக்குபதில்மோர் சேர்த்து கடசில கொத்தமல்லி இலை கேரட் துருவல் ஓரமம தூவி, ட்ரெஸ் பண்ணிங்கன்னா அவ்ளோதான் ஒன்ஸ்மோர் கேட்பாங்க!
அரிசிஉப்புமாக்கு லேசாலேசாதேங்கா எண்ணை விட்டா கேரளாவரைக்கும் மணக்கும்.
சேமியாஉப்புமாக்கு சேமியாவைவறுத்து வச்சதும் பச்சதண்ணீலகழுவணுமாம் அப்போதான் ஒவ்வொருசேமியாகுச்சியும் மாமியார்மருமகளா இருக்குமாம்!
காய்கறிகள் நிறைய உப்புமால சேர்த்தாலே தனி ருசிதான். என்னங்க,
உப்புமா விவரம் உப்பு சப்பில்லாம இலையே!?:) அடுத்து வருது இணையப்புகழ் மைபா!!!
உப்புமா, மா மா மா மா மா, மா மா மா மா மா?
Tweet | ||||
நட்சத்திரவாரத்துக்கு ஒரு உப்புமாவை வச்சு ஒப்பேத்திறலாமுன்னு.........
ReplyDeleteபடத்தைப் பெருசாக்கிப் பார்க்கும்படி ஆச்சு, அதென்ன பச்சையா ஒன்னு உப்புமாலே ஓரமா நிக்குதுன்னு!!!!
//துளசி கோபால் said...
ReplyDeleteநட்சத்திரவாரத்துக்கு ஒரு உப்புமாவை வச்சு ஒப்பேத்திறலாமுன்னு.........
படத்தைப் பெருசாக்கிப் பார்க்கும்படி ஆச்சு, அதென்ன பச்சையா ஒன்னு உப்புமாலே ஓரமா நிக்குதுன்னு!!!!
//
கேரட்
தக்காளி
கறிவேப்பிலை
இதுங்களுக்குள்ள இருக்கற உப்புமா அது இருக்கற அந்தகண்ணாடி கப்பு இப்படி எல்லாம் ஈசியா கண்டுபிடிச்சிட்டாலும் கூட ஓரமா ஒய்யாரமா நிக்கிற ஐட்டத்தை மட்டும் கண்டுபுடிக்க முடியல :((
நானும் கூட ரவா உப்புமா செய்யமுயன்று ரவா கஞ்சியாக்கியோ அல்லது ரவா உருண்டைகளாகவோ செஞ்சு தின்னு சாதிச்சிருக்கேன் :)))
தினமும் அக்கிழமையின் பெயரை தலைப்பில வைத்து கலக்கிட்டீங்க அக்கா, பாராட்டுக்கள்!
ReplyDeleteசனிக்கிழமையிலை மட்டும், 'கிழமை'யை விட முடியலை பாருங்க!
:-(
யக்கா.. ஏன்க்கா உப்புமாவை காட்டி பயமுறுத்துறீங்க..
ReplyDeleteபொகு கலத்திற்கு முன்பு.. நான் கல்லூரியில் கட்டிளங் காளையாக N.C.C யில் இருந்த நேரம்.. 21 நாள் பயிற்சிக்காக கேரளா சென்றிருந்தேன்..
21 நாளும் காலை உணவு.. உப்புமா.. அதுவும் 900 பேருக்கு செய்யும் உப்புமா எப்படி இருக்கும் என்று சற்று படிப்பதை நிறுத்தி விட்டு யோசியுங்கள்..
அன்று எடுத்த சபதம் இன்று வரை உப்புமாவை தொட்டது கூட இல்லை..
தயவு செய்து.. என் சபதத்தை மீறி.. உங்கள் உப்புமாவை சாப்பிட இன்று என்னை அழைக்காதீர்கள்.. :)
ReplyDeleteஉப்புமாவின் அவதாரங்கள் சுவாரஸ்யம். கடைசில் வழங்கியிருக்கும் டிப்ஸுக்கு நன்றிகள்.
ReplyDeleteதுளசி கோபால் said...
ReplyDeleteநட்சத்திரவாரத்துக்கு ஒரு உப்புமாவை வச்சு ஒப்பேத்திறலாமுன்னு.........
படத்தைப் பெருசாக்கிப் பார்க்கும்படி ஆச்சு, அதென்ன பச்சையா ஒன்னு உப்புமாலே ஓரமா நிக்குதுன்னு!!!!
1:26 PM
>>>>>>>வாங்க .......பச்சையா உப்புமா ஓரத்துல நிக்கறது பச்சைமிளகாயா இருக்கும் துள்சிமேடம்!!! உப்புமாவோட இல்ல மைபாவோடதான் முடிக்கப்போறேன்!!
ஆயில்யன் said...
ReplyDelete//துளசி கோபால் said...
நட்சத்திரவாரத்துக்கு ஒரு உப்புமாவை வச்சு ஒப்பேத்திறலாமுன்னு.........
படத்தைப் பெருசாக்கிப் பார்க்கும்படி ஆச்சு, அதென்ன பச்சையா ஒன்னு உப்புமாலே ஓரமா நிக்குதுன்னு!!!!
//
கேரட்
தக்காளி
கறிவேப்பிலை
இதுங்களுக்குள்ள இருக்கற உப்புமா அது இருக்கற அந்தகண்ணாடி கப்பு இப்படி எல்லாம் ஈசியா கண்டுபிடிச்சிட்டாலும் கூட ஓரமா ஒய்யாரமா நிக்கிற ஐட்டத்தை மட்டும் கண்டுபுடிக்க முடியல :((
நானும் கூட ரவா உப்புமா செய்யமுயன்று ரவா கஞ்சியாக்கியோ அல்லது ரவா உருண்டைகளாகவோ செஞ்சு தின்னு சாதிச்சிருக்கேன் :)))
3:10 PM
>>>ரண்டி ஆயில்யன்காரு! அதெல்லாம்கஷ்டப்படாதிங்க அந்த ஒய்யார ஐட்டம் காய்கறி ஐட்டம்தான்.,உங்க உப்புமா அனுபவமும் இப்படித்தானா?:) நன்றி வருகைக்கு
ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteதினமும் அக்கிழமையின் பெயரை தலைப்பில வைத்து கலக்கிட்டீங்க அக்கா, பாராட்டுக்கள்!
சனிக்கிழமையிலை மட்டும், 'கிழமை'யை விட முடியலை பாருங்க!
:-(
3:46 PM
>>>ஆமா ஜீவா வெறும் சனின்னு சொன்னா நம்மை அஷ்டமத்துல பிடிச்சிடும்னு பயம்தான்!!! நன்றி வருகைக்கு
Raghav said...
ReplyDeleteயக்கா.. ஏன்க்கா உப்புமாவை காட்டி பயமுறுத்துறீங்க..>>>
உப்புமாவை செய்யறபடி செஞ்சா வாம்மா வாம்மானு அழைக்கும்மா!
//பொகு கலத்திற்கு முன்பு.. நான் கல்லூரியில் கட்டிளங் காளையாக N.C.C யில் இருந்த நேரம்.. ///
>>>>
நோட் திஸ் பாயிண்ட் கேஆர் எஸ் மௌலி...இன்னமும் தன்னைபாலகனா சொல்லித்திர்யும் ராகவ்வை இங்க கண்டுக்குங்க!!
/21 நாள் பயிற்சிக்காக கேரளா சென்றிருந்தேன்..
21 நாளும் காலை உணவு.. உப்புமா.. அதுவும் 900 பேருக்கு செய்யும் உப்புமா எப்படி இருக்கும் என்று சற்று படிப்பதை நிறுத்தி விட்டு யோசியுங்கள்..
அன்று எடுத்த சபதம் இன்று வரை உப்புமாவை தொட்டது கூட இல்லை..///
அதுசரி இப்படி தோள் கண்டார் தோளேகண்டார்னு சாப்பிட்டா சக்கரைப்பொங்கலும் சப்பாத்திக்குருமாவுமே போர் அடிக்குமே!!!
3:50 PM
Raghav said...
ReplyDeleteதயவு செய்து.. என் சபதத்தை மீறி.. உங்கள் உப்புமாவை சாப்பிட இன்று என்னை அழைக்காதீர்கள்.. :)
3:52 PM
>>>ஏன் இப்படி தெனாலிராமன் பூனைமாதிரி ஒரு அலறல்??:) வந்து சாப்ட்டு சொல்லுராகவ்!
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஉப்புமாவின் அவதாரங்கள் சுவாரஸ்யம். கடைசில் வழங்கியிருக்கும் டிப்ஸுக்கு நன்றிகள்.
4:14 PM
>>நன்றி ராமலஷ்மி..ஆக
உப்புமாபதிவா இல்லையே?:):)
ஷைலூ,
ReplyDeleteஅட! இப்பெல்லாம் எலுமிச்சம் காய்(பழம்) பெயர் மாறிப்போச்சா பச்சை மிளகாய்ன்னு.
சொல்லவே இல்லை.......!
அதெல்லாம் ஓட்டல்ல வச்சுப் படிமாறுவாங்களே அது துளசி:)
ReplyDeleteஅது பச்ச மிளகாயா??
ஷைல்ஸ் உங்க உப்புமா வாசம் ஜகமெங்கும் வீசுதுப்பா.
துளசி கோபால் said...
ReplyDeleteஷைலூ,
அட! இப்பெல்லாம் எலுமிச்சம் காய்(பழம்) பெயர் மாறிப்போச்சா பச்சை மிளகாய்ன்னு.
சொல்லவே இல்லை.......!
2:18 AM
>>>>அச்சச்சோ எலுமிச்சையை பச்சைமிளகான்னு எதோஞாபகத்துல சொல்லிட்டேனா டீச்சர் தப்புதப்பு பெஞ்ச் மேல ஏறிடவா?:):)
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஅதெல்லாம் ஓட்டல்ல வச்சுப் படிமாறுவாங்களே அது துளசி:)
அது பச்ச மிளகாயா??>>>
இல்ல வல்லிமா நாந்தான் உணர்ச்சிவசப்பட்டு உப்புமாபதிவுல உளறிட்டேன்:):)
//ஷைல்ஸ் உங்க உப்புமா வாசம் ஜகமெங்கும் வீசுதுப்பா.///
உப்புமாவுக்கும் ஒரு வாசம் உண்டு கண்டதுண்டா ஜகத்தினில்னு பாடிட்லாமா வல்லிமா? நன்றி ரொம்ப.
6:03 AM
உப்புமாவுக்கு தொட்டுக்க என்ன?
ReplyDeleteஒன்னுமே தராத நட்சத்திர அக்காவுக்கு கடும் கண்டனங்கள்! :))
//ஒன்ஸ்மோர் கேட்பாங்க!// பின்ன மோர் உப்புமான்னா, ஒன்ஸே போதும்னு... ஹிஹி.
ReplyDeleteஉப்புமான்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள காத தூரம் ஓடிடுவேன். இணையம்கறதால தைரியமா படிச்சேன்:-)
நட்சத்திர வார வாழ்த்துகள். (கொஞ்சம் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா).
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஉப்புமாவுக்கு தொட்டுக்க என்ன?>>>
ஹலோ எந்தெந்த உப்புமாக்கு என்னென்ன சட்னிகள் தொட்டுக்கனு பட்டியல்போட்ருக்கேனே நீங்க கனவுல பாவ்னாகூட உலா போயிட்டு இதை சரியாபடிக்கல போல?:):)
//ஒன்னுமே தராத நட்சத்திர அக்காவுக்கு கடும் கண்டனங்கள்! :))//
கண்டனங்கள்?கண்டு அணங்குகள்?:) என்னவோ நடக்குது இருக்கட்டும்!
1:22 AM
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDelete//ஒன்ஸ்மோர் கேட்பாங்க!// பின்ன மோர் உப்புமான்னா, ஒன்ஸே போதும்னு... ஹிஹி.
உப்புமான்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள காத தூரம் ஓடிடுவேன். இணையம்கறதால தைரியமா படிச்சேன்:-)
நட்சத்திர வார வாழ்த்துகள். (கொஞ்சம் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா).
7:12 AM
>>வாங்க கெக்கேபிக்குணி ஆமா என்ன பேருஇது?:) என்ன காரணம் இதை நீங்க சூட்டிக்கொள்ள?:) நன்றி லேட்டஸ்டாவந்தாலும் ஜோராகருத்து சொன்னதுக்கு.
//நீங்க கனவுல பாவ்னாகூட உலா போயிட்டு...//
ReplyDeleteநெசமாவாச் சொல்றீங்க?
அப்பப் போட்டுக் கொடுக்க வேண்டியதுதான்.
அதுவும் ஒரு ரெண்டுவயசுச் சின்னப் பிஞ்சுகிட்டே:-)
//என்ன காரணம் இதை நீங்க சூட்டிக்கொள்ள?:)// http://kekkepikkuni.blogspot.com/2006/08/blog-post.html
ReplyDelete//உப்புமா, மா மா மா மா மா, மா மா மா மா மா? //
ReplyDeleteஉப்புமா பத்துமா ? பத்தும் !!
காரணம் நீங்களே சொல்லிட்டீங்களே !
//சாப்பிட்டு,பின் வாயைத்திறக்கமுடியமால்,மூடவும் முடியாமல் கம்முனு இருந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது, அன்றைய உப்புமா கம்(gum) அதாவது பசைபோலாகி அவரை வாயடைக்க வைத்துவிட்டதென!! //
:))))
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDelete//என்ன காரணம் இதை நீங்க சூட்டிக்கொள்ள?:)// http://kekkepikkuni.blogspot.com/2006/08/blog-post.html
8:55 AM
>>>>>>புரிஞ்சிக்கிட்டேன்!!!
கபீரன்பன் said...
ReplyDelete//உப்புமா, மா மா மா மா மா, மா மா மா மா மா? //
உப்புமா பத்துமா ? பத்தும் !!
காரணம் நீங்களே சொல்லிட்டீங்களே !
//சாப்பிட்டு,பின் வாயைத்திறக்கமுடியமால்,மூடவும் முடியாமல் கம்முனு இருந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது, அன்றைய உப்புமா கம்(gum) அதாவது பசைபோலாகி அவரை வாயடைக்க வைத்துவிட்டதென!! //
:))))
1:27 PM
<<>>>>..10 மா போட்டதை கண்டுபிடிச்ச கபீரன்பனுக்கு என்ன பரிசுதரலாம்?