Social Icons

Pages

Saturday, November 01, 2008

இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி..

எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!
எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!
மரங்கள் இருந்தால்..?சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதியகவிதை இது.

மரங்கள் இருந்தால் என்றுமுடிக்கிற போது அந்தச்சிறுமியின் கவலை நமக்குப்புரிகிறது.

"மரம் செடிகொடி சுத்தமான நீர் காற்று என்று
வருங்காலக்குழந்தைகளுக்கு நாம் அனுபவித்த இயற்கைசெல்வத்தை அப்படியே விட்டுப்போகப்போகிறோமா இல்லையா நாம்?" என்னும் விடைதெரியாத கேள்வியும் எழுகிறது.

காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் அடங்கிய இயற்கை, மனிதன் இல்லாமல் வாழ்ந்துவிடும். ஆனால் மனிதனால்தான் இயற்கை இல்லாமல் வாழமுடியாது.

தண்ணீரும் காற்றும் உணவுமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லையே.

ஒருபக்கம் மரங்களைவெட்டுகிறோம்.
இன்னொருபக்கம் மலைகளை இடிக்கிறோம்
காற்றை மாசுபடுத்தி பிராணவாயுவை அழித்துவருகிறோம்.

'க்லூரோஃப்ளூரோ கார்பன்' என்னும் ரசாயனபுகையை நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் புகையூட்டும்கருவிகள் இன்னபிற சாதனங்கள் வெளிவிடுவதால் இது விண்வெளியை அடைந்து ஓசோனைப்பெரிதும் அழித்துக்கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களை ஓரளவு உபயோகத்திலிருந்து குறைத்துக்கொண்டுவிட்டாலும் முற்றிலும் நாம் அதை அழித்துவிரட்டவில்லை.

மெல்லமெல்ல நாம் இழக்கும் பொகிஷங்கள்தான் எத்தனை?

கார்ல்மார்க்சின்
எதை நீ இழந்தாலும் அதன் மதிப்பு இரண்டாகிவிடுகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?

' இதற்கு நான் மட்டும்என்ன செய்வது இது நாட்டின் பிரச்சினையல்லவா?' என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்து செயல்படுத்த மட்டுமல்ல செயலுக்கான எண்ணங்களுக்கே இடம்கொடுக்க தவறுகிறோம்.

ஒருகதை உண்டு, இது பலருக்குத் தெரிந்தகதைதான் ஆனாலும் இங்கே கொஞ்சம் நினைத்துப்பார்க்கலாம்.

வானத்தில் மேகம் ஒன்று உலா போய்க்கொண்டிருந்தது.மேலிருந்தபடியே கீழே பூமியை
பார்த்துக்கொண்டே வந்த மேகம் அங்கே வயலக்ளில் பயிர்கள் எல்லாம் பரிதாபமாய் வாடி இருப்பதை கவனித்து கவலைகொண்டது.

இன்னும் உற்றுப்பார்த்தபோது செடிகொடிகள் எல்லாம் 'தாகம்!தாகம்! தண்ணீர்! தண்ணீர் 'என கூக்குரலிடுவதுபோல உணர்ந்தது.

உடனே பயிர் செடிகொடிகளுக்கு உதவ நினைத்த மேகம் நகர்ந்துபோய்க்கொண்டிருந்த தென்றலை அழைத்து,'எப்படியாவது இவைகளின் உயிரைக்காப்பாற்றேன்' எனக்கேட்டுக்கொண்டது.


தென்றல் அலட்சியமாய்' ஆகட்டும்பார்க்கலாம்' எனசொல்லிப்போனது.

சற்றுதூரத்தில் நகர்ந்துகொண்டிருந்த நதியினைக்கேட்டது.

அதுவும் ,'நிற்க நேரமில்லை எனக்கு நானே ஓடிக்கொண்டிருக்கிறேனே' எனப் போனது.

மலையிடம் கெஞ்சவும் அது,' நான் இங்கிருந்தபடியேதான் பார்க்கமுடியும்' என்றது.

பயிர்களின் பரிதாபக்குரல் மேகத்தின்காதுகளில் விழுந்து அது துடித்தது.

"ஐயோ நீர் வேண்டித்தவிக்கிறதே எல்லாம்,யாருமே உதவத்தயாராய் இல்லையே?" என்று மனம் வாடியது.

பிறகு அதுவே," உதவநினைகக்ணும் என்றால் நாமேதான்அந்தச்செயலை செய்யத்தயாராக்ணும் "என்றுதீர்மானிக்கிறது.

உடனே அது மேலே உயர்ந்தது.

குளிர்ச்சி அடைந்தது.

தன் அழகான் பஞ்சுப்பொதி உடல்கரைவதைப்பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக்காப்பாற்றுகிறோம் என்னும் மகிழ்ச்சிநிறைவில் தான் கரைந்துமரணத்தை தழுவிக்கொண்டு மழையைபூமிக்குஅளித்து மறைந்தது.


நாம் மேகமாய் மாறமுடியாவிட்டாலும் மனிதனாய் நம் எண்ணங்களை உயர்த்தி சின்னசின்ன செயல்களில் நமது அக்கறைகளை ஆரம்பித்து இயற்கைவளத்தைக்காபபற்றலாமே?

மரங்கள் வெட்டுவதை தடுப்போம்
மணல்கொள்ளையை தடுப்போம்

எரிசக்தியை சேமிப்போம்

வீட்டில் அவசியமின்றி எரியும் மின்விளக்கை
வீணாக்கும்குழாய்நீரை கவனிப்போம்
பிளாஸ்டிக்கின் உயோகத்தைநிறுத்துவோம்.


ஆடம்பரவிழாக்களில் அதிகம் மின் சக்திவீணாவதைக்குறைப்போம்
மழைநீரை சேமிக்கப்பழகுவோம்
மூலப்பொருட்களைபாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவோம்
ஓசோனில் விழுந்திருக்கும் ஓட்டையை தனது இதயத்தில் விழுந்த ஓட்டையாக நாம் நினைத்துக்கொண்டால் இயற்கையை எப்படியாவது பாதுகாத்துவிடுவோம்.


பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.
*********************************************

18 comments:

 1. மனதைத்தொடும் கட்டுரை!
  அசத்தலான தலைப்பு!
  பாராட்டுக்கள் சகோதரி!
  கலக்குகிறீர்கள்!
  தொடர்ந்து கலக்குங்கள்

  கீதம், சங்கீதம் - எப்போது?

  ReplyDelete
 2. SP.VR. SUBBIAH said...
  மனதைத்தொடும் கட்டுரை!
  அசத்தலான தலைப்பு!
  பாராட்டுக்கள் சகோதரி!
  கலக்குகிறீர்கள்!
  தொடர்ந்து கலக்குங்கள்

  கீதம், சங்கீதம் - எப்போது?

  7:33 AM>>>>>நன்றி சுப்பையா ஸார்
  சுற்றுபுற சூழ்நிலைக்கவலையில் எழுந்த கட்டுரை இது.

  கீதம் சங்கீதம் வெள்ளில ஒலிக்கச்செய்ய திட்டம்!

  ReplyDelete
 3. //ஆடம்பரவிழாக்களில் அதிகம் மின் சக்திவீணாவதைக்குறைப்போம்
  மழைநீரை சேமிக்கப்பழகுவோம்
  மூலப்பொருட்களைபாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவோம்
  //

  மிக மிக எளிய விசயங்கள் தான்! ஆனாலும் கூட அதை கடைப்பிடிப்பதில் நாம் அத்தனை சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை!

  அட்லீஸ்ட் அடுத்த தலைமுறை நம் மக்களுக்கு எப்படி உதவமுடியும் என்று யோசித்தாலே கூட போதும்! - ஆனால் அது மட்டும் நடைப்பெறுவதில்லை :(

  விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் கட்டுரைக்கு நன்றி அக்கா! :)))

  ReplyDelete
 4. நீங்க சொல்லும் அந்த ஓஸோன் ஓட்டை எங்க தலைக்கு மேலேதானாம்.

  இந்தியாவிலே....ஒரு பக்கம் மின்வெட்டுன்னு இருக்கு ஒரு பக்கம் ஆடம்பர விழாக்கள், அரசியல் மாநாடுகள்.

  நல்ல பதிவு.

  ஊர் உலகம் கூடித் தேர் இழுக்கணும்.

  ReplyDelete
 5. தலைப்பு அழகா இருக்கு..நல்ல பதிவு.

  ReplyDelete
 6. //பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.//

  உண்மை உண்மை. அதற்காக நம்மால் இயன்றவரை நாம் செய்ய வேண்டியதையும் குறிப்பிட்டிருப்பது அருமை.

  ReplyDelete
 7. //மனதைத்தொடும் கட்டுரை!
  அசத்தலான தலைப்பு!
  பாராட்டுக்கள் சகோதரி!
  கலக்குகிறீர்கள்!
  தொடர்ந்து கலக்குங்கள்//

  ரிப்பீட்டே!!!

  ஆமாம் அக்கா, மடிவாலா, மார்கெட், செயிட்ண்ட் ஜான் வரைல இருந்த மரங்கள், மற்றும் வசந்த் நகர் ஏரியா, ஹெப்பால் ரோட் எல்லாம் பார்க்கும் போது கண்ணீர் தான் வருது. இந்த ஊருக்கே உண்டான சிறப்பை அது இழந்திடுமோன்னு ஒரு வருத்தம்.

  ஸ்டார் வாரத்தில் நல்ல சிந்தனையை பதிய வைத்தமைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 8. /* ஆடம்பரவிழாக்களில் அதிகம் மின் சக்திவீணாவதைக்குறைப்போம்
  மழைநீரை சேமிக்கப்பழகுவோம்
  மூலப்பொருட்களைபாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவோம்*/
  ஆம். ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நல்ல கட்டுரை. இங்கு ஒரு பக்கம் மின் பற்றாக்குறை என்று கூறிக் கொண்டு, அரசியல் மாநாடுகளுக்கும், பெரிய கடைகளுக்கும் எரியும் சீரியல் விளக்குகளை பார்த்தால், வீட்டில் செய்யும் சின்ன சின்ன முயற்சிகள், கடலில் கரைத்த பெருங்காயம் போல் தெரிகிறது. என்றாலும் விழிப்புணர்வுடன் நாம் செய்வதை செய்வோம்.

  ReplyDelete
 9. ஆயில்யன் said...

  //

  மிக மிக எளிய விசயங்கள் தான்! ஆனாலும் கூட அதை கடைப்பிடிப்பதில் நாம் அத்தனை சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை!

  அட்லீஸ்ட் அடுத்த தலைமுறை நம் மக்களுக்கு எப்படி உதவமுடியும் என்று யோசித்தாலே கூட போதும்! - ஆனால் அது மட்டும் நடைப்பெறுவதில்லை

  விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் கட்டுரைக்கு நன்றி அக்கா! )//

  நன்றி ஆயில்யன்...ஒவ்வொருவரும் சிந்தித்தாலே போதும் ....சிந்தனையே செயலுக்கு வழி!

  ReplyDelete
 10. துளசி கோபால் said...
  நீங்க சொல்லும் அந்த ஓஸோன் ஓட்டை எங்க தலைக்கு மேலேதானாம்.

  இந்தியாவிலே....ஒரு பக்கம் மின்வெட்டுன்னு இருக்கு ஒரு பக்கம் ஆடம்பர விழாக்கள், அரசியல் மாநாடுகள்.

  நல்ல பதிவு.

  ஊர் உலகம் கூடித் தேர் இழுக்கணும்.

  9:29 AM>>>ஆமா துளசிமேடம்
  அரசியல்வாதிகள் விழால மின்சாரம் வெள்ளமா வேஸ்ட் ஆகுது.
  நீங்க சொல்றாப்ல ஊர்கூடி தேர் இழுத்துத்தான் ஆகணும் நன்றி கருத்துக்கு

  ReplyDelete
 11. முத்துலெட்சுமி-கயல்விழி said...
  தலைப்பு அழகா இருக்கு..நல்ல பதிவு.

  10:12 AM
  >>>>நன்றி முத்துலட்சுமி

  ReplyDelete
 12. ராமலக்ஷ்மி said...
  //பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.//

  உண்மை உண்மை. அதற்காக நம்மால் இயன்றவரை நாம் செய்ய வேண்டியதையும் குறிப்பிட்டிருப்பது அருமை.

  11:29 AM
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ஆமா ராமலஷ்மி

  ஏதாவது செய்யணும் நாம்

  ReplyDelete
 13. மதுரையம்பதி said...
  //மனதைத்தொடும் கட்டுரை!
  அசத்தலான தலைப்பு!
  பாராட்டுக்கள் சகோதரி!
  கலக்குகிறீர்கள்!
  தொடர்ந்து கலக்குங்கள்//

  ரிப்பீட்டே!!!>>>
  நன்றி மௌலி

  //ஆமாம் அக்கா, மடிவாலா, மார்கெட், செயிட்ண்ட் ஜான் வரைல இருந்த மரங்கள், மற்றும் வசந்த் நகர் ஏரியா, ஹெப்பால் ரோட் எல்லாம் பார்க்கும் போது கண்ணீர் தான் வருது. இந்த ஊருக்கே உண்டான சிறப்பை அது இழந்திடுமோன்னு ஒரு வருத்தம். //

  பன்னார்கட்டா ரோட் ஃப்ளைஓவர் கட்டறப்போ சாலைமரங்களை சகட்டுமேனிக்கு வெட்டிப்போட்டாங்க நெஜமா எனக்கு கண் கலங்கிப்போனது அதுலயும் வெட்டி வீழ்ந்துகிடந்த மரத்துகிட்ட 'மரங்களை வளர்ப்போம், இயற்கையைகாப்போம்;ன்னு பலகைஒண்ணும் கிடந்தது.
  மனசை அப்படியே பாதித்துவிட்டது.பெங்களூர்
  தன் அழகை இழந்துவருகிறது.

  //ஸ்டார் வாரத்தில் நல்ல சிந்தனையை பதிய வைத்தமைக்கு நன்றிகள் பல.//
  நன்றிமௌலி

  11:45 AM

  ReplyDelete
 14. AM


  அமுதா said...
  /*///
  ஆம். ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நல்ல கட்டுரை. இங்கு ஒரு பக்கம் மின் பற்றாக்குறை என்று கூறிக் கொண்டு, அரசியல் மாநாடுகளுக்கும், பெரிய கடைகளுக்கும் எரியும் சீரியல் விளக்குகளை பார்த்தால், வீட்டில் செய்யும் சின்ன சின்ன முயற்சிகள், கடலில் கரைத்த பெருங்காயம் போல் தெரிகிறது. என்றாலும் விழிப்புணர்வுடன் நாம் செய்வதை செய்வோம்.///
  கண்டிப்பா செய்யணும் அமுதா

  சாலைல குழாய்நீர் வீணானா தடுக்கணும் கண் எதிரே மணல்கொள்ளைநடந்தா தட்டிக்கேக்கணும். நிறைய சமூகமையங்கள் நமக்கு இதுக்கு உதவும் நன்றி வருகைக்கும்கருத்துக்கும்

  12:36 PM

  ReplyDelete
 15. சொல்வதெல்லாம் சரி!
  மௌனமா ஏதோ பண்றேன்னு சொன்னீங்களே!
  இதில் உங்க பங்கு என்ன?!

  ReplyDelete
 16. VSK said...
  சொல்வதெல்லாம் சரி!
  மௌனமா ஏதோ பண்றேன்னு சொன்னீங்களே!
  இதில் உங்க பங்கு என்ன?!

  7:55 AM
  >>>வாங்க டாக்டர்!
  மௌனமா செய்வதை சத்தமா சொல்லணும்னா சொல்றேன்! எங்ககன்னடா மாதர்சங்கம்பெண்கள் பலர் சேர்ந்தூ அருகில் உள்ள சில கிராமங்கள் சென்று மழைநீர் சேமிப்பை மக்களுக்கு ஒளிப்படமிட்டுக்க்காட்டறோம்
  பிளாஸ்டிக் உபயோகத்தை எங்கள் வீட்டுக்கல்யாணங்களில் நிறுத்திட்டோம் தாம்பூலப்பையெல்லாம் இப்போதுணிப்பைதான்
  இதையே தெரிந்தவர்களுக்கு வலியுறுத்தறோம்
  மின்சாரத்தில் சிக்கனம் மேற்கொள்கிறோம் அதிகம் டிவி பார்ப்பதில்லை
  வீணாய் ஃபானை சுழலவிடுவதில்லை என குழந்தைகளுக்கு அதை தெரியவைக்கிறோம் சின்னசின்ன அடிகள்தான் ..நிறையப்போகணும் டாக்டர்... பொதுவில் இட்டால் எல்லோர்மனசிலும் ஏதாவது சின்ன பாதிப்பை உண்டாக்கலாம் என எழுதினேனே தவிர நான் எதையும் சாதித்துவிட்ட பெருமை சற்றும் இல்லை. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 17. ஷைலூ,

  என்ன இது?

  //வீணாய் ஃபானை சுழலவிடுவதில்லை என குழந்தைகளுக்கு அதை தெரியவைக்கிறோம் சின்னசின்ன அடிகள்தான் ...

  புள்ளைங்களுக்குச் சின்னச் சின்ன அடிகளா?

  குழந்தைகளை அடிக்கக்கூடாதுப்பா.....

  ச்சும்மா:-))))

  ReplyDelete
 18. துளசி கோபால் said...
  ஷைலூ,

  என்ன இது?

  //வீணாய் ஃபானை சுழலவிடுவதில்லை என குழந்தைகளுக்கு அதை தெரியவைக்கிறோம் சின்னசின்ன அடிகள்தான் ...

  புள்ளைங்களுக்குச் சின்னச் சின்ன அடிகளா?

  குழந்தைகளை அடிக்கக்கூடாதுப்பா.....

  ச்சும்மா:-))))

  8:40 AM
  >>>>>>.நீங்க சீரியசா சொல்லுவீங்களா என்ன? ச்சுமமான்னு சொல்லவே வேண்டாம் துளசிமேடம்..! உங்களதெரியாதா எனக்கு அன்பின் மறு உருவமாச்சே!
  ஆனா நான் குழந்தைகளை அடிச்சதே இல்லை அது நிஜம்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.