முதலில் வரும் திருப்பாவை பின்னே வரும் இப்பெண்பாவையின் படைப்புகள்!
வெள்ளிமணி ஓசையாய் குரல்பதிவுகளை இன்று அளிக்கதிட்டம்.
சொல்ப வெயிட்மாட்ரீ!
தலைப்பில் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என இருக்கிறதே இதற்கு என்ன பொருள் யாருக்காவது தெரியுமா? இதற்கெல்லாம் பரிசு ....கரெக்ட் அதேதான்!!
*************************************************************
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
Tweet | ||||
\\"வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!"\\
ReplyDeleteசிம்பிள்...வியாழக்கிழமை போயி வெள்ளிக்கிழமை வந்துடுச்சி... ;))
பரிசு என்ன மைபாவா!!!!?
மீ த முதல் ;))
ReplyDeleteஎப்புடியும் உங்க அருமை தம்பி, ஆன்மீக அண்ணல் வந்து தான் பதில் சொல்லப் போறாரு.. நான் அவருக்கு ஒரு 11 ரூபாய் தட்சணை வைச்சுட்டு மைசூர்பாக்க அவ்ர்கிட்டயே வாங்கிக்கிறேன்.. :)
ReplyDelete//வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;//
ReplyDeletevelli na suriyan..so pozhuthu vidinjirichi arthama irukalam..athey context padi apo vyazhamna nighta??
vyazham urangitruna pozhuthu vidithal symbolises end of prev day..so thursady mudinji friday vanthirchi apdinum irukumo?
interesting post..first time here from Ambi's.
விடி வெள்ளி நக்ஷத்திரம் அதிகாலையில் தோன்றும், அந்த நேரத்தில் வியாழன் என்றழைக்கப்படும் நக்ஷத்திரம் மறைய ஆரம்பித்துவிடும்...அத்தகைய விடியற்காலை பொழுதுன்னு சொல்றாங்களாக்கா?...
ReplyDeleteகோபிநாத் said...
ReplyDelete\\"வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!"\\
சிம்பிள்...வியாழக்கிழமை போயி வெள்ளிக்கிழமை வந்துடுச்சி... ;))
பரிசு என்ன மைபாவா!!!!?
9:25 AM
>>>>வாங்க கோபி
பரிசு விடை சரி ஆனாஆஆ....:)
கோபிநாத் said...
ReplyDeleteமீ த முதல் ;))
9:25 AM
>>>>சுறுசுறுப்புதான் ராகவ்க்கு இவ்ளோ இல்ல?:)))
Raghav said...
ReplyDeleteஎப்புடியும் உங்க அருமை தம்பி, ஆன்மீக அண்ணல் வந்து தான் பதில் சொல்லப் போறாரு.. நான் அவருக்கு ஒரு 11 ரூபாய் தட்சணை வைச்சுட்டு மைசூர்பாக்க அவ்ர்கிட்டயே வாங்கிக்கிறேன்.. :)
10:38 AM<<>>>>>>
ஏனிப்டி தட்சணைமூர்த்தியா இருக்க ராகவ்?:)
gils said...
ReplyDelete//வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;//
velli na suriyan..so pozhuthu vidinjirichi arthama irukalam..athey context padi apo vyazhamna nighta??
vyazham urangitruna pozhuthu vidithal symbolises end of prev day..so thursady mudinji friday vanthirchi apdinum irukumo?
interesting post..first time here from Ambi's.
1:12 PM
>..வாங்க கில்ஸ் என்னபேரு எப்படி அழைப்பது?? அம்பிபதிவுல உங்களப்பாத்துருக்கேனே நன்றி வருகைக்கு வெள்ளீ வியாழன் பற்றி விரிவா பேசலாம் இருங்க
மதுரையம்பதி said...
ReplyDeleteவிடி வெள்ளி நக்ஷத்திரம் அதிகாலையில் தோன்றும், அந்த நேரத்தில் வியாழன் என்றழைக்கப்படும் நக்ஷத்திரம் மறைய ஆரம்பித்துவிடும்...அத்தகைய விடியற்காலை பொழுதுன்னு சொல்றாங்களாக்கா?...
1:15 PM >>>>>>.எனக்கும் அப்படித்தான் தோன்றினாலும் அதூ சரியான்னு தெரிஞ்சிக்கதான் இங்க கேட்டுருக்கேன் பாக்லாம் யாராவது செவ்வாய்க்கு சொன்னமாதிரி இங்கயும் வராங்களான்னு நன்றி மௌலி!!
//கோபிநாத் said...
ReplyDeleteசிம்பிள்...வியாழக்கிழமை போயி வெள்ளிக்கிழமை வந்துடுச்சி... ;))
//
மன்னா
மாப்பி கோப்பிக்கே ஆயிரம் பொன்னும் பரிசளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! :)
இப்போ கொஞ்சூண்டு விளக்கம்ஸ்!
ReplyDeleteவெள்ளி=Friday
வியாழன்=Thursday
-ன்னு பொதுவா எடுத்துக்கலாம்!
வியாழக்கிழமை ஓடியே போச்சு! வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! அப்படின்னு சொல்ல வராளா?
ஆனால் செவ்வாய் எழுந்து திங்கள் உறங்கிற்று-ன்னு எல்லாம் அவள் வேறெங்கும் பாடலையே!
அதுனால ஏதோ வெறும் ஒரு நாள் போய், இன்னொரு நாள் வந்தது-ன்னு இங்கு சொல்ல வரலை கோதை!
மேலும் இன்னும் சூர்யோதயம் ஆகவில்லை! அதனால் (தமிழ்க் காலக் கணக்குப்படி) இன்னும் வெள்ளிக்கிழமை வரலை!
அப்புறம் என்ன?
வெள்ளி=Venus
வியாழன்=Jupiter
சூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்!
ReplyDeleteஇன்னிக்கிக் கூட புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிர்க்கே போகாதே-ன்னு சொல்லுவாய்ங்க!
அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு சற்று முன்னர், அதிக வெளிச்சம் இல்லாததால், பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!
ஆனால் வியாழன் (Jupiter)?
அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!
ஆண்டாள் இங்கே அவள் காலத்தில் நடைபெற்ற வானியல் அதிசய நிகழ்வைக் குறித்து வைக்கிறாள் அவள் டையரியில்! :)
வியாழன் கிரகம் ஒரு பக்கம் மறைய, அதற்கே எதிரே வெள்ளி தோன்றும் வானியல் நிகழ்வு இது!
இவ்வாறு எப்போதெல்லாம் நடந்தது என்று விஞ்ஞானிகள் துணையோடு, இந்த வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள். அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் செய்தார்கள்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்பது வெறும் காலண்டர் குறிப்பும் இல்லை! ஆன்மீகக் குறிப்பும் இல்லை! அது விஞ்ஞானக் குறிப்பு! குறித்து வைத்தவள் ஆண்டாள்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
ReplyDeleteஇதற்கு ஆன்மீக விளக்கமும் அளிக்கப்படுவதுண்டு!
வெள்ளி என்பது காதல் கிரகம் (வீனஸ், சுக்கிரன்)
வியாழன் என்பது அறிவுக் கிரகம் (ஜூப்பிடர், குரு)
இங்கே பெண்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்புகிறாள் கோதை! ஆனால் தூங்குபவர்களோ எழுந்திருக்காமல், பல கேள்வி கேட்கிறார்கள்! அவங்க எழுந்தாச்சா? இவிங்க எழுந்தாச்சா? என்னை ஏன் மொதல்ல எழுப்பற என்றெல்லாம் சோம்பல் முறிக்கிறார்கள்!
எம்பெருமானுக்கு காதலைத் தாருங்கள் கோபிகளே, உங்கள் அறிவைத் தூக்கி ஒரு மூலையில் வையுங்கள்!
அவனை அறிவால் அளக்க முடியாது!
அன்பால் கொள்ளத் தான் முடியும்!
வியாழன் என்னும் அறிவு உறங்கிற்று!
வெள்ளி என்னும் காதல் விடிந்திற்று!
மனத்துக்கு இனியானைப் (Sweet Heart) பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்!
ஈது என்ன பேர் உறக்கம்?
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//கோபிநாத் said...
சிம்பிள்...வியாழக்கிழமை போயி வெள்ளிக்கிழமை வந்துடுச்சி... ;))
//
மன்னா>>>>
>>>>மன்னா எங்க மன்னிதான் இங்க!!!!
/மாப்பி கோப்பிக்கே ஆயிரம் பொன்னும் பரிசளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்//
யாரங்கே கோபிக்கு ஆயிரம் பொண் ஐயோ மன்னிக்க பொன் கொடுங்கப்பா!!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteசூர்யோதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்!>>>
ஆமாம் சொல்வார்கள்.
//இன்னிக்கிக் கூட புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிர்க்கே போகாதே-ன்னு சொல்லுவாய்ங்க!..
ஆமாம் சொல்வாங்க
//அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு சற்று முன்னர், அதிக வெளிச்சம் இல்லாததால், பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!///
ஆமாம் பார்க்கலாம்
//ஆனால் வியாழன் (Jupiter)?
அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!
ஆண்டாள் இங்கே அவள் காலத்தில் நடைபெற்ற வானியல் அதிசய நிகழ்வைக் குறித்து வைக்கிறாள் அவள் டையரியில்! :)
வியாழன் கிரகம் ஒரு பக்கம் மறைய, அதற்கே எதிரே வெள்ளி தோன்றும் வானியல் நிகழ்வு இது!//
>>>ஆஇதுமட்டும் தெரியாதே! பாத்தீங்களா இத சொல்லத்தான் ஆ.சூ வரணும் என்கிறது நன்றி ரவி
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
இதற்கு ஆன்மீக விளக்கமும் அளிக்கப்படுவதுண்டு!
வெள்ளி என்பது காதல் கிரகம் (வீனஸ், சுக்கிரன்)
வியாழன் என்பது அறிவுக் கிரகம் (ஜூப்பிடர், குரு)
>>>>சுக்கிரதசைன்னு இதுக்குதான் சொல்றாங்களோ?
//இங்கே பெண்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்புகிறாள் கோதை! ஆனால் தூங்குபவர்களோ எழுந்திருக்காமல், பல கேள்வி கேட்கிறார்கள்! அவங்க எழுந்தாச்சா? இவிங்க எழுந்தாச்சா? என்னை ஏன் மொதல்ல எழுப்பற என்றெல்லாம் சோம்பல் முறிக்கிறார்கள்!
எம்பெருமானுக்கு காதலைத் தாருங்கள் கோபிகளே, உங்கள் அறிவைத் தூக்கி ஒரு மூலையில் வையுங்கள்!
அவனை அறிவால் அளக்க முடியாது!
அன்பால் கொள்ளத் தான் முடியும்!
வியாழன் என்னும் அறிவு உறங்கிற்று!
வெள்ளி என்னும் காதல் விடிந்திற்று!//
>>>>ஆகா காதல்வந்தாலே அறிவு மழுங்குமே தானாய்? அதனால்தான்
காதலை அன்பை முன்னிறுத்துகிறாளா ஆண்டாள்? நலல் சிந்தனை நல்ல கோணம் ரவீ இது.
//மனத்துக்கு இனியானைப் (Sweet Heart) பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்!
ஈது என்ன பேர் உறக்கம்?
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!//
இங்கு வியாழம் எழுந்து புரிந்துபோனது நன்றி ரவி நேரம் செலவழித்து இதற்கு அற்புதமாய் விளக்கம் சொல்லியதற்கு
2:37 AM
ஆண்டாளைப் பற்றி இத்தனை நாள் தெரிந்து வைத்திருந்ததை விட ஷைலஜா எழுதிய ஆண்டாள் சம்மந்தப்பட்ட நட்சத்திர பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இன்னும் நிறைய அறியலாம் போல இருக்கு. பெண் கவிஞர் மட்டுமல்ல ஆண்டாளுக்கு வான சாஸ்திரம் கூட தெரிந்திருக்கிறதே... நன்றி ஷைலஜாவுக்கும் அவருக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும்.
ReplyDelete//மனத்துக்கு இனியானைப் (Sweet Heart) //
ReplyDeleteஆஹா.. என்ன ஒரு விளக்கம்.. Sweet Heart என்பதற்கு இப்படி ஒரு அருமையான தமிழ்ப்படுத்துதல்.. அதுவும் நம் கோதை தமிழில் இருந்து..
9:33
ReplyDeleteஸ்வாதி said...
ஆண்டாளைப் பற்றி இத்தனை நாள் தெரிந்து வைத்திருந்ததை விட ஷைலஜா எழுதிய ஆண்டாள் சம்மந்தப்பட்ட நட்சத்திர பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இன்னும் நிறைய அறியலாம் போல இருக்கு. பெண் கவிஞர் மட்டுமல்ல ஆண்டாளுக்கு வான சாஸ்திரம் கூட தெரிந்திருக்கிறதே... நன்றி ஷைலஜாவுக்கும் அவருக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும்.
9:39 >>>>>.ஆமாம் சுவாதி..சிலவிஷயங்களை பொதுவில்கொண்டுவந்தால்தான் விளக்கமும் கிடைக்கிறது. நன்றி உங்க வருகைக்கும் கருத்துக்கும்.
Raghav said...
ReplyDelete//மனத்துக்கு இனியானைப் (Sweet Heart) //
ஆஹா.. என்ன ஒரு விளக்கம்.. Sweet Heart என்பதற்கு இப்படி ஒரு அருமையான தமிழ்ப்படுத்துதல்.. அதுவும் நம் கோதை தமிழில் இருந்து..
7:06 PM
>>>>>>>>>>>சொல்கிறவர் யாரு ஆண்டாளின் தோழன் அல்லவா?:):)
இன்பர்மேட்டிவ் ப்ளாக்.
ReplyDeleteஇஞ்சார வந்தா நெறய கத்துக்கலாம் போல இருக்க்கே
இனிமே அடிக்கடி வாரோம்.
அமிர்தவர்ஷினி அம்மா said...
ReplyDeleteஇன்பர்மேட்டிவ் ப்ளாக்.
இஞ்சார வந்தா நெறய கத்துக்கலாம் போல இருக்க்கே
இனிமே அடிக்கடி வாரோம்.
4:09 PM
>>>>>வாங்க வாங்க.....நிறைட அறிஞர்கள் நம்ம இடத்துக்கு வந்து கருத்து சொல்றாங்க...வரவுக்கு நன்றி அ.அம்மா!