இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண்ணாவது தன் தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியுமா? சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப் போய் விடும்? "என்று தந்தையிடம் கேட்டிருக்கத் தான் முடியுமா?
ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டு தான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வருவாள்.
பிள்ளைப் பருவத்தில் அரங்கன் மீது பித்தான அன்பு பின்பு காதலாகியது பருவ வயதில்
அரங்கன் மீது ஆண்டாளுக்கு அத்தனைக்காதல்!
காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!
கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.
ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!
அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதற்கு சாட்சி இந்தப்பாடல்.
ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.
'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?
யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)
{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}
அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.
இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.
*கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?**
திருப்பவளச் "செவ்வாய்" தான் தித்தித்திருக்குமோ?**
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்**
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே**!
கருப்பூரம் என்றால் மாலவனுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூ என்றால் கமலப்பூ தாமரை
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!
இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?
ஆண்டாள் அதிகம் பாடவில்லை தான்.
மொத்தம் 143 பாடல்தான்.
ஆனால்,நாச்சியார் திருமொழியின் அந்தப் பாசுரங்களுக்குள் ஒரு நட்சத்திர அஸ்தஸ்து இதற்கு மட்டுமே உண்டு.
*** இது நட்சத்திரப் பாசுரம் ***
எளிமையும் இனிமையுமான காதல் பாடல்தான் எல்லாமே, ஆனாலும் காதலின் வேகம் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது நளினமாகவும்.
பக்தியில் பல வகைகள் உண்டு.
இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், சேவகனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழை பொழிந்தவள் ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்!
ஆண்டாள் காதலே சரணம்!
அவனே அதற்கு வரணும்!
வந்தே முத்தம் தரணும்!
Tweet | ||||
//புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)//
ReplyDeleteமைசூர்பாக் இலவசம் அப்படின்னு கோடு போட்டுக் காமிச்சுட்டீங்க. என் கடமையைச் செய்யறேன். புல்லாங்குழல் ஊதும் பொழுது அது முழுவதும் உதட்டில் படாது. பொதுவாக கீழுதட்டின் கீழே வைத்துதான் ஊதப்படும். ஆனால் சங்கு ஊதும் பொழுது இரு இதழ்களுக்கு இடையே பொருத்தி ஊதப்படும்.
ஆகையால் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய கருவி வெண்சங்கே எனச் சொல்லி நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
படங்களும் விளக்கமும் மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
butterfly சூர்யா
உங்களுடைய நட்சத்திரப் பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். ரசித்தேன்.
அக்கா.. தலைப்பு அதிருதே. :)
ReplyDelete”அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” அவதரித்தவள் அல்லவா கோதை, அதுதான் அழகனை பற்றி அழகுற பாடியுள்ளாள்.
அதை அழகாக நட்சத்திர பாசுரம் ஆக்கிருக்கீங்க. சூப்பர்.
சூப்பர்க்கா...ஒரு பாடலை எடுத்துக் கொண்டு எளிமையாக, இயல்பா சொல்லியிருக்கீங்க....
ReplyDeleteபடங்களும் அருமை. :)
இலவசக்கொத்தனார் said...
ReplyDelete//புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)//
மைசூர்பாக் இலவசம் அப்படின்னு கோடு போட்டுக் காமிச்சுட்டீங்க. என் கடமையைச் செய்யறேன். >>>>>>
வாங்க இலவசம்....மைசூர்பாக் இப்படில்லாம் கூட வேலல செய்யுதா அட!
//புல்லாங்குழல் ஊதும் பொழுது அது முழுவதும் உதட்டில் படாது. பொதுவாக கீழுதட்டின் கீழே வைத்துதான் ஊதப்படும். ஆனால் சங்கு ஊதும் பொழுது இரு இதழ்களுக்கு இடையே பொருத்தி ஊதப்படும்.
ஆகையால் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய கருவி வெண்சங்கே எனச் சொல்லி நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
>>>>>>
உங்க விளக்கம் சரியாத்தான் இருக்கு ஆனாலும் இதுபற்றி ஆன்மீக சூப்பர் ஸ்டார் கே ஆர் எஸ் என்ன சொல்லவார்ரார் ஸாரி-வரார்னு பார்ப்போம்! மைபா பரிசு இப்பிறவியில் இலவசக்கொத்தனாருக்கு நிச்சயம்! நன்றி நன்றி கருத்துக்கு
9:32 AM
surya said...
ReplyDeleteபடங்களும் விளக்கமும் மிக அருமை.
வாழ்த்துக்கள்
>>>>
நன்றி சூர்யா
குட்டிபிசாசு said...
ReplyDeleteஉங்களுடைய நட்சத்திரப் பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். ரசித்தேன்.
10:15 AM
>>நன்றிகுட்டிப்பிசாசு(யாரு பெரியபிசாசு?:))
கருத்துக்குமிக்க நன்றி
Raghav said...
ReplyDeleteஅக்கா.. தலைப்பு அதிருதே. :)
”அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” அவதரித்தவள் அல்லவா கோதை, அதுதான் அழகனை பற்றி அழகுற பாடியுள்ளாள்.
>>>ஆமாம் ரொம்ப போல்ட் இல்ல ஆண்டாள்?
//அதை அழகாக நட்சத்திர பாசுரம் ஆக்கிருக்கீங்க. சூப்பர்.//
நட்சத்திரவாரமாச்சே அதான்
நன்றி ராகவ்
10:34 AM
மதுரையம்பதி said...
ReplyDeleteசூப்பர்க்கா...ஒரு பாடலை எடுத்துக் கொண்டு எளிமையாக, இயல்பா சொல்லியிருக்கீங்க....
படங்களும் அருமை. :)
>>>>>நன்றி மதுரையம்பதி....செவ்வாய் வந்த பாடல் இதான் அதான் இன்னிக்கு நட்சத்திரவாரத்துல அளிக்க நினச்சேன்.
Vanakkam amma,
ReplyDeletesangu never leave with him,chakaram some times move away to kill some person. so she asked sangam.
ARANGAN ARULVANAGA,
k.srinivasan.
//புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)//
ReplyDeleteகுழந்தையா இருக்கும் போது புல்லாங்குழல், வாலிபனா இருக்கும் போது சங்கு, அதான் ஆண்டாள் விவரமா சங்கை கேக்கறாங்க.
மை.பா பார்சல் செய்து வைங்க, நானே வந்து வாங்கிக்கறேன், அப்ப தான் கேசரியும், வெங்காய பக்கோடாவும் தருவீங்க, எதுக்கு அதையும் விடுவானேன்? :))
Mrs. shylaja,
ReplyDeleteI think I read this story in different version in Sri Kazhiyuran's blog. But I like your version too.
Really thanks for making us remind Andal as markazhi is near.
Vidhya
vidhyakumaran@gmail.com
Anonymous said...
ReplyDeleteVanakkam amma,
sangu never leave with him,chakaram some times move away to kill some person. so she asked sangam.
ARANGAN ARULVANAGA,
k.srinivasan.
>>>>> வணக்கம் ஸ்ரீனிவாசன்
விளக்கத்திற்கு மிக்க நன்றி
ambi said...
ReplyDelete!!!)//
குழந்தையா இருக்கும் போது புல்லாங்குழல், வாலிபனா இருக்கும் போது சங்கு, அதான் ஆண்டாள் விவரமா சங்கை கேக்கறாங்க.//
குட்பாய் அம்பி. ஆனாலும் கே ஆர் எஸ் என்னும் சூப்பர் ஸ்டார் வந்து இது சரிதான்னு சொல்றவரைக்கும்
காத்திருக்கவும்:)
//மை.பா பார்சல் செய்து வைங்க, நானே வந்து வாங்கிக்கறேன், அப்ப தான் கேசரியும், வெங்காய பக்கோடாவும் தருவீங்க, எதுக்கு அதையும் விடுவானேன்? :))//
கேசரி வெங்காயபக்கோடா கொடுத்து ஆச்சு..அதனால மைபா மட்டுமே மை ப்ரதர் அம்பிக்கு சரி வேர்ஸ்
அவர் பிலவட் தம்பிகண்ஸ்?:)
12:20 PM
Anonymous said...
ReplyDeleteMrs. shylaja,
I think I read this story in different version in Sri Kazhiyuran's blog. But I like your version too.
Really thanks for making us remind Andal as markazhi is near.
Vidhya
vidhyakumaran@gmail.com
12:24 PM
>>>வாங்க வித்யா குமாரன்
காழியூரான் ஜீ அருமையாய் எழுதுவார்.. அவரளவு எனக்கு வராது.
அவர் எழுத்துக்கள் ஆன்மாவைத்தொடும்.
ஆமாம்,
ஆண்டாள் அடுத்தமாதம் வர இருப்பதால் முன்கூட்டியே இப்பதிவு.
உங்க வருகைக்கு மிக்க நன்றி
////புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)//
ReplyDeleteமைசூர்பாக் இலவசம் அப்படின்னு கோடு போட்டுக் காமிச்சுட்டீங்க. என் கடமையைச் செய்யறேன். புல்லாங்குழல் ஊதும் பொழுது அது முழுவதும் உதட்டில் படாது. பொதுவாக கீழுதட்டின் கீழே வைத்துதான் ஊதப்படும். ஆனால் சங்கு ஊதும் பொழுது இரு இதழ்களுக்கு இடையே பொருத்தி ஊதப்படும்.
ஆகையால் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய கருவி வெண்சங்கே எனச் சொல்லி நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.//
நான் சொல்ல வந்ததை இலவசம் அண்ணாச்சி முன்பே சொல்லிவிட்டு சென்றாலும் கூட அதற்கு ஒரு ரிப்பிட்டேய்ய்ய் போடுவதன் மூலம் அண்ணாச்சிப்பெறப்போகும் மைசூர் பாகில் பாதியை எனக்கு கொடுத்துதவுவார் என்ற நம்பிக்கையுடனும் நன்றிகளுடனும் விடைப்பெறுகிறேன் :))))))
ஆயில்யன் said...
ReplyDelete//
நான் சொல்ல வந்ததை இலவசம் அண்ணாச்சி முன்பே சொல்லிவிட்டு சென்றாலும் கூட அதற்கு ஒரு ரிப்பிட்டேய்ய்ய் போடுவதன் மூலம் அண்ணாச்சிப்பெறப்போகும் மைசூர் பாகில் பாதியை எனக்கு கொடுத்துதவுவார் என்ற நம்பிக்கையுடனும் நன்றிகளுடனும் விடைப்பெறுகிறேன் :))))))//
வாங்க ஆயில்யன்!!! அண்ணாச்சிக்கு மைபாநான் கொடுக்கறப்போ பாதி அவரு கொடுத்தா கிடைக்கும்!! ச்சேபாவம்...போனாபோறது உங்களுக்கும் தனியா செய்து தந்துடறேன் என்ன?:)
3:28 PM
"கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
ReplyDeleteகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?"
என்று பாடல் எழுதினார் கவியரசர் கண்ணதாசன்
ஆண்டாளும் அதை உணர்த்த
"மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்**
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே**!"
என்று அவருக்கு முன்பே பாடியது சிறப்பாக உள்ளது
அதைவிட 'French Kiss" என்று பதிவிற்குத் தலைப்பிட்டு
அனைவரையும் நீங்கள் உள்ளே இழுத்தது, இன்னும் சிறப்பாக உள்ளது:-))))
எங்கள் ஊர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா' வை அடிக்க உலகத்தில் ஆளே இல்லை!
ReplyDeleteஆகவே வேறு ஏதாவது சொல்ல வேண்டுகிறேன் சகோதரி!
கொத்ஸ் & அம்பி
ReplyDeleteநோ மைசூர் பாக் ஃபார் யூ!
அக்கா, கொடுக்காதீங்க!
இவர்கள் பாட்டில், ஐ மீன் பின்னூட்டத்தில் பிழை இருக்கு! :)
ஆயில்ஸ் அண்ணாச்சி
ReplyDeleteஇலவசமா கொத்ஸுக்குப் போட்ட ரிப்பீட்டேவை வாபஸ் வாங்குங்க! :)
இல்லீன்னா மை.பா ஆயிலுக்கு கிடைக்காமப் போயிடும்!
உங்களை ஆயிலுக்குப் பதிலா வெண்ணெய், நெய்-ன்னு கூப்பிட ஆரம்பிச்சுருவோம்! :))
மை.பா-வை ஆயில்ல செய்ய மாட்டாங்க! அதான்! :)
@அம்பி
ReplyDelete//குழந்தையா இருக்கும் போது புல்லாங்குழல், வாலிபனா இருக்கும் போது சங்கு//
அடப்பாவி அம்பி!
வாலிபனா இருக்கும் போது சங்கா ஊதுவாங்க? :)
உன் ரவுசுக்கு ஒரு அளவே இல்லீயா?
//ஷைலஜா said...
ReplyDeleteRaghav said...
அக்கா.. தலைப்பு அதிருதே. :)
//
யார் யாருக்கு எது கண்ணுல படணமோ, அதான் கண்ணுல படுது! :)
//புல்லாங்குழல் ஊதும் பொழுது அது முழுவதும் உதட்டில் படாது. பொதுவாக கீழுதட்டின் கீழே வைத்துதான் ஊதப்படும்.//
ReplyDeleteசரி தான்!
//ஆனால் சங்கு ஊதும் பொழுது இரு இதழ்களுக்கு இடையே பொருத்தி ஊதப்படும்//
சரி தான்!
ஆனால் இதழ்களோடு பொருத்தி ஊதும் போது வாய்ச்சுவை மட்டுமே தெரியும்!
நாற்றம் (நறுமணம்) வாய்க்குள்ள இருந்தா தெரியாதே!
கொஞ்சம் தள்ளி இருந்தா தானே வாய் நறுமணம் மூக்குக்கு எட்டும்?
கொத்ஸின் விளக்கம் வாய்ச்சுவைக்கு ஓக்கே! நாற்றமென்னும் நறுமணத்துக்கு நாட் ஓக்கே! :))
மன்னா, அறிவித்தபடி ஆயிரம் மைசூர்பாக்குகளை கொத்ஸூக்கு அளிக்க "வேண்டாம்" என்று தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
வேண்டுமானால், கொஞ்சம் தூள் மைசூர்பா-வைக் கொடுத்து அனுப்புங்கள்! :)
புல்லாங்குழல் தான் எப்பமே கண்ணன் லவ்வும் போது கூடவே இருக்கும்!
ReplyDeleteசங்கு சண்டையை ஆரம்பிக்கத் தான் வரும்!
அப்படி இருந்தும் சங்கைக் கூப்புடறா கோதை-ன்னா விஷயம் இருக்குல்ல? பதிவின் தலைப்பை இன்னொரு-கா ஒழுங்காப் பாருங்க! :)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteயார் யாருக்கு எது கண்ணுல படணமோ, அதான் கண்ணுல படுது! //
எனக்கு கோதை தான் கண்ணில் தெரிந்தாள்.. France க்கு சில நாட்கள் முன்பு போய் வந்தவர்க்கு தான் தலைப்பின் கடைசி பகுதி தெரிஞ்சுருக்கு போல :)
//
ReplyDeleteSP.VR. SUBBIAH said...
"கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?"
என்று பாடல் எழுதினார் கவியரசர் கண்ணதாசன்///
அருமையான பாட்டு அதுல சரோஜாதேவி சூப்பர்னு அம்பி வந்து சொல்வார்னு நினைக்கிறேன்!!
//ஆண்டாளும் அதை உணர்த்த
"மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்**
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே**!"
என்று அவருக்கு முன்பே பாடியது சிறப்பாக உள்ளது//
ஆமாம் ஆண்டாள் பளிச்சுன்னு விருப்புற்றுக்கேட்டுட்டாங்க.
//அதைவிட 'French Kiss" என்று பதிவிற்குத் தலைப்பிட்டு
அனைவரையும் நீங்கள் உள்ளே இழுத்தது, இன்னும் சிறப்பாக உள்ளது:-))))//
அது வந்து சும்மா காலத்துக்கு ஏத்தமாதிரி..இல்லென்னா இந்த
பாய்ஸ் இங்க எட்டிப்பாக்கமாட்டாங்களே ஸார் அதான் நன்றி உங்க கருத்துக்கு
4:57 PM
SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஎங்கள் ஊர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா' வை அடிக்க உலகத்தில் ஆளே இல்லை!
ஆகவே வேறு ஏதாவது சொல்ல வேண்டுகிறேன் சகோதரி!
4:58 PM
<<<<<>>>>
நான் ஒண்ணும் சொல்றதில்லங்க ஆனா நானென்றால் அது மைபாவும் நானும் என்பது இந்த இளையமக்கள் கணிப்பா இருக்கே வாட் டுடூ?:)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகொத்ஸ் & அம்பி
நோ மைசூர் பாக் ஃபார் யூ!
அக்கா, கொடுக்காதீங்க!
இவர்கள் பாட்டில், ஐ மீன் பின்னூட்டத்தில் பிழை இருக்கு! :)
4:59 PM
>>>>வாங்க நக்கீராரேரவியே
என்னபிழையப்பா அவங்கள பிழைக்க விடமாட்டீங்களே :)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஆயில்ஸ் அண்ணாச்சி
இலவசமா கொத்ஸுக்குப் போட்ட ரிப்பீட்டேவை வாபஸ் வாங்குங்க! :)
இல்லீன்னா மை.பா ஆயிலுக்கு கிடைக்காமப் போயிடும்!
உங்களை ஆயிலுக்குப் பதிலா வெண்ணெய், நெய்-ன்னு கூப்பிட ஆரம்பிச்சுருவோம்! :))
மை.பா-வை ஆயில்ல செய்ய மாட்டாங்க! அதான்>>>>>>
ஐயோ ரவி சிரிச்சி சிரிச்சி எனக்கு பல்வலிப்பா:) கிராம்பு ஆயில் அப்ளை பண்லாம்தானே?:):)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete@அம்பி
//குழந்தையா இருக்கும் போது புல்லாங்குழல், வாலிபனா இருக்கும் போது சங்கு//
அடப்பாவி அம்பி!
வாலிபனா இருக்கும் போது சங்கா ஊதுவாங்க? :)
உன் ரவுசுக்கு ஒரு அளவே இல்லீயா?
5:04 PM
<<>>>>>அம்பீஈஈஈ எங்கபோனீங்க இங்க ஒருத்தர் உங்கள என்னென்னவோ சொல்றார் வாங்க சீக்கிரம்:)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஷைலஜா said...
Raghav said...
அக்கா.. தலைப்பு அதிருதே. :)
//
யார் யாருக்கு எது கண்ணுல படணமோ, அதான் கண்ணுல படுது! :)
>>>>>>>வயசுப்பா வய்சு ராகவ்க்கு!!குரல்லயே மழலை போலயே இன்னும்:)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//
மன்னா, அறிவித்தபடி ஆயிரம் மைசூர்பாக்குகளை கொத்ஸூக்கு அளிக்க "வேண்டாம்" என்று தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
வேண்டுமானால், கொஞ்சம் தூள் மைசூர்பா-வைக் கொடுத்து அனுப்புங்கள்! :)
//
>>>>>>சுட்ட கத்திரிக்காகொத்சு பண்ணபோறார் அவரு உங்கள இருங்க ரவி!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteபுல்லாங்குழல் தான் எப்பமே கண்ணன் லவ்வும் போது கூடவே இருக்கும்!
சங்கு சண்டையை ஆரம்பிக்கத் தான் வரும்!
அப்படி இருந்தும் சங்கைக் கூப்புடறா கோதை-ன்னா விஷயம் இருக்குல்ல? பதிவின் தலைப்பை இன்னொரு-கா ஒழுங்காப் பாருங்க! :)
>>>>அதுசரி :):):)
Raghav said...
ReplyDelete//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
யார் யாருக்கு எது கண்ணுல படணமோ, அதான் கண்ணுல படுது! //
எனக்கு கோதை தான் கண்ணில் தெரிந்தாள்.. France க்கு சில நாட்கள் முன்பு போய் வந்தவர்க்கு தான் தலைப்பின் கடைசி பகுதி தெரிஞ்சுருக்கு போல >>>>
ஆமா ராகவ்கண்ணா.....நீ சொல்றதும் சரிதான்:)
5:42 PM
ஐப்பசியே இன்னும் முடியவில்லை. துலா ஸ்நானம் செய்யும்போதே ஆண்டாளையும் அழைத்தாச்சா:)
ReplyDeleteஆண்டாளின் மற்ற பாடல்களுக்கும் சொற்பொருள் கொடுங்களேன் ஷைலஜா.
தம்பி ரவி இந்தப் போடு போடுறாரே:)
சங்கமா...குழலா??
nalla pathivu Shyla akka...
ReplyDeleteenjoyed reading it...
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஐப்பசியே இன்னும் முடியவில்லை. துலா ஸ்நானம் செய்யும்போதே ஆண்டாளையும் அழைத்தாச்சா:)>>>>
வாங்கோ வல்லிமா ....ஆண்டாள் ஆன் ஹர் வே!!
//ஆண்டாளின் மற்ற பாடல்களுக்கும் சொற்பொருள் கொடுங்களேன் ஷைலஜா.//
நானா? சரி முயலுகிறேன்.
//தம்பி ரவி இந்தப் போடு போடுறாரே:)
சங்கமா...குழலா??//
சக்கைபோடு போதும் தம்பியே சந்தேகம் தீர்த்து வைக்க வாராய் நீ வாராய்!
7:07 PM
Ezhilanbu said...
ReplyDeletenalla pathivu Shyla akka...
enjoyed reading it...
7:08 PM
..
நன்றி ப்ரியா
ஆண்டாள் காதலே சரணம்!
ReplyDeleteஅவனே அதற்கு வரணும்!
வந்தே முத்தம் தரணும்!
ஹி ஹி ஹி ஹி
யக்கா...
ReplyDeleteநான் சொல்லிறட்டுமா?
இல்லை கொத்தனாருக்கு வெயிட் மாடியா? :)
சங்கு அரையா
நின் செல்வம்
சால அழகியதே!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteயக்கா...
நான் சொல்லிறட்டுமா?
இல்லை கொத்தனாருக்கு வெயிட் மாடியா?
சங்கு அரையா
நின் செல்வம்
சால அழகியதே!
8:05 PM >>>>>
சொல்ப வெயிட் மாட்ரீ:)
சங்கு அரையா என்னது? யார்பாட்டு இது ரவி:?
விலெகா said...
ReplyDeleteஆண்டாள் காதலே சரணம்!
அவனே அதற்கு வரணும்!
வந்தே முத்தம் தரணும்!
ஹி ஹி ஹி ஹி
7:45 PM
>>>>:):):)
//சங்கு அரையா என்னது? யார்பாட்டு இது ரவி:?//
ReplyDeleteஎல்லாம் எங்க வூட்டுப் பொண்ணு ஆண்டாள் பாடினது தான்! :)
செங்கண் கருமேனி வாசு தேவனுடைய
அங் கைத் தலம் ஏறி அன்ன வசஞ் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே!!!
சங்குத் தலைவா, உன் செல்வம் சாலவும் அழகா இருக்கே!
சங்குக்குச் செல்வம் எது? கண்டுபுடிங்க! :)
kannabiran, RAVI SHANKAR
ReplyDelete//சங்குத் தலைவா, உன் செல்வம் சாலவும் அழகா இருக்கே!
சங்குக்குச் செல்வம் எது? கண்டுபுடிங்க! :)
8:36 PM>>>>>>கடலா?
//8:36 PM>>>>>>கடலா?//
ReplyDeleteகடலுக்குத் தான் சங்கு செல்வம்!
சங்குக்குக் கடல் செல்வம் அல்ல! :)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//8:36 PM>>>>>>கடலா?//
கடலுக்குத் தான் சங்கு செல்வம்!
சங்குக்குக் கடல் செல்வம் அல்ல! :)
9:13 PM<<<<<<<<
ஆஹா ஏதோ பொடி இருக்கு இதுல...யோசிச்சி வரேன் இன்றுபோய் நாளை?:)
குழல் ஊதும் நேரம் இனிமையான நேரம். அதனால அப்போ வசனாதி திரவியங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். உண்மையான வாசனை இதுக்கெல்லாம் நேரம் இல்லாத போர் சமயத்தில்தான். ஆகவே சங்குக்குத்தான் சரியான வாசனை தெரியும்!!
ReplyDeleteஅக்கா
ReplyDeleteமீ த 50? :)
1. புல்லாங்குழல் தான் எப்பமே கண்ணன் லவ்வும் போது எல்லாம் கூடவே இருக்கும்!
ReplyDelete2. சங்கு சண்டையை ஆரம்பிக்கத் தான் எப்பவோ ஓரிரு முறை வரும்!
அப்போ, வாய்ச்சுவையும் நாற்றமும் புல்லாங்குழலுக்குத் தானே அதிகம் தெரியும்? ஏன் சங்கைக் கூப்புடுறா கோதை?
ஏன்னா, சங்கு கிட்ட தான் செல்வம் இருக்காம்! செல்வம் இருக்கறவங்களுக்குத் தானே மதிப்பு?
சங்கு அரையா, நின் செல்வம், சால அழகியதே! என்கிறாள், அதே பாட்டில்!
என்னா செல்வம் இருக்காம் சங்கு கிட்ட?
எம்பெருமானின் எச்சிற் செல்வம் இருக்காம்!
குழலை லைட்டா ஊதினாப் போதும். வாயைக் கிட்டக்க வைக்க வேண்டாம். கேப் கொடுத்து ஊதணும். அதுனால வாய்ச் சுவை தெரியாது. நாற்றம் (நறுமணம்) மட்டும் தெரியும்!
ReplyDeleteகுழல்-ல எச்சில் ரொம்ப இருக்காது. அதுனால குழலுக்குச் செல்வத்தைச் சேமித்து வைக்கும் பழக்கம் இல்லை! ஒரு பொண்ணு சேமிச்சி வைக்கத் தானே விரும்புவா? அவ்வளவு சீக்கிரம் செலவு பண்ணூவாளா? சேர்த்து வச்சி பெருசா வேணும்-னா செலவு பண்ணுவா! :))
So Mr. Flute, get outta here!
சங்கு போர்-னு வரும்போதோ, இல்லை மங்கல காரியங்களுக்கோ, எப்பவாச்சும் தான் ஊதப்படும். இருந்தாலும் அதை எப்படி ஊதணும்? வாய்க்குள் நல்லாப் பொருத்தி, கன்னம் புடைக்க பூம் பூம்-ன்னு ஒலி எழுப்பணும்.
ReplyDeleteஅத்தனை எச்சிலும் சங்குக்குள்ள போயிரும்! அத்தனை எச்சிலும் சிந்தாம உள்ளயே இருக்கும்! செல்வம் சேமிச்சி வைக்கப்பட்டிருக்கும்!
ஆக ஊதும் போது வாய்ச்சுவையும் தெரியும்.
ஊதிய பின் எச்சில் செல்வத்தால் நாற்றமும் (நறுமணமும்) தெரியும்!
போதாக் குறைக்கு எம்பெருமானின் தித்திப்புத் தீர்த்தமான எச்சில் அமுதத்தை, சங்கு பத்திரமா சேமித்தும் வைத்திருக்கும்!
அந்த திவ்ய மங்களத் தீர்த்தம் அல்லவா அந்தக் காதலிக்கு வேண்டும்! அதைப் பருகி அல்லவோ அவள் உயிர் வாழ்வாள்! அதான் சங்கினை மட்டும் கோதை கேட்கிறாள். சங்கிடம் திருமணத்துக்கு முன்னரே நட்பு செய்து கொள்கிறாள்.
இதெல்லாம் காதலிச்சுப் பாத்தா இந்நேரம் தானா மண்டையில ஏறும் மக்கா! :))
சங்கரையா! சங்கரன் அடியேனும் உன்னை வாழ்த்துகிறேன்!
உன் செல்வம் சால அழகியதே! அன்பியதே! அமுதியதே!
ஹரி ஓம்!
இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteகுழல் ஊதும் நேரம் இனிமையான நேரம். அதனால அப்போ வசனாதி திரவியங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். உண்மையான வாசனை இதுக்கெல்லாம் நேரம் இல்லாத போர் சமயத்தில்தான். ஆகவே சங்குக்குத்தான் சரியான வாசனை தெரியும்!!
12:49 AM
<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>
என்னமா சிந்திக்கிறீங்க கொத்ஸ்?! ரூம்ப்போட்டாஇல்ல ஆபீஸ் காபின்லயேவா இத்தனையும்?:)
இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஅக்கா
மீ த 50? :)
12:49 AM
>>>>>>>>>>>>>>>>யெப்! அரைசதம் அடித்த அண்ணலே வாழி!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete1. புல்லாங்குழல் தான் எப்பமே கண்ணன் லவ்வும் போது எல்லாம் கூடவே இருக்கும்!>>>>
ஆடுமாடுகளை மயக்கவும் இருக்கும்
2. சங்கு சண்டையை ஆரம்பிக்கத் தான் எப்பவோ ஓரிரு முறை வரும்!
>>>>ஆமாம்
அப்போ, வாய்ச்சுவையும் நாற்றமும் புல்லாங்குழலுக்குத் தானே அதிகம் தெரியும்? ஏன் சங்கைக் கூப்புடுறா கோதை?>>
அதானெ ஏன்னு கேட்டோம்?
ஏன்னா, சங்கு கிட்ட தான் செல்வம் இருக்காம்! செல்வம் இருக்கறவங்களுக்குத் தானே மதிப்பு?
சங்கு அரையா, நின் செல்வம், சால அழகியதே! என்கிறாள், அதே பாட்டில்!>>>>>
சால அழகியதே..தெலுங்கு வாசனை வர்தே ஏமண்டி ஏமி இது?:)
என்னா செல்வம் இருக்காம் சங்கு கிட்ட?
எம்பெருமானின் எச்சிற் செல்வம் இருக்காம்!>>>>
ஓ!! இச்சிற்குத்தேவையான எச்சிற் செல்வமா? கூல்!
2:43 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகுழலை லைட்டா ஊதினாப் போதும். வாயைக் கிட்டக்க வைக்க வேண்டாம். கேப் கொடுத்து ஊதணும்.>>>
தீட்சண்யப்பார்வைப்பா!!
// அதுனால வாய்ச் சுவை தெரியாது. நாற்றம் (நறுமணம்) மட்டும் தெரியும்!//
அதும் லேசா!
//குழல்-ல எச்சில் ரொம்ப இருக்காது. அதுனால குழலுக்குச் செல்வத்தைச் சேமித்து வைக்கும் பழக்கம் இல்லை!//
புல்லாங்குழல்கொண்டுவருவான் அமுதுபொங்கித்ததும்புநல்கீதம்படிப்பான் அவ்வளோதான்!குழல் வேலைஅஷ்டே!
// ஒரு பொண்ணு சேமிச்சி வைக்கத் தானே விரும்புவா? அவ்வளவு சீக்கிரம் செலவு பண்ணூவாளா? சேர்த்து வச்சி பெருசா வேணும்-னா செலவு பண்ணுவா! :))//
:):) ஒரு பொண்ணால கூட இப்படி சிந்திக்க முடியாது ....அருமை ரவி!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteசங்கு போர்-னு வரும்போதோ, இல்லை மங்கல காரியங்களுக்கோ, எப்பவாச்சும் தான் ஊதப்படும். இருந்தாலும் அதை எப்படி ஊதணும்? வாய்க்குள் நல்லாப் பொருத்தி, கன்னம் புடைக்க பூம் பூம்-ன்னு ஒலி எழுப்பணும்.//>>>>
ம்ம்ம்ம்ம் புரியுது!!
//அத்தனை எச்சிலும் சங்குக்குள்ள போயிரும்! அத்தனை எச்சிலும் சிந்தாம உள்ளயே இருக்கும்! செல்வம் சேமிச்சி வைக்கப்பட்டிருக்கும்!
ஆக ஊதும் போது வாய்ச்சுவையும் தெரியும்.
ஊதிய பின் எச்சில் செல்வத்தால் நாற்றமும் (நறுமணமும்) தெரியும்!
போதாக் குறைக்கு எம்பெருமானின் தித்திப்புத் தீர்த்தமான எச்சில் அமுதத்தை, சங்கு பத்திரமா சேமித்தும் வைத்திருக்கும்!
அந்த திவ்ய மங்களத் தீர்த்தம் அல்லவா அந்தக் காதலிக்கு வேண்டும்! அதைப் பருகி அல்லவோ அவள் உயிர் வாழ்வாள்! அதான் சங்கினை மட்டும் கோதை கேட்கிறாள். சங்கிடம் திருமணத்துக்கு முன்னரே நட்பு செய்து கொள்கிறாள்.//
>>>>>>
இதானா விஷ்யம்?:) அதானா திருப்பவழம் தித்திக்கும் எனச்சொல்லி செவ்வாய் அருகே வருகிறாள்?:)
//இதெல்லாம் காதலிச்சுப் பாத்தா இந்நேரம் தானா மண்டையில ஏறும் மக்கா! :))//
:):):) இல்லேன்னாலும் மண்டைல ஏறும்.சொல்லித்தெரிவதில்லை........:):)
//சங்கரையா! சங்கரன் அடியேனும் உன்னை வாழ்த்துகிறேன்!
உன் செல்வம் சால அழகியதே! அன்பியதே! அமுதியதே!//
>>என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாதே!!
இந்த'சால்' புரிய வைக்க இத்தனை பாடுபட்ட ரவிக்கு மிக்க நன்றியும் மூன்றுகிலோமைபாவும் உரித்தாகுக!
//ஹரி ஓம்!//
ரங்கா ரங்கா!
3:03 AM
மாடு மேய்ச்சுக்கிட்டு இருப்பவனின் புல்லாங்குழல் சரியாப் பதில் சொல்லுமான்னு தெரியலை.
ReplyDeleteஆனால் அலங்காரப்பிரியன்கிட்டே திவ்யமாக் கையில் பிடிபட்டிருக்கும் சாதனத்துக்கு எல்லாச் சுவையும் தெரிஞ்சுதானே இருக்கணும். அதுவும் முகத்துக்குக் கிட்டே வேற இருக்கு.
சரியான பதில் இல்லைன்னாலும்கூட எனக்கு மை.பா வேணும். சொல்லிட்டேன்...ஆமா...
ஆகா...நட்சத்திரம் சூப்பராக ஜொலிக்குது ;)))
ReplyDeleteநான் ரொம்ப லேட்டு போல!! தல கே.ஆர்.எஸ்க்கு இதெல்லாம் மைபா சாப்பிடுற மாதிரி...கலக்கல் ;))
\\காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!\\
ஒரு டவுட்டு கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு காதல் மட்டும் எப்படி புனிதாமாகும்!!??
(கொளுத்தி போட்டுயிருக்கேன்)
கோபிநாத் said...
ReplyDeleteஆகா...நட்சத்திரம் சூப்பராக ஜொலிக்குது ;)))>>>வாங்க கோபி
:):)
நான் ரொம்ப லேட்டு போல!! தல கே.ஆர்.எஸ்க்கு இதெல்லாம் மைபா சாப்பிடுற மாதிரி...கலக்கல் ;))>>>
அல்வா இலலியா அவருக்கு?:)
\\\
ஒரு டவுட்டு கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு காதல் மட்டும் எப்படி புனிதாமாகும்!!??
(கொளுத்தி போட்டுயிருக்கேன்)/////
கொளுத்திப்போட்டுட்டீங்களே கோபி?:):)
7:02 AM
கோபிநாத் said...
ReplyDeleteஆகா...நட்சத்திரம் சூப்பராக ஜொலிக்குது ;)))>>>வாங்க கோபி
:):)
நான் ரொம்ப லேட்டு போல!! தல கே.ஆர்.எஸ்க்கு இதெல்லாம் மைபா சாப்பிடுற மாதிரி...கலக்கல் ;))>>>
அல்வா இலலியா அவருக்கு?:)
\\\
ஒரு டவுட்டு கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு காதல் மட்டும் எப்படி புனிதாமாகும்!!??
(கொளுத்தி போட்டுயிருக்கேன்)/////
கொளுத்திப்போட்டுட்டீங்களே கோபி?:):)
7:02 AM
துளசி கோபால் said...
ReplyDeleteமாடு மேய்ச்சுக்கிட்டு இருப்பவனின் புல்லாங்குழல் சரியாப் பதில் சொல்லுமான்னு தெரியலை.///
>>>>>ஃபுல் சேதி தெரிஞ்சகுழலாதான் இருக்கும் சுத்தி கோபியர்கள்வேற இருக்கறபோது குழல் அறியா சேதி இருக்குமா என்ன?:) என்ன சொல்றீங்க துள்சிமேடம்?
//ஆனால் அலங்காரப்பிரியன்கிட்டே திவ்யமாக் கையில் பிடிபட்டிருக்கும் சாதனத்துக்கு எல்லாச் சுவையும் தெரிஞ்சுதானே இருக்கணும். அதுவும் முகத்துக்குக் கிட்டே வேற இருக்கு.//
ஆமாம் இதுவும் சரிதான் கே ஆர் எஸ் விளக்கிட்டாரே படிச்சீங்களா?
//சரியான பதில் இல்லைன்னாலும்கூட எனக்கு மை.பா வேணும். சொல்லிட்டேன்...ஆமா...//
அட உங்களுக்கு இல்லாததா? கண்டதும் பசும் வெண்ணைகாய்சி நெய் சேர்த்து ஸ்பெஷ்லா பண்ணித்தருவேனே உங்களுக்கு? நன்றி வருகைக்கு
6:39 AM
ரொம்ப மெதுவா வந்துட்டேனோ? மைபா கிடைக்காட்டி என்ன மத்ததெல்லாம் கிடைச்சுதே. அதுவே போதும். :-)
ReplyDelete!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)
ReplyDeleteஎனக்குத் தெரியும் ஏன் என்று. ஆனால் ஏழேழு பிறவிக்கும் மைபா இலவசமாக தருவதாக சொன்ன பின் என்னுடைய வாழ்கையை நான் ரிஸ்க் எடுக்க எந்தப் பிறவியிலும் தயாராக இல்லை. :)
உண்மையில் ஆண்டாளின் பாசுரங்கள் என்னைக் கவர்ந்தவை. ஆண்டாள் உண்மையிலேயே துணிச்சலான பெண். ஆனால் இன்னொருவரின் கணவர் மேல் காதல் கொண்டதை தான் ஏற்கமுடியவில்லை. ரொம்பவும் அமெரிக்கன் பாஷன்... :P
அது சரி... ஏன் தலைப்பில் பிரெஞ்ச் கிஸ் என்று ஒரு பதம்?
ஆண்டாள் காதால் மானசீகமானது அல்லவா? பிரெஞ் கிஸ் பௌதீக ரீதியானது. இந்த பிரஞ்ச் கிஸ் எப்படி கொடுப்பது என்பதற்கு 15க்கும் மேலான விதி முறைகள் இருக்கு தெரியுமோ??? :) (நிஜமாத் தான் சொல்றேன்.) .
வேண்டுமானால் பிளையிங் கிஸ் என்று போட்டிருக்கலாம். அது ஆண்டாளின் காதலைப் போல் பௌதீக ரீதியாக தொடாமல் அதே நேரம் மானசீகமாக முத்தமிட்ட திருப்தியை தரவல்லது. :)
நட்சத்திரப் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித சுவையுடன் ஜொலிக்கிறது தோழி...
வாழ்த்துகள் பல!!
குமரன் (Kumaran) said...
ReplyDeleteரொம்ப மெதுவா வந்துட்டேனோ? மைபா கிடைக்காட்டி என்ன மத்ததெல்லாம் கிடைச்சுதே. அதுவே போதும். :-)
9:31 AM
<<<>>>> என்ன என்ன ?:) மைபா கிடைக்காட்டி என்னவா குமரா என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்தம்பி?:) மைபாவுக்காக ஒரு கூட்டமே க்யூல நிக்கறபோது?:):)
ஸ்வாதி said...
ReplyDelete!(இலவசம்!!!)
//
எனக்குத் தெரியும் ஏன் என்று. ஆனால் ஏழேழு பிறவிக்கும் மைபா இலவசமாக தருவதாக சொன்ன பின் என்னுடைய வாழ்கையை நான் ரிஸ்க் எடுக்க எந்தப் பிறவியிலும் தயாராக இல்லை. :) //
மைபான்னு சொல்வந்தாலே வரீங்களாம் மைபாவே தந்தா வராமயே போய்டுவீங்க?:)
//உண்மையில் ஆண்டாளின் பாசுரங்கள் என்னைக் கவர்ந்தவை. ஆண்டாள் உண்மையிலேயே துணிச்சலான பெண். ஆனால் இன்னொருவரின் கணவர் மேல் காதல் கொண்டதை தான் ஏற்கமுடியவில்லை. ரொம்பவும் அமெரிக்கன் பாஷன்... :P //
காதலுக்குக் கண் இல்லையே என்ன செய்ய?
//அது சரி... ஏன் தலைப்பில்பிரெஞ்ச் கிஸ் என்று ஒரு பதம்? //
ஆண்டாள் விரும்பியது அதானே? மாதவன் தன் வாய்ச்சுவையை விருப்புற்றுக்கேட்டாளே ஒருபாசுரத்தில் அது எதுல கிடைக்கும் தோழி?:)
//ஆண்டாள் காதால் மானசீகமானது அல்லவா? பிரெஞ் கிஸ் பௌதீக ரீதியானது. இந்த பிரஞ்ச் கிஸ் எப்படி கொடுப்பது என்பதற்கு 15க்கும் மேலான விதி முறைகள் இருக்கு தெரியுமோ??? :) (நிஜமாத் தான் சொல்றேன்.) .
வேண்டுமானால் பிளையிங் கிஸ் என்று போட்டிருக்கலாம். அது ஆண்டாளின் காதலைப் போல் பௌதீக ரீதியாக தொடாமல் அதே நேரம் மானசீகமாக முத்தமிட்ட திருப்தியை தரவல்லது. :)//
ஆண்டாள் காதல் ஊர் அறிந்தது குயில் மேகம் என பல அறிந்தது எல்லாத்தயும் தூது அனுப்பறா.:)
//நட்சத்திரப் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித சுவையுடன் ஜொலிக்கிறது தோழி...//நன்றி சுவாதி
வாழ்த்துகள் பல!!
//சால அழகியதே..தெலுங்கு வாசனை வர்தே ஏமண்டி ஏமி இது?:)//
ReplyDelete'சால' என்பதற்கு தமிழில் 'மிகவும்' என்றொரு பொருள் உண்டு. தமிழ் இலக்கணத்தில் 'சால', 'உரு', 'தவ' 'நனி' போன்ற சொற்களை படித்திருக்கிறேன். (உ.ம) சாலச் சிறந்தது --> மிகவும் சிறந்தது. நீங்கள் நினைப்பது போல் 'சால' தெலுங்கு சொல்லாக இருக்காது என நினைக்கிறேன். தமிழ் நன்கு அறிந்தவர்கள் விளக்கவும். நன்றி.
ஹேமா said...
ReplyDelete//சால அழகியதே..தெலுங்கு வாசனை வர்தே ஏமண்டி ஏமி இது?:)//
'சால' என்பதற்கு தமிழில் 'மிகவும்' என்றொரு பொருள் உண்டு. தமிழ் இலக்கணத்தில் 'சால', 'உரு', 'தவ' 'நனி' போன்ற சொற்களை படித்திருக்கிறேன். (உ.ம) சாலச் சிறந்தது --> மிகவும் சிறந்தது. நீங்கள் நினைப்பது போல் 'சால' தெலுங்கு சொல்லாக இருக்காது என நினைக்கிறேன். தமிழ் நன்கு அறிந்தவர்கள் விளக்கவும். நன்றி.
12:33 PM
>>>>>ஹேமா வாங்க
அது தமிழ்ச்சொல்தான் எனக்கும் தெரியும் வேண்டுமெறே பதிவர் ஒருவரை அன்பும் உரிமையுமாய் வம்புபண்ண எழுதினேன் அப்படி
மிக்க நன்றிகருத்துக்கு
வெண்சங்கின் பதில்:
ReplyDeleteமாதவன் wrigley's spearmint ச்சுயிங்கம் மெல்லுவதால் அவர் செவ்வாய் புதினாவைப் போல் மணக்கும்.
////அத்தனை எச்சிலும் சங்குக்குள்ள போயிரும்! அத்தனை எச்சிலும் சிந்தாம உள்ளயே இருக்கும்! செல்வம் சேமிச்சி வைக்கப்பட்டிருக்கும்!/////
ReplyDeleteபிழையான கருத்து என நினைக்கிறேன். காரணம், சங்கு எப்படி ஊதப்படவேண்டும் என்று முறை இருக்கிறது.
போரில் ஊதப்படுவதானாலும், பூஜையில் ஊதப்படுவதனாலும் எச்சில் உள்ளே செல்லாத வண்ணம் ஊதப்படவேண்டும் என்பது நியதி.
வாயை நன்கு கொப்பளித்து சுத்தி செய்த பின், வாயில் எந்த மணமும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொண்ட பிறகே ஊத வேண்டும்.
சங்கினை காலையும், மாலையும் இருமுறை கங்கை முதலிய புனித நீராலோ, சுத்தமான ஜலத்தாலோ நன்கு கழுவ வேண்டும். பின் பச்சை கற்பூரம் கரைத்த நீரை விட்டு சுத்தமாக அலம்ப வேண்டும். இந்த நியதி நிச்சயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே சாத்திரம்.
அதுவும் போர்சங்கை துர்கையில் காலில் வைத்து, பின் அதில் நறுமணங்கமழ் நீரை ஊற்றி துர்கையின் பாதத்தில் அபிஷேகம் செய்து எடுப்பது முறையாக இருந்திருக்கிறது. எனவே எச்சில் இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் பணிவான கருத்து.
அன்புடன்,
சாரங்கபாணி
12:56 PM
ReplyDeleteAnonymous said...
வெண்சங்கின் பதில்:
மாதவன் wrigley's spearmint ச்சுயிங்கம் மெல்லுவதால் அவர் செவ்வாய் புதினாவைப் போல் மணக்கும்.
2:14 PM >>>>>>:):) கற்பனை கொடிகட்டிப்பறக்கறதுபோல?:)
Anonymous said...
ReplyDelete////அத்தனை எச்சிலும் சங்குக்குள்ள போயிரும்! அத்தனை எச்சிலும் சிந்தாம உள்ளயே இருக்கும்! செல்வம் சேமிச்சி வைக்கப்பட்டிருக்கும்!/////
பிழையான கருத்து என நினைக்கிறேன். காரணம், சங்கு எப்படி ஊதப்படவேண்டும் என்று முறை இருக்கிறது.
போரில் ஊதப்படுவதானாலும், பூஜையில் ஊதப்படுவதனாலும் எச்சில் உள்ளே செல்லாத வண்ணம் ஊதப்படவேண்டும் என்பது நியதி.
வாயை நன்கு கொப்பளித்து சுத்தி செய்த பின், வாயில் எந்த மணமும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொண்ட பிறகே ஊத வேண்டும்.
சங்கினை காலையும், மாலையும் இருமுறை கங்கை முதலிய புனித நீராலோ, சுத்தமான ஜலத்தாலோ நன்கு கழுவ வேண்டும். பின் பச்சை கற்பூரம் கரைத்த நீரை விட்டு சுத்தமாக அலம்ப வேண்டும். இந்த நியதி நிச்சயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே சாத்திரம்.
அதுவும் போர்சங்கை துர்கையில் காலில் வைத்து, பின் அதில் நறுமணங்கமழ் நீரை ஊற்றி துர்கையின் பாதத்தில் அபிஷேகம் செய்து எடுப்பது முறையாக இருந்திருக்கிறது. எனவே எச்சில் இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் பணிவான கருத்து.
அன்புடன்,
சாரங்கபாணி
<<<<<<<<<<<<<<<<<<<<<
வாங்கோ சாரங்கபாணி
அப்படிச்சொன்னவர் உங்களுக்கு பதில் சொல்லவருவார்னு நினைக்கிறேன் உங்க கருத்தும் சிந்திக்கவேண்டிய ஒன்றே
நன்றி வருகைக்கு
இங்கே தான் பின்னூட்டங்களுக்கும் பின்னூட்டம் வருவதைப் பார்க்கிறேன். தலைப்பு அப்படி இழுக்குதில்லே... :)
ReplyDelete//'சால' தெலுங்கு சொல்லாக இருக்காது என நினைக்கிறேன். தமிழ் நன்கு அறிந்தவர்கள் விளக்கவும்.//
ReplyDeleteஹிஹி
சால என்பது தமிழும் தெலுங்கும் ஆன சொல்.
சால பாக உந்தி-ன்னு அவிங்க சொல்லுவாய்ங்க!
சால உறு தவ நனி கூர் கழி-ன்னு தமிழிலும் உரிச்சொல்லாய் உண்டு!
பெயருக்கும், வினைக்கும், குணம் காட்ட வருவது உரிச்சொல். Adjective. சாலவும் பேசினான்-ன்ன ரொம்பவே பேசினான். நனி நன்று-ன்னா மிகவும் நன்று!
தமிழிலிருந்து சுந்தரத் தெலுங்குக்குப் போன பல சொற்களில் சால என்பதும் ஒன்று!
நகுதல்=நவ்வு (சிரித்தல்)-ன்னு இப்படிச் சொற் பரிமாற்றங்கள் நிறைய!
ஆண்டாள் பாசுரங்கள் இதுவரையும் படிக்க கிடைக்கவில்லை ஓரிரு பாடல்கள் கேள்விஞானம் மற்றும் வாசிப்புகளில் மட்டுமே அறிந்திருக்கிறேன் ...
ReplyDeleteகாதலை யார் சொன்னாலும் அது கவிதைகள் ஆகத்தான் இருக்கிறது இதில் கடவுளை காதலித்த ஆண்டாளின் காதல் பாடல்கள் என்ன சாதாரணமாகவா இருக்கும்...:)
கலக்கல்...:)
ReplyDeleteபதிவும் பின்னூட்டங்களும்...
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteரொம்ப மெதுவா வந்துட்டேனோ? மைபா கிடைக்காட்டி என்ன மத்ததெல்லாம் கிடைச்சுதே. அதுவே போதும். :-)//
என்ன இப்படிச் சொல்டீங்க குமரன்? மை.பா மொத்தமும் என் கிட்ட தானே இருக்கு!
இப்படி அடியார் பிரசாத லைன்-ல நில்லுங்க! ஒரு மை.பா. பிரசாதம் ரெண்டு டாலர் தான்! ஒருத்தருக்கு ரெண்டு மை.பா மேல கெடையாது!
பின்னூட்ட உத்ஸவம் பண்றவங்களுக்கு பெரிய மை.பா உண்டு :))
//ஒரு டவுட்டு கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு காதல் மட்டும் எப்படி புனிதாமாகும்!!??//
ReplyDeleteமாப்பி கோப்பி
சரியாப் பாரு அக்கா ஸ்டேட்மென்டை!
கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு, காதலைப் புனிதம்-ன்னு சொல்லலை! "பெரிய புனிதம்"-ன்னு சொல்லியிருக்காங்க யக்கா! புரியுதா? அக்காவா? கொக்காவா? :))
ஸ்வாதி. ஆண்டாள் பாசுரங்களைப் பார்த்தால் அவள் காதல் ரொம்பவும் உடல்சார்ந்ததாகத் தான் தோன்றுகிறது; மனம் சார்ந்த காதல் பொங்கி வழிந்து உடல் சார்வதை அவள் பாசுரங்களில் பார்க்க முடிகிறது.
ReplyDeleteமுடிந்தால் இந்தப் பதிவைப் பாருங்கள்.
http://godhaitamil.blogspot.com
அடடா. மை.பா. கிடைக்கவில்லை என்று வருத்தம் தான் வெட்கம்+வெட்கம் அக்கா. ஆனாலும் பின்னூட்டங்களைப் படித்தே திருப்தி கிடைத்தது என்று சொன்னேன். அவ்வளவு தான்.
ReplyDeleteடபுள் வெட்கம் படும் நீங்கள் இந்த மாதிரி தலைப்பு வைத்தது தான் இங்கே சிலருக்கு வெட்கமாக இருக்கிறது போல. :-)
//மாதவன் wrigley's spearmint ச்சுயிங்கம் மெல்லுவதால் அவர் செவ்வாய் புதினாவைப் போல் மணக்கும்//
ReplyDeleteஸ்பியர்மின்ட்டும் நாறுமோ, பப்புள்கம் நாறுமோ?
டிட்-பிட்ஸின் செவ்வாய் தான் தித்திப்பாய் இருக்குமோ-ன்னு மாத்திப் பாடிறலாமா? :)
எங்கள் மாலவன் சுவை வெறும் புதினாச் சுவை அல்ல! புனிதாச் சுவை! :)
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு சுவை! தேன் கலந்து்,பால் கலந்து,செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!
@சாரங்கபாணி ஐயா!
ReplyDeleteவணக்கம்!
//பிழையான கருத்து என நினைக்கிறேன். காரணம், சங்கு எப்படி ஊதப்படவேண்டும் என்று முறை இருக்கிறது//
ஓகோ! அப்படியா?
//வாயை நன்கு கொப்பளித்து சுத்தி செய்த பின், வாயில் எந்த மணமும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொண்ட பிறகே ஊத வேண்டும்//
போரில் இப்படி எல்லாம் பாத்து பாத்து, தந்த சுத்தி எல்லாம் பண்ணி ஊதினா, அதுக்குள்ளாற போரே முடிஞ்சிறாதா? :)
//சங்கினை காலையும், மாலையும் இருமுறை கங்கை முதலிய புனித நீராலோ, சுத்தமான ஜலத்தாலோ நன்கு கழுவ வேண்டும்//
ஹா ஹா ஹா
ஆலயப் பூசைக்கு வேணும்னா நீங்க சொல்லுறது சரி!
ஆனா அது கூட அர்ச்சகருக்குத் தான்! ஆண்டவனுக்கு இல்லை!
இங்கே சங்கை ஊதுவது ஆண்டவன்!
அதைக் கேட்பது அவனை ஆண்டவள்!
இங்கே நடப்பது பூஜை அல்ல!
இங்கே நிகழ்வது காதல்!
தாங்கள் அடியேனைத் தவறாக எண்ணவில்லை என்றால் ஒன்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்!
நியமங்களை ஏற்றி ஏற்றிக், கோதையின் அழகான காதலை,
நாம் ஆசார Work Instruction ஆக்கக் கூடாது!
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே என்கிறாளே அதே பாட்டில்? அவன் எச்சிலைத் தானே தீர்த்தம் என்கிறாள்! தங்கள் பாஷையில் வேண்டுமானால் அடியேன் அதை எச்சிற் பிரசாதம் என்பேன்!
கோதை காதல் வித்தகி! தத்துவ வித்தகி! இரண்டுமே!
நாராயணனே நமக்கே பறை தருவான் என்னும் போது தத்துவம் உரைப்பாள். வாய்த் தீர்த்தம் கேட்கும் போது காதல் உரைப்பாள்!
காதலைப் போன்ற உயர்ந்த தத்துவமோ புனிதமோ வேறொன்றில்லை! காதலே சரணாகதி என்னப்பட்டதாலன்றோ, ஆழ்வார்களும் நாயகி ஆகி, அவன் வாயமுதம் வேண்டினார்கள்!
ஆண்டவன் சங்கிலும் அவன் எச்சில் உண்டு!
அடியார் சிந்தையிலும் அவன் எச்சில் உண்டு!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினால் இன்னும் விளங்கும்! ஹரி ஓம்!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆண்டாள் பாசுரங்களைப் பார்த்தால் அவள் காதல் ரொம்பவும் உடல்சார்ந்ததாகத் தான் தோன்றுகிறது; மனம் சார்ந்த காதல் பொங்கி வழிந்து உடல் சார்வதை..//
ஸ்வாதி
குமரன் தந்த சுட்டியை வாசித்துப் பாருங்கள்! அந்த விளக்கங்களில், ஆண்டாளின் ஆழ்ந்த அன்பை நீங்கள் வாசிக்க முடியும்! காதலில் உடல் சார்ந்த, மனம் சார்ந்த என்ற வேறுபாடே இல்லை!
மனம் ஒன்றி, உடல் ஒன்றா விட்டால் அது கடமை!
உடல் ஒன்றி, மனம் ஒன்றா விட்டால், அது காமம்!
உடலும் மனமும் ஒன்றினால் தானே அது காதல்? அது சரணாகதி?
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடலையும் மனத்தையும் சேர்த்தே இழுக்கிறாள் கோதை!
உள்ளமே கோயில்(கருவறை) ஊனுடம்பு ஆலயம் என்பது திருமந்திரம்! கருவறை மட்டுமே ஆலயம் ஆகி விடாது! ஆலயம் மட்டுமே கருவறை ஆகி விடாது!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅடடா. மை.பா. கிடைக்கவில்லை என்று வருத்தம் தான் வெட்கம்+வெட்கம் அக்கா.//
வெட்கம்+வெட்கம் அக்கா-வா?
அப்படின்னா?
என்னாக்கா இது?
//நீங்கள் இந்த மாதிரி தலைப்பு வைத்தது தான் இங்கே சிலருக்கு வெட்கமாக இருக்கிறது போல. :-)//
அய்யோ, எனக்கே வெட்கமா இருக்கு-ன்னா பாத்துக்குங்களேன்! :))
@ சாரங்கபாணி
ReplyDeleteகே. ஆர். கண்ணபிரான் சொன்னது போல அது வாயமுதம்தான்.
ஆனால் கே.ஆர். அவர்கள் சொன்னதிலும் ஒரு உறுத்தல் உண்டு.
இந்த பாடல் வரிசையில் பத்தாவது பாடலில், இந்த சங்கைப்பற்றியும், பத்மநாபனைப்பற்றியும் ஆய்ந்து அறிபவர் சாமீபத்தை அடைவர் என்று சொல்லப்படுகிறது. எனவே விடை இதுதான் என சட்டென்று சொல்லிவிட முடியாது.
ஆண்டாளுடையது இராகபக்தி. அந்த நிலையில் அவளது பாவத்தை அவ்வளவு சுலபத்தில் நாம் அறிந்து விட முடியாது என்று நினைக்கிறேன். அவனன்றி எனக்கு வாழ்வே இல்லை எனும் நிலை வந்தால் வேண்டுமானால் ஆண்டாளின் சொல் புரியலாம்.
வித்யா. நீங்கள் சொல்வது இந்தப் பாசுரமா?
ReplyDeleteபாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதைத் தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே
இந்த வகையில் பாஞ்சசன்னியமாம் பெருஞ்சங்கின் பெருமையை, அது பத்மநாபனோடு கொண்ட நெருக்கத்தை விளக்கிய புதுவை நகராம் வில்லிபுத்தூரில் வாழும் பெரும் புகழ் கொண்ட பட்டர்பிரான் திருமகளாகிய கோதை சொன்ன இந்த பத்து பாடல்களும் பொருளோடு சொல்லி வணங்குபவர்கள் எல்லாரும் இறைவனுக்கு நெருக்கமான தொண்டராய் இருப்பர்.
http://godhaitamil.blogspot.com/2005/12/80-7.html
சால என்பது தமிழ்ச் சொல்தான்.
ReplyDelete'சால மிகுத்துப் பெய்யின்'ன்னு இருக்கே.
ஆஹா.... pain ன்னு இருக்கா. அப்ப வெள்ளைக்காரன் நமக்கிட்டே இருந்து சுட்டுட்டான்னு ஒரு கட்சியும், வள்ளுவர்தான் ஆங்கிலம் படிச்சுருந்தார்ன்னு ஒரு கட்சியும் கிளம்பி வாங்க.
பட்டிமன்றம் நடத்தலாம்.
@Kumaran ji
ReplyDeleteஆய்தல் எனும் சொல் நன்கு ஆராய்ந்து அறிதல் எனும் பொருள்படும். ஏத்துதல் எனும் சொல் மிகவும் ஆழமானது. மனனம் எனும் சமஸ்க்ருத சொல்லிற்கு சமமானது. நாம் தற்போது உபயோகப்படுத்தும் மனப்பாடம் எனும் பொருள் மனனம் ஆகாது. சித்தத்தில் அதன் உணர்வோடு பதிதலை மனனம் என்பர்.
அணுக்கர் என்பது சாமீப நிலைக்கு சொல்லப்படுவது. மிக நெருக்கமானவர் என்று சொல்லப்படுவது.
அணுக்கத்தொண்டர் என்பவர் சாமீபத்தை அடைந்தவராக சொல்லப்படுவர். இதற்கு மேலும் இறைவனை நெருங்க முடியாத அளவிற்கு நெருங்கியவர் என்று பொருள் படும்.
இராகபக்தியில் நின்று மஹாபாவத்தில் ஆண்டாள் சொல்லிய சொல்லின் பொருள் அவ்வளவு சட்டென்று சொல்லிவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை.
அவனைத் தவிர பிறிதொன்றில் நாட்டமில்லாத நிலை வரும்போது சங்கைப் பற்றியும், அவனைப் பற்றியும் அறிய முடியும், ஆண்டாளை போல்.
அது வரை சொல்லப்படும் பொருள் மிக மேம்போக்காகத்தான் இருக்கும் என கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. சொல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி!
//துளசி கோபால் said...
ReplyDelete'சால மிகுத்துப் பெய்யின்'ன்னு இருக்கே.
ஆஹா.... pain ன்னு இருக்கா. அப்ப வெள்ளைக்காரன் நமக்கிட்டே இருந்து சுட்டுட்டான்னு//
ஹா ஹா ஹா!
டீச்சர் எந்தக் கட்சியோ, அதே கட்சி தான் நானும், பட்டிமன்றத்துல! இப்பவே சொல்லித் (மைபா) துண்டு போட்டுட்டேன்! :))
//vidhya (vidhyakumaran@gmail.com) said...
ReplyDeleteஆனால் கே.ஆர். அவர்கள் சொன்னதிலும் ஒரு உறுத்தல் உண்டு.
இந்த பாடல் வரிசையில் பத்தாவது பாடலில், இந்த சங்கைப்பற்றியும், பத்மநாபனைப்பற்றியும் ஆய்ந்து அறிபவர் சாமீபத்தை அடைவர் என்று சொல்லப்படுகிறது//
உறுத்தல் இருப்பதும் நன்று தானே வித்யா? உறுத்து வந்து ஊட்டுபவனும் கண்ணனே அல்லவா? :))
//எனவே விடை இதுதான் என சட்டென்று சொல்லிவிட முடியாது//
அதான் விடையைத் தேடாது, காதலைத் தேடச் சொல்கிறாள் ஆண்டாள் :)
நீங்கள் சொல்வது உண்மை தான் வித்யா!
சாமீப்யம் என்னும் அணுக்க நிலை இப்பாசுரத்தை "அனுபவிக்க அனுபவிக்கக்" கிட்டிடும்!
என்ன சொல்கிறாள் பாருங்கள்?
//கோதைத் தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே//
தனித்தனியாய்ச் சொல்லையும், பொருளையும், ஆராயச் சொல்லவில்லை அவள்! அதை ஆராய்ந்தால் வெறும் விடை போல் ஒன்று வேண்டுமானால் கிட்டும்!
அவள் ஈரைந்தும் ஆய்ந்தேத்தத் சொல்கிறாள். அதாச்சும் பத்து பாசுரங்களின் முழுமையையும் ஆய்ந்தேத்தத் சொல்கிறாள்.
அந்தப் பத்தின் முழுமை என்ன? = எம்பெருமான் வாயமுதம்!
அது "மட்டுமே" வேணும் என்று நம் மனம் ஆய்ந்தேத்தினால், அவன் அணுக்கமாகிய சாமீப்யம் கிட்டி விடும்!
எடுத்தவுடனேயே சாயுஜ்ஜியம் வேண்டாது சாமீப்யம் கேட்கிறாள்! ஒரேயடியாகக் கலந்து விட்டால் அனுபவம் கிடைக்காது, அவளுக்கும், அவளைப் பின்பற்றும் நமக்கும்! அதனால் தான் அவனைக் கலந்து கலந்து உறவாடும் சாமீப்யம் கேட்கின்றாள் கோதை!
உபாசனம் நாம யத சாஸ்த்ரம்
உபாசஸ்ய அர்த்தஸ்ய விஷயிக் க்ரணேன
சாமீப்யம் உபகாம்ய தைல தராவாத்
என்று அவன் சாமீப்ய அணுக்க உபசானைச் சுகம் பேசப்படுகிறது!
பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே, காதல் என்னும் ஆண்டாள் காட்டும் உபாசனையால்!
அடடே தூங்கி எழுந்து வந்தால் இவ்வளவு பின்னூட்டங்களா? சூடா காபிகுடிச்சிவந்து பதில்போடறேன் இருங்க!
ReplyDeleteஸ்வாதி said...
ReplyDeleteஇங்கே தான் பின்னூட்டங்களுக்கும் பின்னூட்டம் வருவதைப் பார்க்கிறேன். தலைப்பு அப்படி இழுக்குதில்லே... :)
5:06 PM
>>>>>>கண்ணபிரான் ரவிசங்கரின் மாதவிப்பந்தலுக்குப்போய்ப்பாருங்க சுவாதி இதெல்லாம் ஒண்ணுமில்லன்னு ஆகிடும்:) ஆனா நீங்க சொல்றார்போல தலைப்பும் கொஞ்சம் இழுக்கறது உண்மை!!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//'சால' தெலுங்கு சொல்லாக இருக்காது என நினைக்கிறேன். தமிழ் நன்கு அறிந்தவர்கள் விளக்கவும்.//
>>>>>>என்ன ரவி சால நல்லதமிழ்ச்சொல்தான் .
அக்கினிசாலம்.
நெருப்பினாற் செய்யும் சாலவித்தை அதாவது ஜாலவித்தை ஜா இங்கு சா ஆனது அஷ்டே!
//ஹிஹி
சால என்பது தமிழும் தெலுங்கும் ஆன சொல்.
சால பாக உந்தி-ன்னு அவிங்க சொல்லுவாய்ங்க!
சால உறு தவ நனி கூர் கழி-ன்னு தமிழிலும் உரிச்சொல்லாய் உண்டு!
பெயருக்கும், வினைக்கும், குணம் காட்ட வருவது உரிச்சொல். Adjective. சாலவும் பேசினான்-ன்ன ரொம்பவே பேசினான். நனி நன்று-ன்னா மிகவும் நன்று!//
சால்ஜாப்பு இதுல சேருமா?:)
//தமிழிலிருந்து சுந்தரத் தெலுங்குக்குப் போன பல சொற்களில் சால என்பதும் ஒன்று!
நகுதல்=நவ்வு (சிரித்தல்)-ன்னு இப்படிச் சொற் பரிமாற்றங்கள் நிறைய!//
நகுதல் கன்னடத்திலும் வர்து மலையாளக்கரைதல் அழுகையாக நமக்கு... நிறைய சொல்லல்லாம் இப்படி
நன்றி விவரமாய் சொல்வதற்கு ரவி.
9:39 PM
தமிழன்...(கறுப்பி...) said...
ReplyDeleteஆண்டாள் பாசுரங்கள் இதுவரையும் படிக்க கிடைக்கவில்லை ஓரிரு பாடல்கள் கேள்விஞானம் மற்றும் வாசிப்புகளில் மட்டுமே அறிந்திருக்கிறேன் ...
காதலை யார் சொன்னாலும் அது கவிதைகள் ஆகத்தான் இருக்கிறது இதில் கடவுளை காதலித்த ஆண்டாளின் காதல் பாடல்கள் என்ன சாதாரணமாகவா இருக்கும்...:)
9:57 PM>>>>வாங்க தமிழன் கறுப்பி!
ஆண்டாள்பாசுரங்கள் வலையிலயே இருக்கே! ஆனா நல்லா அர்த்தம் உணர்ந்துபடிச்சா அதை மிகவும் அனுபவிக்கலாம் நன்றி வருகைக்கு
தமிழன்...(கறுப்பி...) said...
ReplyDeleteகலக்கல்...:)
பதிவும் பின்னூட்டங்களும்...
9:58 PM
>>>>>>>காரணம் நீங்க எல்லாரும்தான் நன்றிமிக
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ரொம்ப மெதுவா வந்துட்டேனோ? மைபா கிடைக்காட்டி என்ன மத்ததெல்லாம் கிடைச்சுதே. அதுவே போதும். :-)//
என்ன இப்படிச் சொல்டீங்க குமரன்? மை.பா மொத்தமும் என் கிட்ட தானே இருக்கு! >>>>>
ஹலோ ரவி?:) நான் இன்னமும் செய்யவே ஆரம்பிக்கல எப்படி அது உங்ககிட்ட வந்தது?:)
!
//பின்னூட்ட உத்ஸவம் பண்றவங்களுக்கு பெரிய மை.பா உண்டு //
:):) அல்வா கொடுக்கறீங்க ரவி இப்படிச்சொல்லி:)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஒரு டவுட்டு கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு காதல் மட்டும் எப்படி புனிதாமாகும்!!??//
மாப்பி கோப்பி
சரியாப் பாரு அக்கா ஸ்டேட்மென்டை!
கடவுளாவது, புனிதமாவதுன்னு சொல்லிட்டு, காதலைப் புனிதம்-ன்னு சொல்லலை! "பெரிய புனிதம்"-ன்னு சொல்லியிருக்காங்க யக்கா! புரியுதா? அக்காவா? கொக்காவா? :))
>>>>>>>>>>>>:):):) மாட்ட்டிவிடாதீங்கப்பா நான் ஏதோ ஆண்டாள்மேல் உள்ளபக்தில சொன்னேன் அப்படி!
குமரன் (Kumaran) said...
ReplyDeleteஸ்வாதி. ஆண்டாள் பாசுரங்களைப் பார்த்தால் அவள் காதல் ரொம்பவும் உடல்சார்ந்ததாகத் தான் தோன்றுகிறது; மனம் சார்ந்த காதல் பொங்கி வழிந்து உடல் சார்வதை அவள் பாசுரங்களில் பார்க்க முடிகிறது
>>>>>>>>>>>>>>ஆமாம் குமரன்....ஆண்டாள் காதலில் போலித்தனம் கிடையாது பெண்மனத்தில் காதல் முதலில் தோன்றினால் என்னாகும் என்பதை பட்டவர்த்தனமாய் விளக்குகிறாள் அதை ஒரு பெண்ணால் அதிகம் உணரமுடியும்.....அண்ணல் உடுத்திய ஆடையைத்தன்மேல் வீசசொல்கிறாள் அத்தனை விரகமெனப்பாடலில் தெரிவிக்கிறாள்!
100 தடா மைசூர்பா
ReplyDelete101
ReplyDeleteஷைலு அக்காவின் நட்சத்திரோத்ஸவத்துக்கு மொய் :)
சங்கரையா ப்ரெஸென்ட்!
ReplyDeleteஅத்தனை பின்னூட்டங்களுக்கும் ஒரு ஃப்ளையிங் கிஸ்!
சரியான விடை:
புல்லாங்குழலை கோபியரிடமே விட்டு விட்டு வந்துவிட்டார் எனப் படித்திருக்கிறேன்.
அதனால், இருக்கின்ற சங்கைக் கேட்டிருப்பாளோ!
குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅடடா. மை.பா. கிடைக்கவில்லை என்று வருத்தம் தான் வெட்கம்+வெட்கம் அக்கா. ஆனாலும் பின்னூட்டங்களைப் படித்தே திருப்தி கிடைத்தது என்று சொன்னேன். அவ்வளவு தான். >>>>
ஆனாலும் மைபா குமரனுக்கு உண்டு!
/டபுள் வெட்கம் படும் நீங்கள் இந்த மாதிரி தலைப்பு வைத்தது தான் இங்கே சிலருக்கு வெட்கமாக இருக்கிறது போல. :-)//
எனக்கும் வெட்கம்தான் ஆனாலும் ஆண்டாளின் துணிச்சலான பாசுரவரிகளைப்பார்த்ததும் ஷை கான்! போயிந்தி குமரன்!!
10:08 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//மாதவன் wrigley's spearmint ச்சுயிங்கம் மெல்லுவதால் அவர் செவ்வாய் புதினாவைப் போல் மணக்கும்//
/////ஸ்பியர்மின்ட்டும் நாறுமோ, பப்புள்கம் நாறுமோ?
டிட்-பிட்ஸின் செவ்வாய் தான் தித்திப்பாய் இருக்குமோ-ன்னு மாத்திப் பாடிறலாமா? :)////
கண்ணன் 2008!!
///எங்கள் மாலவன் சுவை வெறும் புதினாச் சுவை அல்ல! புனிதாச் சுவை! :)///
புனிதாவா?:0 யார் அது?:) காலைப்பார்த்துப்போடுங்க தம்பி!!
/ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு சுவை! தேன் கலந்து்,பால் கலந்து,செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!///
தயிர் வெண்ணை பால் மணக்கும் திருச்சுவை!
10:10 PM
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஆண்டவன் சங்கிலும் அவன் எச்சில் உண்டு!
அடியார் சிந்தையிலும் அவன் எச்சில் உண்டு!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினால் இன்னும் விளங்கும்! ஹரி ஓம்!/////
அனுபவமில்லாத ஆண்டாள் அரசல்புரசலாய் தெரிந்து கேட்டதே இப்படீன்னாஆஆஆ?:))
10:31 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete?
//ஆண்டாள் காதால் மானசீகமானது அல்லவா? பிரெஞ் கிஸ் பௌதீக ரீதியானது. இந்த பிரஞ்ச் கிஸ் எப்படி கொடுப்பது என்பதற்கு 15க்கும் பாருங்கள்! அந்த விளக்கங்களில், ஆண்டாளின் ஆழ்ந்த அன்பை நீங்கள் வாசிக்க முடியும்! காதலில் உடல் சார்ந்த, மனம் சார்ந்த என்ற வேறுபாடே இல்லை!
மனம் ஒன்றி, உடல் ஒன்றா விட்டால் அது கடமை!
உடல் ஒன்றி, மனம் ஒன்றா விட்டால், அது காமம்!
உடலும் மனமும் ஒன்றினால் தானே அது காதல்? அது சரணாகதி?
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடலையும் மனத்தையும் சேர்த்தே இழுக்கிறாள் கோதை!
உள்ளமே கோயில்(கருவறை) ஊனுடம்பு ஆலயம் என்பது திருமந்திரம்! கருவறை மட்டுமே ஆலயம் ஆகி விடாது! ஆலயம் மட்டுமே கருவறை ஆகி விடாது!///
மனம் நினைத்தை செயலில் சொல்லி காட்டியவள் கோதை இல்லாவிட்டால் மனம்விரும்பியதென்று அன்று இறைவனுக்கு தொடுத்த மாலையை தானேஅணிந்துபார்க்கத்துணிந்திருப்பாளா? ஆண்டாளின் சிறப்பே அவளது எல்லையில்லா தைரியம்! நேர்ம்மையான அறைகூவல்!!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//குமரன் (Kumaran) said...
அடடா. மை.பா. கிடைக்கவில்லை என்று வருத்தம் தான் வெட்கம்+வெட்கம் அக்கா.//
வெட்கம்+வெட்கம் அக்கா-வா?
அப்படின்னா?
என்னாக்கா இது?
//நீங்கள் இந்த மாதிரி தலைப்பு வைத்தது தான் இங்கே சிலருக்கு வெட்கமாக இருக்கிறது போல. :-)//
அய்யோ, எனக்கே வெட்கமா இருக்கு-ன்னா பாத்துக்குங்களேன்! :))
11:13 PM
>>>>>>>>>>>>>>>>..இதெல்லாம் ஓவரா தெரில்ல ரவி?:)
சாரங்கபாணி
ReplyDeleteகே. ஆர். கண்ணபிரான் சொன்னது போல அது வாயமுதம்தான்.
ஆனால் கே.ஆர். அவர்கள் சொன்னதிலும் ஒரு உறுத்தல் உண்டு.
இந்த பாடல் வரிசையில் பத்தாவது பாடலில், இந்த சங்கைப்பற்றியும், பத்மநாபனைப்பற்றியும் ஆய்ந்து அறிபவர் சாமீபத்தை அடைவர் என்று சொல்லப்படுகிறது. எனவே விடை இதுதான் என சட்டென்று சொல்லிவிட முடியாது.
ஆண்டாளுடையது இராகபக்தி. அந்த நிலையில் அவளது பாவத்தை அவ்வளவு சுலபத்தில் நாம் அறிந்து விட முடியாது என்று நினைக்கிறேன். >>>>>>>>>>>>>.வாங்க வித்யா சரியாகச் சொன்னீர்கள்
வலம்புரிப் பதிவில் எனக்குக் கிடைத்த செய்தி இது!
ReplyDeleteபணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு.
புல்லாங்குழல் பிறகுதான்.
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,
ஊனும் உறக்கமும் இந்த சங்குக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ... சங்கரையாவே.... பெரிது!
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டல்கால்
சங்கை விட்டு எப்போதோ எடுக்கும் புல்ல்லாங்குழலை நாடுவரோ!@
என்ன அக்கா, நான் முதல் பின்னூட்டம் போட்டா நிலமை எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? இதுக்கே தனியா ஒரு ரவுண்டு மைபா பார்சேல்.
ReplyDeleteரீச்சர்,
ReplyDeleteஅவரு பெயின் அப்படின்னு லேசாச் சொன்னதைப் பெய்யின் அப்படின்னு வலிக்கும் அள்வு அழுத்தினால் நியாயமா? :)
//எனக்கும் வெட்கம்தான் //
ReplyDeleteநெசமாவா??
//:):) அல்வா கொடுக்கறீங்க ரவி இப்படிச்சொல்லி:)//
யக்கா... கடேசீல நீங்களும் அதான்க்கா குடுக்கறீங்க!
VSK said...
ReplyDeleteவலம்புரிப் பதிவில் எனக்குக் கிடைத்த செய்தி இது!
பணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு.
புல்லாங்குழல் பிறகுதான்.
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,
ஊனும் உறக்கமும் இந்த சங்குக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ... சங்கரையாவே.... பெரிது!
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டல்கால்
சங்கை விட்டு எப்போதோ எடுக்கும் புல்ல்லாங்குழலை நாடுவரோ!@
8:30 >>>>வாங்க டாக்டர் சங்கர்குமார்!! சஙகு தானே பாலாடையாய் முதல்ல குழந்தை வாய்க்குப்போறது>அதனால சங்குக்கே முதலிடம் எனலாமா? உங்க கருத்துக்கு நன்றி
இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஎன்ன அக்கா, நான் முதல் பின்னூட்டம் போட்டா நிலமை எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? இதுக்கே தனியா ஒரு ரவுண்டு மைபா பார்சேல்.
8:57 AM
>>>>>>>>>>>ராசியான கைதான்
மைபாவெல்லாம் கொத்சுக்கே!!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete100 தடா மைசூர்பா
7:00 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
101
ஷைலு அக்காவின் நட்சத்திரோத்ஸவத்துக்கு மொய் :)
7:01 AM
<<<<<<<<<<<<<<<,,அட்டட்டா தம்பிக்குன்னு தான் இபடி தடான்னு சொல்லல்லாம் தோணும்பா:) உங்க அன்பிக்கில்லை தடா இங்க!!!
இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteரீச்சர்,
அவரு பெயின் அப்படின்னு லேசாச் சொன்னதைப் பெய்யின் அப்படின்னு வலிக்கும் அள்வு அழுத்தினால் நியாயமா? :)
8:58 AM
>>>>>கொத்சு.....சிரிப்புதாங்கல:)
கவிநயா said...
ReplyDelete//எனக்கும் வெட்கம்தான் //
நெசமாவா??
//:):) அல்வா கொடுக்கறீங்க ரவி இப்படிச்சொல்லி:)//
யக்கா... கடேசீல நீங்களும் அதான்க்கா குடுக்கறீங்க!
9:09 AM
>>>>>>>>>>>>>>.இன்னா கண்ணு இப்டி சொல்லிப்புட்டே இப்போவே இச்மண்ட்..ச்செசே...பதிவுக்கு ஏத்தமாதிரி வார்த்தை வர்து..:0 ரிச்மண்ட் வந்து மைபா தந்துடறேன் என்ன?:)
அவருக்கென்ன....மயிலிறகுன்னு லேசாச் சொல்லிட்டார். நமக்கு வலி கூடுதல். அதான் அழுத்திட்டேன்:-)))))
ReplyDeleteதுளசி கோபால் said...
ReplyDeleteஅவருக்கென்ன....மயிலிறகுன்னு லேசாச் சொல்லிட்டார். நமக்கு வலி கூடுதல். அதான் அழுத்திட்டேன்:-)))))
9:31 AM
<<<<<<<<<<<<<<<<<:):):)
துளசிமேடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..கலக்கல்ஸ்!!!!
//துளசி கோபால் said...
ReplyDeleteஅவருக்கென்ன....மயிலிறகுன்னு லேசாச் சொல்லிட்டார். நமக்கு வலி கூடுதல். அதான் அழுத்திட்டேன்:-)))))//
டீச்சர், நீங்க சொல்லுறது தான் சரி!
அப்பண்டம் சால மிகுத்தால் என்னவாகும்?
வண்டியின் அச்சு இறும்!
அப்பாலிக்கா, தூக்க முடியாமத் தூக்கிப் பெயின் தான் வரும்! :)
சால மிகுத்துப் Pain என்பதே சரி! டீச்சருக்கே என் ஓட்டு!
கொத்ஸ் உமக்கு மை.பா பிரசாதம் கிடையாது! :)
அட..அட..அட....120 பின்னூட்டங்களா ?சூப்பர் அக்கா..
ReplyDeleteதலைப்பு வச்சாலும் வச்சீங்க..கேயாரெஸ் இங்கேயே குடியிருக்கார்.. :P
(அப்பாடா..வத்தி வச்சாச்சு..இன்னிக்கு நிம்மதியாத் தூக்கம் போகும் :)
//எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteதலைப்பு வச்சாலும் வச்சீங்க..கேயாரெஸ் இங்கேயே குடியிருக்கார்.. :P//
ஆமா...கோதை-ன்னு தலைப்புல இருக்குல்ல? :)
//அப்பாடா..வத்தி வச்சாச்சு..இன்னிக்கு நிம்மதியாத் தூக்கம் போகும் :)//
வத்தி வச்சாப்பாரு வெடிக்கிற சத்தத்துல நீ எப்படித் தூங்கற-ன்னு நானும் பாக்குறேன் ரிசானு, பாக்குறேன்! :))
French kiss'ல உதட்டுக்கு மட்டுமல்ல, நாக்கிற்கும் கொஞ்சம் வேலை உண்டே?
ReplyDeleteகுழல், சங்கு எல்லாம் உதட்டுடன் முடிந்துவிடுமே?