பேசிக்கொண்டு
காதலர்கள்
கையில் நாளிதழோடு
களைத்து அமரும்
பெரியவர்
சோப்பும் நாப்கின்னும்
விற்றகணக்குஎழுதும்
விற்பனைப்பெண்
உபரி சதையைக்
குறைக்கஓடும்
உல்லாச இளைஞன்
கவிதைக்கு கருதேடி
கண்ணில் கனவுகளுடன்
கவிஞன்
விளையாட
பந்தோடு
வீதிச்சிறுவர்கள்
தன்னை யாரும்
ரசிக்கவராத சோகத்தில்
பூங்கா.
Tweet | ||||
அருமை. இப்படித்தான் ரசனைகளைத் தொலைத்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது பலருக்கும் வாழ்க்கை.
ReplyDeleteneenda pala varudangalukku piragu kavidhayagalai thedum enakku ungalin indha kavidhay oru iniya midar. Romba nalla irukku.
ReplyDeleteAnd pls let me know how to write in tamil lipi
உண்மை....;)
ReplyDeleteஉண்மைதான். பல விஷயங்கள் இப்படித்தான் கையில் கிட்டினாலும் ரசிக்க இயலவில்லை.
ReplyDelete//உபரி சதையைக்
ReplyDeleteகுறைக்கஓடும்
உல்லாச இளைஞன் //
யக்கா... நான் இப்பல்லாம் தினம் வாக்கிங் போறத இப்புடியா கிண்டலடிக்கிறது.. :)
பின்னூட்டமிட்ட ராமல்ஷ்மி
ReplyDeleteவிரிக்ஷா கோபிநாத் அமிர்தவர்ஷிணி அம்மாமற்றும் ராகவ்க்கு மிக்க நன்றி..
ராகவ் உன்னைப்போய் நான் கிண்டல் செய்ய முடியுமா>:):) அது அந்த பார்க் இளைஞனுக்கு....நீதான் குழந்தையாச்சே!!!!
Your poem is nice.
ReplyDeleteDeva.
////தன்னை யாரும்
ReplyDeleteரசிக்கவராத சோகத்தில்
பூங்கா.///
உண்மைதான்
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்..
thevanmayam said...
ReplyDeleteYour poem is nice.
Deva.
3:32
>>.நன்றி தேவா
தங்கராசா ஜீவராஜ் said...
ReplyDelete////தன்னை யாரும்
ரசிக்கவராத சோகத்தில்
பூங்கா.///
உண்மைதான்
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்..
10:41 AM
>>>>>>
மிக்க நன்றி ஜீவராஜ் வருகைக்கும் கருத்துக்கும்