Social Icons

Pages

Friday, November 07, 2008

நிலா எழுத, நட்சத்திரம் பாட...!!!

வளர்ந்து வரும் கவிஞர் நிலாரசிகன் சுட்டும்விழிச்சுடரே பாடல் மெட்டி எழுதிய பாடல் இது
இதனை ஓரளவு சுமாரா பாடினது இந்தவார நட்சத்திரம்.! எல்லாரும் மாட்டிக்கிட்டீங்க கேட்டுத்தான் ஆகணும் என்பாட்டை! அழகான பாடல்வரிகளுக்கு உயிரூட்டிப்பாட முயன்றேன். நாமக்கல் சிபியோ ராகவ்வோ ரிஷானோ மௌலியோ கே ஆர் எஸ்ஸோ கோபிநாத்தோ...யார் சினிமா எடுத்தாலும் இந்தப்பாடலை உபயோகிச்சிக்கலாம் அனுமதில்லாம் கேக்கவெண்டாம் என்ன?:சரி பாடலைப்படிங்க கேளுங்க !!

********************************************************************************


பல வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் அடைகிறாள் ஒரு பெண்.


அந்த தாய்மை தந்த மகிழ்ச்சியில் தன் பிஞ்சுக்குழந்தையை கண்டு

அவள் பாடும் பாடலாக ஒரு பாடல்.

(கஜினி படத்தில் இடம்பெற்ற "சுட்டும் விழிச்சுடரே" பாடலின் மெட்டில்
என் வரிகள்....)

சின்னஞ்சிறு தளிரே
சின்னஞ்சிறு தளிரே
என் உயிரில் உன்னைப்பெற்றேனே

உள்ளங்கையில் உன் முகம்
பட்டுப் பட்டு உரச
என் தாய்மை பூரிக்கின்றதே...

உன் சிரிப்பில் மலர்ந்தேன்
பத்துமாதம் சுகமென்றேன்

பெண்ணாய் பிறத்தல் தவமென்பேன்
உன்னாலே
பெண்ணாய் பிறத்தல் தவமென்பேன்.(சின்னஞ்சிறு தளிரே)

பூவினம் உன் தேகம் என்பேன்.
தேனினம் உன் புன்னகை என்பேன்.
புல்லினம் உன் விரல்கள் என்றேன்...

துக்கத்தில் தவித்து நின்றேன்
உன் வருகையால் வளர்ந்து நின்றேன்
துன்பம் வந்தால் உன் பொன்முகம்காண்பேன்....

நெருப்பு இல்லா சுடர் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்....
உன் கண்கள் என் வாழ்க்கை ஏற்றும் சுடர் என்பேன்
உன் கண்கள்
என் வாழ்க்கை ஏற்றும் சுடர் என்பேன்.(சின்னஞ்சிறு தளிரே)

மலடிபட்டம் ஒன்று
உயிர் கொத்திப்போனதன்று
உள்ளம்முதல் உயிர்வரை வெந்தேன்

நீயும் என்னுயிரில் வந்து
பூத்து நின்றாயே இன்று
இன்றுதானே தலைநிமிர்ந்து நின்றேன்

பெண்மை அழகா?
தாய்மை அழகா?
துணைவன் கொஞ்சும் போது பெண்மை அழகு
கண்ணே நீ அம்மா என்றால் தாய்மை அழகு..
கண்ணே நீ அம்மா என்றால் தாய்மை அழகு..(சின்னஞ்சிறு தளிரே)
--------------
-நிலாரசிகன்


9 comments:

  1. பாடும் நிலா பாலு கேள்விப்பட்டுருக்கேன்..

    அது மாதிரி நீங்க பாடும் நட்சத்திரம்

    ReplyDelete
  2. Raghav said...
    பாடும் நிலா பாலு கேள்விப்பட்டுருக்கேன்..

    அது மாதிரி நீங்க பாடும் நட்சத்திரம்

    7:33 PM
    >>>>>>>>>>>>ஆர்வம் அதிகம் அவ்வளோதான் ..நட்சத்திரம் இப்போ ஒருவாரத்துக்கு மட்டும்தான் ராகவ்!!நன்றி கேட்டு உடனேயே பின்னூட்டமும் இட்டதற்கு

    ReplyDelete
  3. சூப்பரு... ரொம்ப நல்ல கருத்துள்ள கவி, அதற்கேற்ற மெட்டு...கலக்கிட்டீங்க. :)

    ReplyDelete
  4. முதல்ல நீங்க தேர்தெடுத்த இந்த வரிகளுக்கு ஒரு சாபஷ் ;)))

    அருமையாக படியிருக்கிங்க்கா ;))) எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ;)

    நிலாரசிகன் வரிகள் அழகு...;)

    உங்களுக்கு எங்க நன்றிகள் :)

    ReplyDelete
  5. பசிறு தட்டாமல் பாடுகிறீர்கள்
    குரலும் இனிமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள்!
    மாதம் ஒரு பாடலைப் பதிவிடுங்கள்:
    இது வேண்டுகோள்!

    ReplyDelete
  6. தட்டச்சுப்பிழை, பிசிறு தட்டாமல் என்று திருத்தி வாசிக்கவும்.

    ReplyDelete
  7. நன்றி மதுரையம்பதி கோபிநாத் திரு சுப்பையா ஸார்! வருகைகும் கருத்துக்கும்..நிலாரசிகனின் அற்புதமான கவிதைவரிகள் பாடலை ஓரளவு சிறப்பா பாடவைத்தது!

    ReplyDelete
  8. //நாமக்கல் சிபியோ ராகவ்வோ ரிஷானோ மௌலியோ கே ஆர் எஸ்ஸோ கோபிநாத்தோ...யார் சினிமா எடுத்தாலும் இந்தப்பாடலை உபயோகிச்சிக்கலாம் அனுமதில்லாம் கேக்கவெண்டாம் என்ன? //


    கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன் ஷைலஜா அக்கா..
    ஆனால் நமீதா இந்தப்பாட்டுக்கு ஆடுவாங்களா ? :)

    ReplyDelete
  9. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //நாமக்கல் சிபியோ ராகவ்வோ ரிஷானோ மௌலியோ கே ஆர் எஸ்ஸோ கோபிநாத்தோ...யார் சினிமா எடுத்தாலும் இந்தப்பாடலை உபயோகிச்சிக்கலாம் அனுமதில்லாம் கேக்கவெண்டாம் என்ன? //


    கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன் ஷைலஜா அக்கா..
    ஆனால் நமீதா இந்தப்பாட்டுக்கு ஆடுவாங்களா
    >>>>>>>>>>>>>>>.ஆஹா! குழந்தைக்கு ரொம்பவே எதிர்பார்ப்புதான்..இருங்கப்பா உங்க அங்கிளா அண்ணனா கெ ஆர் எஸ் அவருகிட்ட வத்திவைக்கிறேன் இதை?:)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.